என் மலர்
கடலூர்
- புவனகிரி அருகே கோவில் உண்டியலை கொள்ளையர்கள் தூக்கி சென்றனர்.
- இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவன கிரியில் குறிஞ்சிப்பாடி சாலையான வயல்வெளி பகுதியில் பிரசித்திபெற்ற கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இன்று காலை மர்ம நபர்கள் சென்றனர். கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து தூக்கி சென்றனர். பின்னர் அதனை அங்குள்ள வயல் வெளியில் வீசி சென்று தலைமறை வானார்கள். இன்று காலை பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவில் உண்டி யல் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதுகுறத்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீ சார் வழக்குபதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்த கும்பலை தேடி வருகிறார்கள்.
- கடலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த 4,685 கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டுள்ளது,
- மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் மற்றும் வாகன விபத்துக்கள் போன்றவற்றை குறைத்து கட்டுப்படுத்து வதற்கு ஏதுவாக அமையும்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கவும் , குற்றம் நடந்த பின் குற்றவாளிகளை அடையாளம் காணவும் மாவட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஏற்பாட்டின் பேரில் கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பரிந்துரையின்பேரில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்த நிதி வழங்க வேண்டும் என விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் ரூ1 கோடியே 30 லட்சம் பெறப்பட்டு அந்த நிதியில் இருந்து 520 கண்காணிப்பு காமிராக்கள்பொருத்தப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் 297 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது . இதில் தனியார் நிறுவனங்கள் , வியாபார சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் மாவட்டத்தில் 3868 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது . கடலூர் பகுதியில் 885, சிதம்பரம் 1040, புவனகிரி 144, நெய்வேலி 589, சேத்தியாத்தோப்பு 445 , காட்டுமன்னார்கோவில் 166, குறிஞ்சிப்பாடி 83, விருத்தாச்சலம் 521 , பண்ருட்டி 487 , திட்டக்குடி 247 மற்றும் வேப்பூர் 78 என மொத்தம் 4685 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணி க்கப்பட்டு வருகிறது . இதன் மூலம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் மற்றும் வாகன விபத்துக்கள் போன்றவற்றை குறைத்து கட்டுப்படுத்து வதற்கு ஏதுவாக அமையும்.
- பழங்குடியினர் நலத்துறையின் உள்ள விடுதிக்கு விண்ணப்பிக்கலாம்.
- பள்ளி, கல்லூரிகள் விடுதிகள் என மொத்தம் 60 விடுதிகள் உள்ளன.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு பள்ளி, கல்லூரிகள் விடுதிகள் என மொத்தம் 60 விடுதிகள் உள்ளன.மேற்கண்ட விடுதிகளில் இந்து ஆதிதிராவிடர் வகுப்பினைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் 85 சதவீதம், பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட , சீர்மரபினர்கள் 10 சதவீதம், இதர வகுப்பினர் 5 சதவீதம் சேர்ந்து பயனடையலாம்.இதற்கு மாணவ, மாணவியர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதியிலிருந்து மாணவர் குடியிருப்பு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு அதில் கல்வி நிறுவனத்தின் சான்றொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும். அனைத்து விடுதிகளிலும் மாணாக்கரின் சேர்க்கை புதிய விண்ணப்பப் படிவம் மூலமாகவும் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.ஒரு விடுதிக்கு தலா 5 நபர்கள் வீதம் அனைத்து விடுதிகளிலும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளை விடுதியில் சேர்த்திடலாம்.
மாணவர்களின் மற்றும் கல்வி உதவித் தொகைக்கு வழங்கப்பட்ட ஆகியவை குறிக்கப்பட வேண்டும். மாணவ , மாணவியர்களுக்கு விடுதிகளில் தரமான உணவு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் வழங்கப்படுகிறது. மேலும், போர்வை, தட்டு டம்ளர் ஆகியவையும் வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்திலுள்ள மாணவ / மாணவியர்கள் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர்ந்து பயன்பெறலாம். 2022 - 2023 -ம் ஆண்டிற்கான விடுதியில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் பள்ளி மற்றும் கல்லூரி விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் ஆதார் அட்டை நகல், மற்றும் மாணவ , மாணவியர்களின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினை இணைத்து விடுதி காப்பாளர் , காப்பாளினி வசம் கீழ்க்காணும் தேதிகளுக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாளாக பள்ளிக்கு ஜூலை 18ஆம் தேதியும், கல்லூரிக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது
- இளநீர் கடன் கேட்ட தகராறில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- இளநீர் கடனாக கேட்டுள்ளார் அப்போது பாபு தர மறுத்துவிட்டார்.
