என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாடுமுழுவதும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.
    • ராகுல்தான் பிரதமர் என்று துணிந்து சொன்னார்.

    கோவையில் நடைபெற்ற தி.மு.க. கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசும் போது, "பா.ஜனதாவின் இலக்கு செந்தில் பாலாஜி அல்ல. மு.க.ஸ்டாலின்தான். அவருக்கு நெருக்கடி கொடுக்கத்தான் மோடியும், அமித்ஷாவும் கணக்கு போட்டுள்ளார்கள்.

    நாடுமுழுவதும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். அதை தடுக்க முயற்சிக்கிறார்கள். ராகுல்தான் பிரதமர் என்று துணிந்து சொன்னார். இன்றும் அதே நிலைப்பாட்டில் இருக்கிறார். காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்கவும் காங்கிரசை பலவீனப்படுத்தும் முயற்சியிலும், உடைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம்தான் விசாரணை அமைப்புகள் என்று கூறியுள்ளார்.

    • வனத்துறை ஊழியர்கள் குட்டி யானைக்கு காய்கறி, புற்கள் உள்ளிட்ட சத்தான உணவுப்பொருட்களை வழங்கினர்.
    • கிருஷ்ணவனம் என்ற பகுதியில் வனத்துறை தற்காலிக குடில் அமைத்து உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது அட்டப்பாடி பாலூர் குடியிருப்பு. இது கோவை மாவட்டத்தை ஒட்டிய பகுதியாகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு குட்டி யானை ஒன்று அந்த பகுதிக்கு வந்தது. அந்த யானை மிகவும் சோர்வாக காணப்பட்டது. இதுகுறித்து கிராமத்தினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் அகளி வனச்சரக அதிகாரி சுமேஷ் தலைமையில் ஊழியர்கள், அட்டப்பாடிக்கு விரைந்து வந்து குட்டி யானையை மீட்டனர்.

    பாலக்காடு வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் தண்ணீர் தேடி குட்டிகளுடன் கிராமப் பகுதிகளுக்கு சென்று திரும்புவது வழக்கம். அப்படி வந்த கூட்டத்தில் இந்த குட்டி யானை வழிதவறி பாலுார் குடியிருப்பில் தஞ்சம் புகுந்து இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே வனத்துறை ஊழியர்கள் குட்டி யானைக்கு காய்கறி, புற்கள் உள்ளிட்ட சத்தான உணவுப்பொருட்களை வழங்கினர். இதனை ருசித்து சாப்பிட்ட குட்டி யானை அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது.

    பாலூர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த குட்டி யானையை தேடி, தாய் யானை மீண்டும் வரலாம் என்று வனத்துறை அதிகாரிகள் கருதினர். எனவே அந்த குட்டி யானை மீண்டும் அடர்ந்த காட்டுப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அது நேற்று காலை திரும்பவும் பாலூருக்கு வந்து சேர்ந்தது. இது வனத்துறை அதிகாரிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனவே குட்டி யானைக்கு மீண்டும் உணவுகள் வழங்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர் டேவிட் வினோத் தலை மையிலான டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்தனர். இதில் அந்த குட்டி யானை ஆரோக்கியத்துடன் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த குட்டி யானை அட்டப்பாடி காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கிருஷ்ணவனம் என்ற பகுதியில் வனத்துறை தற்காலிக குடில் அமைத்து உள்ளது. அங்கு குட்டி யானைக்கு உணவுகள் தரப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், அட்டப்பாடி வனப்பகுதியில் போதிய மழை இல்லை. எனவே அங்கு உள்ள நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. எனவே யானைகள் கூட்டமாக காட்டோரத்தில் இருக்கும் கிராமப்பகு திகளுக்கு வந்து அங்கு உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் குடித்து செல்வது வழக்கம். அப்படி வந்த யானைகள் கூட்டத்தில் இருந்து தான், அந்த குட்டி யானை வழிதவறி பாலூருக்கு வந்து இருக்க வேண்டும். எனவே அட்டப்பாடி கிருஷ்ணவனம் பகுதியில் குட்டிக்கு தற்காலிக குடில் ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது. இது எளிதில் பிரியக்கூடியது. எனவே யானைக்கூட்டம் மீண்டும் திரும்பி வந்து குட்டியை எளிதாக மீட்டு சென்று விடும் என்று நம்புகிறோம். தாய் யானை மீட்க வரவில்லை என்றால் வனத்துறையே அந்த குட்டி யானையை வளர்க்கும் என்று தெரிவித்து உள்ளனர்.

