என் மலர்tooltip icon

    சென்னை

    • நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது.
    • நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மருத்துவ குழு பரிந்துரையின் படி அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 48 மணி நேரத்தில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆஸ்பத்திரிக்கு சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, நல்லகண்ணுவுக்கு 2 நாட்கள் உடல் நிலை சீராக இருந்தது. நேற்று இரவு மீண்டும் வெண்டிலேட்டர் ( செயற்கை சுவாசம்) உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

    • 2008-ம் ஆண்டு பொருளாதார மந்தநிலையின் போதும், கொரோனா காலத்தின் போதும் தொழில்துறையினருக்கு வழங்கப்பட்டதைப் போல ஊக்குவிப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
    • தமிழ்நாட்டில் வேலை இழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு மாதம் குறைந்தது ரூ.5 ஆயிரம் உதவி வழங்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அறிவித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அதன் பாதகங்கள் அப்பட்டமாக தெரியவந்துள்ளன. பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு, பல லட்சம் பேருக்கு வேலையிழப்பு என அமெரிக்க வர்த்தகப் போரின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் நிலையில், அதன் தாக்கத்தை இயன்றவரை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.

    இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இந்த பாதிப்புகளின் தாக்கத்தை முழுமையாக தடுக்க முடியாது என்றாலும் கூட, இந்தியத் தொழில்துறையினரும், தொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2008-ம் ஆண்டு பொருளாதார மந்தநிலையின் போதும், கொரோனா காலத்தின் போதும் தொழில்துறையினருக்கு வழங்கப்பட்டதைப் போல ஊக்குவிப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். வங்கிகளுக்கு தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தவணைகள் நிலைமை சீரடையும் வரை நிறுத்தி வைப்பது, அவற்றுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது, நிலைமை சமாளிக்க அவசர கால கடன் வழங்குவது, வட்டி மானியத்தை அதிகரிப்பது, வரிச் சலுகைகளை உயர்த்துவது உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டில் வேலை இழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு மாதம் குறைந்தது ரூ.5 ஆயிரம் உதவி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு லிப்டில் 2 பெண்கள் வந்தனர்.
    • உரிய பராமரிப்பு இல்லாததால் லிப்டில் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    திருவொற்றியூர்:

    சென்னை, மூலக்கொத்தளம் ராமதாஸ் நகரில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. சுமார் 1,440 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டு பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு லிப்ட் வசதியும் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு லிப்டில் 2 பெண்கள் வந்தனர். திடீரென அந்த லிப்ட் பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால்அதிர்ச்சி அடைந்த பெண்கள் பயத்தில் கூச்சலிட்டு அலறினர்.

    சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் லிப்டின் கதவை நீண்ட நேரம் போராடி உடைத்தனர். பின்னர் லிப்டிடுக்குள் சிக்கி இருந்த 2 பெண்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். உரிய பராமரிப்பு இல்லாததால் லிப்டில் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து குடியிருப்பில் வசிக்கும் மக்கள் கூறும்போது, ஒரு அவசரத்திற்கு கூட இந்த லிப்டை பயன்படுத்த முடியவில்லை. இதனை சரியாக பராமரிப்பது இல்லை. அடிக்கடி இது போன்று நாங்கள் லிப்டில் சிக்கிய கொள்கிறோம். லிப்டில் செல்லும் போதெல்லாம் அச்சத்தோடு செல்ல வேண்டி உள்ளது.

    இதற்கிடையே லிப்ட்டில் சிக்கி பெண்களை அப்பகுதி மக்கள் கதவை உடைத்து மீட்கும் காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • தென் மாவட்டத்தில் கூமாப்பட்டி தனி ஐலேண்டு என தங்கப்பாண்டி என்பவர் பேசி வீடியோ ரீல்ஸ்களை வெளியிட்டு இருந்தார்.
    • திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் கூமாபட்டி. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கூமாப்பட்டி சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊருக்கு அருகில் பிளவக்கல் அணை உள்ளது. அழகான, இயற்கைச் சூழல் நிறைந்த கிராமம் தான் கூமாப்பட்டி. இந்த சிறு கிராமம் தான் தங்கப்பாண்டி என்பவரின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸால் படுபயங்கர ஃபேமஸ் ஆனது.

