என் மலர்
உத்தரப் பிரதேசம்
- அரசு மகளிர் மருத்துவமனையில் சீருடை அணிந்த செவிலியர்கள் குரங்குடன் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
- சம்பவம் தொடர்பாக ஐந்து மருத்துவர்களைக் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.
உத்தரபிரதேசம் மாநில மருத்துவமனை ஒன்றில் பணியில் இருக்கும் போது செவலியிர்கள் குரங்குடன் விளையாடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து வீடியோ எடுத்து வெளியிட்ட 6 செவிலியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பஹ்ரைச்சில் உள்ள அரசு மகளிர் மருத்துவமனையில் சீருடை அணிந்த செவிலியர்கள் குரங்குடன் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆனது. மகப்பேறு பிரிவில், பணி நேரத்தில் குரங்குக் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்த சம்பவம் விமர்சனத்துக்குள்ளானது.
வைரலான வீடியோவை பார்த்த, மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் இயக்குநர் 6 செவிலியர்களையும் சஸ்பெண்ட் செய்தார். இது குறித்து அவர் சுற்றறிக்கையில், செவிலியர்கள் பணியில் இருக்கும் போது குரங்கை வைத்து ரீல்ஸ் எடுத்து பணியில் அலட்சியம் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி மருத்துவக் கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வீடியோவில் உள்ள 6 செவிலியர்களும் சஸ்பென்ட் செய்யப்படுகின்றனர், என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக ஐந்து மருத்துவர்களைக் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.
- காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத், மீட்பு பணிக்காக உயர் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இன்று அதிகாலையில் டபுள் டக்கர் பேருந்து ஒன்று பால் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.
லக்னோ- ஆக்ரா விரைவுச் சாலையில் பீகாரில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த டபுள் டக்கர் பேருந்து, பால் கண்டெய்னர் லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின்படி, விபத்தில் 18 பேர் இறந்திருக்கலாம் என்றும் 19 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத், மீட்பு பணிக்காக உயர் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
- இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழு தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
- ஜூலை 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த வாரம் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

நிகழ்ச்சியில் 88,000 பேர் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 2.5 லட்சம் பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இதுவரை 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழு தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில், அனுமதிக்கபட்டத்தை விட அதிகம் பேர் கலந்துகொண்டதே இந்த கூட்டநெரிசலுக்கு முக்கிய காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சி முடியும் தருவாயில் போலே பாபா ஏறிச் சென்ற காரில் இருந்து கிளம்பிய புழுதியை எடுப்பதற்காக மக்கள் நெறுக்கிப்பிடித்துள்ளனர்.
அவ்வாறு முன்னேறியவர்களை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பிடித்துத் தள்ளியுள்ளனர். இதனால் பலர் நிலை தடுமாறி விழுந்துள்ளனர். விழுந்தவர்கள் மீது மற்றவர்கள் ஏறி ஓடியதால் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலை நேரில் பார்த்த சுதிர் பிரதாப் சிங் என்பவர், " தனது காலடி மண்ணை எல்லோரும் எடுத்துக் கொள்ளுமாறு போலே பாபா அழைத்தார். அதன்பின் கூட்டத்தில் அனைவரும் அந்த மண்ணை எடுக்க முண்டியடித்துச் செல்ல, ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதுவே பலரின் உயிரிழப்புக்குக் காரணம். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார். உள்ளூர் மக்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர்" என்று அவர் வாக்குமூலம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ஹத்ராஸ் விபத்து குறித்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு, வரும் ஜூலை 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

- கடந்த ஜூன் 2 ஆம் தேதி தூபேவை அவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடிதித்துள்ளது.
