search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் நெய்தல் கோடை விழா: அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் தொடங்கி வைத்தனர்
    X

    கடலூரில் நடைபெற்ற நெய்தல் கோடை விழாவை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். அருகில் கலெக்டர் அருண் தம்புராஜ், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா உள்ளனர்.

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் நெய்தல் கோடை விழா: அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் தொடங்கி வைத்தனர்

    • அரசு பல்துறை பணி விளக்க கண்காட்சி தொடக்க விழா தேவனாம் பட்டினம் சில்வர் பீச்சில் நடைபெற்றது.
    • இந்தாண்டு 30 கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெய்தல் கோடை விழா மற்றும் அரசு பல்துறை பணி விளக்க கண்காட்சி தொடக்க விழா தேவனாம் பட்டினம் சில்வர் பீச்சில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் மதுபாலன் வரவேற்றார். விழாவில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெய்தல் கோடை விழாவை தொடங்கி வைத்து மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக வேளாண்மை துறைஅமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் பேசுகையில், கடலுார் சில்வர் பீச்சில் அடுத்தாண்டு நடக்கும் விழாவில், பல திட்டங்கள் நிறைவேற்றப்படும். தோட்டக்கலைத் துறை மூலமாக நெய்தல் பூங்கா அமைக்க திட்ட அறிக்கை தருமாறு கலெக்டரிடம் கேட்கப்பட்டுள்ளது.

    நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக நடைபாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் நடக்கும் ஹேப்பி ஸ்டீரிட் விழாவைப் போன்று, கடலுாரில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்' என்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், தமிழக அரசின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற கோடை விழா நடத்தப்படுகிறது. கடலுார் மாவட்டத்திற்கு கடந்தாண்டு 19 லட்சத்து 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். கடந்த மாதம் வரை 9 லட்சத்து 25 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர். இந்தாண்டு 25 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்தாண்டு 22 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இந்தாண்டு 30 கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிதம்பரத்தில் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    விழாவில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது ஜெகதீஸ்வரன், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் விஜய் ஆனந்த், மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் விஜய சுந்தரம், பகுதி செயலாளர்கள் சலீம், நடராஜன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மாநகர தி.மு.க. துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, அகஸ்டின் பிரபாகரன், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் கிரேசி, ஆராமுது, ஹேமலதா சுந்தரமூர்த்தி, சாய்ந்துனிஷா சலீம், பார்வதி, சசிகலா ஜெயசீலன், விஜயலட்சுமி செந்தில், சுபாஷினி ராஜா, சுதா ரங்கநாதன், பகுதி துணை செயலாளர்கள் ஜெயசீலன், கார் வெங்கடேசன், லெனின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×