என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாத இறுதியில் நடைபெறுகிறது.
    • பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் கோத்தா பிரபாகர் ரெட்டி வாக்கு சேகரித்து வந்தார்.

    தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் துபாக்கா தொகுதியில் போட்டியிடும் எம்.பி. கோத்தா பிரபாகர் ரெட்டி சித்திப்பெட் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் அங்கமாக மாநிலத்தில் உள்ள பாஸ்டர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, அவரை நோக்கி வந்த மர்ம நபர் அவரிடம் கை குலுக்குவது போன்றே அருகில் சென்றார். பிறகு, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பிரபாகர் ரெட்டியின் வயிற்றில் குத்தினார். கத்தியால் குத்திய மர்ம நபரை பி.ஆர்.எஸ். தொண்டர்கள் மடக்கி பிடித்து, அங்கேயே வைத்து அடித்தனர். பிறகு மர்ம நபரை காவல் துறை கைது செய்தது.

    கத்தியால் குத்தப்பட்ட பிரபாகர் ரெட்டி கஜ்வெல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பிறகு அங்கிருந்து செகரந்தாபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் பிரபாகர் ரெட்டியை தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    • தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாத இறுதியில் நடைபெறுகிறது.
    • பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் கோத்தா பிரபாகர் ரெட்டி வாக்கு சேகரித்து வந்தார்.

    தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் துபாக்கா தொகுதியில் போட்டியிடும் எம்.பி. கோத்தா பிரபாகர் ரெட்டி சித்திப்பெட் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் அங்கமாக மாநிலத்தில் உள்ள பாஸ்டர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, அவரை நோக்கி வந்த மர்ம நபர் அவரிடம் கை குலுக்குவது போன்றே அருகில் சென்றார். பிறகு, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பிரபாகர் ரெட்டியின் வயிற்றில் குத்தினார். கத்தியால் குத்திய மர்ம நபரை பி.ஆர்.எஸ். தொண்டர்கள் மடக்கி பிடித்து, அங்கேயே வைத்து அடித்தனர். பிறகு மர்ம நபரை காவல் துறை கைது செய்தது.

    கத்தியால் குத்தப்பட்டதும், பிரபாகர் ரெட்டி கஜ்வெல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

    "திடீரென தாக்குதல் நடத்திய மர்ம நபரை கைது செய்திருக்கிறோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது," என சித்திப்பெட் காவல் துறை ஆணையர் ஸ்வேதா தெரிவித்து உள்ளார்.

    • தேர்தல் பணியாற்ற காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் இருந்து நிர்வாகிகளை களம் இறக்கி உள்ளது.
    • வருகிற 3-ந்தேதி அனைத்து தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் ஐதராபாத்தில் நடக்கிறது.

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் தெலுங்கு ராஷ்ட்ர சமிதி கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    தேர்தல் பணியாற்ற காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் இருந்து நிர்வாகிகளை களம் இறக்கி உள்ளது.

    தமிழகத்தில் இருந்து 7 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு 7 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் தெரிந்தவர்களை தேர்வு செய்து நியமித்துள்ளார்கள்.

    ஜகீராபாத் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் முன்னாள் மத்திய சென்னை மாவட்ட தலைவருமான ரங்கபாஷ்யம் கம்மாரெட்டி தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு அந்தோல் தொகுதி, முகமது அலிசமீர் பன்ஸ்வாடா தொகுதி, அன்பு வீரமணி ஜுக்கல் தொகுதி, சலீம் சேட் நாராயண்கட் தொகுதி, மோகன் வெங்கடேசன் எல்லா ரெட்டி தொகுதி, பழனியப்பன் ஜகீராபாத் தொகுதிக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    வருகிற 3-ந்தேதி அனைத்து தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் ஐதராபாத்தில் நடக்கிறது. அதை தொடர்ந்து தேர்தல் வரை தொகுதிகளில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள்.

    • வேட்பாளர் பட்டியலை கண்ட மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் அனைத்து தொகுதிகளுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    பா.ஜ.க முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சி 45 பேர் கொண்ட 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. புதியதாக கட்சியில் சேர்ந்த 50 சதவீதம் பேருக்கு 2-வது வேட்பாளர் பட்டியலில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    வேட்பாளர் பட்டியலை கண்ட மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தெலுங்கானா காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் ஷேக் அப்துல்லா சோகைல், கொக்கட் பள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்த வெங்கல் ராவ் ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார்.

