என் மலர்tooltip icon

    கடலூர்

    • கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
    • அங்கு மாணவிகளுக்கு தயார் செய்து வழங்கப்படும் உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்ட பணிகளையும், பல துறைகளின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா இன்று காலை கடலூர் வருகை தந்தார். அவர் கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மாணவிகளுக்கு தயார் செய்து வழங்கப்படும் உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார்.

    கல்லூரியில் தனி அறையில் நூலகம் அமைத்து பராமரிக்கும் படியும், இ-நூலகத்தை விரைவில் தொடங்கவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து கல்லூரி விடுதி வளாகம், மாணவிகள் தங்கும் அறை உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டு அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறதா? என மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது கூடுதல் கலெக்டர் மதுபாலன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • பண்ருட்டி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் சேர்மன் சபா.பாலமுருகன் தலைமையில் நடந்தது.
    • அருள்முருகன் (தி.மு.க): நடுக்குப்பம் பகுதியில் தமிழக முதல்வரின் அறிவுரைப்படி இளைஞர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும்.

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் சேர்மன் சபா.பாலமுருகன் தலைமை யில் நடந்தது.துணை சேர்மன் தேவகி ஆடல் அரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீரா கோமதி, மேலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத் தீர்மானங்கண அலுவலக உதவியாளர் ராமநாதன் வாசித்தார்.

    கூட்டத்தில் கவுன்சிலர்களி டையே நடந்த விவாதம் வருமாறு:-

    அருள்முருகன் (தி.மு.க): நடுக்குப்பம் பகுதியில் தமிழக முதல்வரின் அறிவுரைப்படி இளைஞர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும்.

    ராமகிருஷ்ணன் (த.வா.க.): வேகா கொல்லை ஊராட்சி குள்ளஞ்சாவடி சாலை அருகில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். பொதுமக்களோடு இணைந்து அந்த டாஸ்மாக்கை அடித்து நொறுக்குவேன். காட்டுவேகாக்கொல்லை - வேகாக்கொல்லை செல்லும் சாலை, சிவன் கோவில் செல்லும் தார் சாலை அமைத்து தரவேண்டும். ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும்.

    விஜயதேவி தேவராசு (த.வா.க): அங்குசெட்டி பாளையம் - சிறுவத்தூர் செல்லும் பகுதியில் மாணவர்களின் நலன் கருதி மின்விளக்கு அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    சேர்மன் சபா.பாலமுரு கன்: ஒன்றிய கவுன்சிலர்களின் அனைத்து குறைகளும் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடலூர் மாவட்டத்திலேயே நம்பர் 1 ஊராட்சி ஒன்றியமாக மாற அனைத்து துறை அலுவலர்கள், தலைவர்கள், கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என பேசினார். 

    • ஆறுமுகம் மகன் தினேஷ் (வயது 26) என்பவர் வேப்பூர் வந்துவிட்டு மீண்டும் பெரியநெசலூர் செல்ல சேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
    • ஆட்டோ டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த தினேஷ் ஆட்டோவிலிருந்து தவறி சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் தினேஷ் (வயது 26) என்பவர் வேப்பூர் வந்துவிட்டு மீண்டும் பெரியநெசலூர் செல்ல சேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பயணிகளை ஏற்றி கொண்டு வேப்பூர் சேலம் சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது நயகரா பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த தினேஷ் ஆட்டோவிலிருந்து தவறி சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தார் அவரை உடன் சென்றவர்கள் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகு சேர்த்தனர், அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைகாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திட்டக்குடி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 350 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமானதால் மீள முடியாத சோகத்தில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
    • 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக. நெற்பயிர்கள் நிலங்களில் சாய்ந்தது. இதில் 350-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி உள்ளது.

    கடலூர்:

    திட்டக்குடி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 350 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமானதால் மீள முடியாத சோகத்தில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நாவலூர், மருதாத்தூர், ஆதமங்கலம், மேலூர், தொளார். புத்தேரி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெலிங்டன் நீர்த்தேக்க பாசனத்தை கொண்டு நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது.அதன்படி அறுவடை எந்திரங்கள் விவசாய நிலங்களில் நிற்கும் நிலையில், 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக அறுவடை செய்ய முடியாமல் உள்ளது. மேலும், இந்த மழையினால் நெற்பயிர்கள் நிலங்களில் சாய்ந்தது. இதில் 350-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி உள்ளது.

