என் மலர்
மேற்கு வங்காளம்
- புதிய சட்டம் 1993-ன்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியல் தயாரிக்கப்படும்.
- 2010-ம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ் அப்படியே இருக்கும்.
கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கு வங்காளத்தில் 2010-க்குப் பிறகு வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய சட்டம் 1993-ன்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பட்டியல் மேற்கு வங்காள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கமிஷன் தயாரிக்கும். 2010-ம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ் அப்படியே இருக்கும்.
2010-ம் ஆண்டுக்குப் பிந்தைய ஓபிசி பரிந்துரைகள் ரத்து செய்யப்படுகிறது. 2010-ம் ஆண்டுக்குப் பிறகு ஓபிசி சான்றிதழ் பெற்று ஓபிசி இடஒதுக்கீடு மூலம் வேலை பெற்றிருந்தால் அல்லது அதற்கான நடைமுறை சென்று கொண்டிருந்தால் அது ஒடதுக்கீட்டில் பாதிப்பை ஏற்படுத்தாது. அவர்களுடைய வேலையை பாதிக்காது இவ்வாறு மேற்கு வங்காள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ள நிலையில், அதை தங்களால் ஏற்க முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் ஆசிரியர்கள் நியமனம் செல்லாது என மேற்கு வங்காள உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து மேற்கு வங்காள அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் மேற்கு வங்காள உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடைவிதித்தது.
- கடந்த 12ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக வங்கதேசத்தில் இருந்து கொல்கத்தா வந்திருந்தார்.
- காணாமல் போன அன்வருல் அசீமை போலீசார் தேடி வந்தனர்.
மேற்கு வங்கத்தில் மாயமான வங்கதேசம் எம்.பி அன்வருல் அசீம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எம்.பி அன்வருல் அசீம், கடந்த 12ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக வங்கதேசத்தில் இருந்து கொல்கத்தா வந்திருந்தார்.
ஆனால், 14ம் தேதிக்கு பிறகு, அன்வருல் அசீமை தொடர்பு கொள்ள இயலாக நிலையில், செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
காணாமல் போன அன்வருல் அசீமை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நியூ டவுன் பகுதியில் அன்வருல் அசீம் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
வங்கதேச எம்.பி., கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் வங்கதேச தலைநகர் தாக்காவில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மம்தா பானர்ஜி, என்ன விலைக்கு உங்களை விற்கிறீர்கள்?
- மம்தா பானர்ஜி ஒரு பெண்தானா? என்ற கேள்வி அடிக்கடி எனக்குள் எழுகிறது.
2018 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகிய அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் சேர்ந்தார்.
பாஜகவில் சேர்ந்த அபிஜித் தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில் மே 15 அன்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அபிஜித், "மம்தா பானர்ஜி, என்ன விலைக்கு உங்களை விற்கிறீர்கள்? உங்கள் விலை ₹10 லட்சம். ஏனென்றால் நீங்கள் மேக் அப் போடுகிறீர்கள். மம்தா பானர்ஜி ஒரு பெண்தானா? என்ற கேள்வி அடிக்கடி எனக்குள் எழுகிறது" என்று இழிவாக பேசியுள்ளார்.
இதன் அடிப்படையில், பாஜக வேட்பாளரான அபிஜித் கங்கோபாத்யாய் தேர்தல் பரப்புரை செய்ய 24 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று மாலை 5 மணியிலிருந்து இந்த தடை அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அபிஜித் போட்டியிடும் தம்லுக் தொகுதிக்கு வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
- கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைந்துள்ளார்.
- அபிஜித் பாஜக சார்பாக தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
2018 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், பாஜகவில் சேரவிருப்பதாக அபிஜித் கங்கோபாத்யாய் அறிவித்து பாஜகவில் சேர்ந்தார்.
பாஜகவில் சேர்ந்த அபிஜித் தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில் மே 15 அன்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறித்து அபிஜித் கீழ்த்தரமான விமர்சனம் செய்த்தாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் அடிப்படையில், பாஜக வேட்பாளரான அபிஜித் கங்கோபாத்யாய் தேர்தல் பரப்புரை செய்ய 24 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று மாலை 5 மணியிலிருந்து இந்த தடை அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அபிஜித் போட்டியிடும் தம்லுக் தொகுதிக்கு வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
- மம்தா சகோதரர் ஹவுரா எம்.பி. மீது அதிருப்தியில் இருந்தார்.
- பா.ஜனதாவில் இணைய இருப்பதாகவும் வதந்தி பரவியது.
மக்களவை தேர்தலின் ஐந்தாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று மேற்கு வங்காள மாநிலம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்துள்ளது.
