என் மலர்
உத்தரப் பிரதேசம்
- இச்சம்பவம் அக்டோபர் 25ம் தேதி நள்ளிரவில் நடந்துள்ளது.
- இணையத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரு கடைக்கு வெளியே வைத்திருந்த பூந்தொட்டியை பி.எம்.டபிள்யூ. காரில் வந்த பெண் ஒருவர் திருடும் சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பி.எம்.டபிள்யூ. காரில் இருந்து வெளியே வரும் பெண் ஒருவர் கடைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பூந்தொட்டியை திருடி காருக்குள் வைக்கிறார். இதனை பார்த்த சிலர் அப்பெண்ணின் காரை வழிமறித்து இதுகுறித்து கேட்டபோது தினமும் ஒரு பூந்தொட்டியை எடுத்து செல்வேன் என்று அவள் கூறியுள்ளார்.
இந்த பெண் ஏற்கனவே அக்கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த இரண்டு பூந்தொட்டிகளை திருடிச் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இச்சம்பவம் அக்டோபர் 25ம் தேதி நள்ளிரவில் நடந்துள்ளது. இணையத்தில் இந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் அப்பெண்ணை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
எனினும், இந்த சம்பவம் குறித்து இதுவரை போலீசாரிடம் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.
- விவசாய கழிவுகளை எரிப்பது தற்போதைய காற்று மாசு அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
- நொய்டாவில் சமீப நாட்களாகக் காற்றில் நச்சுத்தன்மை கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காற்று மாசு அளவு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கையை மீறி சென்றுள்ளது.
விவசாய கழிவுகளை எரிப்பது தற்போதைய காற்று மாசு அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பஞ்சாபில் விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. இந்நிலையில் டெல்லிக்கு மிக அருகில் உள்ள உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் சமீப நாட்களாகக் காற்றில் நச்சுத்தன்மை கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அளவு காற்று மாசு ஏற்படப் பாகிஸ்தான் தான் காரணம் என உ.பி. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக பேசிய உ.பி. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல தலைவர் குப்தா, நொய்டா, காசியாபாத், டெல்லி உள்ளிட்ட இடங்களில் காற்று மாசு ஏற்பட பாகிஸ்தானைத் தான் குற்றம் சொல்ல வேண்டும்.
பாகிஸ்தான் விவசாயிகள் கழிவுகளை எரிப்பதாலேயே இந்த அளவு மாசு ஏற்படுகிறது என்று தெரிவித்தார். உ.பி. பகுதிகளில் ஏற்படும் காற்று மாசுக்கு 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாகிஸ்தான் மீது உ.பி. அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டுவது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. .
- கொலையான தினத்தன்று ஏக்தா ஜிம்முக்கு வந்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.
- அஜய் தேவ்கான் நடித்த திரிஷ்யம் படத்தை பலமுறை பார்த்தேன்.
உத்தரப் பிரதேசத்தில் நீதிபதி பங்களா அருகே புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கடந்த ஜூன் 24 அன்று சுமார் 4 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன அந்த பெண் தொழிலதிபர் ராகுல் குப்தா என்பவரின் மனைவி ஏக்தா குப்தா [32 வயது] ஆவார்.
அவர் சென்றுகொண்டிருந்த உடற்பயிற்சி நிலையத்தின் ஜிம் டிரைனர் விமல் சோனி என்பவரால் கொலை செய்யப்பட்டதும் அடுத்தகட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. கான்பூர் நகரின் கிரீன் பார்க் பகுதியில் செயல்பட்டு வந்த அந்த ஜிம்முக்கு சென்ற ஏக்தா குப்தா அங்கு டிரைனரான பணிபுரிந்து வந்த விமல் சோனி மீது காதல் வயப்பட்டுள்ளார்.
ஆனால் விமல் சோனிக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடந்ததால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஜூன் 24 அன்று ஜிம்முக்கு வந்த ஏக்தாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அவரது கழுத்தில் குத்தியுள்ளார் விமல். தொடர்ந்து அவர் மயங்கி விழவே அவரை கொலையே செய்துள்ளார். கொலையான தினத்தன்று ஏக்தா ஜிம்முக்கு வந்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.
ஏக்தாவை உடலை அப்பகுதியில் அரசு அதிகாரிகள் குடியிருக்கும் கான்பவுண்ட் பகுதிக்குள் கொண்டு சென்று மாவட்ட நீதிபதி பங்களா அருகே புதைத்துள்ளார். இந்நிலையில் தற்போது விமல் போலீசாரால் விசாரிக்கப்பட்ட நிலையில் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவந்துள்ளது.