    ஏங்க.. ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க... சொர்க்க பூமிங்க.. தண்ணிய பாருங்க.. ஏங்க சர்பத் மாதிரி, பவண்டோ, செவன்-அப் மாதிரி இருக்குங்க.. தென் மாவட்டத்தில் கூமாப்பட்டி தனி ஐலேண்டு என தங்கப்பாண்டி என்பவர் பேசி வீடியோ ரீல்ஸ்களை வெளியிட்டு இருந்தார்.

    இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. இதையடுத்து கூமாப்பட்டிக்கு வெளியூரில் இருந்து இளைஞர்கள் படையெடுத்தனர்.

    கூமாப்பட்டி கிராமத்தை டிரெண்ட் ஆக்கிய இளைஞர் தங்கப்பாண்டி, பிளவக்கல் பெரியாறு அணையை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தது. ஆனால் பணி எதுவும் நடக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் பிளவக்கல் பெரியாறு அணையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

    அதனை தொடர்ந்து அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சுவர், நுழைவு வாயில், நடைபாதை, உடற்பயிற்சி கூடம், செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்படுகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    • ரெயில் நிலையத்தின் உட்பகுதியில் விசாலமான இடம் ஒதுக்கப்படுகிறது.
    • மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோக்கள் வசதியாக நிறுத்த பிரமாண்டமாக பார்க்கிங் உருவாகிறது.

    சென்னை:

    சென்னையின் பாரம்பரிய கட்டிடத்தின் அடையாளமாக விளங்கும் எழும்பூர் ரெயில் நிலையம் மறு சீரமைக்கப்படுகிறது. அதன் எழில்மிகு தோற்றம் மாறாமல் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்ய திட்டமிட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    எழும்பூர் ரெயில் நிலையத்துடன் மெட்ரோ ரெயில் நிலையம் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மாநகர பஸ் வசதி, கார், ஆட்டோ போன்றவை எளிதாக பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லக்கூடிய வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

    ரெயில் பயணிகளுக்கு தரமான உணவு குறைந்த விலையில் கிடைக்க ஓட்டல்கள், ஷாப்பிங் செய்ய வணிகப் பகுதி, கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த பல அடுக்கு பார்க்கிங் வசதி தயாராகிறது.

    ரெயில்கள் வருகை மற்றும் புறப்பாடுக்கான கட்டிடம், தரை தளம் மற்றும் 3 அடுக்கு கட்டிடம் கட்டப்படுகிறது. ரெயில்கள் வருகை மற்றும்புறப்பாடுக்கு தனித்தனி பிரத்யேக பகுதிகள் ஒதுக்கப்படுகிறது. விமான நிலையத்திற்கு பயணிகளுக்காக சிறப்பு வழியும் அமைக்கப்படுகிறது.

    ரெயில் நிலையத்தின் உட்பகுதியில் விசாலமான இடம் ஒதுக்கப்படுகிறது. காந்தி இர்வின் சாலையிலும் பூந்தமல்லி சாலையிலும் 5 அடுக்கு பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோக்கள் வசதியாக நிறுத்த பிரமாண்டமாக பார்க்கிங் உருவாகிறது.

    பயணிகள் நடந்து செல்வதற்கு உயரமான நடைபாதை அமைக்கப்படுகிறது. பிளாட்பாரங்களை கடக்கவும், சாலைக்கு செல்ல நடை மேம்பாலமும் அமைக்கப்படுகிறது. இது தவிர பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் எளிதாக செல்ல எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் வசதியும் புதிதாக நிறுவப்படுகிறது. ரெயில் நிலையத்தில் இருந்து எளிதாக வெளியேறி பஸ், ஆட்டோ, கார்களில் செல்லவும் அதே போல ரெயில் நிலையத்திற்கு வரும் வாகனங்கள் பயணிகளை இறக்கி செல்லவும் வசதி ஏற்படுத்தப்படுகிறது.

