என் மலர்
அரியலூர்
ஜெயங்கொண்டம் அருகே தனியார் பஸ், அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியானார். 15 பேர் காயமடைந்தனர்.
ஜெயங்கொண்டம்:
சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி நேற்று முன்தினம் காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சை வடலூரை சேர்ந்த ஜோதிவேல் (வயது 41) என்பவர் ஓட்டி வந்தார். கச்சிராபாளையத்தை சேர்ந்த சரவணன்(44) கண்டக்டராக பணியாற்றி வந்தார். அந்த பஸ் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலால் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ், அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ்சின் ஒருபுறமும், தனியார் பஸ்சின் முன்பக்கமும் பலத்த சேதமடைந்து உருக்குலைந்து காணப்பட்டது.

இந்த விபத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்தவர்கள் பஸ்சுக்குள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி தவித்தனர். இதில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பண்டாரவடை கிராமத்தை சேர்ந்த சாகுல் ஹமீதுவின் மனைவி காதர்பீவி (34) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிழந்தார்.
மேலும் சாகுல் ஹமீது, அவரது மகள் ஆப்ரின் பாத்திமா(12) மற்றும் அவர்களுடன் பயணம் செய்த உறவினர்களான நஸ்ரின்பானு(28) அவரது குழந்தை ராஹிபா (2) மற்றும் ஷேக் பாதுஷா(45) அவரது மனைவி ஹசீனா பேகம் (38) ஆகியோரும், ராஜமன்னார்குடியைச் சேர்ந்த பொதியப்பன் மனைவி ஜெயலட்சுமி (38) சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சங்கரமூர்த்தி (48) திருவாரூர் மாவட்டம் குன்னூர் கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி (38), தா.பழூர் கார்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணகி (40) காட்டுமன்னார்குடி சம்பத் மகள் ராஜபிரியா (24), அவரது தங்கை அறிவுக்கரசி (19), அரசு பஸ் டிரைவர் ஜோதிவேல், கண்டக்டர் சரவணன், தனியார் பஸ் டிரைவர் நாகர்கோவிலை சேர்ந்த ராமமூர்த்தி (38) ஆகிய 15 பேரும் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி தலைமையிலான தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்சுகள் மூலம் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் உயிரிழந்த காதர்பீவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மீட்பு பணி முடிந்ததும் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 15 பேரையும் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் தங்கபிச்சமுத்து, ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டு, அவர்களிடம் நலம் விசாரித்தனர். விபத்தில் மனைவியை பறிகொடுத்த சாகுல் ஹமீதுக்கும் அவர்கள் ஆறுதல் கூறி விட்டு, விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து படுகாயமடைந்த 15 பேரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், செந்துறை, தத்தனூர், மீன்சுருட்டி, ஆண்டிமடம் உள்பட பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கடுமையான மூடுபனி காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
மேலும் திருச்சி-சிதம்பரம் செல்லும் தேசியநெடுஞ்சாலையிலும், கும்பகோணம் -சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலும் கடும் பனிபொழிவு காணப்பட்டது. இதனால் விபத்துகளை தவிர்க்க டிரைவர்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு மெதுவாக ஊர்ந்து சென்றனர். 8 மணிஅளவில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க, அதிகரிக்க பனி மெதுவாக விலகி சென்றது.
இந்த பனிப்பொழிவால் நெற்பயிருக்கோ, பூக்கள் செடிக்கோ பாதிப்பு ஏற்ப டுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பனிப்பொழிவு காணப்பட்டது.
அரியலூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரியலூர்:
அரியலூர் தடையப்ப தெருவை சேர்ந்தவர் செல்வி(11)(பெயர் மாற்றப்பட்டுள்ளது).இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம் படித்து வருகிறார்.
இந்நிலையில்செல்வியின் பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் அவர் மட்டும் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மாரிமுத்து (வயது 19) என்பவர் அங்கு வந்தார். அவர் செல்வியிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டின் மேல் மாடிக்கு அழைத்து சென்றார். பின்னர் அவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே மாரி முத்து அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இது குறித்து செல்வியின் பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வாணி, சப்-இன்ஸ்பெக்டர் கன்னியம்மாள் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மாரி முத்துவை போக்சோ சட்டத் தின் கீழ் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம் அருகே 5 ஜி செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்துள்ள கழுவந்தோண்டி கிராமம் மெயின் ரோட்டில் இருந்து அம்மன் கோவில் தெருவிற்கு செல்லும் பாதையில் தனியார் ஒருவரது இடம் உள்ளது. இந்த இடத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே 5 ஜி செல்போன் கோபுரம் அமைப்பதற்கு கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதற்கு தனியார் இடத்தின் உரிமையாளரிடம் ஒப்பந்தம் செய்து கோபுரம் அமைப்பதற்கான 20 அடி ஆழமுள்ள குழி தோண்டப்பட்டது. 2 மாத காலமாக குழி மூடப்படாமல் இருந்ததால், கடந்த ஒரு மாத காலமாக பெய்த மழையின் காரணமாக தண்ணீர் வெளியேறாமல் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது. 5 ஜி செல்போன் கோபுரம் அமைப்பதனால் குழந்தைகள் உள்பட பலருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும்.
