என் மலர்tooltip icon

    கடலூர்

    • காமதேனு (வயது 38) சம்பவத்தன்று தனது தாய் தனவள்ளியுடன் நடுகுப்பத்தில் இருந்து கீழகுப்பம் நோக்கி நடந்து சென்றார்.அப்போது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.
    • அருகில் இருந்தவர்கள் இவர்கள் இருவரையும் மீட்டு மருங்கூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காமதேனு உயிரிழந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கிழக்கு மேட்டுக்குப்பம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மனைவி காமதேனு (வயது 38) சம்பவத்தன்று தனது தாய் தனவள்ளியுடன் நடுகுப்பத்தில் இருந்து கீழகுப்பம் நோக்கி நடந்து சென்றார்.அப்போது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் காமதேனு, தனவல்லி படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இவர்கள் இருவரையும் மீட்டு மருங்கூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காமதேனு உயிரிழந்தார்.  மேலும் இதில் படுகாயம் அடைந்த தனவள்ளி மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சேர்த்தனர். இதுகுறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், முத்தாண்டி குப்பம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடலூர் எஸ்.டி. ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
    • தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வர் சுகிர்தாதாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    கடலூர்:

    வடலூர் எஸ்.டி. ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. வடலூரில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வரும் எஸ். டி. ஈடன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 285 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் தேர்வு எழுதிய 285 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.  இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளில் 75 பேர் 500 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 550க்கு மேல் 25 பேரும், 570 மதிப்பெண்ணுக்கு மேல் 7 மாணவர்களும் பெற்றுள்ளனர். மாணவி கோபிகா 586 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவி ஈஸ்வரி 579 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், மாணவி சாஜிதா 575 மதிப்பெண்ணுடன் 3-ம் இடமும் பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வர் சுகிர்தாதாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.பிளஸ்-2 பொதுத் தேர்வில் 285 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் தேர்வு எழுதிய 285 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளில் 75 பேர் 500 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 550க்கு மேல் 25 பேரும், 570 மதிப்பெண்ணுக்கு மேல் 7 மாணவர்களும் பெற்றுள்ளனர். மாணவி கோபிகா 586 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவி ஈஸ்வரி 579 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், மாணவி சாஜிதா 575 மதிப்பெண்ணுடன் 3-ம் இடமும் பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வர் சுகிர்தாதாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • அருண் (வயது 32) டிரைவர் பணி செய்வதால், கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை அடுத்து அருணின் மனைவி அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.
    • இதனால், மனமுடைந்த அருண் வடலூர் சாலையில் சிவன் கோவில் அருகில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலூரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் அருண் (வயது 32). இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி காட்டுமன்னார்கோவில் அருகே கூடுவாஞ்சாவடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அருண் டிரைவர் பணி செய்வதால், கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை அடுத்து அருணின் மனைவி அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் டிரைவர் பணிக்கு சென்று விட்டு பெற்றோரை காண பின்னலூருக்கு நேற்று வந்தார். அங்கிருந்து அவரது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் வரமறுத்தாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அருண், வடலூர் சேத்தியாத்தோப்பு சாலையில் உள்ள சிவன் கோவில் அருகில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேத்தி யாத்தோப்பு இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா ஆகியோர் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவம னைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சரவணன் (வயது 31) லாரி டிரைவர். நேற்று இரவு பெங்களூரில் இருந்து பழங்களை ஏற்றிக் கொண்டு கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை அங்கிருந்த தடுப்பு கட்டையில் லாரி மோதி பலத்த சத்தத்துடன் சாலையில் கவிழ்ந்தது‌.
    • இந்த விபத்தில் லாரியை ஓட்டிவந்த டிரைவர் சரவணன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

    கடலூர்:

    பெங்களூரில் இருந்து பழங்களை ஏற்றி வந்த லாரி, கடலூர் சாவடியில் உள்ள ஒரு தடுப்பு கட்டை யில் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பினர். திருக்கோவிலூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சரவணன் (வயது 31) லாரி டிரைவர். நேற்று இரவு பெங்களூரில் இருந்து பழங்களை ஏற்றிக் கொண்டு கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது இன்று அதிகாலை கடலூர் சாவடியில் வந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த தடுப்பு கட்டை யில் லாரி மோதி பலத்த சத்தத்துடன் சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியின் முன்பக்க சக்கரங்கள் உடைந்தன. மேலும் லாரியும் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் சரவணன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.      இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடலூர் சாவடியில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருவ தால் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தார்.
    • சட்டவிரோதமாக மணல் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஏரியில் மீன் வளர்த்து விற்பனை செய்யும் கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் செல்வகுமார் ஜோதி பாசு, வைரமுத்து, சரவணன், ராஜீ மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது

    கம்மாபுரம் அருகே வி. குமாரமங்கலம் கிராமத்தில் இன்பராஜ், தினேஷ்குமார் ஆகிய 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி இறந்து விட்டனர். அந்த கிராம ஏரியில் சட்டவிரோதமாக மணல் எடுத்ததால் பள்ளத்தில் மூழ்கி சிறுவ ர்கள் இறந்துவிட்டார்கள்.. சட்டவிரோதமாக மணல் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஏரியில் சட்டவிரோதமாக மீன் வளர்த்து விற்பனை செய்யும் கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமில் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.
    • மனுகொடுக்க வந்த மகேந்திரன் என்பவர் டாஸ்மாக் மதுக்கடைகள் நீண்ட நேரமாக திறந்து இருப்பதால், பொதுமக்கள் அவதி அடைகிறார்கள். குடிமகன்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது என கோஷமிட்டார்.

    கடலூர்,:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர். கடலூர் மாவட்டம் கிள்ளையை சேர்ந்த மகேந்திரனும் மனு கொடுக்க வந்தார். அவர் கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு அலுவலக வளாகத்திற்கு வந்தார். அப்போது அவர் டாஸ்மாக் மதுக்கடைகள் நீண்ட நேரமாக திறந்து இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைகிறார்கள். குடிமகன்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது என கோஷமிட்டார். அவரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அழைத்து உங்களது கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடமோ அல்லது மாவட்ட நிர்வாகத்திடமோ மனு அளிக்க வேண்டும். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இப்படி பேசக்கூடாது என எச்சரித்தனர். அதன் பின்னர் மகேந்திரன் அங்கு இருந்து புறப்பட்டு சென்றார்.  இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாணவி கிரிஜாவுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உறவினர்கள் தேர்வு எழுத ஊக்கமளித்தனர்.
    • பிளஸ்-2 கடைசி தேர்வின்போது தனது தந்தை இறந்த துக்கத்திலும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து கிரிஜா தேர்வு எழுதினார்.

    கடலூர்:

    தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதி முடிவடைந்தது.

    கடலூர் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற பிளஸ்-2 மாணவி வேதியியல் தேர்வு எழுதினார். அப்போது மாணவி கிரிஜா தந்தை பழையவண்டிப் பாளையம் பகுதியை சேர்ந்த ஞானவேல் (வயது 45) திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்ட காரணத்தினால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி ஞானவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சிக்குரிய தகவல் அறிந்த அவரது மகள் கிரிஜா பிளஸ்-2 கடைசி தேர்வின்போது தனது தந்தை இறந்த துக்கத்திலும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து தேர்வு எழுதினார். மாணவி கிரிஜாவுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உறவினர்கள் தேர்வு எழுத ஊக்கமளித்தனர். இந்த நிலையில் இன்று பிளஸ்-2 முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில்கிரிஜா 479 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

    • . வள்ளலார் பள்ளியில் இந்த ஆண்டு 247 மாணவ, மாணவியர் பிளஸ்-2 பயின்று வந்தனர்..பிளஸ்-2 தேர்வுக்கான முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டது. இதில் வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து தேர்வெழுதிய 247 மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
    • . இதில் சுவாதி என்ற மாணவி பள்ளி அளவில் முதலிடம் பெற்றதோடு, உயிரியல் குரூப்பில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார். இவர் இயற்பியல், வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்ணும், தமிழ், ஆங்கிலம், கணிதம், உயிரியல் பாடங்களில் 100-க்கும் 99 மதிப்பெண்களும் பெற்று 600-க்கு 596 மதிப்பெண்ணுடன் மாநில அளவில் 2-ம் இடமும் பள்ளி அளவில் முதலிடமும் பெற்றுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி கொள்ளுக்காரன்குட்டையில் வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இந்த ஆண்டு 247 மாணவ, மாணவியர் பிளஸ்-2 பயின்று வந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வில் 247 மாணவர்களும் தேர்வெழுதினர்.பிளஸ்-2 தேர்வுக்கான முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டது. இதில் வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து தேர்வெழுதிய 247 மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதில் சுவாதி என்ற மாணவி பள்ளி அளவில் முதலிடம் பெற்றதோடு, உயிரியல் குரூப்பில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார். இவர் இயற்பியல், வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்ணும், தமிழ், ஆங்கிலம், கணிதம், உயிரியல் பாடங்களில் 100-க்கும் 99 மதிப்பெண்களும் பெற்று 600-க்கு 596 மதிப்பெண்ணுடன் மாநில அளவில் 2-ம் இடமும் பள்ளி அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். மாணவி அட்சயா 584மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடமும், மாணவன் அண்புமணி 583 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 3-ம் இடமும் பிடித்துள்ளார். மேலும், இந்த பள்ளி கடலூர் மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைவர் திருமால்வளன், தாளாலர் கே. நடராஜன், வள்ளலார் கிட்ஸ் பள்ளி தாலாளர் மற்றும் செயலாளர் சக்கரவர்த்தி, பொருளாலர் ராஜா, கண்ணன், சுப்பிரமணி, ஜனார்த்தனன், மணிவாசகம், சாரங்கபாணி, செல்வராஜ், சரவணன், திருவேங்கடம், சண்முகம், சரோஜாம்மாள், வள்ளலார் கல்வியியல் கல்லூரி ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துக்களை கூறினர். மேலும், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கியும், கேக் வெட்டியும் கொண்டாடினார்கள்.

    • கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி கன்னிகோவில் தெருவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது.
    • இதன் காரணமாக பள்ளம் தோண்டப்பட்ட இடத்தினருகே பெரிய அளவிலான மரம், 2 வீடுகளின் மீது விழுந்தது. இதில் மின் கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தது.

    கடலூர் :

    கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி கன்னிகோவில் தெருவில் சாலை விரிவாக்க பணி, வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளம் தோண்டப்பட்ட அருகே பெரிய அளவிலான மரம், 2 வீடுகளின் மீது விழுந்தது. இதில் மின் கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.  இதில் வீட்டின் உரிமையாளர்களான சுப்பிரமணி, விமல் மற்றும் குடும்பத்தினர் அலறி அடித்து வெளியில் ஓடி வந்தனர். மின் கம்பிகள் அறுந்து விழுந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் இல்லை. இதனை தொடர்ந்து இன்று காலை வீடுகள் மீது விழுந்த மரங்கள் அகற்றப்படாமல், அந்த பகுதியில் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை சரி செய்யாமலும் இருந்ததால் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது சம்பந்தமாக எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததால் கடும் கோபம் அடைந்தனர்.  இதன் காரணமாக அதிகாரிகளை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சாலையில் திரண்டனர். அப்போது தகவல் அறிந்த மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் வீடுகள் மீது விழுந்த மரத்தை உடனடியாக அகற்றவும், மின்சார வசதி உடனடியாக தர வேண்டி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் விஜய் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வீடுகள் மீது விழுந்த மரத்தை அகற்றுவதற்கும், அந்த பகுதி முழுவதும் மின்சாரம் உடனடியாக வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்  இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய முறையில் நஷ்ட ஈடு வழங்க நடடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • கீரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான மரங்கள் ரூ.20 ஆயிரம் வருவாயாக ஏலம் விடப்பட்டது. இந்த பணத்தை ஊர் பொது மக்கள் கோவில் உண்டியலில் போட்டு வைத்தனர்.
    • இன்று காலை கோயில் பூசாரி வந்து பார்த்தபோது, கோவிலின் பூட்டு திறக்கப்பட்டு உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி, ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்தார்.

    கடலூர்:

    வேப்பூர் திருபாக்கம் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான மரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏலம் விடப்பட்டது. இதில் ரூ.20 ஆயிரம் வருவாயாக கோவிலுக்கு கிடைத்தது. இந்த பணத்தை ஊர் பொது மக்கள் கோவில் உண்டியலில் போட்டு வைத்தனர் இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கோவிலில் பூஜைகள் செய்து வீட்டு, கோவிலை பூட்டி விட்டு பூசாரி வீட்டிற்கு சென்றார். இன்று காலை வந்து பார்த்தபோது ,கோவிலின் பூட்டு திறக்கப்பட்டு உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது.  இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி, ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்தார். ஊர் பொதுமக்கள் இது குறித்து வேப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோவில் உண்டியலில் இருந்த சுமார் ரூ.40 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதும், அம்மன் கழுத்தில் இருந்த 3 கிராம் தங்க நகையும் கொள்ளையடிக்கப்பட்டதும் போலீசாருக்கு தெரிய வந்தது.   இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோவிலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி கந்தன் பாளையத்தில் புதியதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடைக்கு நேற்று இரவு மது வாங்குவதற்காக கண்டரக்கோட்டையை சேர்ந்த கணேசன் என்பவர் காரில் வந்தார்.
    • மது பாட்டில் வாங்கிக்கொண்டு காரில் திரும்பும் போது, பள்ளத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த கணேசன் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சென்னை சாலையில் கந்தன் பாளையத்தில் புதியதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடைக்கு நேற்று இரவு மது வாங்குவதற்காக கண்டரக்கோட்டையை சேர்ந்த கணேசன் என்பவர் காரில் வந்தார். மது பாட்டில் வாங்கிக்கொண்டு காரில் திரும்பும் போது மதுபான கடைக்கு அருகில் சாலை ஓரத்தில் இருந்த ,பள்ளத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த கணேசன் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார். இது பற்றி தகவல் அறிந்தத பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சிறப்பு இன்ஸ்பெக்டர் செல்வகணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் மாநகரம் திருப்பாதிரிப்புலியூர் பகுதி தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வண்டிப்பாளையம் சூரசம்ஹார வீதியில் நடந்தது.
    • கூட்டத்துக்கு பகுதி செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்முருகன், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகரம் திருப்பாதிரிப்புலியூர் பகுதி தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வண்டிப்பாளையம் சூரசம்ஹார வீதியில் நடந்தது. கூட்டத்துக்கு பகுதி செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்முருகன், மாரி யப்பன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா, அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட அவை தலைவர் தங்கராசு, மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு, அரசின் 2 ஆண்டுகள் சாதனைகள் குறித்து விளக்கி பேசினர்.   இதில் மண்டலக்குழு தலைவர் சங்கீதா செந்தில் முருகன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துன்னிஷா சலீம், சசிகலா, விஜயலட்சுமி செந்தில், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள் அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், பகுதி துணை செயலாளர்கள் ஜெயசீலன், சாமுவேல், ரகுராமன், வட்ட செயலாளர் குப்பு ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

    ×