    இது தவிர புதிதாக பார்சல் அலுவலகம், ரெயில்வே மெயில் சர்வீஸ் அலுவலகம் பூந்தமல்லி சாலை பகுதியில் கட்டப்படுகிறது. துணை மின்நிலையம், புதிய ரெயில்வே குடியிருப்புகளின் தரம் உயர்த்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக லிப்ட் வசதி, எஸ்கலேட்டர், குளர்ச்சியான குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்றவை கட்டப்படுகிறது.

    எழும்பூர் ரெயில் நிலையத்தின் குடிநீர் தேவையை சமாளிக்க வடக்கு பகுதியில் பிரமாண்ட குடிநீர் தொட்டி "சம்ப்" தரைக்கு அடியில் கட்டப்படுகிறது. இங்கிருந்து ரெயில்களுக்கு குடிநீர் நிரப்பும் வசதியும் அளிக்கப்படுகிறது.

    • அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிவிதிப்பால் திருப்பூரில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • தமிழகத்தின் நலன் காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிவிதிப்பால் திருப்பூரில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஜவுளி வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட ரூ.3000 கோடி அளவிற்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தின் நலன் காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நமது தொழில்கள், தொழிலாளர்களை பாதுகாக்க உடனடி நிவாரண, கட்டமைப்பு சீர்திருத்தங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு மின்னஞ்சல் மூலமாக நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு மின்னஞ்சல் மூலமாக நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டனர்.

    நேப்பியர் பாலம் அருகே உள்ள கடலோர காவல் படை கிழக்கு மண்டல அலுவலகத்துக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் கோட்டை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கடலோர காவல் படை அலுவலக வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது

    இதுதொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    புது வண்ணாரப்பேட்டையில் உள்ள கடலோர காவல் படை அலுவலகத்துக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மூன்று சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    • சுபமுகூர்த்த நாளையொட்டி தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
    • இரண்டாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,840-க்கும், நேற்று சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,120-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், சுபமுகூர்த்த நாளையொட்டி மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,405-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,240-க்கும் விற்பனையாகிறது.

    இரண்டாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 130 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 30ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    27-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,120

    26-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,840

    25-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,440

    24-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,520

    23-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,520

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    27-08-2025- ஒரு கிராம் ரூ.130

    26-08-2025- ஒரு கிராம் ரூ.130

    25-08-2025- ஒரு கிராம் ரூ.131

    24-08-2025- ஒரு கிராம் ரூ.130

    23-08-2025- ஒரு கிராம் ரூ.130

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • சுபாஷ் நகர், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், பார்வதி நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (29.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    தாம்பரம்: கிருஷ்ணா நகர், வெற்றி நகர், கிருஷ்ணா நகர் 1 முதல் 8வது தெரு வரை, சுபாஷ் நகர், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், பார்வதி நகர், ஸ்ரீ ராம் நகர் தெற்கு, சரஸ்வதி நகர், ஸ்ரீராம் நகர் வடக்கு பகுதி, முடிச்சூர் சாலை ஒரு பகுதி, பழைய பெருங்களத்தூர், பாலகிருஷ்ணா நகர்.

    பெருங்குடி வடக்கு: சிபிஐ காலனி, பிள்ளையார் கோவில் தெரு, குறிஞ்சி நகர், ராமப்பா நகர், ராஜலட்சுமி அவென்யூ, காமராஜ் நகர், வீராசாமி சாலை, டெலிபோன் நகர்.

    ஆர்.கே.நகர்: எஸ்.ஏ.கோவில், திலகர் நகர், இளையமுதலி தெரு, வி.ஓ.சி.நகர், ஆர்.கே.நகர், மின்ட், கல்மண்டபம், டி.எச்.ரோடு, பெருமாள் கோவில் தோட்டம், ஆரணி ரங்கன் தெரு, காமராஜ் காலனி, திருநாவகர்சுத்தோட்டம், கோதண்டராமர் தெரு, ஸ்டான்லி ஏரியா, கன்னிவாசன் ஏரியா, தியாகப்பன்பேட்டை தெரு பகுதி.

