என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம், மந்தாரக்குப்பம் அடுத்த தெற்குவெள்ளூரை சேர்ந்தவர் வேல்முருகன். விருத்தாசலம் பகுதியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த வேல்முருகன், தலைமறைவானார்.
15 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள வேல்முருகனை கைது செய்யுமாறு, விருத்தாசலம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான தனிப்படைபோலீசார், தஞ்சாவூர் மாவட்டம், கரிகாடு பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்த வேல்முருகனை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் முதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதில் பெரியகாரைக்காட்டை சேர்ந்த பார்த்திபன் (வயது 23), குடிகாட்டை சேர்ந்த பிரதீப் (18) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் அங்கிருந்த மேற்கூரை இரும்பு ஷீட்டுகள் திடீரென காணாமல் போனது.
இது பற்றி ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர் எம்.புதூரை சேர்ந்த கார்த்தி (28) என்பவர் விசாரித்த போது, அந்த 55 இரும்பு ஷீட்டுகளை பார்த்திபன், பிரதீப் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வைத்து திருடிச்சென்றது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.55 ஆயிரம் ஆகும்.
இது பற்றி கார்த்தி கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
பண்ருட்டி அடுத்த ஆத்திரிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மனைவி சத்யா (வயது 30). இவர் பண்ருட்டி அருகே சேந்தநாடு பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் சத்யா தனது மொபட்டில் பள்ளிக்கு சென்றார். அவர் குடியிருப்பு - விசூர் சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் ஹெல்மெட் அணிந்து 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
திடீரென அந்த மர்ம நபர்கள் சத்யாவை கீழே தள்ளி விட்டு அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் ஆசிரியை காயமடைந்தார். காயமடைந்த சத்யாவை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து முத்தாண்டி குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியையிடம் செயின் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள அம்புஜவல்லிபேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி கலா (வயது 37). இவர் சம்பவத்தன்று இரவு மாமியார், குழந்தைகளுடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை நைசாக திறந்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.
பின்னர் தூங்கிக்கொண்டிருந்த கலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்தனர். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர், திருடன், திருடன் என சத்தம்போட்டார். இதனால் வீட்டில் இருந்தவர்களும், அக்கம் பக்கத்தினரும் எழுந்து அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.
கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 மாதகாலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மதகடிப்பட்டில் உள்ள அதே தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது பெற்றுள்ளார்.
மேலும் தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதையும் பெற்றுள்ளார். இவருக்கு வயது 75 ஆகும். #Prabhanjan
ஸ்ரீமுஷ்ணம்:
ஸ்ரீ முஷ்ணம் அருகே உள்ள மதகளிர் மாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது48). தொழிலாளி.
இவரது தம்பி வீரமுத்துக்கும் அதே கிராமத்தை சேர்ந்த செல்வரங்கம் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் வீரமுத்துவிடம், முன்விரோதம் காரணமாக செல்வரங்கம், அவரது மகன்கள் செல்வமணி, ஞானகுரு மற்றும் உறவினர்கள் சுரேஷ், கல்யாணசுந்தரம், ராஜேஷ் ஆகிய 6 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி அவர்கள் வீரமுத்துவை தாக்கினர். இதை பார்த்த கொளஞ்சி ஏன் என் தம்பி வீரமுத்துவை தாக்குகிறீர்கள் என தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த செல்வரங்கம் உள்பட 6 பேரும் சேர்ந்து கொளஞ்சியை உருட்டுகட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் செல்வரங்கம் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் கொலையாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொலை வழக்கில் தொடர்புடைய ராஜேசை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மற்ற 5 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று செல்வரங்கம், செல்வமணி, ஞானகுரு, சுரேஷ் ஆகிய 4 பேர் சிதம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதையடுத்து நீதிபதி உத்தரவுப்படி அவர்கள் 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் கல்யாணசுந்தரத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் குமராட்சி அருகே உள்ள வெளத்தூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்குமரன்(வயது25). அதேபகுதியை சேர்ந்தவர் கமல்ராஜ்(28). இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் மது குடித்தனர்.
பின்னர் அவர்கள் 2 பேரும் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டை பகுதியில் நடுரோட்டில் நின்றுகொண்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர்.
