என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விருத்தாசலம்அருகே ஓடும் பஸ்சில் தவற விட்ட பணத்தை பயணியிடம் ஒப்படைத்த கண்டக்டர்
  X

  பயணி தவறவிட்ட பணத்தை அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் ஒப்படடைத்தனர். 

  விருத்தாசலம்அருகே ஓடும் பஸ்சில் தவற விட்ட பணத்தை பயணியிடம் ஒப்படைத்த கண்டக்டர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விருத்தாசலம்அருகே ஓடும் பஸ்சில் தவற விட்ட பணத்தை பயணியிடம் கண்டக்டர் ஒப்படைத்தனர்.
  • இயற்கை உபாதை கழிக்க சென்ற போது முனுசாமி பஸ்சை தவற விட்டுள்ளார்.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வீரசிங்ககுப்பம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி (வயது70). இவர் அந்த பகுதியில் முந்திரி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 7-ந் தேதி இரவு 2:30 மணி அளவில் திருச்சியில் இருந்து கடலூர் செல்லும் விருத்தாசலம் பணிமனையைச் சேர்ந்த பஸ்சில் ஏறி உள்ளார். அந்த பஸ் பெரம்பலூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் நின்றது. அப்போது இயற்கை உபாதை கழிக்க சென்ற போது முனுசாமி பஸ்சை தவற விட்டுள்ளார். அந்த பஸ் கடலூர் பஸ் நிலையம் சென்று அனைத்து பயணிகளும் இறங்கியபின் கண்டக்டர் வேல்முருகன் பஸ்சுக்குள் ஒரு பை இருப்பதை பார்த்துள்ளார். பயணி யாரோ அதை தவற விட்டு சென்று விட்டார்கள் என அதனை பிரித்துப் பார்த்தபோது அந்த பைக்குள் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 700 ரூபாய் பணம் இருந்தது.

  இதனை பார்த்த கண்டக்டர் இந்த தகவலை விருத்தாசலம் அரசு பஸ் பணிமனை 2 மேலாளர் நவநீத கிருஷ்ணனிடம் தெரிவித்தார். பின்னர் பஸ் விருத்தாசலம் பணிமனை வந்த பின்பு அதனை பணத்தை மேலாளிடம் ஒப்படைத்தார். பணத்தை தவறவிட்ட முனுசாமியும் அரசு பஸ் பணிமனைக்கு தொடர்பு கொண்டு தாம் பணத்தை தவறவிட்ட தகவலை கூறியுள்ளார். அதனை கேட்ட மேலாளர் முனுசாமியை விருத்தாசலம் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகம் வர கூறினார். அதன்படி பயணி முனுசாமி அங்கு சென்றார். அப்போது போலீஸ் டி.எஸ்.பி. அங்கித் ஜெயின் முன்னிலையில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 700 ரூபாயை கண்டக்டர் வேல்முருகன், டிரைவர் மூர்த்தி மற்றும் கிளை மேலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முனுசாமியிடம் ஒப்படைத்தனர். பஸ் பயணி தவறவிட்ட பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரை போலீஸ் டி.எஸ்.பி. அங்கித் ஜெயின் மற்றும் போலீசார் வெகுவாக பாராட்டினர்.

  Next Story
  ×