என் மலர்
கடலூர்
- பொயனப்பாடி கிராமம் செல்லும் சாலையில் சொந்தமாக வாட்டர் சர்வீஸ் நிலையம் வைத்துள்ளார்,
- இங்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் பொழுது இளவரசன் மீது மின்சாரம் தாக்கியது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் இளவரசன் (வயது 25). இவர் பொயனப்பாடி கிராமம் செல்லும் சாலையில் சொந்தமாக வாட்டர் சர்வீஸ் நிலையம் வைத்துள்ளார். இங்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் பொழுது இளவரசன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் இளவரசன் மயங்கி கீழே விழுந்தார்.
இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், இளவரசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து தகவலறிந்த சிறுபாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் 61 நாட்களுக்கு கடலில் மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
- மீன்வளத் துறை அலுவலர்களால் கடலூர் மாவட்டத்தில் 17.05.2023-ந் தேதி வரை கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணி யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்து டன் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 -ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு கடலில் மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மீன்பிடிப்பு தடைக்காலத்தில் தமிழ கத்தில் இயங்கும் அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளும் (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை) ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு படகின் உறுதி தன்மை, எந்திரத்தின் குதிரைத்திறன் அளவு, படகின் நீள அகலம் ஆகியவை பதிவு சான்று டன் சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் மானிய விலையிலான எரி எண்ணை மற்றும் இதர மானியத் திட்டங்க ளுக்கு நிவாரண உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடப்பு 2023-ம் ஆண்டில் மீன்பிடி விசைப்படகுகளை வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மீன்வளத் துறை அலுவலர்களால் கடலூர் மாவட்டத்தில் 17.05.2023-ந் தேதி கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்ஆய்வின் போது, மீனவர்கள் தங்களது மீன்பிடி விசைப்படகினை பச்சை வர்ணம் பூசப்பட்டு படகின் பதிவு எண் தெளிவாக எழுதி ஆய்வுக்கு கட்டாயம் உட்படுத்திட வேண்டும் . மேலும் ஆய்வின்போது படகு பதிவு குறித்த அனைத்து ஆவணங்கள் மற்றும் அதற்கான நகல்கள், தொலைதொடர்பு கருவிகள், தீயணைப்பான் கருவி, உயிர் காப்பு மிதவை மற்றும் உயிர்காப்பு கவசம் ஆகியவற்றை ஆய்வுக்குழுவிடம் அவசியம் காண்பிக்கப்பட வேண்டும், ஆய்வுக்கு உட்படுத்த ப்படாத மீன்பிடி விசைப்ப டகுகளுக்கான மானிய விலையிலான எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், படகு உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, கடலூர் மாவட்ட, விசைப்படகு உரிமையாளர்கள் அனை வரும் தங்களது பதிவு செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத படகுகளை 17.05.2023 அன்று தவ றாமல் ஆய்வுக்குழுவிற்கு ஆய்வுக்குட்படுத்த வேண் டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- கடலூர் கம்மியம்பேட்டையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை கட்டப்பட்டதால், அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
- சில நேரங்களில் மீன்களும் அதிக அளவில் செத்து மிதந்து வரும் சம்பவங்கள் நடக்கிறது
கட–லூர், மே.5-
கட–லூர் கம்–மி–யம்–பேட்–டையில் கெடி–லம் ஆற்–றின் குறுக்கே தடுப்–பணை கட்–டப்பட்–டுள்–ளது. இந்த தடுப்–பணை கட்–டப்–பட்–ட–தால், அப்–ப–கு–தியை சுற்–றி–யுள்ள பகு–தி–களில் நிலத்–தடி நீர் மட்டம் உயர்ந்து வரு–கிறது.
செத்து மிதந்த மீன்–கள்
ஆனால் சில நேரங்–களில் இந்த ஆற்–றில் கழி–வு–நீர் கலப்–பதால், சுகா–தார சீர்–கேடு ஏற்–பட்டு வரு–கிறது. சில நேரங்–களில் மீன்–களும் அதிக அள–வில் செத்து மிதந்து வரும் சம்–ப–வங்–கள் நடக்–கிறது.
அதன்–படி நேற்று இந்த தடுப்–ப–ணை–யில் ஏரா–ள–மான மீன்–கள் செத்து மிதந்–தன. துர்–நாற்–ற–மும் வீசி–யது. இதை பார்த்த அப்–ப–குதி மக்–கள் அதிர்ச்சி அடைந்–த–னர். இது பற்றி மாந–க–ராட்சி நிர்–வா–கத்–திற்–கும், மாசு கட்–டுப்–பாட்டு வாரிய அதி–கா–ரி–க–ளுக்–கும் தக–வல் தெரி–விக்–கப்–பட்–டு உள்–ளது. அவர்–கள் இன்று (வெள்–ளிக்–கி–ழமை) நேரில் வந்து ஆய்வு செய்ய இருப்–ப–தாக தெரி–கிறது.
