search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற வாலிபர் கைது
    X

    திட்டக்குடி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற வாலிபர் கைது

    • கலையரசியை மோட்டா ர்சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்தனர்.
    • மோட்டார் சைக்கிளுடன் வந்த மற்றொருவர் சிக்கினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோழியூரைச் சேர்ந்தவர் கலையரசி (வயது 46). இவர் இன்று காலை 10 மணியளவில் சாலையில் நடந்து சென்றார். அப்போது இவரை மோட்டா ர்சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்தனர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கலையரசியை வழிமறித்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறிக்க முயற்சித்தனர். அப்போது திருடன், திருடன் என கூச்சலிட்ட கலையரசி, செயினை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதில் அறுத்து போன தங்க செயினின் ஒரு பகுதி திருடனின் கையில் சிக்கியது. கலையரசியின் கூச்சல் சப்தம் கேட்டு அங்கு கூடிய பொதுமக்கள் 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    இதில் ஒரு வாலிபர் தப்பியோடி விட்டார். மோட்டார் சைக்கிளுடன் வந்த மற்றொருவர் சிக்கினார். இவரை திட்டக்குடி போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்ட வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் என்பது தெரியவந்தது. மேலும், தப்பியோடிய வாலிபர் யார் என்பது குறித்தும் திட்டக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க செயினை பறிக்க முயன்ற வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×