    இதனால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் செலவு செய்த விவசாயிகள் மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திட்டக்குடி பகுதியில் முறையான வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால் மழையை பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டிய விவசாயிகள் வேதனை அடைய வேண்டிய அவல நிலை தொடர்கிறது.

    • வெள்ளாற்றில் உள்ள தடுப்பணையில் தேக்கி வைத்திருந்த பாசன நீரை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திறந்து விட்டதால் வீணாக ஆற்றில் நீர் வெளியேறும் அவல நிலை உருவாகியுள்ளது.
    • மர்மநபர்கள் நீரை திறந்து விடுவதால் சேமித்து வைத்திருந்த தண்ணீர் வீணாக ஆற்றில் வெளியேறி கடலில் கலக்கிறது.

    கடலூர்:

    வெள்ளாற்றில் உள்ள தடுப்பணையில் தேக்கி வைத்திருந்த பாசன நீரை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திறந்து விட்டதால் வீணாக ஆற்றில் வெளியேறும் அவல நிலை உருவாகியுள்ளது.  கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த கூடலூர் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே அரியலூர் மாவட்டத்தை இணை க்கும் தடுப்பணை வெள்ளாற்றில் ரூ.16 கோடியில் கட்ட ப்பட்டது. இந்த தடுப்பணை யால் 4.14 மில்லியன் கன அடி நீரைச் சேமிக்க முடியும்  இந்த தடுப்பணைக்கு கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழை நீர் மற்றும் அருகில் இருந்து ஓடை வழியாக தடுப்பணைக்கு வந்து முழு கொள்ளளவை எட்டியயது. கூடலூர் கிராம மக்கள் குருவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்தனர்.

    இந்நிலையில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தடுப்பணையின் கதவுகளை திறந்து விடுவதும் அதை சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் மூடுவதும் தொடர் கதையாக உள்ளது.திறந்து விடுவதால் சேமித்து வைத்திருந்த தண்ணீர் வீணாக ஆற்றில் வெளியேறி கடலில் கலக்கிறது இதனால் விவசாயிகளுக்கு பாசன நீர் தற்போது கேள்விக் குறியாக மாறி வருகிறது.5 அடிக்கு மேல் தேங்கியி ருந்த நீர் நிலையில் தற்போது 3 அடி யாக குறைந்துள்ளதால் விவசா யிகள் வேதனை யடைந்துள்ளனர். தடுப்பணை யில் இருந்து தண்ணீரை திறந்து விடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளில் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • குமார் இவரது மனைவி உமா (வயது 45), குமார் சரிவர வேலைக்கு செல்லாததால் கணவன், மனைவி இருவருக்குள் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டது
    • இதனால் மன உலைச்சலில் இருந்த உமா நேற்று அதே பகுதியில் உள்ள சொந்த நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே குடுமியான் குப்பத்தை சேர்ந்தவர் குமார் இவரது மனைவி உமா (வயது 45), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குமார் சரிவர வேலைக்கு செல்லாததால் கணவன், மனைவி இருவரு க்குள் அடிக்க டி வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதனால் மன உலைச்சலில் இருந்த உமா நேற்று அதே பகுதியில் உள்ள சொந்த நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உமா உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் மாவட்டம் கீழவன்னீயூர் கிராமத்தில் உயர்கல்வி துறை சார்பில் கட்டபடவுள்ள புதிய கல்லூரி கட்டுமான பணியை வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
    • கலெக்டர் பால சுப்ரமணியம், சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், குமராட்சி ஊராட்சிக் குட்பட்ட, கீழவன்னீயூர் கிராமத்தில் உயர்கல்வி துறை சார்பில் ரூ.7 கோடியே 97.50 மதிப்பீட்டில் புதியதாக கட்டபடவுள்ள கலை மற்றும் அறிவியில் கல்லூரி கட்டுமான பணியை வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கலெக்டர் பால சுப்ரமணியம், சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

    புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கு குமராட்சி ஊராட்சிக்குட்பட்ட, கீழவன்னீயூர் கிராமத்தில் 4.02 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டிடம் தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என 32 ஆயிரத்து 626 சதுர அடிகள் பரப்பளவில் அமைய உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சரவணன் , செயற்பொறியாளர் தொழில்நுட்ப பிரிவு கோட்டம் (தஞ்சாவூர்) பாலசுப்ரமணியன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலு வலர்கள் கலந்து கொண்டன