    • எதிர்பாராத விதமாக கியாஸ் கசிந்து அறை முழுவதும் பரவியது.
    • தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து 5 தொழிலாளர்களையும் மீட்டனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே பிள்ளையப்பம் பாளையத்தில், தனியார் செயின் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இந்த தொழிற்சாலையில் உள்ளூர் மக்கள் மற்றும் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் வேலை செய்து வருகிறார்கள்.

    தொழிற்சாலையில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு என எதிர்புறத்தில் வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கிருந்து பணிக்கு சென்று வருகின்றனர்.

    இந்த தொழிற்சாலையில் உள்ள அனுராக் சிங் (வயது28), தன்ஜெய் சிங் (33), தரம்வீர் (40), வீரேந்திரஜா (37), மகாதேவ் சிங் (23) ஆகிய 5 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

    இவர்கள் தொழிற்சாலையின் எதிர்புறம் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். கடந்த 11-ந் தேதி இரவு அறையில் 5 தொழிலாளர்களும் சமையல் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக கியாஸ் கசிந்து அறை முழுவதும் பரவியது. சற்று நேரத்தில் தீயும் பற்றி எரிய தொடங்கியது. இதில் இவர்கள் 5 பேரும் தீயில் சிக்கி கொண்டு அலறினர்.

    இவர்களது சத்தம் கேட்டு அருகே வசிக்கும் தொழிலாளர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது அறைக்குள் 5 பேரும் தீயில் உடல் கருகி சத்தம் போட்டபடி நின்றனர்.

    இதுகுறித்து அன்னூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து 5 தொழிலாளர்களையும் மீட்டனர்.

    பின்னர் அவர்களில் 4 பேர் கோவில்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், ஒருவர் கோவை தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த அனுராக் சிங் மற்றும் துப்ராவை சேர்ந்த தன்ஜெய்சிங் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

    மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெருப்பாற்றில் பயணிப்பவர் மு.க.ஸ்டாலின்.
    • மிரட்டலுக்கு பணியாத மாநிலம் தமிழ்நாடு.

    கோவை :

    அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கோவை சிவானந்தாகாலனியில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமை தாங்கினார்.

    பின்னர் அவர் பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:-

    அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதை, குடும்பத்தின் இழப்பாக கருதி கூட்டணி கட்சி தலைவர்கள் இங்கு கூடி உள்ளனர். அதிகார மமதையில் செயல்படும் பா.ஜ.க. ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும்.

    அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு பற்றி அவரிடம் தெரிவிக்கவில்லை. இரவு 12 மணி வரைக்கும் வீட்டில் எதுவும் எடுக்கவில்லை. அனுப்பாத சம்மனுக்கு கையெழுத்து போட மிரட்டி உள்ளனர். அதை பற்றி கேட்டபோது கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து நீதிமன்றத்தில் விரைவில் தெரிவிப்போம்.

    நெஞ்சுவலி வந்தவரை நடிக்கிறார் என கூறி அதிகாரிகள் தாக்கி உள்ளனர். அவருக்கு இதயத்தில் 3 அடைப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அவரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    மத்திய பா.ஜ.க. ஆட்சி இன்னும் 6 மாதமோ, ஒரு வருடமோ தான். அதற்கு பின்பு வரும், புதிய ஆட்சிக்கு இவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். மத்திய பா.ஜனதாவின் நடவடிக்கை தொடர்பாக விசாரணை கமிஷன் அமைப்போம். அதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.

