என் மலர்
கடலூர்
- கதிர்வேல் (வயது 60). தூக்கணாம்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து வந்தார்.
- சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த கதிர்வேலுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் அடுத்த கீழ் குமாரமங்கலத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 60). தூக்கணாம்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து வந்தார். சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த கதிர்வேலுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கதிர்வேலை புதுவை மாநிலம், கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமி, அடிக்கடி பாட்டி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்,
- ஆனந்தராஜ் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர் சிறுமியை தனது வீட்டிற்குள் அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி, அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.
கடலூர்:
ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள கிராமத்தில் 13 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பாட்டி வீடு அதே ஊரில் உள்ள மற்றொரு வீதியில் உள்ளது. சிறுமி அடிக்கடி பாட்டி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம், பாட்டி வீட்டின் அருகில் வசிப்பவர் ஆனந்தராஜ் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகி இரட்டை பெண் குழந்தைகள் உள்ளன. இவர் பாட்டி வீட்டிற்கு வரும் 13 வயது சிறுமியை அடிக்கடி அழைத்து நட்பாக பேசி வந்தார். 7 மாத கர்ப்பம் நாளடைவில் சிறுமியை தனது வீட்டிற்குள் அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி, அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அச்சிறுமி கருவுற்றார். தான் கருவுற்றதை கூட அறியாத அச்சிறுமி தொடர்ந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில் அச்சிறுமி மயங்கி விழுந்தார். இதனால் பதறிப்போன அவரது பெற்றோர். சிறுமியை டாக்டரிடம் அழைத்து சென்றனர். அவரை பரிசோ தித்த டாக்டர், சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தனர். சிறுமி கொடுத்த தகவலி ன்படி, அவரது பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இரட்டை பெண் குழந்தைகளுக்கு தந்தையாக உள்ள நபர், 13 வயது சிறுமியை 7 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும்ஊழல் நடப்பதாக கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சிதலைவர் தேவா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
- இதனைத் தொடர்ந்து,பண்ருட்டி இன்ஸ்பெக்டர் இன்று காலை கைது செய்தார்.
கடலூர்:
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும்ஊழல் நடப்பதாக கூறிபண்ருட்டி தாசில்தாரை நேரில் சந்தித்து மனு அளிக்க போவதாக கடலூர் மாவட்ட இந்து மக்கள்கட்சிதலைவர் தேவா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கைநடவடிக்கையாகஅவரைபண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவின் பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)நந்தகுமார் இன்று காலை கைது செய்தார்.
- துர்காதேவியிடம் தான் வெளியில் செல்வதால் மாட்டிற்கு தீனி வைத்து வைக்கோல் போடுமாறு கூறிவிட்டு அவரது தாயார் ராணி சென்றார்.
- கன்று இறந்து போனதால், துர்காதேவியின் தாயார் ராணி துர்காதேவியை கண்டித்துள்ளார்.
கடலூர்:
சேத்தியாத்தோப்பு அடுத்த பரதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகள் துர்காதேவி (வயது 30). இவருக்கும் மயிலாடுதுறையை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களிலேயே துர்காதேவி தனது கணவருடன், பரந்தூர் கிராமத்தில் உள்ள தனது தாயார் வீட்டிலேயே வசித்து வந்தார். இவர்களுக்கு 3 வயது குழந்தை உள்ளது.ர் வீட்டிலேயே வசித்து வந்தார். இவர்களுக்கு 3 வயது குழந்தை உள்ளது. துர்காதேவியின் தாயார் வீட்டில் கன்றுடன் கூடிய மாடு வளர்த்து வந்தார். தான் வெளியில் செல்வதால் மாட்டிற்கு தீனி வைத்து வைக்கோல் போடுமாறு துர்காதேவியுடன் கூறிவிட்டு அவரது தாயார் ராணி சென்றார். துர்காதேவி மாட்டிற்கு சரிவர தீனி போடவில்லை என்பதால், கன்றுடன் இருந்த மாடு அறுத்துக் கொண்டு வெளியில் சென்றது. இதில் கன்று இறந்து போனது. இதனை அறிந்த துர்காதேவியின் தாயார் ராணி, துர்காதேவியை கண்டித்துள்ளார்.இறந்து போன கன்றினை புதைக்க ரவியும், ராணியும் வெளியில் சென்றனர். அப்போது வீட்டிற்குள் சென்ற துர்காதேவி, தாய் தீட்டியதால் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், ஒரத்தூர் இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.வருகின்றனர்.
