search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 States Elections"

    • அமித் ஷா மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம்
    • ராகுல் காந்தி சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம்

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா நினைக்கிறது. அதேவேளையில் சத்தீஸ்கரில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் விரும்புகிறது.

    தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு தேசிய தலைவர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மத்திய பிரதேசத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார்.

    ஜபால்புர், சிந்த்வாரா, போபால், சத்தார்புர், ரெவா, ஷஹ்டோல், உஜ்ஜைன், இந்தூர், குவாலியர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் அமித் ஷா பல்வேறு பேரணியில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இன்று மதியம் ஜபால்புரில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார். மாலை 4 மணிக்கு சிந்த்வாரா மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது, வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெறும்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி, சத்தீஸ்கர் மாநிலத்தில் நான்கு தொகுதிகளில் நடைபெறும் பேரணியில் கலந்த கொள்ள இருக்கிறார். இன்றும், நாளையும் சத்தீஸ்கரில் கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

    இன்று ராய்ப்பூர் வரும் ராகுல் காந்தி மதியம் ஒரு மணிக்கு பானுபிரதாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் பேரணியில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன்பின் மதியம் 2.40 மணிக்கு கொண்டகான் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பேரணியில் கலந்து கொண்டு பேசுகிறார். அதேபோல் நாளை இரண்டு இடங்களில் பேசுகிறார்.

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் வருகிற 7-ந்தேதி (நவம்பர்) 20 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

    • மோடியின் தெய்வ வழிபாடு குறித்து பிரியங்கா விமர்சனம்
    • ஹிமாந்தா சர்மா, சத்தீஸ்கர் மாநில முஸ்லிம் மந்திரியை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்

    ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான காலமே உள்ளதால் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவரான பிரியங்கா காந்தி, ராஜஸ்தானில் நடைபெற்ற பேரணியின்போது பிரதமர் மோடியின் தெய்வ வழிபாடு குறித்து பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாருக்கு வருகிற திங்கட்கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில், நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளது.

    அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா சர்மா, சத்தீஸ்கரில் மதமாற்றம் நடைபெறுவதாக விமர்னம் செய்திருந்தார். மேலும், சத்தீஸ்கர் மாநில முஸ்லிம் மந்திரியை தாக்கி பேசினார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் ஹிமாந்தா சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில் பா.ஜனதா இந்த முறை வெற்றி பெற திட்டமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    • ஆளுங்கட்சி சார்பில் மீண்டும் 26 எம்.எல்.ஏ.க்கள் மனுத்தாக்கல்
    • பா.ஜனதா சார்பில் 23 பேர், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 4 பேர் மனுத்தாக்கல்

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நவம்பர் 30-ந்தேதி வரை தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 3-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    40 தொகுதிகளை கொண்ட மிசோரமில் நவம்பர் 7-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று, வேட்மனு மீதான பரிசீலனை நடைபெற இருக்கிறது. அதன்பின் அக்டோபர் 23-ந்தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

    மிசோரம் மாநிலத்தில் 16 பெண்கள் உள்பட 174 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை முடிவடைந்து பின், அக்டோபர் 23-ந்தேதி இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது அதிகாரப்பூர்வமாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

    ஆளும மிசோரம் தேசிய முன்னணி (MNF), எதிர்க்கட்சிகளான சோரம் மக்கள் இயக்கம் (ZPM), காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 35 பேருக்கு மீண்டும் வாயப்பு அளித்துள்ளது ஆளுங்கட்சி. அதேவேளையில் சோரம் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.-க்கள் உள்பட 40 பேர் மறுதேர்தல் நடத்த வலியுறுத்தியுள்ளனர்.

    இவர்களைத்தவிர பா.ஜனதா சார்பில் 23 பேர், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 4 பேர், சுயேட்சையாக 27 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    • 2016 பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஆகியவற்றால் தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு
    • தெலுங்கானா கடுமையான மற்றும் தியாகத்தின் மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும்

    தெலுங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் 95 முதல் 105 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

    மேலும், காஜ்வெல் தொகுதி மக்கள் தன்மீது அன்பு வைத்திருப்பதாகவும், தொடர்ந்து இரண்டு முறை பிரமாண்ட வெற்றியை வழங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    தொகுதி அளவிலான கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், 2016 பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஆகியவற்றால் தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டதாகவும், இந்தியாவின் இளம் மாநிலமான தெலுங்கானா கடுமையான மற்றும் தியாகத்தின் மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், தற்போது வளர்ச்சி மற்றும் சாதனையால் நாம் திருப்தி அடையக் கூடாது. சிறந்து விளங்க பாடுபடுவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், நாம் மக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

    2016-ல் இருந்து சந்திரசேகர ராவ் தொடர்ந்து தெலுங்கானாவின் முதல்வராக இருந்து வருகிறார். அவரது பிஆர்எஸ் கட்சிக்கும் காங்கிரஸ்க்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே பா.ஜனதாவும் தெலுங்கானாவில் கால்பதிக்க முயற்சி செய்து வருகிறது.

    ×