திட்டக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் மேலும் 2 பேருக்கு தொடர்பு போலீசார் தீவிர விசாரணை

திட்டக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் மேலும் 2 பேருக்கு தொடர்பு போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறது.சம்பவத்தில் தொடர்புடைய மாணவி மற்றும் மாணவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ப தால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திட்டக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் மேலும்  2 பேருக்கு தொடர்பு போலீசார் தீவிர விசாரணை
Published on

கடலூர்:

கடலுார் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை, அவருடன் படிக்கும் 3 சக மாணவர்கள் கூட்டுபலாத்காரம் செய்தனர். அதை வீடியோ எடுத்து சிலருக்கு அனுப்பினர்.

இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் 4 சிறுவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் ஆவினங்குடி போலீசார் கைது செய்தனர்.

கடந்த 6-ந் தேதி பள்ளியில் இருந்த மாணவியிடம், 2 வாலிபர்கள் மாணவியின் ஆபாச வீடியோவை காட்டி மிரட்டினர். இதனால் அந்த மாணவிக்கும், அந்த வாலிபர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனை பார்த்த பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சிலர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள்அந்த வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.இதையடுத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வீடியோ விவகாரம் தெரிந்ததால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பவத்தில் தொடர்புடைய 4 சிறுவர்களை கைது செய்தனர்.

எனினும் பள்ளி வளாகத்திற்குள் வந்து மாணவியை மிரட்டிய வாலிபர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என விசாரித்து அவர்களையும் கைது செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

சம்பவத்தில் தொடர்புடைய மாணவி மற்றும் மாணவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ப தால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் மாணவியை மிரட்டியவாலிபர்கள் யார்?அவருக்கு வீடியோவை அனுப்பியது யார்? என்பது குறித்துபோலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com