search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி வள்ளலார் பள்ளி  மாணவி மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை:  மாணவ, மாணவியர் கொண்டாட்டம்
    X

    மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த வள்ளலார் பள்ளி மாணவி சுவாதி கேக் வெட்டி கொண்டாடியபோது எடுத்தபடம். அருகில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளனர்.

    பண்ருட்டி வள்ளலார் பள்ளி மாணவி மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை: மாணவ, மாணவியர் கொண்டாட்டம்

    • . வள்ளலார் பள்ளியில் இந்த ஆண்டு 247 மாணவ, மாணவியர் பிளஸ்-2 பயின்று வந்தனர்..பிளஸ்-2 தேர்வுக்கான முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டது. இதில் வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து தேர்வெழுதிய 247 மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
    • . இதில் சுவாதி என்ற மாணவி பள்ளி அளவில் முதலிடம் பெற்றதோடு, உயிரியல் குரூப்பில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார். இவர் இயற்பியல், வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்ணும், தமிழ், ஆங்கிலம், கணிதம், உயிரியல் பாடங்களில் 100-க்கும் 99 மதிப்பெண்களும் பெற்று 600-க்கு 596 மதிப்பெண்ணுடன் மாநில அளவில் 2-ம் இடமும் பள்ளி அளவில் முதலிடமும் பெற்றுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி கொள்ளுக்காரன்குட்டையில் வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இந்த ஆண்டு 247 மாணவ, மாணவியர் பிளஸ்-2 பயின்று வந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வில் 247 மாணவர்களும் தேர்வெழுதினர்.பிளஸ்-2 தேர்வுக்கான முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டது. இதில் வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து தேர்வெழுதிய 247 மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதில் சுவாதி என்ற மாணவி பள்ளி அளவில் முதலிடம் பெற்றதோடு, உயிரியல் குரூப்பில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார். இவர் இயற்பியல், வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்ணும், தமிழ், ஆங்கிலம், கணிதம், உயிரியல் பாடங்களில் 100-க்கும் 99 மதிப்பெண்களும் பெற்று 600-க்கு 596 மதிப்பெண்ணுடன் மாநில அளவில் 2-ம் இடமும் பள்ளி அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். மாணவி அட்சயா 584மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடமும், மாணவன் அண்புமணி 583 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 3-ம் இடமும் பிடித்துள்ளார். மேலும், இந்த பள்ளி கடலூர் மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைவர் திருமால்வளன், தாளாலர் கே. நடராஜன், வள்ளலார் கிட்ஸ் பள்ளி தாலாளர் மற்றும் செயலாளர் சக்கரவர்த்தி, பொருளாலர் ராஜா, கண்ணன், சுப்பிரமணி, ஜனார்த்தனன், மணிவாசகம், சாரங்கபாணி, செல்வராஜ், சரவணன், திருவேங்கடம், சண்முகம், சரோஜாம்மாள், வள்ளலார் கல்வியியல் கல்லூரி ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துக்களை கூறினர். மேலும், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கியும், கேக் வெட்டியும் கொண்டாடினார்கள்.

    Next Story
    ×