என் மலர்tooltip icon

    கடலூர்

    • குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே நார்வேவில் வந்து குடியேறிவிட்டனர்.
    • தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டது இங்கு உள்ளவர்களை ஆச்சர்யம் அடைய செய்தது.

    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். பி.எச்.டி. பட்டதாரியான இவர் நார்வே நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் நார்வே போர்கன் பகுதியை சேர்ந்த சிவானந்தினி என்ற பெண்ணும் பணிபுரிந்து வருகிறார்.

    சிவானந்தினியின் குடும்பத்தினர் இலங்கை தமிழர். இவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே நார்வேவில் வந்து குடியேறிவிட்டனர். அதனைத் தொடர்ந்து சிவானந்தினியும் அந்த புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. காதல் திருமணம் செய்து கொண்டாலும் குடும்பத்தினர் சம்மதத்துடன் செய்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் இரு குடும்பத்தினரும் பேசி அதில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் கடலூர் மஞ்சக் குப்பத்தில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

    தமிழ்முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமகன் குடும்பத்தினரும் நார்வேவில் இருந்து வந்திருந்த மணமகள் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக கலந்து கொண்டனர். அதன் பிறகு இந்து கோவில்களில் தமிழ் முறைப்படி அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    அப்பொழுது நார்வே நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் தமிழ் கற்றுக் கொண்டதாகவும் தமிழ் கலாச்சாரம் மிகவும் பிடிக்கும் என்பதால் தமிழரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இருந்த நிலையில் தற்போது தன்னுடைய கனவு நினைவாகியுள்ளதாக மணமகள் தெரிவித்தார்.

    நார்வே சென்றபோது தனக்கு காதல் ஏற்பட்டதாகவும் ஆனால் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதால் குடும்ப சம்மதத்துடன் இந்த திருமணம் நிறைவேறி உள்ளதாக மண மகன் பாலமுருகன் தெரிவித்தார். இலங்கையில் இருந்து நார்வே சென்று குடியேறிய இலங்கை தமிழர் குடும்பத்தினர் தற்பொழுது கடலூரைச் சேர்ந்த மண மகனை கடலூருக்கு வந்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டது இங்கு உள்ளவர்களை ஆச்சர்யம் அடைய செய்தது. 

    • சிறுமியின் தந்தை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
    • சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கடலூர் :

    கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக 13 வயது சிறுமி வந்துள்ளார். சிறுமியை பரிசோதனை செய்த டாக்டரிடம், சளி பிரச்சனை இருப்பதாக தந்தை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர், அவருக்கு ஊசி போடவும், மாத்திரையும் எழுதி சீட்டு கொடுத்துள்ளார்.

    அந்த சீட்டை வாங்கிக்கொண்டு ஊசி போடும் இடத்திற்கு வந்த தந்தையிடம் இருந்து மருந்து சீட்டை வாங்கிய செவிலியர் அதை படித்து கூட பார்க்காமல் 2 ஊசி போட்டுள்ளார். இதனை பார்த்த சிறுமியின் தந்தை, எதற்காக 2 ஊசி போடுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், நாய் கடித்தால் 2 ஊசி தான் போட வேண்டும் என்று கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை, எனது மகளுக்கு சளி பிரச்சனை தான் என்று கூறியுள்ளார். அதற்கு செவிலியர் மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக சிறுமியின் தந்தை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பான செய்தி வெளியானது.

    இந்நிலையில், சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    அலட்சியமாக ஊசி செலுத்திய செவிலியர் கண்ணகியை பணியிடை நீக்கம் செய்து அரசு மருத்துவமனை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    • போலீசார் சாகர் கவாச் என்ற பேரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
    • போலீசார் 7 பேர் மாறுவேடத்தில் தீவிரவாதிகள் போல் வந்தனர்.

    கடலூர்:

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகள் கடல்வழியாக மும்பையில் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவுவதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் போலீசார் சாகர் கவாச் என்ற பேரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஆபரேஷன் சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது.

    கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் போலீசார் கடலோர பகுதிகளில் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் துறைமுகத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கடல் பகுதிக்கு விசை படகில் மத்திய, மாநில அதிரடி படையை சேர்ந்த கமாண்டோ போலீசார் 7 பேர் மாறுவேடத்தில் தீவிரவாதிகள் போல் வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் அவர்கள், கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் வெடிகுண்டு வைப்பதற்காக வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், அவர்களை துறைமுகம் பகுதிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த போலி வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • கோடை விழா நாளை 30-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ள வேண்டும் என மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினார்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நெய்தல் கொடை விழா நாளை 30-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரங்குகள் அமைப்பு, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை தேவையான குடிநீர், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பொதுமக்கள் பாதிக்காத வகையிலும், கோடை விழாவை குடும்பத்துடன் வந்து கண்டுக்களிக்க அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ள வேண்டும் என மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினார்.

