கடலூர் டி.எஸ்.பி கோவைக்கு பணியிடமாற்றம்

கடலூர் உட்கோட்ட டி.எஸ்.பியாக கரிகால் பாரிசங்கர் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். கடலூரில் விரைவில் புதிய போலீஸ் டி.எஸ்.பியாக பிரபு பதவி ஏற்க உள்ளார் .
கடலூர் டி.எஸ்.பி கோவைக்கு பணியிடமாற்றம்
Published on

கடலூர்:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபு ரிந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு களை பணியிட மாறுதல் செய்து தமிழக டிஜிபி சைலே ந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து கடலூர் உட்கோட்ட டி.எஸ்.பியாக கரிகால் பாரிசங்கர் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் டி.எஸ்.பி கரிகால் பாரிசங்கரை கோயம்புத்தூர் போட்ட னூர் பகுதிக்கு உதவி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிட பட்டுள்ளது. மேலும் ராணிப்பேட்டை உட்கோட்ட டி.எஸ்.பியாக இருந்து வந்த பிரபு கடலூர் டி.எஸ்.பியாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடலூரில் விரைவில் புதிய போலீஸ் டி.எஸ்.பியாக பிரபு பதவி ஏற்க உள்ளார் என போலீஸ் அதிகாரி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com