

கடலூர:
கடலூர் கே.என்.பேட்டை சேர்ந்தவர் சக்தி ஆகாஷ் (வயது 21). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்த பொருட்களை திடீரென்று அடித்து நொறுக்கினார். அப்போது வீட்டில் உடைந்து இருந்த கண்ணாடியை எடுத்து திடீரென்று தனது வயிற்றில் குத்தி கொண்டார். இதனை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சக்தி ஆகாஷை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றனர். அங்கு சக்தி ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்த வாலிபர் சக்தி ஆகாஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர்கள் உடனடியாக தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனை அறிந்த சக்தி ஆகாஷ் தனது பெற்றோர்களிடம் சென்று நான் காதலித்த பெண்ணை பேசி திருமணம் ஏன் செய்து வைக்கவில்லை என கூறி வீட்டில் இருந்த பொருட்களை உடைத்த போது அங்கு இருந்த கண்ணாடி துண்டை எடுத்து குத்தி தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இருந்தபோதிலும் சக்தி ஆகாஷ் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.