சேத்தியாத்தோப்பு அருகே பாம்பு கடித்து விவசாயி பலி

விவசாயி காசிலிங்கம் நேற்று மாலை தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார்.நிலத்தில் உள்ள வரப்பில் நடந்து சென்றபோது விவசாயி காசிலிங்கம் காலில் ஏதோ கடித்தது.
சேத்தியாத்தோப்பு அருகே பாம்பு கடித்து விவசாயி பலி
Published on

சேத்தியாத்தோப்பு:

சேத்தியாத்தோப்பு அருகே வீரமுடையான்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம் (வயது 60). விவசாயி. இவர் நேற்று மாலை தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது நிலத்தில் உள்ள வரப்பில் நடந்து சென்றபோது காலில் ஏதோ கடித்தது.

இதில் நிலத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாம்பு கடித்து அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com