    • கட–லூ–ரில், வாகன நிறுத்–தம், கழி–வ–றைக்கு கூடு–தல் கட்–ட–ணம் வசூ–லித்–தால் உரி–மம் ரத்து செய்–யப்–படும் என்று மாந–க–ராட்சி மேயர் சுந்–தரி ராஜா எச்–ச–ரிக்கை விடுத்–துள்–ளார்.
    • குத்–த–கை–தா–ரர் அதிக கட்–ட–ணம் செலுத்த கேட்–டால், மாந–க–ராட்–சிக்கு உட–ன–டி–யாக புகார் தெரி–விக்–க–லாம். இதை மீறி யாரே–னும் கூடு–தல் கட்–ட–ணம் வசூ–லித்–தால், குத்–தகை உரி–மம் ரத்து செய்–யப்–படும்.

    கட–லூர்:

    கட–லூ–ரில், வாகன நிறுத்–தம், கழி–வ–றைக்கு கூடு–தல் கட்–ட–ணம் வசூ–லித்–தால் உரி–மம் ரத்து செய்–யப்–படும் என்று மாந–க–ராட்சி மேயர் சுந்–தரி ராஜா எச்–ச–ரிக்கை விடுத்–துள்–ளார்.

    கட–லூர் மாந–க–ராட்–சிக்–குட்–பட்ட பகு–தி–களில் செயல்–படும் கட்–டண கழி–வறை, வாகன நிறுத்–து–மி–டங்–கள், பூங்கா நுழைவு கட்–ட–ணம், வாக–னங்–களில் கொண்டு வந்து பொருட்–களை விற்–பனை செய்–தல், சாலையோரங்–களில் தரைக்–கடை வைத்து விற்–பனை செய்–வ–தற்கு குத்–தகை தொடர்–பான கட்–ட–ணங்–கள் ஏற்–க–னவே நிர்–ண–யம் செய்–யப்–பட்–டுள்ளது. இருப்–பி–னும் இதை மீறி சில இடங்–களில் குத்–த–கை–தாரர்–கள் பொது–மக்–க–ளி–டம் அதிக கட்–ட–ணம் வசூ–லிப்–பதாக பல்–வேறு புகார்–கள் வந்த வண்–ணம் உள்–ளது. இது பற்றி மாந–க–ராட்சி மேயர் சுந்–தரி ராஜா, ஆணை–யா–ளர் கிருஷ்–ண–மூர்த்தி ஆகி–யோர் வெளி–யிட்–டுள்ள செய்–திக்கு–றிப்–பில் கூறி–யி–ருப்–ப–தா–வது:-

    கட–லூர் மாந–க–ராட்சி பகு–தி–யில் கட்–டண கழி–வ–றை–யில் சிறு–நீர் கழிக்க ஒரு நப–ருக்கு 1 தடவை ரூ.2, மல அறையை பயன்–ப–டுத்த ரூ.3, குளி–யல் அறையை உபயோ–கிக்க ரூ.5, கட–லூர் சில்–வர் பீச்–சில் இரு சக்–கர வாக–னத்தை நிறுத்த ரூ.3, ஆட்டோ, கார், ஜீப் போன்ற இலகு ரக வாக–னங்–க–ளுக்கு ரூ.5, வேன், பஸ்–க–ளுக்கு ரூ.10, சுப்–பு–ரா–ய–லு–ந–கர் பூங்கா நுழைவு கட்–ட–ணம் ரூ.5, விளை–யாட்டு உப–க–ரணங்–களை பயன்–ப–டுத்த 7 வயது வரை உள்ள சிறு–வர், சிறு–மி–க–ளுக்கு 15 நிமி–டங்–க–ளுக்கு நபர் ஒரு–வ–ருக்கு ரூ.5 கட்–ட–ணம் நிர்–ண–யம் செய்–யப்–பட்–டுள்–ளது.

    கட–லூர் மாந–க–ராட்சி எல்லைபகு–திக்–குள் வாக–னங்–கள் மூலம் பொருட்–கள் கொண்டு வந்து விற்–பனை செய்–வ–தற்கு, லாரி மற்–றும் வேன்–களில் கொண்டு வந்து விற்–பனை செய்–வ–தற்கு நாள் 1-க்கு 30, மூன்று சக்–கர ரிக்ஷா, இரு சக்–கர வாக–னத்–தில் பொருட்–கள் விற்–பனை செய்ய ரூ.10, நான்கு சக்–கர வாக–னத்–தில் பொருட்–கள் விற்–பனை செய்ய ரூ.10, சைக்–கி–ளில் கொண்டு வந்து விற்–பனைசெய்ய ரூ.10 கட்–ட–ணம் நிர்–ண–யம் செய்–யப்–பட்–டுள்–ளது.

