என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே மதுபான விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது
    X

    பண்ருட்டி அருகே மதுபான விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டது.
    • அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    76-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டது. இந்நிலையில் பண்ருட்டி பகுதிகளில் மதுபானம் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து பண்ருட்டி தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது புதுப்பேட்டை அடுத்த சிறுவத்தூர் பகுதியில் வா லிபர் ஒருவர் மதுபானங்களை விற்பனை செய்து வந்தார். அவரை மடக்கி பிடித்த போலீசார், அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் சக்திவேல் (வயது 32) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த தனிப்படை போலீசார் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஓப்படைத்தனர்.

    Next Story
    ×