    டெல்லி துணை முதல்-மந்திரி மணீஸ்சிசோடியா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, கர்நாடக துணை முதல்- மந்திரியாக உள்ள டி.கே.சிவக்குமார் மற்றும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் உறவினர் உள்பட பலரிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளது.

    அந்த வகையில் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் மோசமான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. மிரட்டலுக்கு பணியாத மாநிலம் தமிழ்நாடு. நெருப்பாற்றில் பயணிப்பவர் மு.க.ஸ்டாலின். அண்ணாமலையை இப்போது தான் நீதிமன்றத்திற்கு வர வைத்திருக்கிறோம். கொங்கு மண்டலத்தில் 11 நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றியை கொண்டு வரும் திறமை கொண்டவர் செந்தில் பாலாஜி. அதை தடுக்கத்தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். செந்தில் பாலாஜி தலைமையில், 11 பாராளுமன்ற தொகுதியை வெற்றி பெற செய்வார். கொங்கு மண்டலம் கோபாலபுரத்தை நோக்கி பயணிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்

    • முதலில் ஆடிய கோவை அணி 181 ரன்களை குவித்தது.
    • தொடர்ந்து ஆடிய நெல்லை அணி 182 ரன்களை எடுத்து வென்றது.

    கோவை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 52 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ரன்கள் விளாசினார். சுரேஷ் குமார் 33 ரன்கள் சேர்த்தனர்.

    நெல்லை அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் டக் அவுட்டானார்.

    2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரீ நிரஞ்சன், அஜிதேஷ் குருசாமி 76 ரன்கள் சேர்த்தனர். ஸ்ரீ நிரஞ்சன் 25 ரன்னிலும், ரித்திக் ஈஸ்வரன் 3 ரன்னிலும், சோனு யாதவ் 20 ரன்னிலும், அருண்குமார் 3 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அஜிதேஷ் குருசாமி தனி ஆளாகப் போராடி சதமடித்தார். அவர் 112 ரன்னில் ரன் அவுட்டானார்.

    இறுதியில், நெல்லை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது.

    • சாய் சுதர்சன் 52 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ரன்கள் விளாசினார்.
    • நெல்லை அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    கோவை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கோவையில் நடைபெறும் ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

    அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 52 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ரன்கள் விளாசினார். சுரேஷ் குமார் 33 ரன்கள், ராம் அரவிந்த் 18 ரன்கள் சேர்த்தனர். நெல்லை அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது. 

    • 5361 இடங்களை நிரப்புவதற்கு இணையதள விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
    • விழுப்புரத்தை சேர்ந்த திவ்யா என்பவர் முதலிடம் பிடித்தார்

    வடவள்ளி,

    கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழ–கத்திற்கும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கும், ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    5361 இடங்களை நிரப்புவதற்கு இணையதள விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இளம் அறிவியல் மாணவர்கள் சேர்க்கைக்கு மொத்தம் 41,434 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். அதில் 36612 பேர் தர வரிசைக்கு தகுதி பெற்றனர். அதில் பெண்கள் 21, 384, ஆண் 12,333 பேர் விண்ணப்பித்தனர்.

    அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7½ சதவீத இட ஒதுக்கீட்டில் 10,887 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசாங்க பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் இ.எம்.ஐ எண்கள் தமிழ்நாடு அரசாங்கத்தின் சரிபார்கக்ப்ப்டு உள்ளது.

    தமிழ் வழியில் பயில 9997 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்கள் இட ஒதுக்கீட்டில் 309 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கு மொத்தம் 5 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு இந்த கல்வியாண்டில் 128 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

    சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 790 விண்ண ப்பங்கள் பெறப்பட்டு அவர்கள் 20 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். தொழில்முறை கல்வி பயின்ற மாணவர்களுக்கு 5 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டு 242 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

    இந்த நிலையில் இன்று கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் கீதாலட்சுமி இளம் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.