மேலும் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லவிடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட தமிழ்குமரன், கமல்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை காட்டுமன்னார்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிதம்பரம் கிளை சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பற்றி அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கடலூர் ஒன்றியம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரை செல்வன் தலைமையில் ரெட்டிச் சாவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் சம்பத், தொகுதி அமைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
கட்சியின் நிர்வாகிகள் முத்து, ஏழுமலை, ராஜ் குமார், காட்டு ராஜா, சத்திய ராஜ், திருநாவுக்கரசு, தலித் செவ்வேந்தன் உள்பட பலர் கலந்து கொண் டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று ரெட்டிச் சாவடி போலீஸ் நிலையத்தில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்தனர்.
இதேபோல் மாவட்ட செயலாளர் முல்லை வேந் தன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நெல்லிக்குப்பம் அண்ணா சிலை அருகில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் கட்சி நிர்வாகிகள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த எச் ராஜா உருவபொம்மையை சாலைக்கு கொண்டு வந்து தீ வைத்து எரித்தனர். கண்டன கோஷம் எழுப்பினர். அங்கிருந்த நெல்லிக்குப்பம் போலீசார் எரிந்து கொண்டிருந்த உருவபொம்மையை அனைத்து எடுத்து சென்றனர் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். பின்னர் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நடராஜர் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இரவு தங்கம், வெள்ளி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு மேல் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது.
சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடக்கிறது.
பின்னர் காலை 6 மணி முதல் 10 மணிவரை திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சியும், 1 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. 24-ந் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், அக்கரைக்கோரி, ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, சொத்திக்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசை படகுகளில் தினந்தோறும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, சற்று வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கரைப்பகுதியை நோக்கி நகரக்கூடும். இதனால் கடல் காற்று அதிகரிக்கும். கடல் கொந்தளிப்பாக காணப்படும். ஆகவே மீனவர்கள் 2 நாட்களுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் கடலூர் மீன்வளத்துறை துணை இயக்குனர் ரேணுகா, உதவி இயக்குனர் கங்காதரன் ஆகியோர் கடலூரில் கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று தொலைபேசியிலும், வாட்ஸ்-அப் குரூப்பிலும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நேற்று காலை விசை படகு மீனவர்கள் பெரும்பாலானோர் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஒரு சில பைபர் படகு மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வந்தனர். பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் அவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்திலும், கடற்கரையோரங்களிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.
மேலும் நேற்று முன்தினம் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களும் கரைக்கு திரும்பி வர தொடங்கி உள்ளனர். மீன்கள் வரத்து இல்லாததால் துறைமுக பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதற்கிடையே மீனவர்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் டீசல் வினியோகத்தை நிறுத்தி வைக்க மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சண்டேஸ்வரநல்லூரை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் வைத்தீஸ்வரன் (வயது 22). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் படித்தார்.
இவருடன் கல்லூரியில் படித்த சிதம்பரம் ஏ.ஆர்.எம். நகரை சேர்ந்த ரத்தனப்பிரியா (22) என்பவரும் படித்தார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் நெருங்கி பழகினர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 4 ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்தனர்.
இவர்களது காதல் விவகாரம் ரத்தனப்பிரியாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கண்டித்தனர்.
இதனால் மனம் உடைந்த ரத்தனப்பிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ரத்தனப்பிரியா தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் மிகவும் மனவேதனை அடைந்தார். அவரால் ரத்தனப்பிரியாவை மறக்க முடியவில்லை.
இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று மாலை அவரது வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு வைத்தீஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைத்தீஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது.
அவரது உடலை பார்ப்பதற்காக வைத்தீஸ்வரனின் உறவினர்கள் இன்று காலை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆனால் பிணவறை ஊழியர்கள் வைத்தீஸ்வரனின் உடலை பார்க்க அனுமதிக்கவில்லை.
இதனால் சிதம்பரத்தில் உள்ள வக்கீல் பிரபுவை தொடர்பு கொண்டு இது பற்றிய தகவலை தெரிவித்தனர். உடனே அவர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அதிகாரியை தொடர்பு கொண்டு பேசினார்.

இதைகேட்டு ஆத்திரம் அடைந்த அவர்கள் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Chidambaramgovthospital