    அப்போது மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி , மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்தி, மாநகர துணை செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அகஸ்டின் பிரபாகரன், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா , சங்கீதா, கவுன்சிலர்கள் ஆராமுது , சுபாஷ்ணி ராஜா, பார்வதி, சுதா, செந்தில்குமாரி, சசிகலா ஜெயசீலன், பகுதி துணை செயலாளர் லெனின், கார் வெங்கடேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • வீட்டுக்குள் புகுந்து சரவணனை ஆயுதங்களுடன் கடுமை யாக தாக்கியுள்ளனர்.
    • வெட்டு காயங்கள் அடைந்த சரவணன் அலறல் சத்தம் கேட்டுஅக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.புடையூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அக்னி திருவிழா முடிந்து 20 நாட்களுக்கு மேல் ஆகிறது.இந்நிலையில் கோவில் நிகழ்ச்சிக்காக அப் பகுதியில் பேனர் வைத்துள்ளனர். இப்பொழு வேறு ஒரு நிகழ்ச்சிக்காக பேனர் வைப்பதற்காக ஒருவர் பேனரை கழற்சி அதே பகுதியில் நடுத்தெருவில் வசிக்கும் பாஸ்கர் மகன் சரவணனிடம் (19,) கொடுத்துள்ளார். அதை கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் பேனரை ஏன் கிழித்து இங்கு வைத்துள்ளாய் எனக்கூறி வீட்டுக்குள் புகுந்து சரவணனை ஆயுதங்களுடன் கடுமை யாக தாக்கியுள்ளனர்.

    இந்த தாக்குதலில் தலைப்பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் அடைந்த சரவணன் அலறல் சத்தம் கேட்டுஅக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டு ள்ளார். இந்த தாக்குதல் குறித்து ராமநத்தம் போலீ சார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிராமத்தில் வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    • சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் எந்த பகுதியை சேர்ந்தவர், அவர் கொலை செய்யப்பட்டாரா?

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் கிராமம் கீழ்பாதியில் வயல்வெளி பகுதியில் உள்ள வீரனார் கோவில் பின்புறம் உள்ள மரத்தில் 35 வயது மதிக்கத் தக்க வாலிபர் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்துள்ளார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் பொதுமக்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் மரத்தில் கயிற்றில் சடலமாக தொங்கிய வாலி பரின் உடலினை மீட்டு பிரேத பரிசோத னைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் எந்த பகுதியை சேர்ந்தவர், அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து கருவேப்பிலங் குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடலூர் முதுநகரில் ஜீம்அ மஸ்ஜித் திடலில் ஏராளமான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழிலில் ஈடுபட்டனர்.
    • ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்து ஏழைகளுக்கு குர்பானி வழங்கினார்கள்.

    கடலூர்:

    இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை நெல்லிக்குப்பம் பகுதியில் கொண்டாடப்பட்டது. நெல்லிக்குப்பத்தில் இன்று காலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து ஊர்வலமாக நகரின் முக்கிய சாலை வழியாக கொத்பா பள்ளிவாசலுக்குச் சென்றனர். அங்கு சிறப்பு தொழுகை நடந்தது. பிறகு ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக ஏழைகளுக்கு இறைச்சி, மளிகைப் பொருட்கள் போன்றவற்றை குர்பானியாக வழங்கினர். இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதி ரிப்புலியூர், செம்மண்டலம், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. மேலும் கடலூர் முதுநகரில் ஜீம்அ மஸ்ஜித் திடலில் ஏராளமான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழிலில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்து ஏழைகளுக்கு குர்பானி வழங்கினார்கள்.

    பண்ருட்டிகாந்தி ரோட்டில்உள்ளபழமை வாய்ந்த முகமது ஷா அவுலியா தர்கா வில்இருந்துஊர்வலமாக வந்துபண்ருட்டி -கடலூர் சாலையில் உள்ள ஈத்காமைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட பின்னர், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பக்ரீத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்குரமேஷ் எம்.பி. , வேல்முருகன் எம்.எல்.ஏ. ,சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன்,அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்,முன்னாள்எம்.எல்.ஏ.க்கள் சொரத்தூர்ராஜேந்திரன்,சத்யாபன்னீர்செல்வம்,சிவக்கொழுந்து,முன்னாள் நகர் மன்ற  தலைவர்கள் பஞ்சவர்ணம், பன்னீர்செல்வம், சென்னை  ஜேப்பியார்ஸ்டீல்ஸ் அதிபர் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர்வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மசூதி பள்ளிவாசல்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சு பிரவசம் பார்த்ததால் குழந்தை இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு வடக்குபாளையம் பகுதியை சேர்ந்த கோபிநாதன் மனைவி சுபாஷிணி (வயது 23) தனது 2-வது பிரசவத்திற்காக சென்றார். அப்போது அங்கு டாக்டர் இல்லை. நர்சும், உதவியாளர் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சுபாசிணிக்கு பிரசவ வலி அதிகரித்தது. உடனே அங்கிருந்த நர்சு சுபாஷிணிக்கு பிரசவம் பார்த்தார். அப்போது அழகான ஆண் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் சுபாஷிணியை உடனடியாக மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கும், இறந்த ஆண் குழந்தையை பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர்.