இது பற்றி மாந–க–ராட்சி மேயர் சுந்–த–ரி–ராஜா, ஆணை–யா–ளர் கிருஷ்–ண–மூர்த்தி ஆகி–யோர் வெளி–யிட்–டுள்ள செய்திக்–கு–றிப்–பில் கூறி–யி–ருப்–ப–தா–வது:-
எச்–ச–ரிக்கை
கெடி–லம் ஆற்–றில் கழி–வு–நீர் கலப்–ப–தால் மீன்–கள் செத்–து– மி–தக்–கிறது. இத–னால் கட–லூர் மாந–கர பகு–தி–யில் துர்–நாற்–றம் வீசு–வ–தோடு, நீரும் மாசுப்–பட்டு வரு–கிறது. ஆகவே கழி–வு–நீரை முறை–யாக சுத்–தி–க–ரிப்பு செய்து, அனு–ம–திக்–கப்–பட்ட கழி–வு–நீரை மட்டும் ஆற்–றில் விட வேண்–டும். மேலும் கெடி–லம் ஆற்–றங்–க–ரை–யோரம் இயங்கி வரும் வணிக நிறு–வ–னங்–கள் மற்–றும் குடி–யி–ருப்–பு–களில் இருந்து எவ்–வித கழி–வு– நீ–ரும் நேர–டி–யாக கெடி–லம் ஆற்–றுப்–ப–டு–கையில் விடு–வதை தவிர்க்க வேண்–டும். இதை மீறி எவ–ரேனும் தங்–க–ளது கழி–வு– நீரை ஆற்–றுப்–ப–டு–கையில் விடு–வது கண்–ட–றி–யப்–பட்டால், சம்–பந்–தப்–பட்ட–வர்–கள் மீது சட்ட பூர்வ நட–வ–டிக்கை எடுக்–கப்–படும்.
இவ்–வாறு அவர்–கள் தெரி–வித்–துள்–ள–னர்.
- இங்கு ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யாமல் பணிகள் மேற்கொள்வதாலும் சாலைகள் அகலப்படுத்தாமல் இருப்பதாலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு .வருகின்றனர்.
- பொதுமக்கள் இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்
கடலூர்:
கடலூர் கோண்டூரில்இருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணி நடை பெற்று வருகிறது. இந்த நிலையில் நெல்லிக்குப்பத்தில் விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை நெடுஞ்சாலைத்துறையினர் ஒரு சிலருக்கு ஆதரவாகவும், லஞ்சம் பெற்றுக் கொண்டும் சரியான முறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்யாமல் சாலையின் இரு புறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினார்கள். இதனை தொடர்ந்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, கடந்த 2019 -ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் அளவீடு செய்து அதற்கான குறியீடுகள் வரைந்தனர் . ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒரு சிலருக்கு ஆதரவாக தற்போது சரியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யாமல் பணிகள் மேற்கொள்வதால் சாலைகள் அகலப்படுத்தாமல் வழக்கமாக இருப்பது போல் சாலைகள் இருந்தால் வாகனங்கள் எப்படி செல்வது? இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வருவதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மீண்டும் 4 சர்வேயர்கள் அனுப்பி புதிதாக அளவீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்படி இன்று காலை 4 சர்வேயர்கள் நெல்லிக்குப்பத்திற்கு வந்தனர். அப்போது நெல்லிக்குப்பம் நகர சர்வேயர் கொண்டு மீண்டும் அளவீடு செய்யப் போவதாக தெரிவித்தனர் . அப்போது முன்னாள் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் , நகர அ.தி.மு.க. செயலாளர் காசிநாதன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் திருமாறன் த.வா.காநகர செயலாளர் கார்த்திக், சமூக ஆர்வலர் குமரவேல், பாரதீய ஜனதா வேலாயுதம், தி.க. இளங்கோ , கவுன்சிலர் புனிதவதி மற்றும் பொதுமக்கள் இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் கோரிக்கை தொடர்பாக உங்கள் உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்திருந்த 4 சர்வேயர்கள் தற்போது அளவீடு செய்கிறோம். அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்வோம் என தெரிவித்து அளவீடு செய்ய தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- கடலுார் மாவட்டத்தில் மதுபான கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட மொத்தம் 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கடலூர் புதுநகர் போலீஸ் நிலைய வளாகத்தில் மதுவிலக்கு போலீசார் மற்றும் மதுவிலக்கு துறையினர் மூலம் ஏலம் விடப்பட்டது.
