என் மலர்
உள்ளூர் செய்திகள்

புவனகிரி அருகே விபத்தில் தவறி விழுந்த வாலிபர் மீது அரசு பஸ் மோதி பலி
- புவனகிரியில் இருந்து தலைக்குணத்திற்கு சென்ற அரசு பஸ் சாலையில் விழுந்த இளவரசன் மீது ஏறி இறங்கியது.
- புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புவனகிரி:
புவனகிரி அடுத்த கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (வயது 29). படித்து முடித்து வேலை தேடி வருகிறார். இவர் நேற்று மாலை புவனகிரியில் இருந்து விருத்தாசலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆதிவராகநத்தம் சுடுகாடு அருகில் சென்ற போது எதிர் திசையில் ஜோதி என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அப்போது நிலைதடு மாறிய ஜோதியின் மோட்டார் சைக்கிள் இளவரசன் மீது மோதியது. இதில் இளவரசன் சாலையில் விழுந்தார். ஜோதி சாலையின் ஒரத்தில் தூக்கி வீசப்பட்டார். அதே சாலையில் புவனகிரியில் இருந்து தலைக்குணத்திற்கு சென்ற அரசு பஸ் சாலையில் விழுந்த இளவரசன் மீது ஏறி இறங்கியது.
இதில் பலத்த காய மடைந்த இளவரசன் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