    பதவி விலகல் கடிதத்தில் ஷேக் அப்துல்லா சோகைல் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சிக்காக கடந்த 43 ஆண்டுகளாக பாடுபட்டு வந்தேன்.

    எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காமல் என்னுடைய உழைப்புக்கு வெகுமதி அளித்துள்ளனர். முஸ்லிம் தலைமையை நசுக்கி விட்டு ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட ரேவந்த் ரெட்டிக்கு உயர் பதவியான மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளதால் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    இதேபோல் வெங்கட் ராவ் தனது விலகல் கடிதத்தில் கட்சிக்காக 40 ஆண்டுகள் உழைத்து இருக்கிறேன் சில நாட்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த புது முகங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளதால் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    தெலுங்கானாவில் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட மறுநாளே முக்கிய தலைவர்கள் 2 பேர் கட்சியில் இருந்து விலகிய சம்பவம் காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • தெலுங்கானா சட்டசபைக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
    • கடந்த 15-ம் தேதி காங்கிரஸ் முதல் கட்டமாக 55 இடங்களுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா சட்டசபைக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் பாரத் ராஷ்டிரிய சமீதி, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய மும்முனை போட்டி நிலவு கிறது. இதேபோல ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சியும் களத்தில் நிற்கிறது.

    தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி கடந்த 15-ம் தேதி வெளியிட்டது. 55 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

    பாரத் ராஷ்ட்ரிய சமீதி அனைத்து தொகுதிகளும் வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்து இருந்தது. பா.ஜ.க. 52 இடங்களுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    இந்நிலையில், தெலுங்கானா தேர்தலுக்கான 2-வது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதில் 45 தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீனுக்கு டிக்கெட் கொடுத்துள்ளது. அவர் ஜூப்லி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    அசாருதீன் ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. (2009- 2014) ஆகி இருந்தார்.

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவரான அவருக்கு தற்போது எம்.எல்.ஏ. தேர்தலில் சீட் கிடைத்துள்ளது.

    முன்னாள் எம்.பி.க்கள் மது கவுட் யாக்ஷி, பொன்னம் பிரபாகர், சீனிவாஸ், மறைந்த நாட்டுப்புற பாடகர் கதாரின் மகள் வெண்ணேலா ஆகியோருக்கும் தேர்தலில் டிக்கெட் கிடைத்துள்ளது.

    காங்கிரஸ் கட்சி இதுவரை 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வெங்கண்ணா தனது மனைவியையும் நஸ்ரியா தனது கணவரையும் கொலை செய்து விட்டால் கள்ளக்காதலை தொடரலாம் என முடிவு செய்தனர்.
    • போலீசார் ரமாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சூர்யா பேட்டையை சேர்ந்தவர் ஷேக் ரபி (வயது 30). தொழிலாளி. இவருடைய மனைவி நஸ்ரி.

    அதே பகுதியில் உள்ள குடுகுடாவை சேர்ந்தவர் வெங்கண்ணா (35) விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி ரமாதேவி.

    நஸ்ரி, வெங்கண்ணா இருவருக்கும் செல்போனில் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி பேசிய இவர்கள் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இருவரும் தனிமையில் சந்திக்க தொடங்கினர். இது வெங்கண்ணாவின் மனைவிக்கும் நஸ்ரியின் கணவருக்கும் தெரியவந்தது. அதனால் கள்ளக்காதலர்கள் சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    வெங்கண்ணா தனது மனைவியையும் நஸ்ரியா தனது கணவரையும் கொலை செய்து விட்டால் கள்ளக்காதலை தொடரலாம் என முடிவு செய்தனர்.

    கடந்த மாதம் வெங்கண்ணா அவருடைய மனைவி ரமா தேவியை சூர்யா பேட்டையில் உள்ள சந்து பட்டலா பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு சாலையோரம் இருந்த ஒதுக்குப்புறமான இடத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. அங்கு வைத்து ரமாதேவியை அடித்து கொலை செய்தார்.

    பின்னர் அவரது உடலை அங்குள்ள சாலையில் வீசினார். இரவு நேரம் என்பதால் ரமாதேவி உடல் மீது வாகனங்கள் ஏறி சென்றன. மறுநாள் தன்னுடைய மனைவி விபத்தில் இறந்து விட்டதாக வெங்கண்ணா நாடகம் ஆடினார்.

