என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் குழந்தைகளுக்கான குடற்புழு நீக்கும் திட்டத்தின்கீழ் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, அரியலூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகளுக்கான தேசிய குடற்புழு நீக்க முகாமினை மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி தொடங்கி வைத்து, 150 மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 16-ந்தேதி நடக்கிறது. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 373 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது என்றார்.
அப்போது துணை இயக்குனர்(சுகாதார பணிகள்) டாக்டர் ஹேமசந்த்காந்தி, வட்டார மருத்துவ அலுவலர் உமாமகேஸ்வரி, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் நிரஞ்சனா, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் விருத்தகிரி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்முருகன், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பரிமளம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமினை அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் குழந்தைவேல், உமாபதி, கிராம சுகாதார செவிலியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் மொத்தம் 651 மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தோடு வட்டம் பார்ப்பனஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 50). இவரது சகோதரர் ராமலிங்கம் (46). விவசாயிகளான இவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை ராமலிங்கம் தனக்கு பிரித்து தருமாறு கோவிந்தராஜிடம் கேட்டு வந்தார். ஆனால் அவர் பிரித்து கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அண்ணன்-தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்றிரவு ராமலிங்கம், வயலில் விவசாய பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். செம்போடை பகுதியில் செல்லும் போது அங்கு மறைந்திருந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது நண்பர் வெங்கடேஷ்(31) ஆகிய 2பேரும் சேர்ந்து, திடீரென ராமலிங்கத்தை வழிமறித்து அவரை உருட்டுக்கட்டையால் சரமாரி தாக்கியுள்ளனர். மேலும் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
செம்போடை பகுதி அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதி என்பதால் அரியலூர் போலீஸ் டி.எஸ்.பி. இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நிலத்தகராறில் ராமலிங்கத்தை அவரது சகோதரர் கோவிந்தராஜ், நண்பர் வெங்கடேசுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் தம்பியை அண்ணனே வெட்டிக் கொன்ற சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட எரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி(வயது 56). கூலித் தொழிலாளி. இவருடைய மகனுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த கருப்பையன்(50) மகனுக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாம். இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில், கடந்த 5-ந்தேதி அந்த கிராமத்தில் உள்ள அரசமரத்தடியில் சின்னதம்பி, கருப்பையன் மற்றும் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக சின்னதம்பிக்கும், கருப்பையனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கருப்பையன் அருகில் கிடந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து சின்னதம்பியின் மண்டையில் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னதம்பி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக சின்னதம்பியின் மனைவி வெற்றிசெல்வி வெங்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையனை கைது செய்தனர். கூலித் தொழிலாளியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர், ஆக. 7-
அரியலூர் அருகே கிரிக் கெட் மட்டையால் தாக்கி தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் வெங்கனூர் எரக்குடி கிரா மத்தைச் சேர்ந்தவர் சின்னத் தம்பி (வயது 56) தொழி லாளி. அதே ஊரை சேர்ந்த வர் கருப்பையன் (56). இந்த நிலையில் சின்னத்தம்பி மக னுக்கும், கருப்பையன் மக னுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த ஒரு வருடமாக இரு குடும்பத் தினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
நேற்று மாலை எரக்குடி அரச மரத்தடியில் அமர்ந்து சின்னதம்பியும், அவர்களது நண்பர்களும் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப் போது அந்த வழியாக நடந்து வந்த கருப்பையன், என்னை பற்றிதான் நீங்கள் கிண்டல் செய்து பேசுகிறீர்கள் என்று கூறி, சின்னத்தம்பியிடம் தக ராறில் ஈடுபட்டார்.
