search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Irrigation water"

    • வெள்ளாற்றில் உள்ள தடுப்பணையில் தேக்கி வைத்திருந்த பாசன நீரை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திறந்து விட்டதால் வீணாக ஆற்றில் நீர் வெளியேறும் அவல நிலை உருவாகியுள்ளது.
    • மர்மநபர்கள் நீரை திறந்து விடுவதால் சேமித்து வைத்திருந்த தண்ணீர் வீணாக ஆற்றில் வெளியேறி கடலில் கலக்கிறது.

    கடலூர்:

    வெள்ளாற்றில் உள்ள தடுப்பணையில் தேக்கி வைத்திருந்த பாசன நீரை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திறந்து விட்டதால் வீணாக ஆற்றில் வெளியேறும் அவல நிலை உருவாகியுள்ளது.  கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த கூடலூர் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே அரியலூர் மாவட்டத்தை இணை க்கும் தடுப்பணை வெள்ளாற்றில் ரூ.16 கோடியில் கட்ட ப்பட்டது. இந்த தடுப்பணை யால் 4.14 மில்லியன் கன அடி நீரைச் சேமிக்க முடியும்  இந்த தடுப்பணைக்கு கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழை நீர் மற்றும் அருகில் இருந்து ஓடை வழியாக தடுப்பணைக்கு வந்து முழு கொள்ளளவை எட்டியயது. கூடலூர் கிராம மக்கள் குருவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்தனர்.

    இந்நிலையில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தடுப்பணையின் கதவுகளை திறந்து விடுவதும் அதை சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் மூடுவதும் தொடர் கதையாக உள்ளது.திறந்து விடுவதால் சேமித்து வைத்திருந்த தண்ணீர் வீணாக ஆற்றில் வெளியேறி கடலில் கலக்கிறது இதனால் விவசாயிகளுக்கு பாசன நீர் தற்போது கேள்விக் குறியாக மாறி வருகிறது.5 அடிக்கு மேல் தேங்கியி ருந்த நீர் நிலையில் தற்போது 3 அடி யாக குறைந்துள்ளதால் விவசா யிகள் வேதனை யடைந்துள்ளனர். தடுப்பணை யில் இருந்து தண்ணீரை திறந்து விடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளில் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×