- கடலூர் மாவட்டத்தில் பழவியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
- இக்கூட்டத்தில் பழங்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை வணிகர்கள் பங்கேற்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பழவியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பழங்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை வணிகர்கள் பங்கேற்றனர். கலெக்டர் பாலசுப்ரமணியம் கூறியிருப்பதாவது: மாம்பழம், அன்னாசி, பப்பாளி, வாழைப்பழம் மற்றும் சப்போட்டா போன்ற பழ வகைகளை செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ அல்லது செயற்கை வேதிப் பொருட்களை தெளித்தோ பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், அதனை பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடும் பொதுமக்களுக்கு அஜீரண உபாதைகளும், கடுமையான தலைவலி, மயக்கம், வாந்தி, வயிற்றுபோக்கு, தலைசுற்றல் போன்றவை ஏற்படுவதுடன் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணியாகவும் இருக்கிறது. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் ஆய்வின்போது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்து அழிக்கப்படுவதுடன் உடனடி அபாரதம் விதிக்கப்படும். மேற்குறிப்பிட்ட குற்றத்திற்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யவும். 3 மாத காலம் வரை கடையை சீல் வைத்து வர்த்தகத்தை நிறுத்திவைக்கப்படும்.
நுகர்வோருக்கு வழங்கப்படும் பழங்கள் பாதுகாப்பானதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும். மேலும் தரமற்ற கலப்பட உணவுகள் குறித்து பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாகவும், விரைவு நடவடிக்கைக்கு ஏதுவாகவும் புதிய இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலம் தெரிவிக்கலாம் எனவும், புகார்தாரரின் விவரங்கள் மற்றும் ரகசியம் பாதுகாக்கப்படுவதுடன் புகார் அளித்த 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்யப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு பேசினார்.
- பிளஸ்-2 தேர்–வில் மாணவி கே. சவுந்–தர்–ய–லட்–சுமி 600-க்கு 594 மதிப்–பெண்–கள் பெற்று கட–லூர் மாந–கர அள–வில் முதல் இடத்–தைப் பெற்றுள்ளார்.
- பள்–ளி–யின் தாளா–ளர் டி.மாவீ–ர்மல் சோர–டியா, முதல்–வர் எம்.சந்–தோஷ்–மல் சோர–டியா ஆகி–யோர் பாராட்டி இனிப்பு மற்–றும் பரிசு வழங்கினர்.
கடலூர்:
கட–லூர் லட்–சுமி சோர–டியா நினைவு மெட்–ரிக் மேல்– நி–லைப்–பள்–ளி–யில் 2022-23-ம் க ல்– வி– ய ாண்– டு க்– க ா ன பிளஸ்-2 தேர்–வில் மாணவி கே. சவுந்–தர்–ய–லட்–சுமி 600-க்கு 594 மதிப்–பெண்–கள் பெற்று கட–லூர் மாந–கர அள–வில் முதல் இடத்–தை–யும், மாவட்ட அள–வில் 2-ம் இடத்–தை–யும் பெற்று சாதனை படைத்–துள்–ளார். வி. ஸ்ரீஹ–ரிணி 600-க்கு 591 மதிப்–பெண் பெற்று பள்–ளி–யில் 2-ம் இடம் பெற்–றுள்–ளார். இந்த 2 மாண–வி–களும் வணி–க–வி–யல், கணக்கு பதி–வி–யல் மற்–றும் கணினி பயன்–பாட்–டில் முழு மதிப்–பெண் பெற்–றும் சாதனை படைத்–துள்–ள–னர்.