தகராறு முற்றவே ஆத்திர மடைந்த கருப்பையன், அரு கில் கிடந்த கிரிக்கெட் மட் டையை எடுத்து சின்னத் தம்பியின் தலையில் பலமாக தாக்கினார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. பலத்த காயம டைந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அரிய லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக் காக தஞ்சை அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பி னும் சிகிச்சை பலனின்றி இன்று காலை சின்னதம்பி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சின்னத்தம்பி யின் மனைவி வெற்றிச் செல்வி வெங்கனூர் போலீ சில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கருப்பையனை கைது செய்தனர். தொடர்ந்து அவரி டம் விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வினய் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 604 மனுக்களை பெற்றார். பின்னர் அந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் கல்லக்குடி கிராம மக்கள் அளித்த மனுவில், கருப்பிலாக்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட கல்லக்குடி, வண்ணாரப்பேட்டை, கீழஎசனை, கீழவண்ணன், ஏழேரி, இடையத்தான்குடி, வைப்பம், செம்மந்தங்குடி, சத்யா நகர், பாளையம், அருங்கால், அர்ச்சனாபுரம், கருவேலங்காடு, பாப்பான்குளம், சின்னப்பட்டாக்காடு உள்ளிட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக செல்ல வேண்டும் எனில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரமுள்ள சுண்டக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் அங்கு செல்ல பஸ் வசதிகள் கிடையாது. இதனால் பொதுமக்கள், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மேற்கண்ட அனைத்து கிராமங்களுக்கும் மையமாக உள்ள கல்லக்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
மேலும் கல்லக்குடியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள காட்டாத்தூர் காலனி தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 33). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய வீட்டில் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகை திருட்டு போனது. இதுகுறித்து கலைச்செல்வன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே கிராமத்தில் உள்ள புதுக்காலனி தெருவை சேர்ந்த வேல்முருகனின் மகன் கோபாலகிருஷ்ணன் (19) என்பவர், கலைச்செல்வன் வீட்டில் புகுந்து நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கோபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் ஜெயங்கொண்டத்தில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் நகராட்சி மற்றும் கட்டிட பொறியாளர் சங்கத்தின் தலைவர் அன்பரசன் தலைமை தாங்கி பேசுகையில், நகராட்சி பகுதிகளில் புதிய வீடு கட்டுபவர்களும், பழைய வீடு வைத்திருப்பவர்களும் தங்களது வீட்டில் 4-க்கு 4 அடியில் 8 அடி ஆழத்தில் மழைநீர் சேமிப்பு தொட்டியை அமைக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.
மண்டல தலைவர் மார்ட்டின், முன்னாள் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக முன்னாள் தலைவர் சிவக்குமார் வரவேற்றார். ஊர்வலத்தை நகராட்சி மேலாளர் அரங்கபார்த்திபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அண்ணா சிலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கடைவீதி, 4 ரோடு, தா.பழூர் ரோடு, பஸ் நிலையம் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.
ஊர்வலத்தில் மழை நீர், உயிர் நீர், மழை நீரை சேமிப்போம், நிலத்தடி நீரை பாதுகாப்போம், ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் தொட்டி அமைப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ- மாணவிகள் கையில் ஏந்தியவாறும், கோஷமிட்டும் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த ஊர்வலத்தில் செயலாளர் கபிலன், பொருளாளர் ஹரிஹரன், துணை தலைவர் ராஜேந்திரன், நகராட்சி பணியாளர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் தலைவர் பொறியாளர் அன்புராஜ் நன்றி கூறினார்.
அரியலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை வெளியிடங்களில் இருந்து கொண்டு வருவதற்கும், தொழிற்சாலையில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை வெளியிடங்களுக்கு ஏற்றி செல்வதற்கும் அதிக அளவில் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அரியலூர் பகுதியில் எப்போதும் லாரிகள் சென்ற வண்ணம் இருக்கும்.
இதனை பயன்படுத்தி மர்மநபர்கள் சிலர், போலீஸ் போல் நடித்து லாரி டிரைவர்களிடம் ஆவணங்களை கேட்டு, பணம் மற்றும் செல்போன்களை பறிக்கும் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக போலீசாருக்கும் ஏராளமான புகார்கள் வந்தன.
இந்தநிலையில் அரியலூர் கல்லூர் பாலம் அருகே மர்மநபர்கள் 3பேர் தாங்கள் போலீஸ்காரர்கள் என்று கூறிக்கொண்டு அந்த வழியாக வந்த லாரி டிரைவர்களிடம் ஆவணங்களை கேட்டும், அதனை கொடுக்காத டிரைவர்களிடம் இருந்து பணம் வசூல் செய்து கொண்டிருந்தனர். போலீஸ்காரர்கள் என்று நம்பிய டிரைவரிடம் இருந்து ரூ.500 மற்றும் செல்போனை பறித்து கொண்டனர்.
இதையறிந்த கீழப்பளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நின்ற 3 பேரையும் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் அரியலூர் மாவட்டம் கீழக்குளத்தூரை சேர்ந்த கலைவாணன், விஜய், பாலமுருகன் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் அரியலூரில் முக்கிய இடங்களில் நின்று , லாரி டிரைவர்களிடம் போலீஸ் எனக்கூறி மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது. இதுவரை அவர்கள் எத்தனை பேரிடம் பணத்தை பறித்துள்ளனர் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