இதையடுத்து முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் அந்த இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் காட்டு பகுதியில் அமைக்க வேண்டும். மேலும் தற்போது தோண்டப்பட்டுள்ள குழியை மூட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் ரோட்டில் கழுவந்தோண்டி பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மழை பெய்ததால் அங்கிருந்து கலைந்து செல்லாமல் மழையில் நனைந்தப்படி மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர்கள் அண்ணாதுரை, செல்வம், வளையாபதி மற்றும் வருவாய் ஆய்வாளர் சிவசக்தி, கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது செல்போன் கோபுரம் அமைப்பது குறித்து உங்களது கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கூறி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
செந்துறை அருகே விவசாயிகள் வேலியுடன் அமைத்த பாதையில் அரியலூர் டிஎஸ்பி, செந்துறை தாசில்தார் உமாசங்கரி ஆகியோர் தலைமையில் வேலி அமைக்கும் பணி தீவிரமாக் நடந்து வருகிறது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலங்கைச்சேரியிலிருந்து நல்லாம்பாளையம் வரை நீர்வழி மற்றும் வண்டி பாதை உள்ளது. இந்த பாதையை அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்பாதையை விவசாயிகள் பயன்படுத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் விவசாயிகளிடம் பேசி பட்டா நிலங்களை சேர்த்து மண் பாதை அமைத்தார்.
இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் உஞ்சினி கிராமத்தில் இயங்கிவரும் சுண்ணாம்புக்கல் சுரங்க நிர்வாகம் இந்த பாதையில் லாரிகளை இயக்க முயற்சித்தது. இதனை இலங்கைச்சேரி விவசாயிகள் போராட்டம் நடத்தி தடுத்தனர்.
கடந்த சில தினங்களாக மீண்டும் பாதை அமைத்து லாரிகளை இயக்க முயற்சி செய்தனர். இதனை கண்ட இலங்கைச்சேரி விவசாயிகள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி தலைமையில் 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது விவசாயிகள் விவசாய பயன்பாட்டுக்காக எங்களது பட்டா நிலங்களை விட்டு கொடுத்துள்ளோம் என்று கூறினர்.
சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் ஜோதி மற்றும் அரியலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் தாஸ் ஆகியோர் பார்வையிட்டு விவசாய நிலங்களை அளவீடு செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் செந்துறை கிராம நிர்வாக அதிகாரி இளையராஜா, தலைமை சர்வேயர் அடங்கிய குழுவினர் 2 நாட்கள் அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர். அளவீடு செய்ததில் விவசாயிகள் பட்டா நிலம் ஒரு மீட்டருக்கு மேலாக சாலை பகுதியில் உள்ளது என்று அளவு காட்டினார்கள். மேலும் தங்களது வேலிகளை இந்த அளவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி சென்றனர். அதனை தொடர்ந்து விவசாயிகள் விட்டுக்கொடுத்த தங்களது பட்டா நிலங்களை மீண்டும் கைப்பற்றி வருவாய்த் துறையினர் கொடுத்த அளவு படி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் விவசாயிகள் வேலியுடன் அமைத்த பாதையில் அரியலூர் டி.எஸ்.பி.மோகன்தாஸ், செந்துறை தாசில்தார் உமாசங்கரி ஆகியோர் சென்று, பணியாளர்கள் உதவியுடன் பாதையில் மணலை கொட்டி லாரிகள் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

வேனாநல்லூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 பேர் காயமடைந்தனர். மேலும் காளைகளை அடக்கிய வீரர்கள் பரிசு பொருட்களை தட்டி சென்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த வேனாநல்லூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டை முன்னிட்டு மாரியம்மன் கோவில் முன்பு சீர்வரிசை தட்டுகள் வைத்து வழிபாடு நடத்தினர். இதையொட்டி வேனாநல்லூர் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் கார்த்திக், அ.தி.மு.க. மாவட்ட மகளிரணி தலைவர் ஜீவா அரங்கநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, தேனி, கம்பம், மதுரை, சேலம், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், ஜெயங்கொண்டம், தா.பழூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 350-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
