என் மலர்tooltip icon

    கடலூர்

    • நெடுஞ்சாலை உதவி பொறியாளர் எழிலரசி தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • மோகன் பாபு பணி செய்ய விடாமல் தடுத்து ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தொரப் பாடியில் நெடுஞ்சாலைத் துறையினரால் சேலம் - கடலூர் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. தொரப்பாடி குமரன் கோயில் தெரு முருகன் மகன் மோகன் பாபு (வயது 32) தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர். இவரது நிலத்தை அரசு கையகப் படுத்திக்கொண்டு அதற்குண்டான தொகையை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் போலீசாருடன் நெடுஞ்சாலை உதவி பொறியாளர் எழிலரசி தலைமையில் ஆக்கிர மிப்பை அகற்றினர். அங்கு வந்த மோகன்பாபு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அசிங்கமாக திட்டி பணி செய்ய விடாமல் தடுத்து ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நெடுஞ் சாலைத்துறை உதவி பொறியாளர் எழிலரசி புகார் செய்தார். அதன்பேரில் புதுப் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பிரிவின் கீழ் மோகன்பாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • பண்ருட்டி டி.எஸ்.பி. தனி படை போலீசார் இரவு முழுவதும் ரோந்து பணி.
    • போலீசார் 10 பேரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. தனி படை போலீசார் இரவு முழுவதும் நடத்திய அதிரடி வேட்டையில் காடாம்புலியூர் அடுத்த புதுப்பாளையம் சதாசிவம், கானஞ்சாவடி ஏழுமலை, வேலன்குப்பம் விக்ரமன் (25) அன்னகாரன்குப்பம் சக்திவேல்(35) எலவத்தடிகிழக்கு தெரு கட்டை என்ற சந்திரசேகர் (50)உள்ளிட்ட 10 பேரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. தனி படை போலீசார் இரவு முழுவதும் நடத்திய அதிரடி வேட்டையில் திருவள்ளுவர் நகர்முத்து (30), அம்பேத்கர் நகர்சரவணன் (37), சக்திவேல்(63),பாரதி நகர் சின்னையன் (62)ஆகியோர்கள் மதுபாட்டில் வைத்திருந்ததாக போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

    • வெங்கடேசன் சென்னையில் இருந்து காரில் விருத்தாசலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.
    • இந்த விபத்தில் முகமது கையூப்புக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    கடலூர்:

    விருத்தாசலம் மங்கலம் பேட்டை அருகே உள்ள எறுமனூர் கிராமம், நடுத் தெருவைச் சேர்ந்த வெங்க டேசன் (வயது 40) என்பவர், சம்பவத்தன்று காரில், தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, மங்கலம் பேட்டை அருகே உள்ள பில்லூர் புறவழிச் சாலை அருகே கார் வந்தபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்த மங்கலம்பேட்டை, ஷேக் நகர் பகுதியைச் சேர்ந்த நாசர் உசேன் மகன் முகமது கையூப் (19) என்பவர் மீது கார் மோதியது. இந்த விபத்தில் முகமது கையூப்புக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்கலம்பேட்டை போலீசார் முகமது கையூபை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக் காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் முகமது கையூப் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் உட்கோட்ட டி.எஸ்.பியாக கரிகால் பாரிசங்கர் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
    • கடலூரில் விரைவில் புதிய போலீஸ் டி.எஸ்.பியாக பிரபு பதவி ஏற்க உள்ளார் .

    கடலூர்:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபு ரிந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு களை பணியிட மாறுதல் செய்து தமிழக டிஜிபி சைலே ந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து கடலூர் உட்கோட்ட டி.எஸ்.பியாக கரிகால் பாரிசங்கர் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் டி.எஸ்.பி கரிகால் பாரிசங்கரை கோயம்புத்தூர் போட்ட னூர் பகுதிக்கு உதவி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிட பட்டுள்ளது. மேலும் ராணிப்பேட்டை உட்கோட்ட டி.எஸ்.பியாக இருந்து வந்த பிரபு கடலூர் டி.எஸ்.பியாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடலூரில் விரைவில் புதிய போலீஸ் டி.எஸ்.பியாக பிரபு பதவி ஏற்க உள்ளார் என போலீஸ் அதிகாரி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டன.

    • குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2, ரகோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • குடும்ப நல வழக்குகள் விசார ணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

    கடலூர்:

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்ப ணிகள் ஆணைக்குழு உத்தரவு மற்றும் அறிவுறு த்தலின் படி தேசிய அளவி லான மக்கள் நீதிமன்றம், கடலூர் மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணை க்குழுவின், தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகர் தலைமையில் நடை பெற்றது. எஸ்.சி, எஸ்.டி நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண் 2 நீதிபதி பிரகாஷ், கடலூர் மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழுவின் செயலாளர், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் (பொறுப்பு) பிரபாகர், கூடுதல் சார்பு நீதிபதி எண் -2 அன்வர் சதாத், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி சுதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பத்மாவதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 வனஜா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2, ரகோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் தலைவர் துரை பிரேம்குமார், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் வனராசு, செயலாளர் சிவசிதம்பரம், வக்கீல்கள், காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் கலந்துக்கொண்டனர். இந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், ஜீவணாம்ச வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் விசார ணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ,நெய்வேலி, திட்டக்குடி மற்றும் காட்டுமன்னார்கோயில், நீதிமன்றங்களில் அந்தந்த நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில் 13 அமர்வுகள் மூலம் சுமார் 5,327 வழக்குகள் விசார ணைக்கு எடுத்து க்கெள்ள ப்பட்டு 1845 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூபாய் 17 கோடி 50 லட்சத்து 18 ஆயிரத்து 201 தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

    • ஜெயசூர்யா (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது.
    • 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே முன் விரோத தகராறில் இரு தரப்பினருக்குள் மோதல் ஏற்பட்டது.கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு வி. பெத்தாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசூர்யா (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஜெய்சூரியாவும், பழனிவேலுவும் மாறி, மாறி தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் ஞானசவுந்தரி, வள்ளி ஆகிய 2 பெண்கள் காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஜெயசூர்யா கொடுத்த புகாரின் பேரில் பழனிவேல், பாலாஜி, சங்கீதா, வள்ளி ஆகியோர் மீதும் , வள்ளி கொடுத்த புகாரின் பேரில் கனகராஜ், ஜெயசூர்யா, ஞானசவுந்தரி என தனி தனியாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயக்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.
    • சம்பவத்தன்று மணிகண்டன், ஜெயக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது வீட்டுக்கு தீ வைத்தாக கூறப்படுகிறது

    கடலூர்:

    கடலூர் அடுத்த காரை க்காட்டை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரு க்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவ த்தன்று மணிகண்டன், ஜெயக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது வீட்டுக்கு தீ வைத்தாக கூறப்படுகிறது. இதில் கூரை வீடு எரிந்து சேதம் அடைந்தது.

    இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • பிரவீன்குமார் (வயது 33). மெக்கானிக்கல் என்ஜீனியர் .இவரின் தாயார், நீண்டநேரமாக இவரை போனில் அழைத்தார்.அவர் போனை எடுக்கவில்லை.
    • பிரவின் குமார் மின்விசிறியில் தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.

    கடலூர்:

    புவனகிரியை அடுத்த மேல்புவனகிரியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 33). மெக்கானிக்கல் என்ஜீனியர். இவர் தனது தாயார், தம்பியுடன் விழுப்புரத்தில் வசித்து வருகிறார். அங்கு லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி பிரவீன் குமார் நேற்று மேல்புவனகிரிக்கு வந்தார். தனக்கு சொந்தமான வீட்டிற்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. அதே நேரத்தில் அவரது தாயார், பிரவீன்குமாரை தொடர்பு கொண்டுள்ளார். அவரது போனையும் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி யடைந்த அவரது தாயார், மேல் புவனகிரியில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அங்கு விரைந்து சென்ற உறவினர்கள் கதவை தட்டினார். கதவை திறக்காததால், சந்தேக மடைந்த உறவினர்கள் வீட்டின் பக்கவாட்டில் இருந்த விண்டோ ஏ.சி.மெஷினை கழட்டி அந்த வழியே உள்ளே சென்று பார்த்தனர்.  அப்போது பிரவின் குமார் மின்விசிறியில் தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார். உடனடியாக புவனகிரி போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிரவீன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கடன் தொல்லையால் தூக்குபோட்டு இறந்தாரா? அல்லது திருமணம் ஆகாத ஏக்கத்தில் தூக்கில் தொங்கினாரா? வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலையரசன் மற்றும் 2 பேர் வேல் முருகனை வழிமறித்து, அசிங்கமாக திட்டி, கழுத்தை கையால் இறுக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
    • கலையரசன் மீது வடலூர் போலீஸ் நிலையத்தில் ரவுடி சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    கடலூர்:

    வடலூர்கோட்டக் கரையை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் தமிழரசன் (26).இவர் விநாயகர் கோயில் அருகில் உள்ள புங்க மரத்துக்கு அருகே வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த வெங்கடாசலம் மகன்கலையரசன் மற்றும் 2 பேர் வேல் முருகனை வழிமறித்து, அசிங்கமாக திட்டி, கழுத்தை கையால் இறுக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இது சம்பந்தமாக வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. வடலூர் இன்ஸ்பெக்டர் ராஜா விசாரணை மேற் கொண்டு பார்வதிபுரம் கலைப]யரசன் (வயது 31) மற்றும் பரஞ்ஜோதி, ஜெய பிரகாஷ் ஆகியோர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். வழக்கில் சம்பந்தப்பட்ட கலையரசன் மீது வடலூர் போலீஸ் நிலையத்தில் ரவுடி சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.இவர் மீது 2 கொலை முயற்சி வழக்கு, ஒரு அடிதடி வழக்கு உள்ளன. இவரின் குற்றசெய்கையை கட்டுப் டுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜாராம் பரிந்துரையின்பேரில் கடலூர் மா வட்ட கலெக்டர்பாலசுப்பிர மணியம் 1 ஆண்டுகாலம் குண்டர் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டதன் பேரில் கலையரசன் ஓராண்டு குண்டர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

    • மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து பொம்மை வியாபாரி பாலமுருகனை தேடி வந்தார்.
    • நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை தூசி தட்டி எடுத்து குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வரும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(32). இவன் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

    இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி பிரிந்து வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பாலமுருகன் ஊர் ஊராக சென்று திருவிழா கூட்டங்களில் பொம்மை விற்கும் தொழில்செய்து வந்தார்.

    இவர் கடந்த ஆண்டு பண்ருட்டி அம்பேத்கர் நகரில் உள்ள உறவினர் வீட்டில் குழந்தைகளுடன் தங்கி வியாபாரம் செய்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும்13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தியுள்ளார். பின்னர் சிறுமியை பழனிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு சிறுமியை உளுந்தூர்பேட்டையில் விட்டு விட்டு தலைமறைவானார்.

    இதுகுறித்து பண்ருட்டி மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் செய்தனர். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து பொம்மை வியாபாரி பாலமுருகனை தேடி வந்தார். நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை தூசி தட்டி எடுத்து குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வரும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவுபடி பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா சிறப்பு புலனாய்வு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து டி.எஸ்.பி. குழு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு தலைமையில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

    சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, தனிப்படை போலீஸ்காரர்கள் ஆனந்த், ராஜி, கணேசமூர்த்தி ஆகியோருடன் தமிழகம் முழுவதும் ஊர் ஊராக சென்று திருவிழா கூட்டங்களில் வலை வீசி தேடினர். பாலமுருகனின் செல்போன் இந்தி வாலிபர் ஒருவரிடம் ரூ.800-க்கு விற்றது தெரிய வந்தது. வெறும் புகைப்பட ஆதாரத்துடன் சுற்றி வந்த தனிப்படை போலீசாருக்கு அவன் இருக்கும் இடம் தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து பாலமுருகனை சுற்றி வளைத்து கைது செய்த தனிபடையினர் அவரை பண்ருட்டிக்கு அழைத்து வந்தனர். பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாத காலமாக கிடப்பில் கிடந்த சிறுமி பாலியல் குற்றவாளியை அதிரடியாக கைது செய்த பண்ருட்டி போலீசாருக்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டு தெரிவித்தார்.

    • நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • தமிழகத்தில் 4 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு உள்ளன. விரைவில் புதிய பஸ்கள் வாங்கப்படும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஆவினங்குடியில் உள்ள வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதை கண்டித்து கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கரன் எம்.எல்.ஏ தலைமையில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த வழக்கில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்த பிரிவின் கீழ் சிவசங்கர் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற சிவசங்கரன் எம்.எல்.ஏ., போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

    கடலூர் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் இன்று ஆஜரானார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குன்னம் தொகுதியில் சுடுகாட்டில் மணல் குவாரி அமைத்து மணல் எடுத்து வந்த காரணத்தினால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் இணைந்து நானும் போராட்டம் நடத்தினேன். அப்போது போலீசார் எங்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இன்று கடலூர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளேன். இதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் 12-ந்தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு உள்ளனர்.

    தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தில் புதிய தொழிலாளர்கள் பணி நியமனம் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வெளியிட்டுள்ளார். அதன் பேரில் முதல் கட்டமாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வருங்காலங்களில் 6 அரசு போக்குவரத்து கழகத்தில் முதலமைச்சர் அனுமதி பெற்று போக்குவரத்து தொழிலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட உள்ளனர்.

    கடந்த கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்குவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டு வந்தது. தற்போது நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் 4 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு உள்ளன. விரைவில் புதிய பஸ்கள் வாங்கப்படும்.

    மத்திய அரசு 15 ஆண்டுகள் உபயோகிக்கப்பட்ட வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 21 ஆயிரம் பஸ்கள் இயங்கி வரும் நிலையில் 1500 பஸ்கள் 15 ஆண்டுகள் கடந்து உள்ளன. கொரோனா காலத்தில் 2 ஆண்டுகள் பஸ்கள் ஓடவில்லை. புதிய பஸ்கள் வாங்கும் வரையில், இந்த பஸ்கள் வழக்கம் போல் இயங்கும்.

    மேலும், இது தொடர்பாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சரிடம் நான் கோரிக்கை வைத்துள்ளேன். இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளன. அவர்கள் தங்கும் அறையில் குளிர்சாதன வசதி ஏற்படுத்திதர நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதில் விழுப்புரம் போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட கடலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் குளிர்சாதன தங்கும் அறையினை இன்று திறந்து வைக்க உள்ளேன். பணியாளர்கள் நலனில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கறை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடந்த 2 ஆண்டுகளில் 280 கோடி பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர். ஒரு சில இடங்களில் டிரைவர் மற்றும் கண்டக்டர் செய்யும் தவறுக்கு தமிழ்நாடு முழுவதும் இந்த நிலை நீடிக்கிறது என்று கூறுவது தவறு. நல்ல முறையில் இலவச பயணத் திட்டம் செயல்பட்டு வருகின்றது. வெளியூரிலிருந்து பயணம் செய்பவர்களுக்கு உணவுகள் மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சரியான முறையில் செயல்படாத 2 உணவுகங்கள் மூடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யுவராஜ் (வயது 18).இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்திருந்தார்.
    • நள்ளிரவு யுவராஜ், தனது பெரியப்பா வீட்டில் படுத்து தூங்–கிக்– கொண்–டி–ருந்–தார். அப்–போது அரு–கில் இருந்த டேபிள் மின்விசிறி, யுவராஜ் மீது விழுந்தது.

    கடலூர்:

    கட–லூர் மாவட்–டம் தூக்–க–ணாம்–பாக்–கம் மாதா கோவில் தெருவை சேர்ந்–த–வர் நாகப்–பன் மகன் யுவ–ராஜ் (வயது 18).

    இவர் அதே கிரா–மத்–தில் உள்ள அரசு மேல்–நி–லைப்–பள்–ளி–யில் பிளஸ்-2 படித்து முடித்–தி–ருந்–தார். இவர் கடந்த ஒரு வார–மாக தனது பெரி–யப்பா வீடான விழுப்–பு–ரம் பானாம்–பட்–டில் தங்–கி–யி–ருந்–தார்.

    சம்பவத்தன்று நள்–ளிரவு யுவ–ராஜ், தனது பெரியப்பா வீட்–டில் படுத்து தூங்–கிக்– கொண்–டி–ருந்–தார். அப்–போது அரு–கில் இருந்த டேபிள் மின்–வி–சிறி, யுவ–ராஜ் மீது விழுந்–தது.

    மாணவனின் அலரல் சத்–தம் கேட்டு வீட்–டில் இருந்–த–வர்–கள் எழுந்து பார்த்–த–போது யுவ–ராஜ் மயங்–கிக் –கி–டந்–தார். உடனே அவரை மீட்டு சிகிச்–சைக்காக விழுப்–பு–ரம் அரசு மருத்–து–வ–ம–னையில் அனுமதித்தனர்.

    அங்கு அவரை பரி–சோதித்த டாக்–டர், மாணவன் யுவராஜ் ஏற்–க–னவே இறந்து விட்–ட–தாக கூறி–னார். அவர் எப்–படி இறந்–தார்? என்–பது குறித்து விழுப்புரம் தாலுகா போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரணை நடத்தி வரு–கின்–ற–னர்.

    ×