என் மலர்
அரியலூர்
அரியலூர் அருகே வீட்டிற்குள் புகுந்து தாய்-மகளிடம் 10¾ பவுன் தாலி சங்கிலியையும் பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், வாரணவாசி கீழத் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவரது மனைவி மகாலட்சுமி(வயது 47). இவர்களுக்கு சிலம்பரசன் என்கிற மகனும், இலக்கியா(28) என்ற மகளும் உள்ளனர்.
சிலம்பரசன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இலக்கியாவை அரியலூர் மாவட்டம் இலந்தைக்கூடம் கிராமத்தை சேர்ந்த கனகராஜ்(38) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். கனகராஜ் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், கடந்த சில ஆண்டுகளாகவே இலக்கியா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
மகளின் அலறல் சத்தத்தை கேட்டு எழுந்த மகாலட்சுமி திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். ஆனாலும் மர்ம நபர்கள் மகாலட்சுமியின் கழுத்தில் கிடந்த 2¾ பவுன் சங்கிலியையும் பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் வீட்டின் முள் வேலியை தாண்டி குதித்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசில் ராமசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
அரியலூர் மாவட்டம், வாரணவாசி கீழத் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவரது மனைவி மகாலட்சுமி(வயது 47). இவர்களுக்கு சிலம்பரசன் என்கிற மகனும், இலக்கியா(28) என்ற மகளும் உள்ளனர்.
சிலம்பரசன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இலக்கியாவை அரியலூர் மாவட்டம் இலந்தைக்கூடம் கிராமத்தை சேர்ந்த கனகராஜ்(38) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். கனகராஜ் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், கடந்த சில ஆண்டுகளாகவே இலக்கியா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு ராமசாமி வயலுக்கு புறப்பட்டார். அப்போது அவர் கதவை பூட்டாமல் சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் 2 பேர் ராமசாமி வீட்டிற்குள் புகுந்தனர். அப்போது வீட்டிற்குள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த இலக்கியா கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த இலக்கியா கையால் சங்கிலியை பிடித்துக் கொண்டு மர்ம நபர்களுடன் போராடினார். அப்போது மர்ம நபர்கள் அதே சங்கிலியை வைத்து அவரது கழுத்தை நெரித்தனர். இதனால் வலியால் அலறி துடித்த சங்கிலியில் இருந்து கையை எடுத்து விட்டார். இதில் சங்கிலியை மர்ம நபர்கள் வேகமாக பிடித்து இழுத்ததில், அவர்களின் கையில் சங்கிலி சிக்கியது.
அரியலூரில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகள் ஜெயலட்சுமி (வயது 18). இவர் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். தினமும் பஸ்சில் தஞ்சாவூருக்கு சென்று படித்து விட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 30-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் வீடுதிரும்பவில்லை. தங்கராசு மகளை பல இடங்களில் தேடினார். எங்கும் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து அவர் துத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி ஜெயலட்சுமியை தேடி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டு மற்றும் மதுபானம் விற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மார்க்கெட் கமிட்டி பஸ்நிறுத்தம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை ஒருவர் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிந்தது.
விசாரனையில் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த ராஜா(49) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜா மீது வழக்குபதிந்து கைது செய்து அவரிடமிருந்த லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
ஜெயங்கொண்டம் விருத்தாசலம் சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அருகில் உள்ள பாவுப்பட்டரை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அங்கு ஒருவர் மறைத்து வைத்து மது பாட்டில்கள் விற்றது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் ஜெயங்கொண்டம் கீழக்குயிருப்பு புதுத்தெருவை சேர்ந்த அன்பழகன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அன்பழகனை கைது செய்து மதுபாட்டில் களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக ஆலோசனை கூட்டம் ஆண்டிமடத்தில் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக ஆலோசனை கூட்டம் ஆண்டிமடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராசாப்பிள்ளை தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் முன்னிலை வகித்தார்.
