என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேப்பூர் அருகே இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- வாலிபர் பலி
- ஒருவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேேய பலியானார்.
- விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சேப்பாக்கத்தில் இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் கவிழ்ந்தது.
இந்த சத்தம் கேட்ட அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து வேப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் வந்தனர். லாரியில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது பலத்த காயங்களுடன் டிரைவரை மீட்டனர். மேலும், அவருடன் வந்த ஒருவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேேய பலியானார்.
விசாரணையில், ஆந்திரா மாநிலத்தில் இயங்கி வரும் அம்மன் டிஆர்ஒய் கம்பெனியில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மதியம் திருச்சிக்கு இந்த லாரி கிளம்பியுள்ளது. இதனை ஆந்திராவைச் சேர்ந்த குருவையா (வயது 40) ஓட்டி வந்துள்ளார். இவருடன் அதே கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரியும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த தங்கராசு (30) என்பவர் வந்துள்ளார்.
லாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் தங்கராசு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தங்கராசுவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த டிரைவர் குருவையாவை சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