மேலும் எம்.திவ்யா 600-க்கு 580 மதிப்–பெண் பெற்று 3-ம் இடம் மற்–றும் வேதி–யி–யல் மற்–றும் கணினி அறி–வி–யல் பாடத்–தில் முழு மதிப்–பெண்–ணும் பெற்–றுள்–ளார். எஸ். நந்–திதா 600-க்கு 572 மதிப்–பெண் பெற்று 4-ம் இடத்–தி–லும், சி.யுவ–ஸ்ரீ 600-க்கு 566 மதிப்–பெண் பெற்று 5-ம் இடத்–தை–யும் பெற்று சாதனை படைத்–துள்–ள–னர். பாட–வா–ரி–யாக முழு–மதிப்–பெண் பெற்–ற–வர்–கள் 8 மாண–வர்–களும், 500-க்கு மேற்–பட்ட மதிப்–பெண் பெற்–ற–வர்–கள் 26 மாண–வர்–களும், 450-க்கும் மேற்–பட்டமதிப்–பெண் பெற்–ற–வர்–கள் 21 மாண–வர்–களும் உள்–ள–னர்.
வெற்றி பெற்ற மாண–வர்–க–ளுக்கு பள்–ளி–யின் தாளா–ளர் டி.மாவீ–ர்மல் சோர–டியா, முதல்–வர் எம்.சந்–தோஷ்–மல் சோர–டியா மற்–றும் உதவி தலைமை ஆசி–ரி–யர் பத்–தா–கான் ஆகி–யோர் பாராட்டி இனிப்பு மற்–றும் பரிசு வழங்கினர்.
- கடலூர் கேப்பர்மலையில் உள்ள அரசு நெஞ்சக காசநோய் புதியதாக கட்டப்பட்ட கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது,
- விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
கடலூர்:
கடலூர் கேப்பர்மலையில் உள்ள அரசு நெஞ்சக காசநோய் மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக என்.எல்.சி. சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் ரூ.83 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 40 படுக்கைகளுடன் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். என்.எல்.சி. தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி முன்னிலை வகித்தார். விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, மேலாண்மை குழந்தை வளர்ப்பு கையேட்டினை வெளியிட்டார். மேலும் கர்ப்பினி தாய்மார்களுக்கு கையேட்டினை வழங்கி பேசினார்.
விழாவில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு, பொது சுகாதாரம் துணை இயக்குனர் டாக்டர் மீரா, என்.எல்.சி. இயக்குனர் (மனிதவளம்) சமீர் ஸ்வரூப், துணை இயக்குநர் (காசநோய் பணிகள்) டாக்டர் கருணாகரன் , டாக்டர் சிவபிரகாசம், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், காசிராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- சுவாதி பிளஸ்-2 பொதுத் தேர்வில் 596 மதிப்பெண் பெற்றார்.
- அவரின் பெற்றோரை கவுரவப்படுத்தி, அவர்களின் குடும்பத்திற்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கினார்.
கடலூர்:
நெய்வேலி அருகேயுள்ள வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தாமரைக் கண்ணன். விவசாயி.இவரது மனைவி தங்கம். இவர்களின் மகள் சுவாதி பிளஸ்-2 பொதுத் தேர்வில் 596மதிப்பெண் பெற்று மாநில அளவில்3-ம் இடமும், கடலூர் மாவட்ட அளவில் முதல் இடமும் பெற்றுள்ளார். அவரை பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரி வித்து பாராட்டினார். அவரின் பெற்றோரை கவுரவப்படுத்தி, அவர்களின் குடும்பத்திற்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கினார்.