    உரி–மம் ரத்து

    சாலையோரங்–களில் கடை வைத்து தயிர், மோர், கீரை கூடை–களில் வைத்து வியா–பா–ரம் செய்ய கூடை ஒன்–றுக்கு ரூ.5, குறைந்–த–பட்ச இடத்–தில் வைத்து வியா–பா–ரம் செய்யரூ.10, ரூ.15 கட்–ட–ணம் வசூ–லிக்–கப்–ப–டு–கிறது.

    ஆகவே மாந–க–ராட்–சி–யால் நிர்–ண–யிக்–கப்–பட்ட கட்–ட–ணங்–களை செலுத்–து–மாறு பொது–மக்–கள் கேட்–டுக் கொள்–ளப்–படுகிறார்கள். குத்–த–கை–தா–ரர் அதிக கட்–ட–ணம் செலுத்த கேட்–டால், மாந–க–ராட்–சிக்கு உட–ன–டி–யாக புகார் தெரி–விக்–க–லாம். இதை மீறி யாரே–னும் கூடு–தல் கட்–ட–ணம் வசூ–லித்–தால், குத்–தகை உரி–மம் ரத்து செய்–யப்–படும். இவ்–வாறு அவர்– தெரிவித்துள்ளார்.

    • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
    • கொலை, கொள்ளைகாரர்களை அதிரடியாக கைது செய்து பொதுமக்களின் பாராட்டையும், நன்மதிப்பினையும் பெற்றுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பழைய திருட்டு, கொள்ளை, கொலை வழக்குகளை தூசிதட்டி எடுத்து துப்புத்துலக்கி கொலை, கொள்ளைகாரர்களை அதிரடியாக கைது செய்து பொதுமக்களின் பாராட்டை யும், நன்மதிப்பினையும் பெற்றுள்ளார். இவரது பல்வேறு அதிரடி களுக்கு நடவடிக்கைகளில் ஒன்றாக, சாலைகளில் தினமும் நடைபெற்று வரும் விபத்துகளை குறைப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.  வாகன ஓட்டிகள் வாகன விதிகளை மீறாமல் இருக்க பல விழிப்புணர்வுகளை போலீசார் மூலம் எடுத்து வருவதுடன் உயிர் பலியை தடுக்க பல நடவடிக்கை எடுத்து வருகிறார்.அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து விபத்துகளை தடுக்க பேரிகார்டு அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளார். பண்ருட்டி -கடலூர் சாலையை விபத்து இல்லாத சாலையாக மாற்ற நேற்றிரவு கடலூரில் இருந்து துவங்கிய அவரது பயணம் மாவட்ட எல்லையான வீரப்பெருமாநல்லூர் வரை சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெ க்டர்கள் கண்ணன், நந்தகுமார், ராஜதாமரை பாண்டியன், ரவிச்சந்திரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன்ஆகியோருடன் ஆலோசனை நடத்தி தக்க அறிவுரைகளை வழங்கினார்.

    • கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் வருடம்தோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • தேவநாதசுவாமி கோவிலில் 12 நாட்கள் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 27 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.

    இக்கோவிலில் வருடம்தோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி தேவநாத சுவாமி கோவிலில் 12 நாட்கள் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 27 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஹம்ச வாகனம், சூரிய பிரபை, வெள்ளி சிம்ம வாகனம், யாளி வாகனம், அனுமந்த வாகனம், ஸ்ரீ வேணுகோபாலன் சேவை, தங்க விமானம், சேஷ வாகனத்திலும், தங்கப்பல்லக்கு நாச்சியார் திருக்கோலத்திலும் சாமி வீதி உலா நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கருட மஹா உற்சவத்தன்று கருடவாகனத்தில் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று (வெள்ளிக்கிழமை) திருத்தேரோட்டம் நடைபெற்றது. காலை 4.50 மணிக்கு மேல் 5.20 மணிக்குள் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் முக்கிய வீதிகளில் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். பின்னர் முக்கிய வீதியில் சாமி வீதி உலா நடைபெற்று பின்னர் நிலையை வந்து அடைந்தது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன. மேலும் ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இரவு பானக பூஜையும், 6 -ந் தேதி மட்டையடி மற்றும் தங்க பல்லக்கில் வீதி உற்சவமும், இரவு தெப்ப உற்சவம், 7- ந் தேதி காலை துவாதச ஆராதனம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • வணிகர்கள் மே 5-ந்தேதியை வணிகர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.
    • பண்ருட்டியில் வணிக ர்கள் தினத்தையொட்டி கடைகள் அடைக்க ப்பட்டுள்ளது,

    கடலூர்:

    பண்ருட்டியில் வணிகர்கள் தினத்தையொட்டி கடைகள் அடைக்க ப்பட்டுள்ளது.

