என் மலர்
கடலூர்
- மாணவி சுவாதி நடந்து முடிந்த பிளஸ்-2 பொது தேர்வில் மாநில அளவில் 3-வது இடமும் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளார்.
- மாநில அளவில் தேர்ச்சி பெறுவதற்கு பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தியதை அன்றே படித்து முடிக்க வேண்டும் என சுவாதி கூறினார்.
கடலூர்:
பண்ருட்டிஒன்றியம் கொள்ளுக்காரன்குட்டை வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி சுவாதி நடந்து முடிந்த பிளஸ்-2 பொது தேர்வில் மாநில அளவில் 3-வது இடமும் மாவட்ட அளவில்முதலிடமும் பெற்றுள்ளார். மாநில அளவில் தேர்ச்சி பெறுவதற்கு பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தியதை அன்றே படித்து முடிக்க வேண்டும். படிப்பதை எழுதி பார்த்தால் மனதில் நன்கு பதியும். நாம் படிப்பதை மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். தேர்வை நல்ல முறையில் எழுத வேண்டும். பாடத்தில் எந்த சந்தேகம் இருந்தாலும் அதனை ஆசிரியர்களிடம் உடனே தீர்த்து கொள்ள வேண்டும். மேலும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் எனக்கு நன்கு ஊக்கம் அளித்தனர்.நீட் தேர்வு எழுதி உள்ளேன். அதன் பிறகு டாக்டராக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
- என்.எல்.சி.யால் புதிதாக 1,800 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
- என்.எல்.சி.யில் தற்போது 18 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட 25 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.
கடலூர்:
என்.எல்.சி. நிறுவன தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கடலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கு, தற்போது உடனடியாக 80 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறையால் தற்போது 5 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு 80 ஹெக்டேர் நிலம் கிடைத்தால், நிலக்கரி உற்பத்தி மூலம் மின்சாரத்தை சீராக உற்பத்தி செய்ய முடியும்.
என்.எல்.சி.யால் புதிதாக 1,800 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் முழுவதுமாக உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
மேலும் வேலைவாய்ப்பில் 20 போனஸ் மதிப்பெண்கள் நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
என்.எல்.சி.யில் தற்போது 18 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட 25 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்களில் 95 சதவீதம் பேர் தமிழர்கள். அதுபோல் நிரந்தர தொழிலாளர்களிலும் 83 சதவீதம் பேர் தமிழர்கள் தான் உள்ளனர். தமிழர்களுக்கு என்.எல்.சி.யில் வேலைவாய்ப்பு இல்லை என்பதில் உண்மை இல்லை.
நிலம் கையகப்படுத்தும் பணி நடந்தால், பற்றாக்குறையான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை உடனடியாக ஈடு செய்ய முடியும். இந்த ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசுக்கு என்.எல்.சி. நிறுவனம் 2 ரூபாய் 30 பைசா என்ற தொகையில் கொடுக்கின்றது. அதே வேளையில் மின்சாரத்தை தமிழக அரசு, வெளிச்சந்தையில் வாங்க வேண்டும் என்றால் யூனிட்டுக்கு 10 அல்லது 12 ரூபாய் கொடுக்க வேண்டும். மேலும் என்.எல்.சி. நிறுவனம் தனியார் மயமாவதற்கு வாய்ப்பே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சக்தி ஆகாஷ் (வயது 21). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்த பொருட்களை திடீரென்று அடித்து நொறுக்கினார். அப்போது வீட்டில் உடைந்து இருந்த கண்ணாடியை எடுத்து திடீரென்று தனது வயிற்றில் குத்தி கொண்டார்.
- பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சக்தி ஆகாஷை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றனர். அங்கு சக்தி ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர:
கடலூர் கே.என்.பேட்டை சேர்ந்தவர் சக்தி ஆகாஷ் (வயது 21). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்த பொருட்களை திடீரென்று அடித்து நொறுக்கினார். அப்போது வீட்டில் உடைந்து இருந்த கண்ணாடியை எடுத்து திடீரென்று தனது வயிற்றில் குத்தி கொண்டார். இதனை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சக்தி ஆகாஷை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றனர். அங்கு சக்தி ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்த வாலிபர் சக்தி ஆகாஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர்கள் உடனடியாக தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனை அறிந்த சக்தி ஆகாஷ் தனது பெற்றோர்களிடம் சென்று நான் காதலித்த பெண்ணை பேசி திருமணம் ஏன் செய்து வைக்கவில்லை என கூறி வீட்டில் இருந்த பொருட்களை உடைத்த போது அங்கு இருந்த கண்ணாடி துண்டை எடுத்து குத்தி தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இருந்தபோதிலும் சக்தி ஆகாஷ் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தபோது பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த மணிமாறன் (வயது 34) பாக்கெட் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது
- அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து புதுவை சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த மணிமாறன் (வயது 34) பாக்கெட் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து புதுவை சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பிரீத்தி (வயது 19) பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
- சுபாஷினி(வயது 20). இவர் பிபிஏ 3-ம் ஆண்டு தற்போது நெட்சென்டருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக் குப்பத்தை சேர்ந்தவர் குணசேகரன், இவரது மகள் பிரீத்தி (வயது 19). மயிலாடுதுறை ஞானாம்பிகை கலைக் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 1-ந்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர், அன்று மாலை வீட்டுக்கு வரவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பிரீத்தியை போனில் தொடர்பு கொண்டனர் அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் தோழி வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். அதன் பிறகு போன் தொடர்பை துண்டித்து விட்டதாகவும், அவர் பயன்படுத்திய செல்போன் தொடர்ந்து சுட்ச் ஆப் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் பிரீத்தியன் பெற்றோர் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் இவரது மகள் சுபாஷினி (20). இவர் உளுந்தூர்பேட்டை சாரதா குருகுலம் கல்லூரியில் பிபிஏ 3-ம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வந்தார். தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான பூண்டி வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார். கடந்த 8-ந்தேதி காலை 11 மணிக்கு தனது வீட்டில் இருந்து கண்டரக்கோட்டை நெட்சென்டருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
- பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நேற்று தீவிரரோந்து பணியில் இருந்தபோது, பண்ருட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த முனுசாமி என்பவர் மகன் கண்ணன் (35) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது
- இதனைதொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 310 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும்டி.எஸ்.பி. டீம் போலீசார் நேற்று தீவிரரோந்து பணியில் இருந்தனர்.அப்போது பண்ருட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த முனுசாமி என்பவர் மகன் கண்ணன் (35) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனைதொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம்இருந்து 310 கிராம் கஞ்சா பொட்டல ங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பத்மநாதன் (வயது 25) தனியார் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் பத்மநாதன் காட்டுமன்னார்கோயில் வசந்தம் நகர் பகுதியில் உணவு டெலிவரி செய்து வந்தார்.
- அப்போது, ரோந்து பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் உணவு டெலிவரி செய்த பரந்தாமனின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் சோதனை செய்தபோது,அவர் வைத்திருந்த பெட்டியில் உணவு மற்றும் கஞ்சா விற்பனை செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள தொண்டமா நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்பத்மநாதன் (வயது 25) தனியார் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் பத்மநாதன் காட்டுமன்னார்கோயில் வசந்தம் நகர் பகுதியில் உணவு டெலிவரி செய்து வந்தார்.அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் உணவு டெலிவரி செய்யும் பரந்தாமன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் சோதனை செய்தார். அப்போது அவர் வைத்திருந்த பெட்டியில் உணவு மற்றும் கஞ்சா விற்பனை செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது. மேலும் அவரிடமிரு ந்து கஞ்சா பொட்டலம் மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் காட்டுமன்னா ர்கோயில் போலீஸ் நிலையத்திற்கு பத்மநாதனை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை யில் கஞ்சாைவ வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்து உணவு டெலிவரி மூலம் நூதன முறையில் விற்பனை செய்வதாக பத்மநாதன் போலீசாரிடம் கூறினார். மேலும் போலீசார் தொடர்ந்து பத்மநாபனிடம் விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
அந்த பகுதியில் தொட ர்ந்து கஞ்சா மட்டும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை செய்ய வேண்டுமென என சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்து வருகின்றனர்.
- வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் அதற்கு மோக்கா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தாக்கம் கடுமையாக அதிகரித்து வந்த நிலையில் 101 டிகிரி வெயில் பதிவானது . சுட்டெரிக்கும் வெயில் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வந்தனர். மேலும் காலை மற்றும் மதிய நேரங்களில் வெயில், மாலை நேரங்களில் புழுக்கம் ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்துவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் மிக கனமழை பெய்த காரணத்தினால் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் பாதிப்ப டைந்து விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியானது.
இந்த நிலையில் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் மோக்கா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் எனவும், கடல் காற்றானது மணிக்கு 50 முதல் 80 கி.மீ வரை வீசக்கூடும் எனவும் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீன்பிடி தடைக்காலம் உள்ளதால் பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் வங்க்கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஒருபுறம் சுட்டெரிக்கும் வெயில், திடீர் கனமழை என இருந்து வந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் புதிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டதன் காரணமாக மக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.
- ஒருவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேேய பலியானார்.
- விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சேப்பாக்கத்தில் இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் கவிழ்ந்தது.
இந்த சத்தம் கேட்ட அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து வேப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் வந்தனர். லாரியில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது பலத்த காயங்களுடன் டிரைவரை மீட்டனர். மேலும், அவருடன் வந்த ஒருவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேேய பலியானார்.
விசாரணையில், ஆந்திரா மாநிலத்தில் இயங்கி வரும் அம்மன் டிஆர்ஒய் கம்பெனியில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மதியம் திருச்சிக்கு இந்த லாரி கிளம்பியுள்ளது. இதனை ஆந்திராவைச் சேர்ந்த குருவையா (வயது 40) ஓட்டி வந்துள்ளார். இவருடன் அதே கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரியும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த தங்கராசு (30) என்பவர் வந்துள்ளார்.
லாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் தங்கராசு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தங்கராசுவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த டிரைவர் குருவையாவை சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.
கடலூர்:
கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநகர அவைத்தலைவர் பழனிவேல், மாவட்ட பிரதிநிதிகள் ராமு, செந்தில்முருகன், பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப் பாளர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அய்யப்பன் எம்.எல்.ஏ., கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். திராவிட மாடல் என்பது காலாவதியாகி விட்டது என தமிழக கவர்னர் ரவி கூறி வருகிறார். ஆனால், சனா தானம் தான் காலாவதியாகி விட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தியவர் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதிநிலை பற்றாக்குறையாக இருந்தது.
- மாற்றுத் திறனாளிகள் சங்கம் மற்றும் சக் ஷம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக் கான சுயம்வரம் நிகழ்ச்சி கடலூர் திருப்பாதிரிப்புலி யூரில் நடைபெற்றது.
- சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி மணமகன் மற்றும் மணமகள்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
கடலூர்:
சிகரம் உன்னால் முடியும் தோழா மாற்றுத் திறனாளிகள் சங்கம் மற்றும் சக் ஷம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக் கான சுயம்வரம் நிகழ்ச்சி கடலூர் திருப்பாதிரிப்புலி யூரில் நடைபெற்றது. இதற்கு சையத் முஸ்தபா தலைமை தாங்கினார். வள்ளிவிலாஸ் உரிமையா ளர் பாலு, பொருளாளர் குமரவேல், துணைத்தலை வர் சுந்தர மூர்த்தி, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுப்ராயன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி மணமகன் மற்றும் மணமகள்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட மணமகன் மற்றும் மணமகள்கள் தங்களுக்கு தகுதியான வாழ்க்கை துணையை தேர்வு செய்தனர்.
முன்னதாக தாமரைச் செல்வன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இதில் , கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், ஊராட்சி தலைவர் முத்துக் குமாரசாமி முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், ராஜன், அருண், குளோபல் மனவளர்ச்சி சிறப்பு பள்ளி இயக்குனர் கோபால், கிறிஸ் டாோபர், இக்னைட் முதி யோர் காப்பக இயக்குனர் ஜோஸ் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம் கடலூர் மாவட்ட வணிகர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் இராம. முத்துக் குமரனார் மனு அளித்தார்.
- மணிக்கூண்டுக்கு அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தில் மேற் கூரை இல்லாமல் உள்ளது. இதனால் மழை காலங்களிலும், அக்னி நட்சத்திரம் வெயிலிலும் மக்கள் பஸ் நிறுத்தத்தில் அவதிப்படுகினறனர் என தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம் கடலூர் மாவட்ட வணிகர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் இராம. முத்துக் குமரனார் மனு அளித்தார்.கடலூர் துறைமுகம் மணிக்கூண்டுக்கு அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. பக்கத்தில் உள்ள கிராமங்களின் மக்கள் இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது பஸ் நிறுத்தத்தில் மேற் கூரை இல்லாமல் உள்ளது. இதனால் மழை காலங்களிலும், அக்னி நட்சத்திரம்வெயிலிலும் மக்கள் பஸ் நிறுத்தத்தில் அவதிப்படுகினறனர். எனவே அவசர தேவையாக பஸ் நிறுத்தத்தில் மேற் கூரை அமைத்து தர வேண்டும். அப்போது கடலூர் துறைமுகம் நகர தலைவர் ரவிக்குமார்,இளைஞரணி தலைவர் ராஜேஷ் உடன் இருந்தனர்.