- அவை தன்னை கடிக்கப்போகிறது என்று தன்னால் முன்கூட்டியே உணர முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
பாம்புகள் வஞ்சம் வைத்து கடிக்கும் என்பது வாய்மொழிக் கதையாக மக்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று. ஆனால் கதைகளேயே மிஞ்சும் வகையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நடந்து வரும் சம்பவம் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்நதவர் ௨௪ வ்யாவிகாஸ் தூபே. கடந்த 35 நாட்களில் மட்டுமே இவர் 6 முறை விஷப் பாம்புகளிடம் இருந்து கடி வாங்கியுள்ளார்.
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தூபேவை அவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடிதித்துள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார். இவ்வறாக ஜூன் 2 முதல் ஜூலை 7 வரையிலான காலகட்டத்தில் 6 முறை தூபேவை பாம்புகள் கடித்துள்ளன. வீட்டில் இருந்தால் பாம்பு கடிக்கிறது என்று அவரை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் பெற்றோர். ஆனால் உறவினர் வீட்டில் வைத்தும் அவரை 5 வது முறையாக பாம்பு கடித்துள்ளது.

அதன்பின் சிகிச்சை பெற்று அவர் தனது வீட்டுக்கே திரும்பிய நிலையில் நேற்று அவரை மீண்டும் பாம்பு கடித்துள்ளது. தற்போது 6 வது பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று உயிர்பிழைத்துள்ள தூபே பேசுகையில், தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன என்றும் அவை தன்னை கடிக்கப்போகிறது என்று தன்னால் முன்கூட்டியே உணர முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
- ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர்.
- கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர்.
80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் போலே பாபா மீது வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.
ஹத்ராஸில் 121 பேரை பலிகொண்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு பிறகு போலே பாபா தலைமறைவாக இருந்தார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு இரங்கல் வீடியோ வெளியிட்டிருந்தார்.
அந்த இரங்கல் வீடியோவில், இந்த நிகழ்வால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், இந்த வலியை தாங்குவதற்கான சக்தியை கடவுள் நமக்கு தரட்டும். அரசாங்கத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இந்த அசம்பாவிதத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று நான் நம்புகிறேன். எனது வழக்கறிஞர் மூலம் கமிட்டி நிர்வாகிகளை தொடர்புகொண்டு படுகாயமடைந்த உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு பக்கத்துணையாக நிற்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று பேசியுள்ளார்.
இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலை நேரில் பார்த்த சுதிர் பிரதாப் சிங் என்பவர் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
"ஹத்ராஸ் ஆன்மிக கூட்டத்தில், தனது காலடி மண்ணை எல்லோரும் எடுத்துக் கொள்ளுமாறு போலே பாபா அழைத்தார். அதன்பின் கூட்டத்தில் அனைவரும் அந்த மண்ணை எடுக்க முண்டியடித்துச் செல்ல, ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதுவே பலரின் உயிரிழப்புக்குக் காரணம். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார். உள்ளூர் மக்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர்" என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதற்கு முன்னதாக, "ஹத்ராஸ் சம்பவம் விபத்து அல்ல. சமூக விரோதிகளின் சதி செயல்" என போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
- இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 2.5 லட்சம் ரூபாய் வரை பயனார்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது.
- 11 பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட 40,000 பணத்தை பெற்றுக்கொண்டு தங்களது காதலர்களுடன் ஓடிப் போயுள்ளனர்.
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள பல்வேறு மக்கள் வீடுகளை பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 2.5 லட்சம் ரூபாய் வரை பயனார்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் இந்த திட்டத்தை பல பெண்கள் தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் திருமணமான 11 பெண்கள் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் தவணை தொகையை பெற்றுக் கொண்டு தங்களது காதலர்களுடன் ஓடியுள்ளார். இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்துள்ளது. இம்மாவட்டத்தில் 2,350 பயனாளர்களுக்கு வீடு காட்டும் திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்பட்டுள்ளது. அதில், 11 பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட 40,000 பணத்தை பெற்றுக்கொண்டு தங்களது காதலர்களுடன் ஓடிப் போயுள்ளனர்.
இந்த விவகாரத்தை அடுத்து இம்மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இரண்டாம் தவணை பணம் கொடுப்பத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
- மிக மோசமாக சாலைகள் போடப்படுவதால் தான் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுகிறது.
- உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழையால் ராமர் கோயிலில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் பள்ளத்தால் ரோட்டின் ஒருபுறத்தில் இருந்த கால்வாய் தண்ணீர் மறுபக்கத்தில் உள்ள வயல்வெளிகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மிக மோசமாக சாலைகள் போடப்படுவதால் தான் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுகிறது என்று அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அண்மையில் உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழையால் ராமர் கோவிலில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- தேவபிரகாஷ் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக போலீசார் அறிவித்தனர்.
- தலைநகர் டெல்லியில் இருந்த தேவபிரகாஷை போலீசார் நேற்று நள்ளிரவு கைதுசெய்தனர்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே புல்ராய் கிராமத்தில் கடந்த 2-ம் தேதி சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. அந்த நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியானார்கள்.
இதுதொடர்பாக சிக்கந்திரா ராவ் போலீசார் பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின் 105 மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 2 பெண் உள்பட 6 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
ஆன்மிக சொற்பொழிவுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட தேவபிரகாஷ் மதுகர் தலைமறைவானார். அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருவதாக மாநில அரசு உயர் அதிகாரி கூறினார்.
இதற்கிடையே, தேவபிரகாஷ் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக உ.பி போலீசார் அறிவித்தனர்.
இந்நிலையில், தலைமறைவான தேவபிரகாஷ் டெல்லியின் உத்தம்நகரின் நஜப்கார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உ.பி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு அங்கு சென்ற போலீசார் தேவபிரகாஷை கைதுசெய்தனர். தொடர்ந்து தேவபிரகாசை உ.பி. போலீசார் ஹத்ராசுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறனர்.
#WATCH | Hathras stampede incident: Nipun Aggarwal, Superintendent of Police Hathras says, "See, the SOG of Hathras district arrested Dev Prakash Madhukar yesterday evening in from Delhi's Najafgarh. They have been questioned... The list of donors is being compiled to see from… pic.twitter.com/jKvTLy1pw8
— ANI (@ANI) July 6, 2024
- இந்த சம்பவத்தில் 121 பேர் உயிரிழந்தது மிகவும் கவலை அளிக்கிறது.
- இவரை போன்ற மற்ற பாபாக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் போலெ பாபா ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நாட்டில் உள்ள ஏழைகள், தலித்துகள், ஒடுக்கப்பட்டோர் போன்றோர் தங்கள் வறுமையையும் மற்ற அனைத்துத் துன்பங்களையும் போக்குவதற்கு, ஹத்ராஸின் போலே பாபா போன்ற பல பாபாக்களின் மூடநம்பிக்கையால் தவறாக வழிநடத்தப்பட்டு, தங்கள் துயரத்தையும் துன்பத்தையும் அதிகரிக்கக் கூடாது.
மாறாக, பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் காட்டிய பாதையில் ஆட்சியைப் பிடித்து தங்கள் தலைவிதியை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த சம்பவத்தில் 121 பேர் உயிரிழந்தது மிகவும் கவலை அளிக்கிறது. ஹத்ராஸ் சம்பவத்தில், குற்றவாளியான போலே பாபா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவரை போன்ற மற்ற பாபாக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்" என்று பதிவிட்டுள்ளார்.
- சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக தற்போது வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார் போலே பாபா
- போலே பாபாவின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 121 பேரை பலிகொண்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்திய போலே பாபா சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக தற்போது வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில், இந்த நிகழ்வால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், இந்த வலியை தாங்குவதற்கான சக்தியை கடவுள் நமக்கு தரட்டும். அரசாங்கத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இந்த அசம்பாவிதத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று நான் நம்புகிறேன். எனது வழக்கறிஞர் மூலம் கமிட்டி நிர்வாகிகளை தொடர்புகொண்டு படுகாயமடைந்த உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு பக்கத்துணையாக நிற்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக 88,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட நிகழ்ச்சியில் 2.5 லட்சம் பேர் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேற மற்றோரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுக்க எதிர்புறமாக முன்னேறியதால் இந்த விபத்து நிகழ்ச்த்துள்ளது என்று தெரியவந்தது. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே போலே பாபா தனது காரில் அங்கிருந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.