அரியலூர் மாவட்ட செயலாளர் செல்வநம்பி, மாநில அமைப்பு செயலாளர் இளமாறன் சிறப்புரையாற்றி தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்குச்சாவடி முகவர் நியமனம் செய்வது, டிசம்பர் 10&ந்தேதி திருச்சியில் நடைபெறும் தேசம் காப்போம் மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர். #VCK

அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் எழில் அரசன் (வயது31). டிரைவர். நேற்று முன்தினம் இரவு எழில் அரசன் மோட்டார் சைக்கிளில் அரியலூருக்கு சென்று வீட்டிற்கு பொருட்கள் வாங்கி கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். செந்துறை ரவுண்டானா அருகே வந்த போது சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக எழில் அரசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே எழில் அரசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எழில்அரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் அருகே சிமெண்ட் ஆலை லாரி மோதியதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
ஆர்.எஸ்.மாத்தூர்:
அரியலூர் அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் எழிலரசன். இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் டிரைவராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அரியலூர் புறவழிச்சாலை செந்துறை ரவுண்டானா சந்திப்பு பகுதியில் செல்லும் போது அந்த வழியாக வந்த சிமெண்ட் ஆலை லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் திடீரென அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிமெண்ட் ஆலை லாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி, எழிலரசன் பிணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள் மறியலை கைவிடவில்லை. இதையடுத்து லேசான தடியடி நடத்தினர். ஆனாலும் பொதுமக்கள் அங்கிருந்து கலையாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியதையடுத்து அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனமும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் எழிலரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் அருகே சாலையை ஆக்கிரமித்து சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மண்டை ஓடு படத்துடன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த மணக்குடையான் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சோழன்பட்டி பொது மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலையை அருகிலுள்ள தனியார் சிமெண்டு நிறுவனம் ஆக்கிரமித்து சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டி வருகிறது.
இதனை கண்டித்து சோழன்பட்டி, தாமரைப்பூண்டி, ஆதனக்குறிச்சி, மணக்குடையான் பொதுமக்கள் மண்டை ஓடு படத்துடன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமூக ஆர்வலர் அருள்மொழிவர்மன் தலைமை தாங்கினார். இதில் மணக்குடையான் ஊராட்சி தாமரைப்பூண்டி-சோழன்பட்டி சாலையை பஞ்சாயத்து தீர்மானத்தை மீறி ஆக்கிரமிக்காதே, சுரங்கத்தில் வெடிவைத்து கர்ப்பிணி சிசுவை அழிக்காதே, சோழன்பட்டிக்கு அருகில் மணல்மேடு அமைத்து ஊர் முழுவதும் புழுதியை கிளப்பி நுரையீரல் தொற்றை ஏற்படுத்தாதே, சுரங்கத்தை சுற்றி 33 சதவீதம் பசுமை பகுதி ஏற்படுத்து என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதில் மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முகசுந்தரம், வைத்திலிங்கம், நீலமேகம், கணேசன், கலியபெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய அணி பாலசிங்கம், மதியழகன், நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் ராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செந்துறை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததை கண்டித்து நோயாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. 2010-ம் ஆண்டு 150 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஆனால் 24 மணி நேர மருத்துவமனைக்கு போதிய டாக்டர்களும் ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை.
இதனால் இந்த மருத்துவமனை 24 மணி நேரமும்செயல் படாமல் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் போன்று செயல்பட்டுவருகிறது. அரசு போதிய டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் நியமிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை எனகூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தாலுக்கா முழுவதும் உள்ள கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் மருத்துவமனைக்கு வருகின்றனர். தற்போது மருத்துவ மனையில் ஒரு டாக்டர் மட்டும் பணியில் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக செந்துறை அரசு மருத் துவமனைக்கு வந்தனர். ஆனால் அங்கு டாக்டர் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள் மருத்துவமனைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் உடனடியாக போதிய டாக்டர்களை நியமித்து 24 மணிநேரம் மருத்துவமனை இயங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். நோயாளிகளின் இந்த திடீர் போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆய்வின் போது காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்துள்ள கங்கைகொண்டசோழபுரம் கோவிலின் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சசிகுமார் தலைமையில் அதிகாரிகள் அப்பகுதிகளில் மளிகை கடை, ஓட்டல்களில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மளிகை கடை, ஓட்டல்கள், அன்னதானம் செய்யுமிடம் மற்றும் தற்காலிக குளிர்பான கடைகளில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. உணவகங்களில் பிளாஸ்டிக் சம்பந்தமான காபி கப்பு, பாலித்தீன் பை போன்றவற்றை உபயோகப்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இன்று பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கங்கை கொண்டசோழபுரம். தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் தனது ஆட்சிக்காலத்தில் ஆயிரம் வருடத்திற்கு முன் கங்கை வரை படையெடுத்து சென்று வடபுறத்து மன்னர்களை வெற்றிக்கொண்டதன் அடை யாளமாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய நகரை உருவாக்கி அங்கு பிர கதீஸ்வரர் கோவிலை கட்டி னார்.
இங்கு பிரதிஷ்டை செய் யப்பட்டுள்ள 13½ அடி உயர மும், 60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கம் தான் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என போற்றி வணங்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன், ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு இக்கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. கங்கை கொண்டசோழபுரம் பிரகன் நாயகி உடனுறை பிரகதீஸ் வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடத்தப் பட்டு வருகிறது.
அன்னாபிஷேக தினத் தன்று 100 சிப்பம் மூட் டை கொண்ட 2,500 கிலோ பச்சரிசியைக் கொண்டு கோவில் வளாகத்தில் சமைத்து, பிரகதீஸ்வரருக்கு சாத்தப்பட்டு 50 வகையான பழங்கள், வில்வ இலை உட்பட 11 வகை இலைகள், 21 வகை பூக்களால் அலங்க ரித்து. (சந்த்ரோதயா காலத்தில்) மாலை 6 மணியளவில் மகா தீபாராதனை நடந்தப்படும்.