கடலூர்:
கடலுார் மாவட்டத்தில் உள்ள தாலுக்கா போலீஸ் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவில் இருந்து மதுவிலக்கு சம்மந்தமாக பதிவு செய்யபட்ட வழக்கில், மதுபான கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட நான்கு சக்கர வாகனங்கள்8, மூன்றுச்சக்கர வாகங்கள் 4, மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள்38 என மொத்தம் 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 50 வாகனங்களையும் அரசுக்கு ஆதாயம் வரும் பொருட்டு கடலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி இன்று (4 ந்தேதி) காலையில் கடலூர் புதுநகர் போலீஸ் நிலைய வளாகத்தில் மதுவிலக்கு போலீசார் மற்றும் மதுவிலக்கு துறையினர் மூலம் ஏலம் விடப்பட்டது. ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர். பின்னர் தங்களுக்கு தேவையான வாகனங்களை ஏலம் மூலமாக எடுத்தனர். தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது.
- கடலூர் முதுநகரை சேர்ந்த 20 வயது இளம்பெண் பிளஸ் -2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.
- அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் (வயது 24) இளம் பெண்ணை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக தெரிகிறது.
கடலூர்:
கடலூரில் இளம் பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். கடலூர் முதுநகரை சேர்ந்த 20 வயது இளம்பெண் பிளஸ் -2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் (வயது 24) வீட்டில் இருந்த இளம் பெண்ணை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் இளம்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
- சிதம்பரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தேவையான சொந்த இடம் இல்லாமலும், எந்தவித நிரந்தர அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் சிறிய வாடகை இடங்களில் இந்த விற்பனைகூடம் உள்ளது.
- இந்நிலையில் இதற்கு தீர்வு காண, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இடைக்காலத் தடை உத்தரவு பெற்றுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, இன்று வரை இந்த விற்பனை கூடத்திற்கு தேவையான சொந்த இடம் இல்லாமலும், எந்தவித நிரந்தர அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் சிறிய வாடகை இடங்களில் இந்த விற்பனைகூடம் உள்ளது. இந்நிலையில் தற்போது விற்பனைகூடம் வயலூரில் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை கூடத்தினால், கடந்த 60 ஆண்டு காலமாக, இப்பகுதி விவசாயிகளுக்கும் மற்றும் வணிகர்களுக்கும் எந்தவித சேவையும் செய்யவில்லை.
விற்பனைக்கூடத்திற்கு, வெளியே நடக்கும் வணிகத்திற்கு மட்டும் சந்தை கட்டணம் வசூலித்து வருகின்றனர். விற்பனைக்கூடம் வெறும் கட்டண வசூலிப்பு அலுவலகம் போல் மட்டும் செயல்பட்டு வருகின்றது. சரியான முறையில் இந்த விற்பனைகூடம் செயல்பட்டால் இங்குள்ள விவசாயிகளும் வணிகர்களும் விற்பனை கூடத்தின் சேவையைப் பெற்று பயன்பெறுவர். இந்நிலையில் இதற்கு தீர்வு காண, சிதம்பரம் வர்த்தகர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இடைக்காலத் தடை உத்தரவு பெற்றுள்ளது. இந்த இடைக்கால உத்தரவு நிரந்தரமாக்கவும், சிதம்பரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விற்பனை க்கூடம் அமைக்கவும் அங்கு நடைபெறும் வணிகத்திற்கு மட்டுமே சந்தை கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்கும், உரிய நடவடிக்கை எடுக்க சங்கம் முயற்சி செய்யும் என வர்த்தகர் சங்க தலைவர் சதீஷ்குமார் தெரிவித்தார்.
- பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.52 ஆயிரம் மதிப்பீட்டில் சமையல் கூடம் பழுதுநீக்கம் பணிநடைபெற்றுள்ளதை கலெக்டர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- இவ் ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் மதுபாலன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கடலூர்:
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னகுமட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்ரூ.1.31 லட்சம் மதிப்பீட்டில் முருங்கை நாற்றங்கால் பண்ணை அமைக்க ப்பட்டுள்ளதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.2 லட்சம் மதிப்பீட்டில் தனிநபர் உறிஞ்சி குழாய் அமைக்கப்பட்டுள்ளதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.32 லட்சம் மதிப்பீட்டில் மயானகுளம் தூர்வாரி வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவதையும், சின்னகுமட்டி, சில்லாங்குப்பம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில்; பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.52 ஆயிரம் மதிப்பீட்டில் சமையல் கூடம் பழுதுநீக்கம் பணி நடைபெற்றுள்ளதை கலெக்டர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, மஞ்சக்குழி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கொடிக்கால் நகர் பகுதியில் ரூ.5.24 லட்சம் மதிப்பீட்டில் சமையல்கூடம் கட்டுமான பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் முருங்கை நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
கீழ்அனுவம்பட்டு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கொடிக்கால் நகர் பகுதியில் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் திட்டத்தின் கீழ்; ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் முருங்கை நாற்றங்கால்; பண்ணை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், கீழ்அனுவம்பட்டு ஊராட்சி, அம்புபூட்டியபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதை தொடர்ந்து தில்லைவிடங்கன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணி மற்றும் 15-வது நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.52 ஆயிரம் மதிப்பீட்டில் சமையல் கூடம் பழுதுநீக்கம் பணிகள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ் ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் மதுபாலன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- செங்கல் சூளை வியாபாரியான வீரபத்திரன் டிபன் வாங்க பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
- அப்போது வீரபத்திரன் பைக்குடன் அன்பரசன்(32), ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டது.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த வரிஞ்சிப்பக்கம் காந்தி நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த வீரமுத்து மகன் வீரபத்திரன் (23), செங்கல் சூளை வியாபாரி.இவர் நேற்று இரவு 10 மணி அளவில் சூளையில் வேலைசெய்துகொண்டு இருந்த தொழிலாளிகளுக்கு டிபன் வாங்குவதற்காக பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.