அதாவது, தான் அஜய் தேவ்கான் நடித்த திரிஷ்யம் படத்தை பலமுறை பார்த்ததாகவும் அதில் போலீஸ் ஸ்டேசன் தரைக்கு கீழ் உடலை புதைக்கும் காட்சியை பார்த்து அதுபோல அரசு அதிகாரிகள் இருக்கும் பகுதியில் யாரும் உடலை தேட மாட்டார்கள் என்று கருதி அங்கு புதைத்ததாக விமல் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த படத்தில் வருவதுபோல் தனது சிம் கார்டுகளையும் அப்புறப்படுத்தியதாகவும் விமல் வாக்குமூலம் அளித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படம் ஹிந்தியில் அதே பெயரிலும் தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது .
- கடந்த 2022-ம் ஆண்டு 15 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
- தீபத்திருவிழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட உள்ளது.
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு கடந்த 2017-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் தீபோத்ஸவ் எனப்படும் தீபத்திருவிழாவை கொண்டாடி வருகிறது.
இதையொட்டி அயோத்தி சரயு நதிக்கரையில் 2017-ம் ஆண்டு 51 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. அதன் பிறகு 2019-ம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள், 2020-ம் ஆண்டு 9 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டன.
கடந்த 2022-ம் ஆண்டு 15 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. கடந்த ஆண்டு 22.3 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு தீபத்திருவிழாவுக்கு அயோத்தி சரயு நதிக்கரையில் உள்ள படித்துறைகளில் 25 லட்சம் முதல் 28 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைக்க உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தீபத்திருவிழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட உள்ளது. நீண்ட காலத்துக்கு எரியும் வகையிலும், சிறப்பு மெழுகு விளக்குகள் கார்பன் உமிழ்வை குறைக்கவும், கோவிலை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும்.
மேலும் தீபத்திருவிழாவையொட்டி அயோத்தி ராமர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தால் அலங்கரிக்கப்படும் ராமர் கோவில் வளாகம், அலங்காரத்திற்காக பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவினருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
அயோத்தியை மதம் மற்றும் நம்பிக்கையின் மையமாக மட்டுமல்லாமல் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் உணர்வின் அடையாளமாகவும் மாற்றுவதை கோவில் அறக்கட்டளை நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும், தீபத்திருவிழாவின் பிரம்மாண்டம் நீடித்த உணர்வை ஏற்படுத்துவதை உறுதி செய்வதற்காக கோவிலின் பவன் தரிசனத்திற்காக வருகிற 29-ந் தேதி முதல் நவம்பர் 1-ந் தேதி நள்ளிரவு வரை திறந்து வைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- எலக்ட்ரிக் ரிக்ஷா கூரையின் மீது அமர்ந்து பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
உத்தரபிரதேசம் முசாபர் நகரில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் எலக்ட்ரிக் ரிக்ஷா கூரையின் மீது உட்கார்ந்த படி பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.
ஆபத்தான முறையில் இம்மாதிரி பயணம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உ.பி. போலீசார் தெரிவித்தனர்.
- கழிவுகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளைச் செய்ய வற்புறுத்தி வந்துள்ளனர்.
- கை கால்களை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு அவரது வாயில் தண்ணீரை ஊற்றி மூச்சிரைக்க வைத்துள்ளனர்
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சிஇல் உலா பாத்ரி கிராமத்தில் வசித்து வருபவர் பாபா காபுதரா [45 வயது]. இவர் விவசாய கூலியாக வேலை பார்த்து வருபவர். அருகில் உள்ள தகோரி கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதியினர் இவரை தங்கள் வீட்டின் உள்ள மாடுகளுக்கு தீவனம் வைப்பது, அவற்றில் கழிவுகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளைச் செய்ய வற்புறுத்தி வந்துள்ளனர்.
ஆனால் பாபா அதை செய்ய மறுத்துள்ளார். இந்நிலையில் தனது கிராமத்தில் வேர்க்கடலை அறுவடை பணியில் ஈடுபட்டிருந்த அவரை தகோரி கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதியை சேர்ந்த நால்வர் காரில் வந்து கடத்திக்கொண்டு தங்கள் கிராமத்து தூக்கி சென்றுள்ளனர்.
அங்கு வைத்து அவரது கை கால்களை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு அவரது வாயில் தண்ணீரை ஊற்றி மூச்சிரைக்க வைத்து சித்திரவதை செய்துள்ளனர். தன்னை விட்டு விடுமாறு பாபா கெஞ்சியும் இரக்கம் காட்டாமல் அவரை சித்ரவதை செய்து சிரித்து கேலி செய்துள்ளனர்.
