search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி ஒன்றிய கவுன்சிலர்களின் குறைகள் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும் : ஒன்றிய குழு கூட்டத்தில் சபா.பாலமுருகன் பேச்சு
    X

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் சேர்மன் சபா.பாலமுருகன் தலைமையில் நடந்தது.

    பண்ருட்டி ஒன்றிய கவுன்சிலர்களின் குறைகள் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும் : ஒன்றிய குழு கூட்டத்தில் சபா.பாலமுருகன் பேச்சு

    • பண்ருட்டி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் சேர்மன் சபா.பாலமுருகன் தலைமையில் நடந்தது.
    • அருள்முருகன் (தி.மு.க): நடுக்குப்பம் பகுதியில் தமிழக முதல்வரின் அறிவுரைப்படி இளைஞர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும்.

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் சேர்மன் சபா.பாலமுருகன் தலைமை யில் நடந்தது.துணை சேர்மன் தேவகி ஆடல் அரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீரா கோமதி, மேலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத் தீர்மானங்கண அலுவலக உதவியாளர் ராமநாதன் வாசித்தார்.

    கூட்டத்தில் கவுன்சிலர்களி டையே நடந்த விவாதம் வருமாறு:-

    அருள்முருகன் (தி.மு.க): நடுக்குப்பம் பகுதியில் தமிழக முதல்வரின் அறிவுரைப்படி இளைஞர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும்.

    ராமகிருஷ்ணன் (த.வா.க.): வேகா கொல்லை ஊராட்சி குள்ளஞ்சாவடி சாலை அருகில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். பொதுமக்களோடு இணைந்து அந்த டாஸ்மாக்கை அடித்து நொறுக்குவேன். காட்டுவேகாக்கொல்லை - வேகாக்கொல்லை செல்லும் சாலை, சிவன் கோவில் செல்லும் தார் சாலை அமைத்து தரவேண்டும். ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும்.

    விஜயதேவி தேவராசு (த.வா.க): அங்குசெட்டி பாளையம் - சிறுவத்தூர் செல்லும் பகுதியில் மாணவர்களின் நலன் கருதி மின்விளக்கு அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    சேர்மன் சபா.பாலமுரு கன்: ஒன்றிய கவுன்சிலர்களின் அனைத்து குறைகளும் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடலூர் மாவட்டத்திலேயே நம்பர் 1 ஊராட்சி ஒன்றியமாக மாற அனைத்து துறை அலுவலர்கள், தலைவர்கள், கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என பேசினார்.

    Next Story
    ×