    இதில், முதல் இடத்தை விழுப்புரத்தை சேர்ந்த திவ்யாவும், 2-ம் இடத்தை மதுரையை சேர்ந்த ஸ்ரீராம், 3-ம் இடத்தை தென்காசியை சேர்ந்த முத்துலெட்சுமி ஆகியோர் பிடித்துள்ளனர்.

    முன்னாள் ராணுவ வீரர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற சிறப்பு இட ஒதுக்கீடுகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இந்த மாதம் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது.

    தகுதியானவர்கள் இந்த மாத கடைசி வாரத்தில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். இணைய வழி கலந்தாய்வு மற்றும் பொது இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரி பார்ப்பு ஜூலை முதல் வாரத்தில் இருந்து துவங்க உள்ளது.

    • சிறுவாணி அணையின் ஒட்டுமொத்த உயரம் 50 அடி ஆகும்.
    • 15 நாளுக்கு மட்டுமே அணையில் நீர் இருப்பு உள்ளது

    கோவை,

    கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணைக்கட்டு, மாநகருக்கான குடிநீர்ஆதாரமாக உள்ளது. இந்த அணையின் ஒட்டுமொத்த உயரம் 50 அடி ஆகும். இதில் 45 அடிகள் வரை தண்ணீர் தேக்க இயலும்.

    சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் கோவை கூட்டுகுடிநீர் திட்டத்தின்கீழ் உறைகிணறு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு 4 வால்வுகள் பொருத்தி தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. அதன்பிறகு இந்த தண்ணீர் பெரிய குழாய்கள் மூலம், கோவைக்கு கொண்டு வரப்பட்டு, மாநகரம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெரிய அளவில் மழை இல்லை. எனவே சிறுவாணி அணை படிப்படியாக வறண்டு வருகிறது. அங்கு தற்போது அரை அடி என்ற நிலையில்தான் தண்ணீர் உள்ளது. இதன்காரணமாக அணைக்கட்டின் பெரும்பாலான பகுதிகள், தண்ணீரின்றி பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது.

    சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் கோவை மாவட்டத்துக்கான கூட்டுகுடிநீர்திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டு உள்ள உறைகிணற்றில் 4 வால்வுகள் உண்டு. இதில் 3 தண்ணீர் மட்டத்துக்கு மேல் தெரிகிறது. எனவே மீதம் உள்ள ஒரு வால்வு மூலம் மட்டுமே தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகிறது. இது 15 நாட்கள் வரை தாங்கும்.

    சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் கனமழை பெய்யவில்லை என்றால் ஒட்டுமொத்த அணையும் வறண்டு, கோவையில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து கோவை மாநகர குடிநீர் அதிகாரிகள் கூறுகையில், சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் பெரிய அளவில் மழை இல்லை. எனவே அங்கு தண்ணீர் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நிலைமை இப்படியே போனால் 15 நாட்களுக்கு பிறகு உறைகிணற்றில் தண்ணீர் இருக்காது. கேரளா மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. எனவே சிறுவாணி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். அதுவும்தவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. அங்கு இன்னும் ஒருசில நாட்களில் பருவமழை தொடங்கி விடும். எனவே சிறுவாணி அணையில் நீர்மட்டம் மேலும் அதிகரித்து, குடிதண்ணீர் பிரச்சினை நீங்க வாய்ப்பு உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    • கோவையில் 3 பகுதிகளில் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
    • தெருநாய்கள் தொடர்பாக செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

    கோவை,

    கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு சுற்றி திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக மாநகரின் பல்வேறு பகுதிகளில் கருத்தடை ஆபரேஷன் மற்றும் வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இவற்றை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் இன்று காலை தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் பேசுகையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் ஆதரவற்ற தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணி இன்று தொடங்கி, வருகிற 30-ந்தேதி வரை நடக்க உள்ளது.

