என் மலர்tooltip icon

    கடலூர்

    • காவியா கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • புகாரில் சூர்யா என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறிய தனது மகளை கடத்தியதாக கூறியுள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சித்திரைச்சாவடி திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் இவரது மகள் காவியா (20).இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். தேர்வு முடிந்து விடு முறையில் தனது சொந்த ஊருக்கு வந்து இருந்தார். நேற்று இவரது தந்தையும், தாயும் துக்க நிகழ்ச்சிக்கு சென் று விட்டு தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது தனது மகள் காவியா காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கா ததால் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். புகாரில் சூர்யா என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறிய தனது மகளை கடத்தியதாக கூறியுள்ளனர். இதுகுறித்து புதுப் பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை வலை வீசி தேடி வருகிறார்.

    • தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.
    • நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் காலையிலிருந்து கோரிக்கை மனு அளிக்க நேரில் வந்தனர்.

    இந்நிலையில் முதியவர் ஒருவர் மனுக்களை தலையில் கட்டி வைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அப்போது அந்த முதியவர் நெற்றியில் பட்டை நாமம் போட்டு கொண்டு வந்தார். அவரது தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.

    இவர் திட்டக்குடி வட்டம் வடகிராம பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி ஆவார். அவர் கூறும்போது, எனது நிலத்திற்கு பட்டா மாற்ற செய்வதற்காக உரிய மனு அளித்தேன். இதற்கான உத்தரவு நகல் வந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர் ஒருவர் இந்த நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

    வருவாய் துறையினரும் இதற்கு ஆதரவு அளித்து வருவதோடு அரசு புறம்போக்கு இடங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 33 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.

    33 முறை மனு அளித்த அனைத்து கோரிக்கை மனுவையும் மூட்டையாக தலையில் வைத்து கொண்டு வந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

    • நிள அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு 90 நாட்களுக்கான நில அளவை பயிற்சி கடலூர் அருகே நடைபெற்றது.
    • செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது.

    கடலூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 922 நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் கடந்த 15-ந்தேதி தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனை தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட 102 நிள அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு 90 நாட்களுக்கான நில அளவை பயிற்சி கடலூர் அருகே நடைபெற்றது. 

    மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், உதவி இயக்குனர்கள் திருநாவுக்கரசு, சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றினார்கள். இதில் பங்கேற்றுள்ள 102 நில அளவர் மற்றும் வரைவாளர்கள் பயிற்சி முடித்து கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பணியில் ஈடுபட உள்ளனர். பயிற்சியில் ஈடுபடும் நில அளவர்கள் மற்றும் வரைவாளர்கள் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது. கடலூர் கோட்ட ஆய்வாளர் நாராயணன் நன்றி கூறினார்.

    • இன்று காலை தேருக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.
    • உலா செல்லக்கூடிய வாகனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

    கடலூ:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி பெரு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் ஜூன் 2-ந்தேதி நடக்கிறது.

    இந்நிலையில் இன்று காலை தேருக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவிழாவிற்கான பந்த கால் நடும் நிகழ்ச்சி நடை பெற்றன. பந்த காலுக்கு மஞ்சள், குங்குமம் பூசி சிறப்பு பூஜைகள் நடைபெற்று பந்தகால் நடப்பட்டது.இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். முன்னதாக பாடலீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி தொடங்கப்பட்டு கோவில் கொடிமரம், கோவிலின் சுற்றுச்சுவர், சாமி வீதி உலா செல்லக்கூடிய வாகனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதில் கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வருடம் தோறும் வைகாசி பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 2-ந்தேதி நடக்கிறது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 2-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி பாடலீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது. இதில் 63 நாயன்மார் அமைப்பு சார்பில் ராமலிங்கம் தலைமையில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவில் கொடிமரம், கோவிலின் சுற்றுச்சுவர், சாமி வீதி உலா செல்லக்கூடிய வாகனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதில் கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பிரதீப் குமார் ரத்த வெள்ளத்தில் பொது மேலாளர் அலுவலகம் முன்பு இறந்து கிடந்தார்.
    • பிரதீப் குமார் தெலுங்கானா மாநிலத்திற்கு பணியிடம் மாற்றம் காரணமாக வேலைக்கு சென்றுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் அலுவலகம் 3 மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று அதிகாலை பிரதீப் குமார் (வயது 50) என்பவர் ரத்த வெள்ளத்தில் பொது மேலாளர் அலுவலகம் முன்பு இறந்து கிடந்தார். இதனை பார்த்த காவலாளி அதிர்ச்சியடைந்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு பிரதீப் குமார் உடலை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், கடலூர் பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தில் பிரதீப் குமார் கணக்காளராக பணிபுரிந்து உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கடலூரில் இருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு பணியிடம் மாற்றம் காரணமாக வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று பிரதீப் குமார் கடலூருக்கு வந்த போது ஏற்கனவே பணிபுரிந்த கடலூர் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள 3-வது மாடிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்தவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பிரதீப் குமார்3- வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • சிலர் வீடுகளில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக புதுப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த திருவாமூர், எலந்த ம்பட்டுஆகிய கிராமங்களில் சிலர் வீடுகளில்கஞ்சாவை பதுக்கி வைத்துவி ற்பனைசெய்துவருவதாக புதுப்பேட்டை போலீசாரு க்குரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுப்பேட்டை போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமா ர்தலைமையி ல்போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் அப்போது திருவாமூரில் உள்ள ஒரு வீட்டில் வெங்கடேசன் மகன் சிவக்குமார்(20),பெரியஎலந்தப்பட்டு ராஜேந்திர ன்மகன்ராகுல்(22)ஆகியோர் 85கிராம்கஞ்சா வைத்திருந்து விற்பனை செய்தது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரையும் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் இதேபோல முத்தாண்டி குப்பம் போலீசார் நடத்திய தீவிர கஞ்ச வேட்டையில்கீ ழக்குப்பம்வடக்கு தெரு குமார் மகன் தங்கப்பா ண்டியன் (20)கீழகுப்பம் பகுதியில் கள்ளத்தனமாக கஞ்சா மற்றும் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அவரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