இதில் மேற்கு வங்காளத்தின் ஹவுராவும் ஒன்று. இந்த தொகுதியில் மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் சகோதரர் ஸ்வாபன் பானர்ஜிக்கு (பாபுன்) வாக்கு உள்ளது.
இன்று தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக பாபுன் வாக்குச்சாவடிக்கு சென்றார். அப்போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
இது தொடர்பாக பாபுன் கூறுகையில் "நான் என்னுடைய வாக்கை செலுத்துவதற்காக சென்றேன். அப்போது என்னுடைய வாக்கு வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தெரியவந்தது. நான் பல ஆண்டுகளாக வாக்கு செலுத்தியிருக்கிறேன். இந்த வருடம் வாக்களிக்க முடியாததால் ஏமாற்றம் அடைகிறேன். ஜனநாயக நாட்டின் குடிமகனாக எனக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது" என்றார்.
"தேர்தல் ஆணையம் முழு விவரத்தையும் கவனித்து வருகிறது. இது ஏன் நடந்தது என்பது குறித்து விளக்கம் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் வழங்க முடியும்" என திரிணாமுல் காங்கிரஸ் செய்து தொடர்பாளர் ஷாந்தனு சென் தெரிவித்துள்ளார்.
ஹவுரா எம்.பி.யாக இருக்கும் பிரசுன் பானர்ஜி மீது தனது அதிருப்தியை பாபுன் தெரிவித்திருந்தார். இதனால் சுயேசட்சையாக போட்டியிடுவார் என செய்தி வெளியானது. மேலும், பா.ஜனதாவில் இணைய இருப்பதாகவும் வதந்தி பரவியது.
பாபுன் மேற்கு வங்காள மாநில ஒலிம்பிக் சங்க தலைவர், பெங்கால் ஹாக்கி சங்க தலைவர், பெங்கால் குத்துச்சண்டை சங்க செயலாளராக உள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் விளையாட்டுப் பிரவு பொறுப்பாளராகவும் உள்ளார்.
- தனக்கான கடமையில் தேர்தல் ஆணையம் கேவலமாக தோற்றிருக்கிறது.
- தேர்தல் ஆணையம் செயல்படவில்லை எனில், நீதிமன்றம் தலையிட வேண்டி வரும்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எவ்வித இழிவான விளம்பரங்களையும் பாஜக வெளியிட கூடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் குறித்து அவதூறு செய்யும் வகையில் பாஜக இழிவான விளம்பரங்களை வெளியிட்டு வருவதற்கு எதிராக அக்கட்சி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில், "திரிணாமுல் காங்கிரஸை கொச்சைப்படுத்தும் வகையில் பாஜக வெளியிட்ட விளம்பரங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. தனக்கான கடமையில் தேர்தல் ஆணையம் கேவலமாக தோற்றிருக்கிறது. தேர்தல் ஆணையம் செயல்படவில்லை எனில், நீதிமன்றம் தலையிட வேண்டி வரும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸின் புகாரை, தேர்தல் ஆணையம் உரிய நேரத்திற்குள் தீர்த்திருக்க வேண்டும். தேர்தலுக்கு பின் புகார்களை தீர்ப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை" எனவும் நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
தேர்தல்களின் போது, ஊடகங்கள் எந்தவொரு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சிக்கு எதிராக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், பாஜகவுக்கு எதிரான புகார்களை கிடப்பில் போடும் தேர்தல் ஆணையம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்கிற அர்த்தத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கின் முகவரி @ECISVEEP என்பதிலிருந்து ECISLEEP என மாற்றப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
Official twitter handle of @ECISVEEP should be changed to ECISLEEP.
— Mahua Moitra (@MahuaMoitra) May 20, 2024
- வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
- அமேதி, ரேபரேலி, பைசாபாத் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்றத் தொகுதிகளில் தோ்தல் நடைபெறுகிறது.
நாட்டில் புதிய அரசுடன் 18-வது பாராளுமன்றத்தை தோ்வு செய்ய 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் (ஏப்ரல்) 19, 26, இந்த மாதம் (மே) 7, 13-ந்தேதிகளில் முதல் 4 கட்ட தேர்தல் நடத்தப்பட்டது. இந்த 4 கட்டத் தோ்தல்களில் சராசரியாக 66.95 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 379 இடங்களுக்கு தோ்தல் நிறைவடைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) 5-ம் கட்ட தேர்தல் 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது. வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அமேதி, ரேபரேலி, பைசாபாத் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்றத் தொகுதிகளில் இத்தோ்தல் நடைபெறுகிறது. இதில் பைசாபாத் பாராளுமன்றத் தொகுதி, அயோத்தி நகரை உள்ளடக்கியதாகும்.