கடலூர்:
கடலூர் அருகே கண்ணாரப்பேட்டை சேர்ந்தவர் பாபு (வயது 38). இவர் அதே பகுதியில் சைக்கிளில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த விமல் என்பவர் இளநீர் கடனாக கேட்டுள்ளார். அப்போது பாபு தர மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று முன்விரோத காரணமாக விமல் தனது நண்பர் பிரேம் உடன் கண்ணாரப் பேட்டை பகுதியில் நின்று கொண்டிருந்த பாபுவை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் விமல் (வயது 35) , பிரேம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விமலை கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஒருமாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 4 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிக்கும், 26 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் என மொத்தம் 31 பதவி இடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
கடலூர் ஒன்றியத்தில் கடலூர் முதுநகர் (நான்முனிசிபல்) 9-வது வார்டுக்கும், கீழ்குமாரமங்கலத்தில் 6-வது வார்டுக்கும், மருதாடு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் மாலை 6 மணிவரை நடக்கிறது. இதில் பதிவான வாக்குகள், வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. இதற்கிடையே இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மேற்பார்வையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு,பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- கடலூரில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் தகுதி இல்லாத 7 வாகனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
- பள்ளி வாகனத்தின் வாசல் அமைப்பு, அவசர வழி, தீயணைப்பு கருவிகள் உள்பட பல்வேறு வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
கடலூர்:
கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 93 தனியார் பள்ளிகள் மற்றும் 15 கல்லூரிக்கு சொந்தமான வாகனங்கள் ஆய்வுக்காக கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டன. இங்கு அணிவகுத்து நின்ற பள்ளி வாகனங்களை வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுதாகர், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், மாவட்ட கல்வி அலுவலர் கௌசர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கடலூர் முகுந்தன், நெய்வேலி பிரான்சிஸ், பண்ருட்டி ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் பள்ளி வாகனத்தின் வாசல் அமைப்பு, அவசர வழி, பிரதிபலிப்பான், படிக்கட்டு, டிரைவர் அறை, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள் உள்பட பல்வேறு வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக வாகனங்களில் அவசர வழி, முதலுதவி பெட்டி போன்ற அனைத்து வசதிகளும் இருக்கிறதா? தீயணைப்பு கருவி செயல்படுகிறதா? என்று சோதனை செய்து பார்க்கப்பட்டது.
அப்போது இயக்குவதற்கு தகுதியில்லாத 7 வாகனங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக தீயணைப்புத் துறை அலுவலர்கள் சார்பில் பஸ் டிரைவர்களுக்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டாலோ? அல்லது வேறு ஏதேனும் விபத்து ஏற்பட்டாலோ? முதலில் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு செயல்விளக்கம் அளித்தனர். வாகன ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு கண் பரிசோதனை ரத்த அழுத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் பள்ளி வாகன டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
- சுருக்குமடி வலை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்ததால் 30 மீனவ கிராம மக்கள் கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இவர்களை கண்காணித்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களின் படகு மற்றும் மீன்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், தைக்கால்தோணி துறை, சாமியார்பேட்டை உள்ளிட்ட 49 மீனவ கிராமங்கள் உள்ளது. இங்குள்ள மீனவர்கள் விசைப்படகு, கட்டுமரம் மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடித்து வருகிறார்கள். இதற்கிடையில் கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதால் மீன் வளம் குறைகிறது என்று கூறி மாவட்ட நிர்வாகம் சுருக்குமடி வலைக்கு தடை விதித்துள்ளது. ஆனாலும் ஒரு சில மீனவ கிராம மக்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்துகின்றனர். இவர்களை கண்காணித்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களின் படகு மற்றும் மீன்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இதனிடையே கடலூர் அருகே சாமியார்பேட்டை பகுதியில் 30 கிராம மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனை கண்டித்து கடலூர், மயிலாடுதுறை மாவட்ட புதுவைமாநில மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த கூடாது, இரட்டை மடி வலையை உபயோகிக்கூடாது. அதிக குதிரை திறன் கொண்ட என்ஜினை பயன்படுத்த கூடாது என தெரிவித்தனர். அதன்படி இன்று மீனவர்கள் சாமியார்பேட்டை கடற்கரையில் கருப்பு ெகாடியுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இதில் 30-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி தளம் வெறிச்சோடியது.