அதன்படி ஐப்பசி பவுர்ணமியான இன்று கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நேற்று கணக்க விநாயகருக்கு முதல் அபிஷேகம் நடைபெற்றது. கங்கை நீர், மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர், தேன் உள்பட 21 வகையான பொருட்களால் இந்த அபி ஷேகம் நடந்தது.
தொடர்ந்து இன்று காலை முதல் அன்னாபிஷேகத்திற் காக கோவில் வளாகத்தில் சாதம் தயாரிக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதனை காணவும், அன்னாபிஷேகத் தில் பங்கேற்கவும் காலை முதலே ஏராளமான பக்தர் கள் பிரகதீஸ்வரர் கோவிலில் குவிந்தனர்.
ஐப்பசி பவுர்ணமி அன்று சிவ ஸ்தலத்திற்கு சென்று வழிபடுவது (பாவ விமோச னம்) புண்ணியம், அதைவிட சிவலிங்கத்திற்கு அன்னம் சாத்தப்பட்டு ஒவ்வொரு சாதத்து பருக்கையும் சிவ அம்சம் பெற்று, சிவஸ் வரூப மாக மாறுவதால் அன்று அன்னாபிஷேகத்தை தரி சிப்பது, கைலாயம் சென்று தரிசிப்பதற்கு ஈடானதாகும் என ஐதீகம்.
கோடி சிவஸ்தலத்திற்கு சென்று தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதால், ஆயி ரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர். தொடர்ந்து இரவு 9 மணியளவில் அன்னாபிஷேக சாதத்தை பக்தர்களுக்கு விநியோகித்துவிட்டு, சகல ஜீவராசிகளுக்கும் சிவ அருள் கிடைக்கவும், ஏரி மற்றும் குளங்களிலும், பூமிக்குள் இருக்கும் உயிரினங்களுக்காக, குழி தோண்டி புதைக்கப்பட்டும், பூமியில் வாழும் மிருகங்கள், பறவைகள், கரையான்கள் உட்பட உயிரினங்களுக்கு வயல் வெளிகளில் மற்றும் திறந்த வெளியில் இரைத்தும் அன் னாபிஷேக சாதம் விநியோ கிக்கப்படும். தொடர்ந்து நாளை பிரகதீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் நடைபெற உள்ளது.
அன்னாபிஷேகத்தை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் அ.தி.மு.க.வின் 47ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நகர கழக செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்திபூங்கா அருகில் உள்ள தேவாங்க நடுத்தெருவில் அ.தி.மு.க.வின் 47ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நகர கழக செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத்தலைவரும், மாவட்ட துணை செயலாளருமான தங்கபிச்சமுத்து, மாநில இளைஞரணி துணை தலைவர் அறிவு (எ) சிவசுப்பிர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் முருகேசன் வரவேற்றார். மாவட்ட கழகச் செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் மற்றும் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம், பெரம்பலூர் எம்.பி. மருதை ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட அம்மா பேரவை தண்டபாணி, எம்.ஜி.ஆர் மன்றம் மகாபாரிவள்ளல் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர கழக பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார். #ADMK

தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் வெங்கனூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கமலா (வயது 36). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சக்திவேல் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கமலா, குழந்தைகளுடன் அரியலூர் தாலுகாவிற்குட்பட்ட குந்தபுரத்தில் உள்ள தனது அக்காள் சித்ரா குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கமலா, சித்ரா குடும்பத்தினருடன் சேர்ந்து தூங்க சென்றார். அப்போது அவர்கள் கதவை தாழ்ப்பாள் போடாமல் தூங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மர்மநபர்கள் சித்ரா வீட்டிற்குள் திடீரென்று புகுந்தனர். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த கமலா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறிக்க முயன்றனர்.
இதனால் திடுக்கிட்டு எழுந்த கமலா சங்கிலியை கையில் பிடித்து கொண்டு திருடன், திருடன்... என சத்தம் போட்டார். ஆனாலும் மர்மநபர்கள் விடாமல் சங்கிலியை பிடித்து இழுத்தலில், சங்கிலி மர்மநபர்கள் கையில் சிக்கியது. பின்னர் அவர்கள் அங்கிருந்து ஓடினர். இதையடுத்து கமலா, அவரது சகோதரி சித்ரா, அவருடைய கணவர் நல்லதம்பி ஆகியோர் மர்மநபர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். ஆனால் மர்ம நபர்கள் வயல் பகுதி வழியாக மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து கமலா திருமானூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் மர்மநபர்கள் தாலி சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.