5-ம் கட்டமாக இன்று நடந்து வரும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்காளத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன. இந்த தொகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

49 தொகுதிகளிலும் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவை காண முடிந்தது. உத்தரபிரதேசத்தில் முந்தைய 4 கட்ட தேர்தல்களை விட இன்று அதிகளவு வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இதை அடுத்து, காலை 9 மணி நிலவரப்படி 5-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 10.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
பீகார் - 8.86 சதவீதம்
உத்தரபிரதேசம்- 10.88 சதவீதம்
ஜம்மு & காஷ்மீர் - 7.63 சதவீதம்
ஜார்க்கண்ட் - 11.68 சதவீதம்
லடாக்- 10.51 சதவீதம்
மகாராஷ்டிரா - 6.33 சதவீதம்
ஒடிசா- 6.87 சதவீதம்
மேற்கு வங்காளம்- 15.35 சதவீதம்
#LokSabhaElections2024 | 10.28% voter turnout recorded till 9 am, in the fifth phase of elections.
— ANI (@ANI) May 20, 2024
Bihar 8.86%
Jammu & Kashmir 7.63%
Jharkhand 11.68%
Ladakh 10.51%
Maharashtra 6.33%
Odisha 6.87%
West Bengal 15.35% pic.twitter.com/bNP5RqOg7d
#WATCH | J&K: Long queues of voters at a polling booth in Ichgam, Budgam as they await their turn to cast their vote.
— ANI (@ANI) May 20, 2024
Voting is being held for Baramulla Parliamentary constituency today. The constituency sees a contest among NC's Omar Abdullah, PDP's Mir Mohammad Fayaz and… pic.twitter.com/uUltMfPTok
- ஆளும் திரிணாமுல் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
- தொடக்கத்திலிருந்தே பாஜகவை கடுமையாக மம்தா சாடிவந்த நிலையில் அது தேர்தல் காலத்திலும் எதிரொலித்து வருகிறது.
மேற்க மாநிலத்தில் பராக்பூர், ஹவ்ரா, ஹூக்ளி உள்ளிட்ட முக்கிய தொகுதிகள் வரும் மே 20 ஆம் தேதியன்று 5 ஆம் கட்ட தேர்தல் வாக்குபதிவில் இடம்பெற்றுள்ள. இந்நிலையில் ஆளும் திரிணாமுல் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த தேர்தலுக்காக முதலில் இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த அவர், பின் அதிலிருந்து வெளியேறி, வெளியில் இருந்து இந்தியா கூட்டணிக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று அறிவித்தார். தொடக்கத்திலிருந்தே பாஜகவை கடுமையாக மம்தா சாடிவந்த நிலையில் அது தேர்தல் காலத்திலும் எதிரொலித்து வருகிறது. சந்தேஷ்க்காளி விவகாரதை கையில் எடுத்துள்ள பாஜக அதை முன்னிலைப் படுத்தி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கோதக் பகுதியில் இன்று (மே 18) பிரச்சாரம் செய்த மம்தா, இந்த தேர்தலில் பாஜக 200 சீட் கூட ஜெயிக்காது என்றும் இந்தியா கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என்றும் தெரிவித்துள்ளார். பாஜக 400 இடங்களில் உறுதியாக வெல்லும் என்று மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரங்களில் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
- அக்டோபர் 1998 இல் கேசோரம் வாரியத்தில் இணைந்த கைதன், தனது தந்தையும் தொழிலதிபருமான பி.கே. பிர்லாவின் மறைவைத் தொடர்ந்து ஜூலை 2019 இல் தலைவர் பொறுப்பை ஏற்றார்.
- கைதானின் அர்ப்பணிப்பு போர்டுரூமைத் தாண்டி கல்வித் துறைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பி.கே. பிர்லா குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கேசோரம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், அசோக் ஹால் குழுமத்தின் அறங்காவலருமான மஞ்சுஸ்ரீ கைதான் காலமானதாக பி கே பிர்லா குழுமம் அறிவித்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த மஞ்சுஸ்ரீ கைதான் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 68.
அக்டோபர் 1998 இல் கேசோரம் வாரியத்தில் இணைந்த கைதன், தனது தந்தையும் தொழிலதிபருமான பி.கே. பிர்லாவின் மறைவைத் தொடர்ந்து ஜூலை 2019 இல் தலைவர் பொறுப்பை ஏற்றார்.
கைதானின் அர்ப்பணிப்பு போர்டுரூமைத் தாண்டி கல்வித் துறைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பி.கே. பிர்லா குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அசோக் ஹால் குழும பள்ளிகளுடனான அவரது நான்கு தசாப்த கால தொடர்பு, சமூகத்தின் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த பெண் குழந்தைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, இளம் மனங்களை வளர்ப்பதில் அவர் அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்றாக உள்ளது என்று குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மம்தா பானர்ஜி வெளியில் இருந்து (கூட்டணி) அல்லது உள்ளே இருந்து என செய்வார் என்பது எனக்குத் தெரியாது.
