search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழிப்புணர்வு ஊர்வலம்
    X
    விழிப்புணர்வு ஊர்வலம்

    மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

    ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் ஜெயங்கொண்டத்தில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் ஜெயங்கொண்டத்தில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் நகராட்சி மற்றும் கட்டிட பொறியாளர் சங்கத்தின் தலைவர் அன்பரசன் தலைமை தாங்கி பேசுகையில், நகராட்சி பகுதிகளில் புதிய வீடு கட்டுபவர்களும், பழைய வீடு வைத்திருப்பவர்களும் தங்களது வீட்டில் 4-க்கு 4 அடியில் 8 அடி ஆழத்தில் மழைநீர் சேமிப்பு தொட்டியை அமைக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.

    மண்டல தலைவர் மார்ட்டின், முன்னாள் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக முன்னாள் தலைவர் சிவக்குமார் வரவேற்றார். ஊர்வலத்தை நகராட்சி மேலாளர் அரங்கபார்த்திபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அண்ணா சிலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கடைவீதி, 4 ரோடு, தா.பழூர் ரோடு, பஸ் நிலையம் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.

    ஊர்வலத்தில் மழை நீர், உயிர் நீர், மழை நீரை சேமிப்போம், நிலத்தடி நீரை பாதுகாப்போம், ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் தொட்டி அமைப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ- மாணவிகள் கையில் ஏந்தியவாறும், கோஷமிட்டும் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த ஊர்வலத்தில் செயலாளர் கபிலன், பொருளாளர் ஹரிஹரன், துணை தலைவர் ராஜேந்திரன், நகராட்சி பணியாளர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் தலைவர் பொறியாளர் அன்புராஜ் நன்றி கூறினார்.
    Next Story
    ×