என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கடல் கடந்து காதல்- நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர்
    X

    பாலமுருகன், சிவானந்தினி திருமணம் நடைபெற்ற காட்சி.

    கடல் கடந்து காதல்- நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர்

    • குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே நார்வேவில் வந்து குடியேறிவிட்டனர்.
    • தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டது இங்கு உள்ளவர்களை ஆச்சர்யம் அடைய செய்தது.

    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். பி.எச்.டி. பட்டதாரியான இவர் நார்வே நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் நார்வே போர்கன் பகுதியை சேர்ந்த சிவானந்தினி என்ற பெண்ணும் பணிபுரிந்து வருகிறார்.

    சிவானந்தினியின் குடும்பத்தினர் இலங்கை தமிழர். இவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே நார்வேவில் வந்து குடியேறிவிட்டனர். அதனைத் தொடர்ந்து சிவானந்தினியும் அந்த புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. காதல் திருமணம் செய்து கொண்டாலும் குடும்பத்தினர் சம்மதத்துடன் செய்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் இரு குடும்பத்தினரும் பேசி அதில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் கடலூர் மஞ்சக் குப்பத்தில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

    தமிழ்முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமகன் குடும்பத்தினரும் நார்வேவில் இருந்து வந்திருந்த மணமகள் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக கலந்து கொண்டனர். அதன் பிறகு இந்து கோவில்களில் தமிழ் முறைப்படி அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    அப்பொழுது நார்வே நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் தமிழ் கற்றுக் கொண்டதாகவும் தமிழ் கலாச்சாரம் மிகவும் பிடிக்கும் என்பதால் தமிழரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இருந்த நிலையில் தற்போது தன்னுடைய கனவு நினைவாகியுள்ளதாக மணமகள் தெரிவித்தார்.

    நார்வே சென்றபோது தனக்கு காதல் ஏற்பட்டதாகவும் ஆனால் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதால் குடும்ப சம்மதத்துடன் இந்த திருமணம் நிறைவேறி உள்ளதாக மண மகன் பாலமுருகன் தெரிவித்தார். இலங்கையில் இருந்து நார்வே சென்று குடியேறிய இலங்கை தமிழர் குடும்பத்தினர் தற்பொழுது கடலூரைச் சேர்ந்த மண மகனை கடலூருக்கு வந்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டது இங்கு உள்ளவர்களை ஆச்சர்யம் அடைய செய்தது.

    Next Story
    ×