- விருத்தாசலம்அருகே ஓடும் பஸ்சில் தவற விட்ட பணத்தை பயணியிடம் கண்டக்டர் ஒப்படைத்தனர்.
- இயற்கை உபாதை கழிக்க சென்ற போது முனுசாமி பஸ்சை தவற விட்டுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வீரசிங்ககுப்பம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி (வயது70). இவர் அந்த பகுதியில் முந்திரி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 7-ந் தேதி இரவு 2:30 மணி அளவில் திருச்சியில் இருந்து கடலூர் செல்லும் விருத்தாசலம் பணிமனையைச் சேர்ந்த பஸ்சில் ஏறி உள்ளார். அந்த பஸ் பெரம்பலூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் நின்றது. அப்போது இயற்கை உபாதை கழிக்க சென்ற போது முனுசாமி பஸ்சை தவற விட்டுள்ளார். அந்த பஸ் கடலூர் பஸ் நிலையம் சென்று அனைத்து பயணிகளும் இறங்கியபின் கண்டக்டர் வேல்முருகன் பஸ்சுக்குள் ஒரு பை இருப்பதை பார்த்துள்ளார். பயணி யாரோ அதை தவற விட்டு சென்று விட்டார்கள் என அதனை பிரித்துப் பார்த்தபோது அந்த பைக்குள் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 700 ரூபாய் பணம் இருந்தது.
இதனை பார்த்த கண்டக்டர் இந்த தகவலை விருத்தாசலம் அரசு பஸ் பணிமனை 2 மேலாளர் நவநீத கிருஷ்ணனிடம் தெரிவித்தார். பின்னர் பஸ் விருத்தாசலம் பணிமனை வந்த பின்பு அதனை பணத்தை மேலாளிடம் ஒப்படைத்தார். பணத்தை தவறவிட்ட முனுசாமியும் அரசு பஸ் பணிமனைக்கு தொடர்பு கொண்டு தாம் பணத்தை தவறவிட்ட தகவலை கூறியுள்ளார். அதனை கேட்ட மேலாளர் முனுசாமியை விருத்தாசலம் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகம் வர கூறினார். அதன்படி பயணி முனுசாமி அங்கு சென்றார். அப்போது போலீஸ் டி.எஸ்.பி. அங்கித் ஜெயின் முன்னிலையில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 700 ரூபாயை கண்டக்டர் வேல்முருகன், டிரைவர் மூர்த்தி மற்றும் கிளை மேலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முனுசாமியிடம் ஒப்படைத்தனர். பஸ் பயணி தவறவிட்ட பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரை போலீஸ் டி.எஸ்.பி. அங்கித் ஜெயின் மற்றும் போலீசார் வெகுவாக பாராட்டினர்.
- திருமணம் செய்ய மறுத்த காதலனை காதலியுடன் போலீசார் திருமணம் முடித்து வைத்தனர்.