    போலீசார் ரமாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் இந்த சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவர் ரபியை கொலை செய்ய நஸ்ரி திட்டமிட்டார். நேற்று முன்தினம் இரவு ரபி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நஸ்ரி போன் செய்து வெங்கண்ணாவை அழைத்தார்.

    வெங்கண்ணா அவருடைய நண்பர் மது, ஸ்ரீசைலம் ஆகியோருடன் கள்ளக்காதலியின் வீட்டுக்கு வந்தார். அவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரபியை கழுத்தை நெரித்தனர். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.

    பின்னர் ரபியை அவரது அறையில் தூக்கில் தொங்க விட்டனர். தொடர்ந்து நஸ்ரி அங்குள்ள அறையில் படுத்துக்கொண்டார். அந்த அறையை வெளிப்புறமாக வெங்கண்ணா பூட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். மறுநாள் காலையில் நஸ்ரி அவரது அறையில் இருந்து வெளியே வர முடியவில்லை வெளிப்புறமாக பூட்டப்பட்டுள்ளது எனக்கூறி அக்கம்பக்கத்தினருக்கு போனில் தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் வந்து அவரது அறையை திறந்து விட்டனர். அப்போது மற்றொரு அறையில் ரபி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    அதனைக் கண்டு நஸ்ரி கணவர் தன்னை அறையில் பூட்டி விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கதறி அழுதார்.

    சூர்யா பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரபியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் சில இடங்களில் சந்தேகப்படும்படியான காயங்கள் இருந்தன.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் நஸ்ரின் செல்போனை பறிமுதல் செய்து விசாரித்தனர். அப்போது அவர் வெங்கண்ணாவை வரவழைத்து கணவரை தீர்த்து கட்டியது தெரியவந்தது.

    இதேபோல கள்ளக்காதலிக்காக வெங்கண்ணா மனைவியை கொன்று சாலையில் வீசி விபத்து என நாடகம் ஆடியதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் வெங்கண்ணா, நஸ்ரி இருவரையும் கைது செய்தனர்.

    மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த மது, ஸ்ரீசைலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தெலுங்கானா மாநிலத்தை முழுமையான வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்ற முடியும்.
    • பா.ஜ.க.வின் இலக்கு ஏழை, எளியோருக்கு நன்மை செய்வது மட்டும் தான்.

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட்ட பிரசாரத்தில் மத்திய மந்திரி அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.

     

    பிரசாராத்தில் பேசிய அவர், "இன்று, நான் தெலுங்கானா மக்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். நீங்கள் பாஜ.க.வை ஆசீர்வதித்து, பா.ஜ.க.-வை ஆட்சிக்கு கொண்டுவந்தால், தெலுங்கானா மாநிலத்தின் பா.ஜ.க. முதல்வர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராக இருப்பார். நாங்கள் இதனை முடிவு செய்துவிட்டோம்."

    "பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் உள்ள பா.ஜ.க. கட்சியால் மட்டுமே தெலுங்கானா மாநிலத்தை முழுமையான வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்ற முடியும். பா.ஜ.க.வின் இலக்கு ஏழை, எளியோருக்கு நன்மை செய்வது மட்டும் தான். காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ்.-இன் இலக்கு அவர்களது குடும்பத்துக்கு மட்டும் நன்மை செய்வது," என்று தெரிவித்தார்.

    • அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பணம், பரிசு பொருட்கள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாக்காளர்களை கவருவதற்காக அரசியல் கட்சியினர் பரிசுப் பொருட்கள் மற்றும் மதுபானங்களை ஆங்காங்கே பதுக்கி வைத்துள்ளனர்.

    தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறக்கும் படைகள் அமைத்து வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் மது பாட்டில்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ஆங்காங்கே பதுக்கி வைத்திருந்த ரூ.3.68 கோடி மதிப்புள்ளான மது பாட்டில்கள் ரூ.3.17 கோடி ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தெலுங்கானாவில் போலீசார் நடத்திய சோதனையில் இதுவரை 347.16 கோடி மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    • தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30-ம் தேதி சட்டசப்பைத் தேர்தல் நடைபெற உள்ளது.
    • அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரத ராஷ்டிரீய சமிதி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30-ம் தேதி சட்டசப்பைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரத ராஷ்டிரீய சமிதி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தனியார் டி.வி. நேரலை விவாத நிகழ்ச்சி சமீபத்தில் நடத்தியது. இதில் சந்திரசேகரராவ் கட்சி எம்.எல்.ஏ. விவேகானந்தர் மற்றும் பா.ஜ.க வேட்பாளரான குணா ஸ்ரீசைலம் கவுட் ஆகியோர் பங்கேற்றனர்.