பண்ருட்டி - அரசூர் ரோட்டில் மணிநகர் பஸ் நிறுத்தம் அருகில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகர் 4-வது தெருவை சேர்ந்த அன்பரசன்(32) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் வீரபத்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அன்பரசன் கடலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- .கடலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த தொடர் கனமழையால் கெடிலம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
- கடலூர் நகரின் முக்கிய சின்னமாக இருந்து வந்த இரும்பு மேம்பாலத்தை அதிகாரிகள் இடித்து தகர்த்தனர்
கடலூர்:
கடலூரின் முக்கிய பாலமாக அண்ணா மேம்பாலம் உள்ளது. இது கடலூர் நகரின் இணைப்பு மேம்பாலமாக இருந்து வருவதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் 24 மணி நேரமும் சென்று வருகின்றது. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் நாளடைவில் அதன் பயன்பாடு முழுவதும் குறைந்து வந்தது. இந்தநிலையில், மாநகராட்சிக்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் குழாய், இரும்பு மேம்பாலம் வழியாக அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்த இரும்பு பாலத்தை சரியான முறையில் பராமரித்து வராத காரணத்தினால் இடிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள், கடலூர் நகரின் முக்கிய சின்னமாக இருந்து வந்த இரும்பு மேம்பாலத்தை இடித்து தகர்த்தனர்.இந்த பாலத்தின் வழியாக தான் கடலூர் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் ராட்சத குழாய்களும், பாதாள சாக்கடை குழாய்களும் செல்கின்றன. தற்போது புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ராட்சத குடிநீர் குழாய்களையும், பாதாள சாக்கடை குழாய்களையும் வேறு வழியாக மாற்றி அமைக்கும் வகையில் சிறிய பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக மாநகராட்சி சார்பில் ஆற்றின் குறுக்கே மண் பாதை அமைக்கப்பட்டு, அதன் மூலம் பணியாளர்கள் சென்று குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் கடலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த தொடர் கனமழையால் கெடிலம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக குழாய் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட பாதை அந்த நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் குழாய் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்தப் பாதையை விரைந்து சீரமைத்து, குடிநீர் குழாய் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சத்துணவு மையங்களில் சத்துணவு வழங்க ஏதுவாக விலைவாசிக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
- சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும்
கடலூர்:
சத்துணவு மையங்களில் சத்துணவு வழங்க ஏதுவாக விலைவாசிக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும். சத்துணவு திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும். சத்துணவு பிரிவில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு நாகம்மாள் தலைமை தாங்கினார். மல்லிகா, புஷ்பலதா, திவ்யா, லட்சுமி, சரளா, செல்வநாயகி, சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரி வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரங்கசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் ரேவதி நன்றி கூறினார்.
- இன்று காலை மங்கலம்பேட்டை அருகே, பைபாஸ் ரோடு சந்திப்பில் வந்துக் கொண்டிருந்த ஆட்டோவின் மீது, அதி வேகமாக வந்த கார் மோதியது.
- இதில் ஆட்டோவில் பயணம் செய்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்:
சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கீழ், விருத்தாசலம், மங்கலம்பேட்டை, உளுந்தூர்பேட்டை வரையில் பைபாஸ் சாலை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், இன்று காலை மங்கலம்பேட்டை அருகே, மங்கலம்பேட்டை - புல்லூர் சாலை மற்றும் பைபாஸ் ரோடு சந்திப்பு அருகே வந்துக் கொண்டிருந்த ஆட்டோவின் மீது, புதிய பைபாஸ் சாலையில் அதி வேகமாக வந்த கார் மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஆட்டோ டிரைவர் உள்பட மற்றொருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மங்கலம்பேட்டை போலீசார், விபத்தில் இறந்த முதியவர் யார்?, படுகாயமடைந்தவர்கள் எந்த ஊரைச்சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