காளைகள் முட்டியதில் பிராஞ்சேரியை சேர்ந்த கண்ணன் (வயது 25), சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த அசோக்குமார் (30), திருச்சியை சேர்ந்த முருகானந்தம் (31), சதிஷ்குமார் (23), சோழங்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (34), திருமானூரை சேர்ந்த பாலாஜி (28), கூழாட்டுகுப்பத்தை சேர்ந்த கலியமூர்த்தி (43) உள்பட 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த முருகானந்தம், சதிஷ்குமார் உள்பட 4 பேரையும் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் தங்க நாணயங்கள், கட்டில், மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், செல்போன், கடிகாரம், நாற்காலிகள், சைக்கிள், வேட்டி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை காண திருச்சி, தேனி, கம்பம், மதுரை, சேலம், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், ஜெயங்கொண்டம், தா.பழூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை ஊர்நாட்டார், கணக்கர், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். ஜெயங்கொண்டம் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செந்துறை அருகே 5 மாதங்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் இதனை கண்டித்து பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரியாக்குறிச்சி கீழத்தெரு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, நீரேற்று குழாய் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நீர் ஏற்றப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நீரேற்று குழாய் மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் , நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கீழத் தெரு பகுதியில் கடந்த 5 மாதங்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. மின்மோட்டாரும் பழுது செய்யப்படவில்லை.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பெரியாக்குறிச்சி 4ரோடு சந்திப்பு பெண்ணாடம் சாலையில் காலி குடங்களுடன் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் சாலையின் நடுவே அமர்ந்து , சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று கோரி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் செந்துறை போலீசார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் அருகே தாய் கண் முன்னே 2½ வயது குழந்தை நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த ஆர்.எஸ்.மாத்தூர் அருகே உள்ள சோழன்குடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன், விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி. இந்த தம்பதிக்கு நவீன், நிதிஷ் (வயது 2½) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
நவீன் செந்துறையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்ட அவனை அனுப்பி வைப்பதற்காக அவனது தாய் கலைச்செல்வி வெளியே அழைத்து வந்தார். உடன் நிதிஷூம் வந்துள்ளான்.
அப்போது தனியார் பள்ளிக்கு சொந்தமான வேனும் அங்கு வந்தது. பள்ளி வேனில் நவீனை ஏற்றி விட்டார். அதே சமயம் நிதிஷ் வேனுக்கு பின்னல் நின்று கொண்டிருந்தான். நவீன் ஏறிய பின்னர் வேனை டிரைவர் பின்னோக்கி இயக்கினார்.
அப்போது அங்கு நின்ற நிதிஷ் படிக்கட்டின் பக்க வாட்டில் சிக்கி வேனுக்கு அடியில் இழுத்து செல்லப்பட்டான். அடுத்த வினாடி வேன் சக்கரம் நிதிஷ் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவன் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தான்.
இதைப்பார்த்த அவனது தாய் கலைச்செல்வி கதறித் துடித்தார். பின்னர் குழந்தையின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து குவாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் நக்கம்பாடியை சேர்ந்த செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் கண் முன்பு குழந்தை உடல் நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #tamilnews

உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு துறையினர் சார்பில், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நடந்தது.
அரியலூர்:
பேரிடர் மேலாண்மை சார்பில் உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு நேற்று அரியலூர் நிர்மலா மெட்ரிக் பள்ளியிலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட அரியலூர் பள்ளி மாணவ, மாணவிகள் தவிர்ப்போம், தவிர்ப்போம் வெள்ள நீரில் குளிப்பதை தவிர்ப்போம், துண்டிப்போம் துண்டிப்போம் தீ விபத்து, இடி மின்னலின் போது மின் இணைப்பை துண்டிப்போம், நிற்க வைக்காதீர் நிற்க வைக்காதீர் இடி, மின்னலின் போது கால்நடைகளை மரத்திற்கடியில் நிற்க வைக்காதீர். தெரிவிப்போம் தெரிவிப்போம் பேரிடர் நிகழ்வுகளை கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077-க்கு தெரிவிப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறும் சென்றனர். இந்த ஊர்வலம் அரியலூர் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.