- அவர் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் பா.ஜனதாவுக்குக் கூட செல்ல முடியும்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசை தோற்கடிக்க நாட்டின் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது.
இந்த சிக்கலால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டி என அறிவித்தார். இதனால் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ்- காங்கிரஸ்- பா.ஜனதா இடையே முத்தரப்பு போட்டி நிலவுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தவிர்த்து ஏறக்குறைய மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை சுமூகமாக தீர்த்துக் கொண்டது.
தற்போது நான்கு கட்ட வாக்குப்பதிகள் முடிவடைந்து விட்டனர். இந்தியா கூட்டணி தங்களுக்குதான் வாய்ப்பு என கூறி வருகிறது. அதேவேளையில் 3-வது முறையாக பிரதமாக பதவி ஏற்பது உறுதி என மோடி திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணி 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன், மம்தா பானர்ஜி மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆதிர் ரஞ்சன் கூறியதாவது:-
மம்தா பானர்ஜி வெளியில் இருந்து (கூட்டணி) அல்லது உள்ளே இருந்து என செய்வார் என்பது எனக்குத் தெரியாது. நீங்கள்தான் அவரிடம் கேட்க வேண்டும். ஆனால் அவர் மீது தனக்கு நம்பிக்கை இல்லை. அவர் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் பா.ஜனதாவுக்குக் கூட செல்ல முடியும். இந்தியா கூட்டணி பெங்கால் காங்கிரசை கணக்கில் கொள்ளாது என்கிறார். இந்தியா கூட்டணி பற்றி அவர் புகார் கூற இருந்தால், அது உருவானபோது எழுப்பியிருக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியை அழித்து விடுவதாகவும், காங்கிரஸ் 40 தொகுதிகளை தாண்டாவது எனவும் பா.ஜனதா கூறியது. தற்போது மம்தா சொல்வதின் அர்த்தம் காங்கிரஸ், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரப்போகிறது என்பதுதான்.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு 2019-ல் நீக்கிய பின்னர், காஷ்மீரில் அமைதி திரும்பியது.
- ஆனால் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தை காண்கின்றோம்.
பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா இன்று மேற்கு வங்காள மாநிலம் செரம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு 2019-ல் நீக்கிய பின்னர், காஷ்மீரில் அமைதி திரும்பியது. ஆனால் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தை காண்கின்றோம். முன்னதாக இங்கு அசாதி (Azaadi- சுதந்திரம்) கோஷத்தை இங்கே கேட்டோம். தற்போது அதே கோஷத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கேட்கிறோம். முன்னதாக இங்கே கல் எறிதல் சம்பவங்கள் (ராணுவ வீரர்கள், பாதுகாப்புப்படை வீரர்கள் மீது) நடைபெற்றது. தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷமீரில் நடைபெறுகிறது.
மணிசங்கர் அய்யர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் அணுகுண்டு வைத்திருப்பதால் அதை செய்யக்கூடாது என்கிறார்கள். ஆனால், இந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. அதை நாங்கள் எடுப்போம் எடுத்துக் கொள்வோம் என்பத நான் சொல்கிறேன்.
ஊடுருவியவர்கள் அல்லது சிஏஏ வேண்டுமா என்பதை பெங்கால் முடிவு செய்யும். ஜிகாத்திற்கு வாக்களிக்க வேண்டுமா அல்லது விகாஸ்க்கு வாக்கு அளிக்க வேண்டுமா என்பதை பெங்கால் முடிவு செய்யும். மம்தா பானர்ஜி சிஏஏ-விற்கு எதிராக உள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்காக ஊடுருவியர்வர்கள ஆதரித்து பேரணி மேற்கொள்கிறார்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
- ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டி கொல்கத்தாவில் நடந்தது.
- இதில் கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
கொல்கத்தா:
ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடியும் தறுவாயில் உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதுவரை கொல்கத்தா அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மும்பை, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளன.
இதற்கிடையே, ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மழையால் போட்டி 16 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், மைதானத்தில் விழுந்த பந்தை ரசிகர் ஒருவர் மறைத்து எடுத்துச் செல்வதையும், அதை கவனித்த போலீசார் அவரிடம் இருந்து பந்தை பறிமுதல் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ரசிகருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்துகள் பதிவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
A fan tried to steal the match ball, but got caught. ?pic.twitter.com/99bmVET9tM
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 14, 2024






