கடலூர் புது வண்டிபாளையத்தில் அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி:திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை கருங்கல்லில் கட்டி, கடலில் வீசினார்.கடலூர் புதுவண்டிபாளையத்தில் உள்ள கரையேறவிட்ட குப்பம் என்று அழைக்கப்படுகிறது
கடலூர் புது வண்டிபாளையத்தில் அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்த காட்சி.
கடலூர் புது வண்டிபாளையத்தில் அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்த காட்சி.
Published on

கடலூர்:

கடலூர் முதுநகர் அருகே புதுவண்டிப்பாளையத்தில் கரையேறவிட்டகுப்பத்தில், அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தை ஆண்ட மகேந்திரவர்ம பல்லவ மன்னர், திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை கருங்கல்லில் கட்டி, கடலில் வீசினார். அப்போது நமச்சிவாய பதிகம் பாடி, அந்த கல்லையே தெப்பமாக கொண்டு அப்பர் கரை சேர்ந்தார். அந்த இடம் தான் கடலூர் புதுவண்டி பாளையத்தில் உள்ள கரையேறவிட்ட குப்பம் என்று அழைக்கப்படுகிறது. அப்பர் கரையேறிய இடத்தில் அவருக்கு தனியாக கோயில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோயிலில அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் இருந்து விநாயகர், அப்பர், பெரியநாயகியுடன் பாடலீஸ்வரர் ரிஷப வாகனத்தில் கரையேறவிட்டகுப்பம் வந்தடைந்தார். இதையடுத்து அங்கு பாடலீஸ்வரருக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு அங்குள்ள குளத்தில் அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் தெப்பத்தில் அப்பர் வலம் வந்தார். பிறகு அப்பர் கரையேறி அங்குள்ள மண்டபத்தில் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு பாடலீஸ்வரர், பெரியநாயகி, விநாயகர் சாமிகள், அப்பருடன் கோயிலை வந்தடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com