என் மலர்
இந்தியா

'நைட்டு 7 மணிக்கு வெளிய என்ன வேல?' .. பெண்ணின் பாலியல் துன்புறுத்தல் புகாரை ஏற்க மறுத்த போலீஸ்
- ஏன் நீங்கள் அந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றீர்கள் என்று கேட்ட போலீசார் எப்.ஐ.ஆர் பதிய மறுத்துள்ளனர்.
- இதனால் அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி வீடியோவில் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் கொடுக்க வந்த பெண்ணிடம், இரவு 7:30 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றதாலதான் துன்புறுத்தலுக்கு ஆளாகியுளீர்கள் எனக் கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் செக்டார் 48 பகுதியில் இளம்பெண் ஒருவர் இரவு 7.30 மணியளவில் மழையை வீடியோ எடுக்க வீட்டின் வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர், தன்னை தகாத முறையில் தொட்டு, தான் அணிந்திருந்த ஷார்ட்ஸை கிழித்ததாக போலீசில் புகார் அளிக்க சென்றுள்ளார். அவரிடம், ஏன் நீங்கள் அந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றீர்கள் என்று கேட்ட போலீசார் எப்.ஐ.ஆர் பதிய மறுத்துள்ளனர்.
இதனால் அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி வீடியோவில் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.