    பா.ஜ.க. வேட்பாளர் குணா ஸ்ரீசைலம் கவுட் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆத்திரமடைந்த விவேகானந்தர் எம்.எல்.ஏ, பா.ஜ.க வேட்பாளரின் கழுத்தை இறுக்கி பிடித்துக் கொண்டு முகத்தில் கையால் குத்தினார்.

    இதனை நேரடியாக பார்த்த பல்லாயிரக்கணக்கானோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பா.ஜ.க. சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இந்நிலையில், தெலுங்கானா பா.ஜ.க. மாநில தலைவரும், மத்திய மந்திரியுமான கிஷன் ரெட்டி கூறுகையில், விவேகானந்தர் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவேண்டும். இல்லை என்றால் பா.ஜ.க. சார்பில் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடக்கிறது.
    • பா.ஜ.க. முதல் கட்டமாக 52 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தெலுங்கானாவில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருக்கும் சந்திரசேகர் ராவ், இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

    ஆளும் கட்சியை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், பா.ஜ.க. ஆகியவை வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றன.

    தெலுங்கானாவில் இந்த முறை பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என தேர்தல் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. பாஜகவும் கணிசமான தொகுதிகளை வெல்லும் என்றும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. சட்டசபை தேர்தலுக்கு ஒரு மாதமே எஞ்சியிருப்பதால் அங்கு தேர்தல் களம் சூடு பறக்க ஆரம்பித்துள்ளது.

    இந்நிலையில், பா.ஜ.க. இன்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 52 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. போத் தொகுதியில் பா.ஜ.க. எம்.பி சோயம் பாபு ராவும், அரவிந்த் தர்மபுரி கொரூட்லா தொகுதியிலும், சஞ்சய் குமார் பண்டி கரிம் நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    • தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
    • அங்கு ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் போட்டி நிலவி வருகிறது.

    ஐதராபாத்:

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, தெலுங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ஒரு காகிதப் புலி என தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெரிவித்துள்ளார்

    இதுதொடர்பாக கவிதா கூறுகையில், ராகுல் காந்தி காட்டு சிங்கம் அல்ல; அவர் ஒரு காகிதப் புலி. ஏனென்றால், யார், எதை எழுதி கொடுத்தாலும், அதைத்தான் படித்துவிட்டுப் போவார். உள்ளூர் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள மாட்டார். இந்தப் பிராந்தியத்தின் உள்ளூர் மரபுகள் அல்லது கலாசாரத்தை அவர் மதிக்கவில்லை அல்லது புரிந்து கொள்ளவில்லை என தெரிவித்தார்.

    • 2016 பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஆகியவற்றால் தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு
    • தெலுங்கானா கடுமையான மற்றும் தியாகத்தின் மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும்

    தெலுங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் 95 முதல் 105 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

    மேலும், காஜ்வெல் தொகுதி மக்கள் தன்மீது அன்பு வைத்திருப்பதாகவும், தொடர்ந்து இரண்டு முறை பிரமாண்ட வெற்றியை வழங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    தொகுதி அளவிலான கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், 2016 பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஆகியவற்றால் தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டதாகவும், இந்தியாவின் இளம் மாநிலமான தெலுங்கானா கடுமையான மற்றும் தியாகத்தின் மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், தற்போது வளர்ச்சி மற்றும் சாதனையால் நாம் திருப்தி அடையக் கூடாது. சிறந்து விளங்க பாடுபடுவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், நாம் மக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

    2016-ல் இருந்து சந்திரசேகர ராவ் தொடர்ந்து தெலுங்கானாவின் முதல்வராக இருந்து வருகிறார். அவரது பிஆர்எஸ் கட்சிக்கும் காங்கிரஸ்க்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே பா.ஜனதாவும் தெலுங்கானாவில் கால்பதிக்க முயற்சி செய்து வருகிறது.

    ×