search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panruti robbery"

    பண்ருட்டி அருகே இன்று காலை அரசு பள்ளி ஆசிரியையிடம் 6 பவுன் செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த ஆத்திரிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மனைவி சத்யா (வயது 30). இவர் பண்ருட்டி அருகே சேந்தநாடு பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் சத்யா தனது மொபட்டில் பள்ளிக்கு சென்றார். அவர் குடியிருப்பு - விசூர் சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் ஹெல்மெட் அணிந்து 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    திடீரென அந்த மர்ம நபர்கள் சத்யாவை கீழே தள்ளி விட்டு அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் ஆசிரியை காயமடைந்தார். காயமடைந்த சத்யாவை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து முத்தாண்டி குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆசிரியையிடம் செயின் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பண்ருட்டி அருகே லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றம் செல்போனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    பண்ருட்டி:

    நாமக்கல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 33), லாரி டிரைவர். இவர் நேற்று மாலை லாரியில் பண்ருட்டியை அடுத்த ராசாபாளையம் பகுதிக்கு வந்தார். அங்கு சாலையோரம் லாரியை நிறுத்தினார். அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திடீரென லாரி டிரைவர் முருகேசனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து முருகேசன் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ்ராஜ் வழக்குபதிவு செய்து லாரி டிரைவரிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றார்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அய்யனார் கோவில் உண்டியை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுக்குப்பத்தில் பழமை வாய்ந்த வீரகம்ப அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    கோவிலின் உள்ளே உண்டியல் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி வந்தனர்.

    கோவிலின் பூசாரி நேற்று இரவு பூஜை முடிந்ததும் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் கோவிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை ஒரு பையில் மூட்டையாக கட்டி கொண்டு சென்று விட்டனர்.

    இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. இந்த உண்டியலில் ரூ.1 லட்சம் வரை பணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×