என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீட்சிதர் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை: சிதம்பரத்தில்  மருத்துவக் குழுவினர்  விசாரணை
    X

    சிதம்பரத்தில் விசாரணைக்கு வந்த மருத்துவ குழுவினரை படத்தில் காணலாம்.

    தீட்சிதர் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை: சிதம்பரத்தில் மருத்துவக் குழுவினர் விசாரணை

    • உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
    • தீட்சிதர்கள் குடும்பத்தினர் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் தொட ர்பாக சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் உரிய விசாரணை நடத்தி சில வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்கு தொடர்பாக சில தீட்சிதர்கள் கைதும் செய்யப்பட்டனர். அதனையடுத்து குழந்தை திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் சிறுமிக்கு, உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டதாகவும். அவ்வாறு செய்தது தவறு எனவும், சமீபத்தில் தமிழக கவர்னர் கூறியதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக சிதம்ப ரத்தில் சுகாதாரத்து றைசார்பில் மருத்துவக் குழுவினர், மருத்துவத்துறை கூடுதல் இயக்குனர் விஸ்வநாதன், கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ரமேஷ்பாபு, கடலூர் மகப்பேறு டாக்டர் பரமேஸ்வரி, சென்னை கூடுதல் கண்காணிப்பாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் சிதம்பரம் வந்து சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுரதி மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று வழக்கு குறித்து கேட்டறிந்து விசாரணை மேற்கொ ண்டனர்.

    தீட்சிதர்கள் குடும்பத்தி னர் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்ய ப்பட்டன. அந்த வழக்குகளில் எந்தவிதமான மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றது என கேட்டறிந்தனர். மேலும் இந்த விசாரணைக்கு ஒத்துழைக்கும் படியும் போலீஸ் அதிகாரியிடம், சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாக கூறப்படு கிறது. இதை தொடர்ந்து மருத்துவக் குழுவினர் மருத்துவ சோதனை மேற் கொள்ள கடலூர் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றனர்.

    Next Story
    ×