என் மலர்tooltip icon

    கடலூர்

    • திருக்கோவிலூரில் இருந்து கடலூர் நோக்கி சென்ற மற்றொரு கார் இந்த கார் மீது மோதியது.
    • 4 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் தோட்டப்பட்டு சேர்ந்தவர் செந்தில் (வயது 50). தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை அதே பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு வேலைக்கு செல்வதற்காக காரில் கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் சென்றார். அப்போது திருக்கோவிலூரில் இருந்து கடலூர் நோக்கி மற்றொரு கார் இந்த கார் மீது மோதியது. பயங்கர சத்தத்துடன் 2 கார்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் கடலூர் கோண்டூர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி, மோட்டார் சைக்கிள் சென்றவர்கள் மீது கார் மோதி அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    இதனைப் பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து விபத்தில் அடிபட்ட 4 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையின் ஓரத்தில் தடுப்பு கட்டை அமைக்கப்பட்டு இருந்த தால் அருகாமையில் இருந்த பெரிய பள்ளத்தில் 2 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலையில் இந்த விபத்து நடந்ததால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • சுந்தர வடிவேலை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • கணவன், மனைவி, மகன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தொரப்பாடி பேரூராட்சி தி.மு.க. செயலாளர் சுந்தரவடிவேல் (52). இவர் தொரப்பாடி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இருவழி பாதையாகமாற்றபேரூராட்சிமன்றதீர்மானத்தின்படிவேலிஅமைத்துள்ளார். அப்போது பேரூராட்சி உள்ளே கடைவைத்திருக்கும் அன்பழகன், அவரது மனைவி ஜெயந்தி, அவரது மகன்தேவானந்த் ஆகியோர் வேலியை உடைத்து அங்கிருந்த பேனரை கிழித்து சுந்தர வடிவேலை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல்விடுத்ததாககூறப்படுகிறது. இது தொடர்பாக புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து கணவன், மனைவி, மகன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று ஐஸ்வர்யாவுக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் அழகப்பன். இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 19).கடலூர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வந்தார். சம்பவத்தன்று ஐஸ்வர்யாவுக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை மாநிலததில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஐஸ்வர்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதையில் இருந்த முத்துகுமரன் வீட்டிலிருந்த மண்எண்ணையை எடுத்து தன்மீது ஊற்றி தீ வைத்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே நடுக்குப்பத்தை சேர்ந்தவர் முத்துகுமரன் (வயது50) கூலி தொழிலாளி.இவர் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டுள்ளார் பணம் கொடுக்காததால் மனைவியு டன் தகராறில் ஈடுபட்டார். அப்போது போதையில் இருந்த முத்துகுமரன் வீட்டிலிருந்த மண்எண்ணையை எடுத்து தன்மீது ஊற்றி தீ வைத்தார். இதனையடுத்து தீ உடல் முழுவதும் பரவி துடித்தார்.

    இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் முத்துகுமரனை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக கார் முழுவதும் சோதனை செய்தபோது கத்தி இருந்தது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாகர், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மேற்பார்வையில் சப்- இன்ஸ்பெக்டர் மகிபால் மற்றும் போலீசார் கடலூர் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அவ்வழியாக வந்த காரினை நிறுத்தி சோதனை செய்த போது காரில் 4 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, திடீரென்று 2 வாலிபர்கள் காரில் இருந்து இறங்கி தப்பி ஓட்டினார்கள்.

    சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக கார் முழுவதும் சோதனை செய்தபோது கத்தி இருந்தது தெரிய வந்தது. உடனடியாக 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் காரை பறிமுதல் செய்தனர். அவர்களை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கம் சுதாகர் (வயது 21), புதுக்கடை சிங்கிரிகுடி ஹரி கிருஷ்ணன் (20) என்பது தெரிய வந்தது. காரின் பின்பக்கம் மற்றொரு கத்தி மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காரில் இருந்து தப்பிஓடியவர்கள் ஜோசப் (28), அருண்பாண்டியன் (26) என்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது.

    புதுவை மாநிலத்தில் தாடி அய்யனார் மற்றும் ஜோசப் என்ற 2 ரவுடி கும்பல் இருந்து வருகின்றன. இதில் ஜோசப் அணியை சேர்ந்த அன்பரசனை கடலூர் அடுத்த சிங்கிரிகுடி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாடி அய்யனார் தரப்பினர் கொலை செய்து புதைத்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அன்பரசனை கொலை செய்த தாடி அய்யனாரை கொலை செய்வதற்காக பழிவாங்கும் நோக்கத்துடன் காரில் கத்தியுடன் சுற்றி வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தப்பி சென்ற ஜோசப் மற்றும் அருண்பாண்டியன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாகர், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

    • சேகர் குடிபோதையில் முந்திரிக்கு அடிக்க வைத்திருந்த மருந்தை மதுவில் கலந்து குடித்து விட்டார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 48) இவர் தன்னுடைய மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு குடிபோதையில் முந்திரிக்கு அடிக்க வைத்திருந்த மருந்தை மதுவில் கலந்து குடித்து விட்டார். பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்ற போது அவரை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.
    • வைத்தீஸ்வரி கூரை வீட்டை தீ வைத்து கொளுத்தியதால் எரிந்து சேதமடைந்து.