    கோவையில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணிகளில் பிராணிமித்ரன், ஹியூமன் அனிமல் சொசைட்டி ஆகிய 2 தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

    கோவை கிழக்கு, தெற்கு, மத்திய மண்டலங்களில் பிராணி மித்ரன் அமைப்பும், மேற்கு, வடக்கு மண்டலங்களில் ஹியூமன் அனிமல் சொசைட்டி அமைப்பும் தெருநாய்களை கட்டுப்படுத்தி வருகிறது. இதற்காக மேற்கண்ட 2 அமைப்புகளுக்கும் நாய் பிடிக்கும் வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன. கோவை சீரநாயக்கன்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் ஆகிய பகுதிகளில் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    அங்கு தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை, வெறிநோய் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. எனவே கோவை மாநகரில் வசிக்கும் பொதுமக்கள் அந்தந்த பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்கள் தொடர்பாக 9944434706, 9366127215 ஆகிய செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இதுதவிர மாநகராட்சி மண்டல உதவி கமிஷனர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளிடமும் புகார் தரலாம். கோவை மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இந்த விஷயத்தில் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    • கள்ளப்பாளையம் அரசு பள்ளி முன்பு வந்த போது, சங்கரை, 3 பேர் வழிமறித்தனர்.
    • சங்கர் கொடுத்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    கோவை,

    கோவை வெள்ளலூர் ராமசாமி கோனார் தோட்டத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 32). இவர் தற்போது பாப்பம்பட்டி, இடையர்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இவரது மகன் பட்டணத்தில் உள்ள பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறார். சம்பவத்தன்று, சங்கர் பள்ளியில் இருந்து தனது மகனை அழைக்க பள்ளிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தனது மகனுடன் வீட்டிற்கு புறப்பட்டார்.

    கள்ளப்பாளையம் அரசு பள்ளி முன்பு வந்த போது, சங்கரை, 3 பேர் வழிமறித்தனர். அவர்கள், சங்கரிடம் ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறாய் என கேட்டனர். அதற்கு அவர் நான் மெதுவாக தானே செல்கிறேன் என தெரிவித்தார்.ஆனால் அந்த நபர்கள் அதனை கேட்காமல் எங்களையே எதிர்த்து பேசுவியா என கேட்டு சங்கரை தாக்கினர். இதை அந்த வழியாக வந்த சங்கரின் தந்தை மற்றும் அவரது மாமா பார்த்தனர். அவர்கள் ஓடி வந்து, தடுக்க முயன்றனர்.

    அப்போது அந்த மர்மநபர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு, அவர்களது வாகனங்களை சேதப்படுத்தினர். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சங்கரை தாக்கியது, கள்ளப்பாளையம் வெற்றிலைக்கடை வீதியை சேர்ந்த பொன் கார்த்திகேயன், பொன்னுசாமி மற்றும் ரமேஷ்பாபு என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பொன்கார்த்தி கேயன், பொன்னுசாமி ஆகியோரை கைது செய்தனர். ரமேஷ்பாபு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • 200 மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலவசமாக நீட் தேர்வு பயிற்சிகள் தரப்பட்டன.
    • பிரசன்னதேவி என்பவர், நீட் தேர்வில் 720-க்கு 396 மதிப்பெண்கள் பெற்று அபார சாதனை படைத்து உள்ளார்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மருத்துவம் படிக்க விரும்பும் 200 மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலவசமாக நீட் தேர்வு பயிற்சிகள் தரப்பட்டன. அதன்பிறகு அவர்கள் தேர்வு எழுதினர். இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாயின.

    இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 78 பேர் மருத்துவ படிப்புக்காக இடஒதுக்கீட்டின்கீழ் தகுதி பெற்று உள்ளனர். அதிலும் குறிப்பாக கோவை மாவட்டம் ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பிரசன்னதேவி என்பவர், நீட் தேர்வில் 720-க்கு 396 மதிப்பெண்கள் பெற்று அபார சாதனை படைத்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் எனக்கு டாக்டராக வேண்டும் என்று ஆசை இதற்காக இரவும் பகலும் கஷ்டப்பட்டு படித்தேன். எனக்கு கடந்தாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 550 மதிப்பெண்கள் கிடைத்தது.