    வணிகர்கள் மே 5-ந்தேதியை வணிகர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.இதையொட்டி ஒவ்வொரு வணிகர் சங்கமும் தங்களது சங்க நிர்வாகிகளை திரட்டி மாநாடு நடத்துகின்றனர்.வியாபாரிகளுக்கு ஏற்படும் இன்னல்கள்,அதை களை வதற்கான ஏற்பாடுகள்கு றித்துஇதில்விரிவாக விவாதிக்கிறார்கள். அது மட்டுமின்றி வியாபாரிகளுக்கு அரசின் சார்பில் என்ன உதவி வேண்டும் என்பது பற்றியும் கோரிக்கை வைக்கின்றனர். இதற்காக பண்ருட்டியில் வியாாரிகள் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டுக்கு செல்கின்றனர். இது தொடர்பாக சங்க செயலாள ர் வீரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிர மராஜா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்த நிலையில் அதன்தொடர்ச்சியாக வணிகர்களின் ஒற்றுமையை பறைசாற்றவும் வணிக சகோதரத்தை நிலை நாட்டவும் மே 5-ந்தேதி வணிகர் தினத்தன்று கடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை வைத்தார். அதை ஏற்று வணிக நிறுவனங்களுக்கு 5-ந்தேதி விடுமுறை அளித்து வணிக ஒற்று மையை உணர்த்திட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறி உள்ளார். மாநாட்டுக்கு செல்லும் வியாபாரிகளின் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் சிவா தெரிவித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை 40 - வது மாநில மாநாடுஇன்று சென்னை அச்சரப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.கடைகளுக்கு விடுமுறை அளித்துமாநாட்டுக்கு வரவேண்டும் என்றுமளிகை வியாபாரிகள் சங்க செய லாளர் மோகனகிருஷ்ணன், வணிகர் சங்க பேரவை மாவட்ட செயலாளர் வானவில் ராஜா வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • கடலூர் கோண்டூரில்இருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய்செலவில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது
    • நெடுஞ்சாலைத்துறையினர் ஒரு சிலருக்கு ஆதரவாகவும், லஞ்சம் பெற்றுக் கொண்டும் சரியான முறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்யாமல் சாலையின் இரு புறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினார்கள்.

    கடலூர்:

    கடலூர் கோண்டூரில்இருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நெல்லிக்குப்பத்தில் விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை நெடுஞ்சாலைத்துறையினர் ஒரு சிலருக்கு ஆதரவாகவும், லஞ்சம் பெற்றுக் கொண்டும் சரியான முறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்யாமல் சாலையின் இரு புறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினார்கள். இதனை தொடர்ந்து நேற்று 4 சர்வேயர்கள் சாலை விரிவாக்க பணிக்காக அளவீடு செய்ய தொடங்கினர். அப்போது சரியான முறையில் அளவீடு செய்யாமல் ஒரு சிலருக்கு ஆதரவாக லஞ்சம் பெற்றுக் கொண்டு செயல்பட்டதாக கூறி அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து நேற்று இரவு அரசியல் கட்சியினர் மற்றும் நெல்லிக்குப்பம் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில ஒரு சில நபர்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் சாலை விரிவாக்க பணியை சரியான முறையில் அளவீடு செய்யாமல் உள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை கண்டித்து வருகிற 8- ந் தேதி முதல் தொடர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டன. இதில் ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், அ.தி.மு.க. நகர செயலாளர் காசிநாதன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் திலகர், விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் திருமாறன், த.வா.க நகர செயலாளர் கார்த்திக், சமூக ஆர்வலர் குமரவேல், காங்கிரஸ் நகர தலைவர் ரவிக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லிக்குப்பத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்க பணியில் பல்வேறு குளறுபடி செய்து சரியான முறையில் அளவீடு செய்து பணி மேற்கொள்ளாததால் நெல்லிக்குப்பத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை அதிகளவில் ஏற்பட்டு வருகின்றது. மேலும் பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்காமல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒரு சிலருக்கு ஆதரவாக லஞ்சம் பெற்றுக் கொண்டு செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் தொடர் குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×