    எழும்பூர்: நாட்டுப்பிள்ளையார் கோவில் தெரு, சுப்ரமணி தெரு, ராமகிருஷ்ணா தெரு, கருப்பண்ணன் தெரு, சோமசுந்தரம் தெரு, ஆறுமுகம் தெரு, மணிகண்டா தெரு, சீனு முதலி தெரு, வரத முத்தியப்பன் தெரு, அச்சரப்பன் தெரு, புத்தி சாஹிப் தெரு, முத்து நாயக்கன் தெரு, அம்மான் சாகிப் தெரு, கோஷா நாயக்கன் தெரு, வைத்தியநாதன் தெரு, பண்ணைக்கார ஆண்டியப்பா தெரு, ஆனைக்காரன் தெரு, நாகமணி, பட்டு ராசப்பா தெரு, சேவியர் தெரு, மின்ட் தெரு, மங்கம்மாள் தெரு, மங்கம்மாள் லேன், வெங்கட்ராமன் தெரு, குட்டி தெரு, முத்துஷா தெரு, அக்ரஹாரம் தெரு, அயலூர் முதலியார் தெரு, சாமலூர் முதலியார் தெரு, வண்டலூர் எம். நம்புலியார் தெரு, வாஷர்மேன் அலி லேன், செவன்வெல்ஸ் தெரு, பேரக்ஸ் தெரு, ராமலிங்கம் தெரு, இரண்டாவது நாராயண தெரு, பெட்டு நாய்க்கன் தெரு, முருகேசன் தெரு, சரவணன் தெரு, வடக்கு சுவர் வீதி, பெருமாள் தெரு, முனியப்பன் தெரு, கண்ணையன் தெரு, வேங்கையர் தெரு, பட்டாபி ராமையா தெரு.

    ஆவடி: டிஎன்எச்பி ஆவடி, காமராஜ் நகர், ஜேபி எஸ்டேட், வசந்தம் நகர், ஆவடி மார்க்கெட், பருத்திப்பட்டு, கோவர்த்தன கிரி, அண்ணாமலை நகர் மற்றும் கவுரி நகர்.

    திருமுல்லைவாயல்: வெள்ளனூர், கொள்ளுமேடு, மகளிர் தொழிற்பேட்டை, கன்னடபாளையம், போதூர், அரிக்கமேடு, காட்டூர் லட்சுமிபுரம், பம்மத்துக்குளம், கோனிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன் பேட்டை, காந்தி நகர், டி.எச்.ரோடு, எடப்பாளையம் ரோடு, ரெட்ஹில்ஸ்.

    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • நிவேதா பெத்துராஜ் தனது காதலரை நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தினார்
    • இந்த ஜோடி விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    ஒருநாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் கார் பந்தய வீராங்கனையும் ஆவார்.

    இந்நிலையில், நிவேதா பெத்துராஜ் தனது காதலரை நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்

    நிவேதா பெத்துராஜ் காதலரின் பெயர் ரஜித் இப்ரான். மாடலிங் துறையைச் சேர்ந்த இவர் தொழில் அதிபரும் கூட. விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி, நிவேதா பெத்துராஜ்-ரஜித் இப்ரான் ஜோடிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    • சிலைக்கு அணிந்திருந்த சட்டைப் பையில் விஜய் படம் வைக்கப்பட்டிருந்தது.
    • முதல்வர் என்ற பெயர்ப் பலகையை நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    சாலைகளிலும், தெருக்களிலும் வித்தியாசமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர்.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யை பிரதிபலிக்கும் வகையில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. 

    தவெக தலைவர் விஜய் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கையெழுத்து இடுவது போன்று விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    சட்டைப் பையில் விஜய் படம் வைக்கப்பட்டிருந்தது. இந்த வித்தியாசமான விநாயகர் சிலைக்கு கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

    ஆனால் இந்த விநாயகர் சிலைக்கு போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, முதல்வர் என்ற பெயர்ப் பலகையை நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×