சேத்தியாத்தோப்பு அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த மகள் தூக்குப்போட்டு தற்கொலை

துர்காதேவியிடம் தான் வெளியில் செல்வதால் மாட்டிற்கு தீனி வைத்து வைக்கோல் போடுமாறு கூறிவிட்டு அவரது தாயார் ராணி சென்றார்.கன்று இறந்து போனதால், துர்காதேவியின் தாயார் ராணி துர்காதேவியை கண்டித்துள்ளார்.
சேத்தியாத்தோப்பு அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த மகள் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கடலூர்:

சேத்தியாத்தோப்பு அடுத்த பரதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகள் துர்காதேவி (வயது 30). இவருக்கும் மயிலாடுதுறையை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களிலேயே துர்காதேவி தனது கணவருடன், பரந்தூர் கிராமத்தில் உள்ள தனது தாயார் வீட்டிலேயே வசித்து வந்தார். இவர்களுக்கு 3 வயது குழந்தை உள்ளது.ர் வீட்டிலேயே வசித்து வந்தார். இவர்களுக்கு 3 வயது குழந்தை உள்ளது. துர்காதேவியின் தாயார் வீட்டில் கன்றுடன் கூடிய மாடு வளர்த்து வந்தார். தான் வெளியில் செல்வதால் மாட்டிற்கு தீனி வைத்து வைக்கோல் போடுமாறு துர்காதேவியுடன் கூறிவிட்டு அவரது தாயார் ராணி சென்றார். துர்காதேவி மாட்டிற்கு சரிவர தீனி போடவில்லை என்பதால், கன்றுடன் இருந்த மாடு அறுத்துக் கொண்டு வெளியில் சென்றது. இதில் கன்று இறந்து போனது. இதனை அறிந்த துர்காதேவியின் தாயார் ராணி, துர்காதேவியை கண்டித்துள்ளார்.இறந்து போன கன்றினை புதைக்க ரவியும், ராணியும் வெளியில் சென்றனர். அப்போது வீட்டிற்குள் சென்ற துர்காதேவி, தாய் தீட்டியதால் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், ஒரத்தூர் இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com