    கடலூர்:

    கடலூர் அடுத்த எம். புதூரை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி வைத்தீஸ்வரி. இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த ரங்கதுரை என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது வைத்தீஸ்வரி தரப்பினருக்கும், ரங்கதுரை தரப்பினருக்கும் திடீரென்று மோதல் ஏற்பட்டது. மேலும் வைத்தீஸ்வரியை மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் வைத்தீஸ்வரி கூரை வீட்டை தீ வைத்து கொளுத்தியதால் எரிந்து சேதமடைந்து.

    மோதலில் ரங்கதுரை தரப்பில் சபிதா என்பவரு க்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் வைத்தீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ரங்கதுரை மற்றும் 5 பேர் மீதும், சபிதா கொடுத்த புகாரின் பேரில் குமரேசன் உட்பட 3 பேர் என 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே தகராறு காரணமாக வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர்.
    • இதர மனுக்கள் 129 என மொத்தம் 282 மனுக்கள் வரப்பெற்றன.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரேஷன் அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இதில் பட்டா தொடர்பான 53 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 27 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 17 மனுக்களும், போலீஸ் துறை தொடர்பாக 41 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 15 மனுக்களும் மற்றும் இதர மனுக்கள் 129 என மொத்தம் 282 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதா ரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் தனி த்துணை கலெக்டர் கற்பகம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஷ்வரன், மாவட்ட வழங்கல் உதயகுமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மகாராஜா சம்பவத்தன்று இரவில் மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • அதிலிருந்து ரூ.9 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடியை சேர்ந்தவர் மகாராஜா (வயது 28). மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவில் தனது மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலையில் கடைக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பின்னர் பதற்றத்துடன் மகாராஜா உள்ளே சென்று பார்த்தபோது, பணம் வைக்கும் பெட்டி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிலிருந்து ரூ.9 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து மகாராஜா ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர். பூட்டை உடைத்து கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கடலூர் அருகே மனைவியை தாக்கிய கணவன் கைது செய்யப்பட்டார்.
    • ராஜலட்சுமியை கணவர் பாரதி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் கே.என்.பேட்டையை சேர்ந்தவர் பாரதி (வயது 28). இவரது மனைவி ராஜலட்சுமி(வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. சம்பவத்தன்று ராஜலட்சுமி தனது கணவர் பாரதியிடம் 500 ரூபாய் பணம் கேட்டு உள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ராஜல ட்சுமியை கணவர் பாரதி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பாரதி தனது மனைவியை மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜலட்சுமி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கணவர் பாரதி உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் கணவர் பாரதியை போலீசார் கைது செய்தனர். 

    • கலையரசியை மோட்டா ர்சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்தனர்.
    • மோட்டார் சைக்கிளுடன் வந்த மற்றொருவர் சிக்கினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோழியூரைச் சேர்ந்தவர் கலையரசி (வயது 46). இவர் இன்று காலை 10 மணியளவில் சாலையில் நடந்து சென்றார். அப்போது இவரை மோட்டா ர்சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்தனர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கலையரசியை வழிமறித்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறிக்க முயற்சித்தனர். அப்போது திருடன், திருடன் என கூச்சலிட்ட கலையரசி, செயினை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதில் அறுத்து போன தங்க செயினின் ஒரு பகுதி திருடனின் கையில் சிக்கியது. கலையரசியின் கூச்சல் சப்தம் கேட்டு அங்கு கூடிய பொதுமக்கள் 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    இதில் ஒரு வாலிபர் தப்பியோடி விட்டார். மோட்டார் சைக்கிளுடன் வந்த மற்றொருவர் சிக்கினார். இவரை திட்டக்குடி போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்ட வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் என்பது தெரியவந்தது. மேலும், தப்பியோடிய வாலிபர் யார் என்பது குறித்தும் திட்டக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க செயினை பறிக்க முயன்ற வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் ஒரு பெண் உட்பட 3 ேபர் வந்து திடீரென்று அரசு பஸ்சை வழிமறித்தனர்.
    • மோகன் குமார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    கடலூர்:

    அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய 3 பேரை ேபாலீசார் தேடி வருகிறார்கள். கடலூர் அடுத்த மேல் பூவாணிக்குப்பத்தை சேர்ந்தவர் மோகன் குமார் (வயது 40). அரசு பஸ் டிரைவர். சம்பவத்தன்று கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசுபஸ்சில் பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்று கொண்டிருந்தார். இந்த பஸ்சில் கண்டக்டராக ராமலிங்கம் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் ஒரு பெண் உட்பட 3 ேபர் வந்து திடீரென்று அரசு பஸ்சை வழிமறித்தனர்.

    பின்னர் பஸ் டிரைவர் மோகன் குமாரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த மோகன் குமார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அடையாளம் தெரியாத 3 ேபர் யார்? என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×