தொடர்ந்து அரியலூர் பஸ் நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு துறையினர் சார்பில், பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நடந்தது. அப்போது அரியலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலர்கள் முன்னிலையில் பேரிடர் தற்காப்பு நடவடிக்கைகளை செயல் விளக்கம் மூலம் காண்பித்தனர். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, தாசில்தார்கள் விக்டோரியா (பேரிடர்மேலாண்மை), முத்துலட்சுமி (அரியலூர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆண்டிமடம் அருகே ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீடுகளில் 21 பவுன் நகைகள் மற்றும் ரூ.6 லட்சத்து 18 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
வரதராஜன்பேட்டை:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பரணி மஹால் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 52). அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மனைவி அலமேலு(48). இவர்களுக்கு விக்னேஷ் என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறார். விக்னேஷ் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 13-ந் தேதி செல்வராஜ் வீட்டை பூட்டிவிட்டு மனைவி மற்றும் மகனுடன் திருப்பதி சென்றார். இந்நிலையில் நேற்று காலை செல்வராஜின் வீட்டில் வேலை செய்யும் பெண் அங்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, இது குறித்து அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறினார். அவர்கள் கவரப்பாளையத்தில் உள்ள செல்வராஜின் உறவினருக்கு தகவல் தெரிவத்தனர்.
அவர் வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் கீழே சிதறி கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு(பொறுப்பு) மோகனதாஸ், ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.பின்னர் திருப்பதியில் உள்ள செல்வராஜிக்கு செல்போனில் தகவல் தெரிவித்து, அவரிடம் போலீசார் விசாரித்ததில் பீரோவில் ரூ.5 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கம் மற்றும் 6 பவுன் நகைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பீரோவில் பார்த்தபோது பணம் மற்றும் நகை இல்லை. இதனால் அவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
செல்வராஜின் மகள் திருமண செலவிற்கு வாங்கிய கடன்களை அடைப்பதற்காக, அவர் லோன் பெற்றுள்ளார். அந்த பணத்தை வீட்டில் வைத்துவிட்டு, திருப்பதி சென்று திரும்பி வந்த பின்னர், கடன் பெற்றவர்களிடம் பணத்தை கொடுக்கலாம் என்று எண்ணியுள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை திருடி சென்றதால், செல்வராஜ் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் டிக்சி வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளிவரை சென்று விருத்தாச்சலம் ரோட்டில் நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சூரக்குழி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் கொல்கத்தாவில் ராணுவ அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். சூரக்குழியில் உள்ள வீட்டில் அவருடைய மனைவி விஜி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அந்த வீட்டின் மாடியில், அரசு அலுவலராக பணிபுரியும் அருள்மேரி வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில் விஜி, தனது குழந்தைகளை திருக்களப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, சங்கரை காண கொல்கத்தா சென்றுள்ளார்.
விஜி வீட்டில் யாரும் இல்லாத நிலையில், மாடியில் தனியாக இருப்பதற்கு பயந்த அருள்மேரி நேற்று முன்தினம் இரவு பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் படுத்திருந்தார். நேற்று காலை அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவருடைய வீடு மற்றும் சங்கர் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இது குறித்த தகவலின்பேரில் ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த ரூ.80 ஆயிரம், 15 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.
மேலும் அருள்மேரி வீட்டின் கதவையும் உடைத்து வீட்டிற்குள் இருந்த ரூ.3 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து ஆண்டிமடம் போலீசார் தீவிர விசாரணை செய்து மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவங்கள் ஆண்டிமடம் பகுதி மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சத்துணவு முட்டை சாப்பிட்ட மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே நாகமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகள் 215 பேருக்கு நேற்று மதியம் சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது.
இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 5-ம் வகுப்பு மாணவர்கள் ராஜா, அஜய், சிவராஜ், மாணவிகள் திவ்யா, காவியா, கீதா, சரண்யா, ரஞ்சனி, கார்த்திகா, கீதாகுமாரி, பவித்ரா, சவுமியா, தேவிகா, தீபிகா ஆகிய 14 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விளாங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், கெட்டுப்போன முட்டையை மாணவ, மாணவிகள் சாப்பிட்டதால், அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறினர். பின்னர் அவர்களை மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

அரியலூரில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகையை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்.எஸ்.மாத்தூர்:
அரியலூர் மாவட்டம் வெங்கனூர் அருகே உள்ள கொரட்தாகுடியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி ஜெயா. இவர்கள் 2 பேரும் நேற்று இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு வீட்டின் முன்பக்க அறையில் தூங்கினர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஜெயாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து சென்றனர்.
அதே தெருவில் உள்ள மற்றொரு வீட்டை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47). இவர் வீட்டை பூட்டி வெளியூர் சென்றார். மர்ம நபர்கள் இவரது வீட்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த 2 சம்பவம் குறித்து வெங்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதைப்போல் நேற்று ஆண்டிமடத்தில் 2 இடங்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வருவதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.மேலும் போலீசார் ரோந்து பணியை அதிகரித்து கொள்ளை சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews