என் மலர்tooltip icon

    கடலூர்

    • மாலிக் ஜான் தில்ஷாத் பேகம் (வயது 48) சம்பவத்தன்று புவனகிரி பங்களா பஸ் நிறுத்தத்திலிருந்து தனது மகள் வீட்டிற்கு செல்ல சிதம்பரத்திலிருந்து வந்த சேலம் பஸ்சில் ஏறி சென்றார்..
    • சேத்தியாத்தோப்பு அருகே பஸ் வந்த போது தனது கட்டைப் பையில் வைத்திருந்த 4 பவுன் ஆரநெக்லஸ், 3 பவுன் நெக்லஸ் என மொத்தம் 7 பவுன் நகையை காணவில்லை,யாரோ மர்மநபர் திருடிச் சென்றிருக்கலாம் என போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம்புவனகிரி பகுதி சேர்ந்தவர் மாலிக் ஜான் தில்ஷாத் பேகம் (வயது 48) சம்பவத்தன்று புவனகிரி பங்களா பஸ் நிறுத்தத்திலிருந்து தனது மகள் வீட்டிற்கு வடலூர் செல்ல சிதம்பரத்திலிருந்து வந்த சேலம் பஸ்சில் ஏறி சென்றார்.

    சேத்தியாத்தோப்பு அருகே பஸ் வந்த போது தனது கட்டைப் பையில் வைத்திருந்த 4 பவுன் ஆரநெக்லஸ், 3 பவுன் நெக்லஸ் என மொத்தம் 7 பவுன் நகையை காணவில்லை. ,என்ற சந்தேகத்தில் சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமிர்தவல்லி (வயது 50). இவர் சம்பவத்தன்று தனது பேரன் திவாகரனை (13) வீட்டில் விட்டுவிட்டு வடலூருக்கு சென்றுள்ளார்.
    • அப்போது வீட்டிற்கு வந்த வாலிபர், உங்கள் பாட்டி எனக்கு பணம் தர வேண்டும், பீரோ சாவியை கொடு என கேட்டு, பீரோவில் இருந்த 3 பவுன் நகையை அந்த மர்ம நபர் திருடி சென்றுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி அமிர்தவல்லி (வயது 50).          இவர் சம்பவத்தன்று தனது பேரன் திவாகரனை (13) வீட்டில் விட்டுவிட்டு வடலூருக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த வாலிபர், உங்கள் பாட்டி எனக்கு பணம் தர வேண்டும். பீரோ சாவியை கொடு என கேட்டுள்ளார். சாவியை வாங்கி பீரோவில் இருந்த 3 பவுன் நகையை அந்த மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இது குறித்து அமிர்தவல்லி சேத்தியாதோப்பு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜாராமன் ஒரு இரும்பு கம்பத்தை தொட்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
    • ராஜாராமன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

    கடலூர்:

    புவனகிரி குரியமங்கலம் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. நேற்று இரவு கீழ்மணகுடியைச் சேர்ந்த வீரப்பன் மகன் ராஜாராமன் (வயது 45) என்பவர் மது பாட்டில் வாங்க சென்றார். அப்பொழுது திடீரென்று பலத்த மழை பெய்ய தொடங்கியது அதனால் அவர் அந்த கடையின் ஓரம் ஒதுங்கி அங்குள்ள ஒரு இரும்பு கம்பத்தை தொட்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

    அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அவருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டியும், அந்த மதுபான கடையை நிரந்தரமாக மூட வேண்டியும், ராஜாராமன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டியும் சுமார் 500-க்கும் மேற்ப்பட்டோர் புவனகிரி போலீஸ் நிலையத்தில் குவிந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    • திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை கருங்கல்லில் கட்டி, கடலில் வீசினார்.
    • கடலூர் புதுவண்டிபாளையத்தில் உள்ள கரையேறவிட்ட குப்பம் என்று அழைக்கப்படுகிறது

    கடலூர்:

    கடலூர் முதுநகர் அருகே புதுவண்டிப்பாளையத்தில் கரையேறவிட்டகுப்பத்தில், அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தை ஆண்ட மகேந்திரவர்ம பல்லவ மன்னர், திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை கருங்கல்லில் கட்டி, கடலில் வீசினார். அப்போது நமச்சிவாய பதிகம் பாடி, அந்த கல்லையே தெப்பமாக கொண்டு அப்பர் கரை சேர்ந்தார். அந்த இடம் தான் கடலூர் புதுவண்டி பாளையத்தில் உள்ள கரையேறவிட்ட குப்பம் என்று அழைக்கப்படுகிறது. அப்பர் கரையேறிய இடத்தில் அவருக்கு தனியாக கோயில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோயிலில அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் இருந்து விநாயகர், அப்பர், பெரியநாயகியுடன் பாடலீஸ்வரர் ரிஷப வாகனத்தில் கரையேறவிட்டகுப்பம் வந்தடைந்தார். இதையடுத்து அங்கு பாடலீஸ்வரருக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு அங்குள்ள குளத்தில் அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் தெப்பத்தில் அப்பர் வலம் வந்தார். பிறகு அப்பர் கரையேறி அங்குள்ள மண்டபத்தில் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு பாடலீஸ்வரர், பெரியநாயகி, விநாயகர் சாமிகள், அப்பருடன் கோயிலை வந்தடைந்தனர்.

    • 2023-24-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.
    • மொத்தம் 4,602 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

    கடலூர்:

    மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற படிப்புகளில் சேரு வதற்கு 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப் படையிலேயே இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.நீட் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இதில் கடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுத 4,602 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர்.

    மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டத்தில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கடலூரில் 4 தேர்வு மையங்களிலும் விருத்தாசலம், பண்ருட்டி ஸ்ரீமுஷ்னம் என 4 மையங்களில் மொத்தம் 4,602 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.இந்த தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

    இதற்காக விண்ணப்பித்த மாணவ -மாணவிகள் காலை 11 மணி முதல் தேர்வு மையத்தில் அனுமதிக்கப் பட்டனர். தேர்வு நுழைவுச் சீட்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ, அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை, மாற்று திறனாளிகளாக இருந்தால் அதற்கான சான்று ஆகியவற்றை சரி பார்தது உள்ளே அனு மதித்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தடை யில்லா மின்சாரம் வழங்கு வதற்கும், தடை யில்லா இணைய வசதி மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    • கடந்த மூன்று மாத காலமாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி ஞானவேல் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சிறு வத்தூர் 7-வது தெருவை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 40),ஆட்டோ டிரை வர். கடந்த மூன்று மாத காலமாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்ச லில் இருந்த ஞானவேல் நேற்று இரவு 10 வீட்டி லிருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் ஞான வேலுவை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஞானவேல் பரிதாபமாக உயிர் இழந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி. சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
    • வருகிற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வின் கடலூர் மாநகர திருப்பாதிரிப்புலியூர் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பாதிரிப்புலியூர் பகுதி செயலாளர் கெமிக்கல் மாதவன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சேவல்குமார், மாநில மீனவர் அணி இணை செயலாளர் தங்கமணி, ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஆர்.வி.ஆறுமுகம், முன்னாள் நகரமன்ற தலைவர் சி.கே. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி. சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க.வின் மூத்த முன்னோடி களின் துணையோடு திருப்பாதிரிப்புலியூர் பகுதி சார்பில் 12,500 புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், பூத்கமிட்டி அமைத்தல், வருகிற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோ சிக்கப்பட்டது.  இதில் மாவட்ட துணை செயலாளர்கள் தெய்வ.பக்கிரி, மணி மேகலை தஷ்ணா,வர்த்தக பிரிவு செயலாளர் வரதராஜன், தலைமை கழக பேச்சாளர் புலிசை ஆர்.சந்திரஹாசன், பகுதி நிர்வாகிகள் வெங்கடேசன், நாகராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செய லாளா் ஏ.ஆர்.சி.நாகராஜன் நன்றி கூறினாா்.

    • போலீசார் துண்டுப்பிரச்சாரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
    • வாட்ஸ் ஆப் முகப்பு பக்கத்தில் புகைப்படம் பதிவிடக்கூடாது,

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுரை யின்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (இணையவழி குற்றபிரிவு) சீனிவாசலு மேற்பார்வையில் இணையவழி குற்றபிரிவு போலீஸ் இனங கவிதா மற்றும் போலீசார் கடலுார் வெள்ளி கடற்கரையில் பொதுமக்களிடம் இணையவழி குற்றங்கள் தடுப்பது தொடர்பாக துண்டுப்பிரச்சாரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    ஆன்லைன் பணமோசடி, சமூக ஊடகங்களில் மேற்கொள்ளும் குற்றங்கள் குறித்தும், புதிய செயலிகளை அதன் உண்மை தன்மை அறியாமல் பயன்படுத்த கூடாது எனவும், தேவையற்ற எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்பினை தவிர்த்தல், குறுச்செய்தியில் வரும் தேவையற்ற லிங்க் யை ஓபன் செய்ய கூடாது, வாட்ஸ் ஆப் முகப்பு பக்கத்தில் புகைப்படம் பதிவிடக்கூடாது, போலியான செயலி மூலம் பொருட்களை ஆர்டர் செய்ய வேண்டாம் ஆகிய இணையவழி குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இணையவழி குற்றம் தொடர்பாக இணையவழி இலவச உதவி எண் 1930 ம ற்றும் இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
    • தீட்சிதர்கள் குடும்பத்தினர் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் தொட ர்பாக சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் உரிய விசாரணை நடத்தி சில வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்கு தொடர்பாக சில தீட்சிதர்கள் கைதும் செய்யப்பட்டனர். அதனையடுத்து குழந்தை திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் சிறுமிக்கு, உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டதாகவும். அவ்வாறு செய்தது தவறு எனவும், சமீபத்தில் தமிழக கவர்னர் கூறியதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக சிதம்ப ரத்தில் சுகாதாரத்து றைசார்பில் மருத்துவக் குழுவினர், மருத்துவத்துறை கூடுதல் இயக்குனர் விஸ்வநாதன், கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ரமேஷ்பாபு, கடலூர் மகப்பேறு டாக்டர் பரமேஸ்வரி, சென்னை கூடுதல் கண்காணிப்பாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் சிதம்பரம் வந்து சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுரதி மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று வழக்கு குறித்து கேட்டறிந்து விசாரணை மேற்கொ ண்டனர்.

    தீட்சிதர்கள் குடும்பத்தி னர் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்ய ப்பட்டன. அந்த வழக்குகளில் எந்தவிதமான மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றது என கேட்டறிந்தனர். மேலும் இந்த விசாரணைக்கு ஒத்துழைக்கும் படியும் போலீஸ் அதிகாரியிடம், சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாக கூறப்படு கிறது. இதை தொடர்ந்து மருத்துவக் குழுவினர் மருத்துவ சோதனை மேற் கொள்ள கடலூர் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றனர்.

    • ஐவனூர், எழுத்தூர், மாங்குளம் கிராமங்களில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.
    • அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு கிராம பெண்கள் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஐவனூர், எழுத்தூர், மாங்குளம் கிராமங்களில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார். அப்பொழுது கிராம ங்களுக்கு தேவையான வசதிகள் குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். எழுத்தூர் கிராமத்தில் குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதிகள், சிமெண்ட் சாலை வசதி செய்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    உடனடியாக அதிகாரிகளை அழைத்து கழிவுநீர் வடிகால் வசதிகளையும் குடிநீர் வசதிகளையும் செய்ய உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு கிராம பெண்கள் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர் .மேலும் ஐயவனூர், மாங்குளம் கிராமத்தில் உள்ள கொவில்களை ஆய்வு செய்து கோவில்களை புனரமைப்பு செய்ய நிதி உதவிஅளித்து உடனடியாக கும்பாபிஷேகம் செய்வ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புவனகிரி பகுதியில் நேற்றிரவு மழை பெய்தது.

    புவனகிரி:

    புவனகிரி அடுத்த கீழமணக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 45). கொத்தனார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் நேற்று இரவு புவனகிரி அருகே குரியாமங்கலம் சாலையில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்கச் சென்றார். அங்கு மதுபானத்தை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தார்.

    புவனகிரி பகுதியில் நேற்றிரவு திடீர் மழை பெய்தது. இதனால் டாஸ்மாக் கடையிலேயே நின்றார். டாஸ்மாக் கடையில் இருந்த இரும்பு கம்பத்தை பிடித்து நின்றார். அதிலிருந்து வந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைக் கண்ட மற்ற குடிமகன்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    அங்கு வந்த ஒரு சிலர், இந்த கம்பத்திலிருந்து மின்சாரம் வருகிறது என்று நாங்கள் ஒரு மணிநேரத்திற்கு முன்பே கூறினோம். நீங்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் ராஜாராமன் மின்சாரம் தாக்கி இறந்திருக்கமாட்டார் என்று டாஸ்மாக் ஊழியர்க ளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி போலீசார், ராஜாராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி அங்கு வந்தார். மின் கசிவினை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இல்லையேல் கடையை திறக்க கூடாது என்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

    • கடலூர் முதுநகர் துறைமுகம் ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் ஆய்வு செய்தார்.
    • ெரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் ெரயில்வே ஊழியர்களின் குடியிருப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் துறைமுகம் ெரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ெரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் ஆய்வு செய்தார்.    ெரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் ெரயில்வே ஊழியர்களின் குடியிருப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அவர் அங்கிருந்த பொது மக்களிடம் ெரயில் நிலையத்தில் உள்ள குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் கட்சியினர் மனிஷ் அகர்வாலிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் ெரயில் நிலையங்களில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

    ×