பின்னர்டாக்டர் ராம தாஸ் வழிகாட்டுதலின்படி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் அறிவுறுத்தலின் படி, மே 31-ந் தேதிக்குள் வன்னியர் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டி னை வழங்க வலியுறுத்தி தமிழக முதல்வர், தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட் டோர் ஆணைய தலைவர் ஆகியோருக்கு கடிதம் அனுப்புவதற்கான படி வத்தை வழங்கி, வன்னியர் களுக்கான உள்ஒதுக்கீடு பயன் குறித்தும் எடுத்துக் கூறினார். இதில் பா.ம.க. மாவட்ட அமைப்பு துணை தலைவர் ஜெயக்குமார், என்.எல்.சி. ஊழியர் உக்கரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பண்ருட்டி ராஜாஜி சாலையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு பர்தா அணிந்து 2 பெண்கள் வந்தனர்.
- திடீரென ஊழியரின் கவனத்தை திசை திருப்பினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ராஜாஜி சாலையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு பர்தா அணிந்து 2 பெண்கள் வந்தனர். அவர்கள் நகை வாங்குவது போல் கடை ஊழியர்களிடம் பேச்சு கொடுத்தார்,தோடு வேண்டும் என்று கூறவே ஊழியர்களும் ஒவ்வொரு நகையாக எடுத்து மேஜையில் வைத்து காண்பித்தனர். அப்போது திடீரென ஊழியரின் கவனத்தை திசை திருப்பிய அவர்கள் 6 கிராம் தோடை திருடி பேக்கில் வைத்து கொண்டு அதற்கு பதிலாக தாங்கள் கொண்டு வந்திருந்த கவரிங் தோட்டைடேபிளில் வைத்து விட்டு அங்கிருந்து வேகம் வேகமாக வெளியேறினர்.
இதையடுத்து ஊழியர் அவர்களை கூப்பிட்டு பார்த்தும் பயன் இல்லை. அதற்குள் அந்த பெண்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் தோடை பரிசோதித்தபோது அது கவரிங் என்றும், ஏமாற்றி விட்டு தங்க நகையை பெண்கள் திருடி சென்றதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் பண் ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் இதேபோல நெய்வேலி இந்திரா நகரில் உள்ள நகைக்கடை மற்றும் விருத்தாச்சலத்தில் உள்ள நகைகளை ஒன்றில் நகை திருடியது தெரிய வந்தது.
இது குறித்து கடை மேலாளர் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தங்க வேலுஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டார். டி.எஸ்.பி. தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் தங்கேவல் தனிப்படை போலீ சார் ஆனந்த், ராஜி, கணேச மூர்த்தி, ஹலீமாபீவி ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கைது
தனி படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடை யில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 பெண்கள் பர்தா அணிந்து முகத்தை முழுமையாக மூடி இருந்ததால் அவர்களின் முக அடையாளங்கள் பதிவாக வில்லை. இருந்தா லும் அந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் யார்? இதற்கு முன்னர் வேறு ஏதாவது கடையில் திருட்டு செயலில் ஈடுபட்டிருந்தனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம் ஆகிய இடங்களில் உள்ள நகைகடைகளில் பர்தா அணிந்து கொண்டு 10 கிராம் தோடை திருடிச் சென்றது மயிலாடுதுறை மாவட்டம் கொரநாடு மேல ஒத்த சரகு தெரு கவிதா (வயது 50), மயிலாடுதுறை கொர்க்கை மாரியம்மன் கோவில் தெருஷீலா தேவி (37 ) என தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் வேறு ஒரு நகைக்கடையில் கொள்ளை அடிக்க திட்டம் போட்டுக் கொண்டிருந்த 2 பெண்களையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து திரு டிய நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர் நகை திருட்டு வழக்கில் சிறப்பாக செயல்பட்ட பண்ருட்டி போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டு தெரிவித்தார்.
- பிரசாந்த்(வயது 16) பெருமாள் ஏரி குளத்தில் மதியம் 2 மணி அளவில் நீரில் இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் பிரசாந்த் மூழ்கினார்.
- போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் ஏரியில் மூழ்கிய பிரசாந்தின் உடலை ஏரியில் தேடினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு காலணி வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகன் பிரசாந்த் (வயது 16). இவர் வேகாக்கொல்லையில் உள்ள முந்திரி தூசி கம்பெனியில் தூசி அல்லும்வேலை செய்து வந்தார். வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றபோது அரசடிகுப்பத்தில் உள்ள பெருமாள் ஏரி குளத்தில் மதியம் 2 மணி அளவில் நீரில் இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் பிரசாந்த் மூழ்கினார்.இது குறித்த தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் ஏரியில் மூழ்கிய பிரசாந்தின் உடலை ஏரியில் தேடினர். வெகுநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் பிரசாந்தின் உடலை மீட்டனர்.பின்னர் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராதா (35), என்பவர் தோப்பில் ஆடுகளை மேய்த்து கொண்டு இருந்தபோது,சுமார் 25 வயது மதிக்கதக்க ஒரு நபர் வந்தார்.
- அந்த நபர் ராதாவை பின் பக்கமாக சென்று அவரது வாயை பொத்தி தாலி செயினை கழற்றி கொடு. இல்லைஎன்றால் உன் கழுத்தை நெரித்து கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த கொஞ்சி குப்பத்தை சேர்ந்தவர் ராதா (35), இவர் கடந்த 2022-ம்ஆண்டு ஜூலை மாதம்28-ந தேதி காடாம்புலியூர் மாயா கார்டனில் ரவிபலா தோப்பில் ஆடுகளை மேய்த்து கொண்டு இருந்தார்.அப்போது சுமார் 25 வயது மதிக்கதக்க கருப்பு நிற பனியன் மற்றும் மஞ்சள் நிற அரைக்கால் சட்டையுடன் வந்த வாலிபர் ஒருவர் இவரிடம் இந்ததென்னை மரம் யாருடையது அவர் போன் நம்பர் தெரியுமா? என்று கேட்டுள்ளார். எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு அங்கிருந்த மோட்டார் கொட்டகையில் தூங்காமல் படுத்திருந்தார். அப்போது அந்த நபர் ராதாவை பின் பக்கமாக சென்று அவரது வாயை பொத்தி தாலி செயினை கழற்றி கொடு. இல்லைஎன்றால் உன் கழுத்தை நெரித்து கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளான். அதற்கு பயந்துகொண்டு சத்தம் போட முடியாமல் இருந்தபோது உடனே அவரது கழுத்தில் கிடந்த தாலி செயினை அவன் எடுக்கும் போது அதை கையால் பிடித்துக் கொண்டார். அதில் பாதி தாலி செயின் இவர் கையில் இருந்தது. மீதியை அவன் எடுத்து சென்று விட்டான். ராதாவின் செல் போனை யும் எடுத்துக்கொண்டு முந்திரி தோப்புக்குள் புகுந்து ஓடிவிட்டான், இது குறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் நகையை பறித்து சென்றது காடாம்புலியூர் மெயின் ரோட்டில் வசித்து வந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவனை போலீசார் கைது செய்து அவனிடம் இருந்து நகைகளை மீட்டனர். இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நகையை பறித்த பிரகாசுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
- 17 வயது பள்ளி மாணவி, 12-ம் வகுப்பு தேர்வு எழுதி வீட்டில் இருந்து வருகிறார். இவர் வீட்டின் அருகே 16 வயது சிறுவன் குடியிருந்து வந்துள்ளார்
- சிறுவன் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
கடலூர்:
கடலூரை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி தற்போது 12-ம் வகுப்பு தேர்வு எழுதி வீட்டில் இருந்து வருகிறார். இவர் வீட்டின் அருகே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 16 வயது சிறுவன் குடியிருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளி மாணவி வீட்டில் தனியாக இருந்த போது சிறுவன் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி உடல்நிலை சரியில்லை என உறவினர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது 8 மாதம் கர்ப்பமாக இருந்து வருவதாக தெரிகிறது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