இந்த சம்பவம் தொடர்பாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மதுக்கர் என்ற நபர் இன்று போலீசிடம் சரணடைந்துள்ளார். போலே பாபாவின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
- உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ஷாஹி ஈத்கா மசூதி அமைந்துள்ளது.
- இந்த வழக்கை நீதிபதி மயங்க் குமார் ஜெயின் விசாரித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. அதையொட்டி ஷாஹி ஈத்கா மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி கடந்த 1669-70-ம் ஆண்டில் அப்போதைய முகலாய மன்னர் ஓளரங்க சீப் உத்தரவின்படி கிருஷ்ண ஜென்மபூமி பகுதியில் கட்டப்பட்டது என்று புகார் எழுந்தது.
இதுகுறித்து மதுரா கோர்ட்டில் இந்து அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கிருஷ்ண ஜென்மபூமியில் இருந்த தாகூர் கேசவ் தேவ் சிலையின் எச்சங்கள் ஆக்ராவில் உள்ள ஜமா மசூதியில் புதைக்கப்பட்டதாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், "1670 ஆம் ஆண்டு மதுராவில் உள்ள கேசவ் தேவ் கோவில் இடித்து விட்டு ஆக்ராவில் உள்ள ஜமா மசூதியின் கீழ் சிலையின் எச்சங்கள் புதைக்கப்பட்டுள்ளது. ஆதலால் மசூதியை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வை மேற்பார்வையிட ஆணையராக வக்கீல் ஒருவரை இந்திய தொல்லியல் துறை நியமிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த வழக்கை நீதிபதி மயங்க் குமார் ஜெயின் விசாரித்தார். அப்போது இந்த மனு தொடர்பாக இந்திய தொல்லியல் துறை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
- பள்ளி நிர்வாகம் அவரை நீக்கிவிட்டு புதிய தலைமை ஆசிரியையை நியமித்துள்ளது.
- தனது நாற்காலியை விட்டுக்கொடுக்க மனமில்லாத பருல், தலைமை ஆசிரியை அறையை பூட்டிவிட்டு உள்ளேயே இருந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜில் பிஷப் ஜான் பெண்கள் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் பருல் பால்தேவ் என்ற பெண்மணி தலைமை ஆசிரியையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி நிர்வாகம் அவரை நீக்கிவிட்டு புதிய தலைமை ஆசிரியையை நியமித்துள்ளது.
ஆனால் தனது நாற்காலியை விட்டுக்கொடுக்க மனமில்லாத பருல், தலைமை ஆசிரியை அறையை பூட்டிவிட்டு உள்ளேயே இருந்துள்ளார். இதனால் பள்ளி தாளாளர் உட்பட பிற பணியாளர்கள் ஒன்றாக திரண்டு வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே நாற்காலியில் அமர்ந்திருந்த பருலை வலுக்கட்டாயமாக அகற்ற முயன்றுள்ளனர்.
ஆனால் நாற்காலியில் இருந்து நகராமல் இருந்த பருலை பிடித்து இழுத்து அகற்றி அந்த நாற்காலியில் புதிய தலைமை ஆசிரியரையை அமர வைத்துள்ளனர். தன்னிடம் கடுமையாக நடந்த கொண்டவர்கள் மீது பருல் போலீசில் புகார் அளித்துள்ளார். பள்ளியின் தலைமையாசிரியையிடம் நிர்வாகம் தகாத நடந்துகொண்ட இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவு கண்டங்களை குவித்து வருகிறது.