    • தங்கதுறை சித்தேரி ஏரிக்கரைக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
    • இது குறித்து போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    வேப்பூர் அருகே திருப்பையர் பகுதியை சேர்ந்தவர் தங்கதுறை (வயது 36)கூலித்தொழி லாளி. இந்நிலையில் நேற்று காலை அதே பகுதியிலுள்ள சித்தேரி ஏரிக்கரைக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அந்த ஏரிக்க ரை ஓரம் நடந்து சென்ற தங்கதுறை திடீரென மயங்கி கீேழ விழுந்தார். இதனை யடுத்து தங்கதுறை உடன் சென்ற வாலிபர் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் 108 ஆம்புலன் உதவியுடன் அவரை மீட்டு வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு தங்கதுறையை பறிசோதித்த டாக்டர்கள் தங்கதுறை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர். இதுகு றித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கதுறையின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் 7 முனைகளில் இருந்து சி.ஐ.டி.யூ.வினர் நடை பயண பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
    • நாகை மாவட்ட செயலாளர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறையை எதிர்த்தும், தொழிற்சாலை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், தொழிலாளர் நலன் பாதுகாக்கும் வகையில் முத்தரப்பு குழுக்களை செயல்படுத்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 7 முனைகளில் இருந்து சி.ஐ.டி.யூ.வினர் நடை பயண பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூரில் தொடங்கிய நடைபயண பிரசாரத்திற்கு மாநில உதவி பொதுச்செயலாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெயபால், கடலூர் மாவட்ட செயலாளர் பழனிவேல், தஞ்சாவூர் மாவட்ட தலைவர் கண்ணன், திருவாரூர் மாவட்ட செயலாளர் முருகையன், நாகை மாவட்ட செயலாளர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர் போக்குவரத்து கழக பணிமனை அருகில் இருந்து தொடங்கிய பிரசார நடை பயணம் பாரதி சாலை, செம்மண்டலம், சாவடி மற்றும் கோண்டூர் வழியாக நெல்லிக்குப்பம் வரை சென்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மாரியப்பன், அரியலூர் மாவட்ட செயலாளர் துரைசாமி, மாவட்ட தலைவர் கருப்பையன், மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் சுப்பராயன், ராஜேஷ் கண்ணன், திருமுருகன் ஸ்டாலின், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாதவன், மாநகர செயலாளர் அமர்நாத் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த பிரசார பயணமானது மே 30-ம் தேதி சி.ஐ.டி.யூ. அமைப்பு தினத்தன்று திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது.

    • கடலூரில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கள்ளசாராய மரணங்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

    கடலூர்:

    கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கள்ளசாராயம் குடித்து மரணங்கள் நடைபெறுவதை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் ஜெயா, மாலா ஆகியோர் தலைமை வகித்தனர். மாநகர தலைவர் சாமந்தி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சுபஸ்ரீ, மாவட்ட தலைவர் மருதை, மாநகர தலைவர் வேலு வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதில் ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள். முடிவில் பொதுச் செயலாளர் சுதா நன்றி கூறினார்.

    • இதனை பார்த்த பாலமுருகன் உறவினர் கார்த்திகேயன் தடுக்க சென்ற போது அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • ராஜேஷ், ரஞ்சித், விமல், புதுவை சேர்ந்த முரளிதரன், விஜய் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே ரெட்டிச்சாவடி சந்திக்குப்பத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அந்த பகுதியில் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு கும்பல் மது அருந்தி கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த கும்பல் திடீரென்று பாலமுருகனை வழிமறித்து குடிபோதையில் சரமாரியாக தாக்கினார்கள்.

    அப்போது இதனை பார்த்த பாலமுருகன் உறவினர் கார்த்திகேயன் தடுக்க சென்ற போது அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த கார்த்திகேயன், பாலமுருகன் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் பாலமுருகன், தாய் அஞ்சலை கொடுத்த புகாரின் பேரில் சந்திக்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜேஷ், ரஞ்சித், விமல், புதுவை சேர்ந்த முரளிதரன், விஜய் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதலை இளம்பெண் ஏற்க மறுத்ததால் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28). பட்டதாரி. இவர் ஒரு இளம் பெண்ணை கடந்த பல ஆண்டுகளாக ஒரு தலையாக காதலித்து வந்தார். இந்நிலையில் இவரது காதலை அந்த இளம் பெண்ணிடம் தெரிவித்துள்ளார். காதலை இளம்பெண் ஏற்கவில்லை. இதனால் பிரபாகரன் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று பிரபாகரன், சேடப்பாளையம் பகுதியில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பிரபாகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

    ×