    ஆனாலும் நீட் தேர்வில் 155 மதிப்பெண்களே கிடைத்தன. எனவே நடப்பாண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதுவது என்று முடிவு செய்தேன். இதற்காக கஷ்டப்பட்டு படித்து பரீட்சை எழுதினேன்.

    இதில் எனக்கு 396 மதிப்பெண்கள் கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது. எனது தந்தை இறந்து விட்டார். தாயார் வாணீஷ்வரி, ஈஷா மையத்தில் தூய்மைப்பணியாளராக வேலை பார்க்கிறார். எதிர்காலத்தில் டாக்டராகி ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

    கோவை வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பொன்மணி கிருஷ்ணன் என்பவரும் நீட் தேர்வில் 720-க்கு 390 மதிப்பெண்கள் பெற்று ஆச்சரியப்படுத்தி உள்ளார். இவரது பெற்றோர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    • கோவை வனச்சரக கோட்டத்துக்கு கடந்த ஆண்டு சிப்பிப்பாறை இனத்தை சேர்ந்த வளவன் என்ற வேட்டை நாய் வழங்கப்பட்டது.
    • சமூகவிரோதிகளுக்கு வளவனுடன் இனிமேல் பைரவாவும் சிம்மசொப்பனமாக இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை கோட்டத்தில் 670 சதுரஅடி பரப்பளவில் காட்டுப்பகுதிகள் உள்ளன. அங்கு உள்ள வனவிலங்குகள் மற்றும் அரிய தாவரங்களை பாதுகாக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை வனத்துறை கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 சரகங்கள் உள்ளன. அங்கு காட்டுக்குள் அத்துமீறி நுழையுவம் சமூகவிரோதிகள், வனவிலங்குகளை வேட்டையாடும் குற்றவாளிகளை சல்லடை போட்டு தேடும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அவர்களுக்கு உதவியாக வேட்டை நாய்களையும் பயன்படுத்துவது என்று தமிழகஅரசு முடிவு செய்தது.

    அதன்படி கோவை வனச்சரக கோட்டத்துக்கு கடந்த ஆண்டு சிப்பிப்பாறை இனத்தை சேர்ந்த வளவன் என்ற வேட்டை நாய் வழங்கப்பட்டது. அந்த நாய்க்கு போளுவாம்பட்டியில் பயிற்சி தரப்பட்டு வேட்டை தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை வனச்சரக கோட்டத்துக்கு மேலும் ஒரு வேட்டை நாய் வழங்கப்பட்டு உள்ளது. டாபர்மேன் வகையை சேர்ந்த இந்த நாய்க்கு பைரவா என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்த நாய்க்கு தற்போது போளுவாம்பட்டி வனச்சரகத்தில் தினமும் காலை, மாலை நேரங்களில் தீவிர பயிற்சிகள் தரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கோவை கோட்ட வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை வனச்சரக கோட்டத்தில் ஏற்கெனவே சிப்பிப்பாறை வகையை சேர்ந்த வளவன் என்ற வேட்டை நாய் பணியமர்த்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மேலும் ஒரு வேட்டை நாய் தரப்பட்டு உள்ளது. அதற்கு பைரவா என்று பெயர்சூட்டி உள்ளோம். இதற்கு போளுவம்பட்டி வனச்சரகத்தில் தினமும் காலை, மாலை நேரங்களில் பயிற்சி கொடுத்து வருகிறோம்.

    இதுதவிர வாரம் ஒருமுறை நீச்சல் பயிற்சி தரப்பட்டு வருகிறது. கோவை கோட்ட வனச்சரகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ள பைரவாவுக்கு மோப்பசக்தி உடன் பாய்ச்சல் திறனும் அதிகம். எனவே கோவை வனச்சரக கோட்டத்தில் அத்துமீறி நுழையும் சமூகவிரோதிகளுக்கு வளவனுடன் இனிமேல் பைரவாவும் சிம்மசொப்பனமாக இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    ×