- விஜய் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து, திருமணத்திற்கு வேறு பெண் பார்த்து வந்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே கார்மாங்குடி கிராமத்தை சேர்ந்தவ ர்கொளஞ்சிநாதன். அவரது மகள் தவச்செல்வி (வயது 21). இவர் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த கல்யாணசுந்தரத்தின் மகன் விஜய் (25), புதுச்சேரியில் ஹோட்டல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 3 வருடத்திற்கு மேலாக காதலித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தவச்செல்வி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தனது காதலன் விஜயிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் விஜய் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து, திருமணத்திற்கு வேறு பெண் பார்த்து வந்துள்ளார். இதனால் வேதனை அடைந்த தவசெல்வி விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விஜய் மீது புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு விஜயை திருமணம் செய்ய வலியுறுத்தினர். பின்னர் திருமணம் செய்ய இருவீட்டாரும் சம்மதித்ததால், மகளிர் காவல் நிலையம் அருகே உள்ள வண்ணமுத்து மாரியம்மன் திருக்கோவிலில், காதல் ஜோடிகள் இருவரும் மாலை மாற்றிக் கொண்ட பின் தவசெல்வியின் கழுத்தில் விஜய் தாலி கட்டினார். அப்போது உறவினர்கள் மணமக்களுக்கு மலர் தூவி ஆசீர்வாதம் செய்தனர். பின்னர் மணமக்கள் இருவருக்கும் அறிவுரை கூறிய போலீசார் வாழ்த்துக்கள் தெரிவித்து அனுப்பி வைத்தனர்.
- திட்டக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் மேலும் 2 பேருக்கு தொடர்பு போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறது.
- சம்பவத்தில் தொடர்புடைய மாணவி மற்றும் மாணவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ப தால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலுார் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை, அவருடன் படிக்கும் 3 சக மாணவர்கள் கூட்டுபலாத்காரம் செய்தனர். அதை வீடியோ எடுத்து சிலருக்கு அனுப்பினர்.
இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் 4 சிறுவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் ஆவினங்குடி போலீசார் கைது செய்தனர்.
கடந்த 6-ந் தேதி பள்ளியில் இருந்த மாணவியிடம், 2 வாலிபர்கள் மாணவியின் ஆபாச வீடியோவை காட்டி மிரட்டினர். இதனால் அந்த மாணவிக்கும், அந்த வாலிபர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனை பார்த்த பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சிலர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள்அந்த வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.இதையடுத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வீடியோ விவகாரம் தெரிந்ததால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பவத்தில் தொடர்புடைய 4 சிறுவர்களை கைது செய்தனர்.
எனினும் பள்ளி வளாகத்திற்குள் வந்து மாணவியை மிரட்டிய வாலிபர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என விசாரித்து அவர்களையும் கைது செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
சம்பவத்தில் தொடர்புடைய மாணவி மற்றும் மாணவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ப தால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் மாணவியை மிரட்டியவாலிபர்கள் யார்?அவருக்கு வீடியோவை அனுப்பியது யார்? என்பது குறித்துபோலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் கோண்டூர் அருகே சுப்புலட்சுமி நகரைச்சேர்ந்தவர் திருஞானசம்மந்தம். அவரது மகன் ஜஸ்வந்த், (வயது16). கம்பியம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தேர்வில் தோல்வி அடைந்தார். எனவே ஜஸ்வந்த் சோகத் தில் இருந்தார். அன்று வீட்டில் மாலை இருந்து வெளியேசென்றவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவர்,மஞ்சள் நிற டீ சர்ட், கிரே கலர் லோயர் அணிந்திருந்தார். இது குறித்து திருஞானசம்மந்தம் புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து ஜஸ்வந்தை தேடி வருகின்றனர்.
- கடலூர் அருகே சாமியார்பேட்டை பகுதியில் 30 கிராம மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
- இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மீனவ கிராமத்தினர் அறிவித்து இருந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், தைக்கால்தோணி துறை, சாமியார்பேட்டை உள்ளிட்ட 49 மீனவ கிராமங்கள் உள்ளது.
இங்குள்ள மீனவர்கள் விசைப்படகு, கட்டுமரம் மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடித்து வருகிறார்கள்.
இதற்கிடையில் கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதால் மீன்வளம் குறைகிறது என்று கூறி மாவட்ட நிர்வாகம் சுருக்குமடி வலைக்கு தடை விதித்துள்ளது. ஆனாலும் ஒரு சில மீனவ கிராம மக்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்துகின்றனர்.
இவர்களை கண்காணித்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களின் படகு மற்றும் மீன்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இதனிடையே கடலூர் அருகே சாமியார்பேட்டை பகுதியில் 30 கிராம மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மீனவ கிராமத்தினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று மீனவர்கள் சாமியார்பேட்டை கடற்கரையில் கருப்பு கொடியுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இதில் 30-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி தளம் வெறிச்சோடியது.