    தற்போது சுபாஷிணிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து குழந்தையின் தந்தை கோபிநாதன் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சுபாஷிணியின் குடும்பத்தினர் குழந்தையின் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். பிரவசத்தின் போது குழந்தை இறந்து பிறந்த சம்பவம் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சதீஸ்குமார் மது குடித்து விட்டு தனது வீட்டிற்கு வந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் சேர்ந்தனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மணிமேகலை பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இவர்கள் வேலை நிமித்தமாக பண்ருட்டி அருகே படைவீட்டு அம்மன் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இதனையடுத்து சதீஸ்குமாருக்கு சமீபகாலமாக தீரத வயிறு வலி இருந்து வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஸ்குமார் மது குடித்து விட்டு தனது வீட்டிற்று வந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதீஸ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில் தீட்சிதர்கள் சிலர் கார் வண்ணனை நெட்டி தள்ளி தாக்கி உள்ளனர்.
    • கார் வண்ணன் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்து இருந்தார்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரை அடுத்துள்ள சிவபுரியை சேர்ந்தவர் கார் வண்ணன். சிவ பக்தர்.

    இவர் கடந்த 21-ந் தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள 21 படிக்கட்டு அருகே சென்று கொண்டிருந்த போது கோவில் தீட்சிதர்களுக்கும் கார்வண்ணனுக்கும் இடைய வாக்குவாதம் ஏற்பட்டது.

    கோவில் தீட்சிதர்கள் சிலர் கார் வண்ணனை நெட்டி தள்ளி தாக்கி உள்ளனர். இது குறித்து கார் வண்ணன் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்து இருந்தார்.

    இந்த நிலையில் சிதம்பரம் பஸ் நிலையம் மற்றும் நகர் முழுவதும் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

    அதில் சிவபுரி பகுதியை சேர்ந்த பக்தர் கார் வண்ணன் சாமி தரிசனம் செய்ய சென்றபோது தாக்கிய தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனால் சிதம்பரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு சளிக்கு ஊசி போடுவதற்கு பதிலாக நாய் கடிக்கான ஊசி போட்ட செவிலியரால் பரபரப்பு ஏற்பட்டது.
    • மகளுக்கு அலட்சியமாக சிகிச்சை அளித்த செவிலியர், பணியில் இருந்த டாக்டர், கண்காணிப்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் அருகே கோதண்டராமாபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் கருணாகரன். இவர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    என்னுடைய மூத்த மகள் சாதனாவுக்கு (வயது 13) உடல்நிலை சரியில்லை. அவரை சிகிச்சைக்காக நேற்று முன்தினம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தேன். அங்கு எனது மகளை பரிசோதனை செய்த டாக்டரிடம், எனது மகளுக்கு சளி பிரச்சனை இருப்பதாக தெரிவித்தேன். இதையடுத்து எனது மகளை பரிசோதனை செய்த டாக்டர், அவருக்கு ஊசி போடவும், மாத்திரையும் எழுதி சீட்டு கொடுத்தார்.

    அந்த சீட்டை பெற்ற நான், மாத்திரை வாங்கிக்கொண்டு ஊசி போடும் இடத்திற்கு வந்தேன். அங்கிருந்த செவிலியர் என்னிடம் சீட்டை வாங்கிக் கூட பார்க்காமல், எனது மகளுக்கு 2 ஊசி போட்டார். அப்போது நான் எதற்காக 2 ஊசி போடுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், நாய் கடித்தால் 2 ஊசி தான் போட வேண்டும் என்று கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான், எனது மகளுக்கு சளி பிரச்சினை தான் என்றேன். அதற்கு அவர் மலுப்பலாக பதில் அளித்தார்.

    இதற்கிடையில் எனது மகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. உடன் அவரை உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் பிரிவில் சேர்த்து உள்ளேன். ஆகவே எனது மகளுக்கு அலட்சியமாக சிகிச்சை அளித்த செவிலியர், பணியில் இருந்த டாக்டர், கண்காணிப்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • கடந்த ஆண்டு வீராணம் ஏரி 7 முறை நிரம்பியது.
    • இந்த ஆண்டு கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அது கீழணையில் தேக்கப்பட்டு வந்தது.

    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. கொள்ளிடம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருகிறது.

    இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.5 அடியாகும். ஏரி மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இங்கிருந்து சென்னைக்கு புதிய வீராணம் திட்டத்தில் குடிநீர் அனுப்பப்படுகிறது.

    கடந்த ஆண்டு வீராணம் ஏரி 7 முறை நிரம்பியது. இந்த ஆண்டு கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அது கீழணையில் தேக்கப்பட்டு வந்தது.

    கீழணையின் மொத்த கொள்ளளவான 9 அடியில் 4 அடி தேக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 24-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வீராணம் ஏரியை வந்தடைந்தது.

    வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் ஏரியில் தற்போது 94 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

    இதனால் சென்னைக்கு கூடுதலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 56 கன அடி வீதம் அனுப்பப்பட்டு வருகிறது.

    ×