அதோடு நிற்காமல் அவரது தலையை மொட்டையடித்து ஊர்வலமாக அழைத்து சென்று அதை வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில் இதுதொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
- ரெயிலின் இரும்பு சக்கரங்களுக்கிடையே மரக்கட்டைகள் சிக்கின
- ரெயில் கவிழ்ப்பு சதிவேலைகள் குறித்து தேசிய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருவது
ரெயிலை கவிழ்க்கும் சதி வேலைகள் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ரெயில்வே தண்டவாளங்களில் கம்பிகளை வைப்பது, கேஸ் சிலிண்டர்களை வைப்பது என மர்ம நபர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறனர். பலரின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இந்த விவகாரங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு ரெயில் கவிழ்ப்பு சதி அரங்கேறியுள்ளது. டெல்லி லக்னோ இடையே ஓடும் பரைலி - வாரணாசி எக்ஸ்பிரஸ் [14236 ] ரெயில் வழித்தடத்தில் செல்லும்போது அங்கே போடப்பட்ட இரண்டு மரக்கட்டைகள் மீது இடித்துள்ளது.
ரெயிலின் இரும்பு சக்கரங்களுக்கிடையே அவை சிக்கியதால் சில தூரத்துக்கு ரெயிலானது அவற்றை இழுத்துக்கொண்டு சென்றுள்ளது. நிலைமையை சமாளித்துக்கொண்டு ரெயில் ஓட்டுநர் பாதுகாப்பாக ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

எனவே ரெயில் சேவையில் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால் அந்த தடத்தில் செல்லும் மற்ற ரெயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் மரக்கட்டையை அங்கிருந்து அகற்றினர்.
தடிமனான அந்த மரக்கட்டைகள் இரண்டும் 10 கிலோவுக்கும் அதிகமாக எடை கொண்டது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற ரெயில் கவிழ்ப்பு சதிவேலைகள் குறித்து தேசிய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- உத்தர பிரதேசத்தில் 9 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13-ல் நடைபெறுகிறது.
- இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாதி களம் காண்கிறது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 9 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13-ல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாதி களம் காண்கிறது.
இங்கு 7 தொகுதிகளில் சமாஜ்வாதியும், 2 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடும் என தகவல் வெளியானது.
இந்நிலையில், நடைபெற உள்ள இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளை தகாத முறையில் தொடுவதை மற்றொரு ஆசிரியர் கண்டுபிடித்ததையடுத்து பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
'குட் டச், பேட் டச்' குறித்து தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆசிரியர் ஒருவர் சந்தித்து உரையாற்றினார். அப்போது மாணவர்களுக்கு 'குட் டச், பேட் டச்' குறித்து கற்பிக்கப்பட்டது. அப்போது 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் தவறான முறையில் ஈடுபட்டதை ஆசிரியரிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அந்த ஆசிரியர் இச்சம்பவம் குறித்து புகார் தெரிவித்தார். இருப்பினும் போலீசார் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
- கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சவிதாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
- போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தலைமறைவான சவிதாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ காலையில் இருந்து விரதமிருந்த மனைவி, மாலையில் கணவரை விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷைலேஷ் குமார் (32). அவரது மனைவி சவிதா. இவர் கர்வா சவுத் பண்டிகையின் ஒரு பகுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வைலேஷின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செயய உண்ணாவிரதம் இருந்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை ஷைலேஷ் மும்முரமாக செய்துள்ளார்.
இதனிடையே, கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சவிதாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து மாலையில் விரதத்தை முடித்து ஷைலேஷிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இருப்பினும் இருவரும் சமாதானம் ஆகி ஒன்றாக சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் ஷைலேஷ் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து சவிதா அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். ஷைலேஷ் வீட்டிற்கு வந்த அவரது சகோதரர் ஷைலேஷின் நிலைமைய கண்டு உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஷைலேஷ் உயிரிழந்தார்.
தான் உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக சவிதா வீடியோ மூலம் ஷைலேஷின் சகோதரருக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தலைமறைவான சவிதாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
- இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கம் பணிகளுக்கு பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப் பட்டுள்ளனர்.
- 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம்:
உத்தரபிரதேச மாநிலம் புலந்தசாஹர் மாவட்டம் சிகந்தராபாத் பகுதியில் உள்ள குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு படையினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்த வீட்டில் 15 பேர் வசித்து வந்ததாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இளைஞர் ஒருவர் 12 வது மாடியின் பால்கனியில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
- வேலை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அந்த நபர் தற்கொலை முயன்றதாக சொல்லப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் 12வது மாடியில் இருந்து ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் 12 வது மாடியின் பால்கனியில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக செயல்பட்டு அவரை காப்பாற்றினர். இதனை எதிர்புற கட்டடத்தில் உள்ளவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வேலை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அந்த நபர் 12 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்றதாக சொல்லப்படுகிறது.






