search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரியங்கா காந்தி, அசாம் முதல்வர் ஹிமாந்தா சர்மாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
    X

    பிரியங்கா காந்தி, அசாம் முதல்வர் ஹிமாந்தா சர்மாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

    • மோடியின் தெய்வ வழிபாடு குறித்து பிரியங்கா விமர்சனம்
    • ஹிமாந்தா சர்மா, சத்தீஸ்கர் மாநில முஸ்லிம் மந்திரியை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்

    ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான காலமே உள்ளதால் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவரான பிரியங்கா காந்தி, ராஜஸ்தானில் நடைபெற்ற பேரணியின்போது பிரதமர் மோடியின் தெய்வ வழிபாடு குறித்து பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாருக்கு வருகிற திங்கட்கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில், நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளது.

    அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா சர்மா, சத்தீஸ்கரில் மதமாற்றம் நடைபெறுவதாக விமர்னம் செய்திருந்தார். மேலும், சத்தீஸ்கர் மாநில முஸ்லிம் மந்திரியை தாக்கி பேசினார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் ஹிமாந்தா சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில் பா.ஜனதா இந்த முறை வெற்றி பெற திட்டமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    Next Story
    ×