என் மலர்
தெலுங்கானா
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- பெங்கால் வாரியர்ஸ் அணி இரண்டாவது வெற்றி பெற்றது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே இரு அணிகளும் அபாரமாக ஆடின. யாருக்கு வெற்றி என்பதில் கடும் போட்டி நிலவியது.
இறுதியில், அரியானா அணியை 40-38 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- பாட்னா அணி இன்று 3-வது வெற்றியைப் பதிவு செய்தது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், யுபி யோதாஸ் அணிகள் மோதின.
இரு அணிகளும் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடின.
இறுதியில், பாட்னா அணி, யுபி யோதா அணியை 42-37 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது.
- தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி அளித்த 6 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
- தெலுங்கானா முழுவதும் கே.டி.ராமராவ் பாத யாத்திரை செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.
தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமராவ் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பகிரங்க குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி அளித்த 6 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் அரசு தெலுங்கானாவுக்கு சாபம் ஆகிவிட்டது.
போலீஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை துன்புறுத்தப்படுகின்றனர். காங்கிரஸ் அரசின் தோல்விகளை வெளிச்சம் போட்டு காட்டவும், மக்களை சந்தித்து நேரடியாக குறைகளை கேட்பதற்காகவும் தெலுங்கானா முழுவதும் கே.டி.ராமராவ் பாத யாத்திரை செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.
- 6 மாதங்களாக அவ்வப்போது இவர்கள் சிறுமியை அழைத்துச் சென்று பலாத்காரத்தில் ஈடுபட்டனர்.
- மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் 2 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் சந்தோஷ் என்பவர் மாணவியிடம் காதல் ஆசை வார்த்தை கூறினார். அவரை நம்பிய சிறுமி அவருடன் நெருங்கி பழகினார்.
இதனை பயன்படுத்திக் கொண்ட சந்தோஷ் சிறுமியை பலாத்காரம் செய்தார். இது குறித்து அவருடைய நண்பர்களான சிறுவர்கள் 4 பேரிடம் கூறினார். அவர்கள் சிறுமியை தனியாக அழைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டினர்.
6 மாதங்களாக அவ்வப்போது இவர்கள் சிறுமியை அழைத்துச் சென்று பலாத்காரத்தில் ஈடுபட்டனர். அவர்களின் அட்டூழியங்களை சிறுமி அமைதியாக சகித்துக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி பள்ளி முடிந்ததும் சிறுமியை சந்தோஷ் அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏற்கனவே அவருடைய நண்பர்கள் 4 பேர் இருந்தனர்.
அவர்கள் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தனர். இதனால் மாணவி வீட்டிற்கு தாமதமாகச் சென்றார்.
இரவு வெகு நேரம் கழித்து வந்ததால் சந்தேகம் அடைந்த அவருடைய தாய் மாணவியிடம் தாமதம் குறித்து கேட்டபோது மாணவி கதறி அழுதார்.
தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். அதிர்ச்சி அடைந்து அவருடைய தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் 2 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
போலீசார் சந்தோஷ் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- 30 வயதான பிரமோத்தை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார்.
- இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரமோத் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்
பார்வையற்ற தம்பதியினர் தங்களது மகன் இறந்தது தெரியாமல் 4 நாட்கள் அவருடைய சடலத்துடன் வாழ்ந்து வந்த சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கலுவா ரமணா அவரது மனைவி சாந்திகுமாரி ஆகியோர் தங்களுடைய இளைய மகன் பிரமோத்துடன் ஐதராபாத்தின் பிளைண்ட்ஸ் காலனியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.
இந்த பார்வையற்ற தம்பதியினரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து இந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.
4 நாட்களுக்கு முன்பு தூக்கத்திலேயே பிரமோத் இறந்துவிட்டதாக தெரிவித்த போலீசார் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பார்வையற்ற தம்பதியின் மூத்த மகன் பிரதீப் என்பவருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர் பிரதீப்பிடம் அவரது பெற்றோர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
30 வயதான பிரமோத்தை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார். மேலும் அவரது 2 மகள்களையும் அவரது மனைவி தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரமோத் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- பெங்கால் வாரியர்ஸ் அணி இன்றைய போட்டியை சமன் செய்தது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், நடப்பு சாம்பியன் புனேரி பால்டன் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக ஆடின. ஒரு கட்டத்தில் புனேரி பால்டன் அணி அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தது.
இறுதியில், பெங்கால் வாரியர்ஸ், புனேரி பால்டன் இடையிலான போட்டி 32-32 என சமனில் சமனில் முடிந்தது.
நடப்பு தொடரில் சமனில் முடிந்துள்ளது 3வது போட்டி இதுவாகும்.
புனேரி பால்டன் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என மொத்தம் 19 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
- 11 நாள் மகா சண்டி யாகம் நல்லா சுரேஷ்ரெட்டி என்பவர் நடத்துகிறார்.
- 35 வேத பண்டிதர்கள் இதில் பங்கேற்றனர்.
திருப்பதி:
தெலுங்கான மாநிலம் பாலோஞ்சாவில் அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற 11 நாள் மகா சண்டி யாகம் நல்லா சுரேஷ்ரெட்டி என்பவர் நடத்துகிறார்.
மஹான்யபூர்வக ஏகாதச ருத்ராபிஷேகம், சூரிய நமஸ்காரங்கள், சுப்ரமணியேஸ்வர ஸ்வாமி ஆராதனை, ஷத சண்டி ஹோமம், மஹா சுதர்ஷன ஹோமம், மஹா நாராயண ஹ்ருதய கவச்ச பாராயணம் ஆகியவை தினமும் நடக்கிறது. 35 வேத பண்டிதர்கள் இதில் பங்கேற்றனர்.
பாலோஞ்சா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் யாகத்தில் கலந்து கொண்டனர்.
மினசோட்டா ஆளுநரும், அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளருமான டிம் வால்ஸ், ஹாரிஸின் வெற்றிக்காக யாகம் செய்ததற்காக நல்லா சுரேஷ்ரெட்டியை பாராட்டி செல்போனில் வீடியோ செய்தி அனுப்பியுள்ளார். இந்த யாகம் நாளை நிறைவடைகிறது.
- என்ஜினியரிங் படித்து முடித்த அவர் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.
- நிஹாரிகா மற்றும் அவருடைய கள்ளக்காதலர்களை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், புவனகிரியை சேர்ந்தவர் நிஹாரிகா (வயது 29). இவருடைய 16-வது வயதில் தந்தை இறந்துவிட்டார்.
அவருடைய தாயார் மறுமணம் செய்து கொண்டார். தந்தை இழப்பு, தாய் மறுமணம் என மனம் உடைந்த நிஹாரிகா படிப்பில் தீவிர கவனம் செலுத்தினார். என்ஜினியரிங் படித்து முடித்த அவர் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.
பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவரையும், பின்னர் அரியானாவை சேர்ந்த மற்றொருவரையும் திருமணம் செய்து விவாகரத்து பெற்றார்.
நிஹாரிகவின் மோசடி குறித்து 2-வது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நிஹாரிகாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் இருந்த சக பெண் கைதியுடன் நிஹாரிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
ஜெயிலில் இருந்து வெளியே வந்தபோது ஜெயிலில் பழக்கமான கைதியின் மகன் ராணா என்பவருடன் நிஹாரிகாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. பின்னர் பெங்களூரு சென்றபோது அங்குள்ள கால்நடை டாக்டர் நிகில் ரெட்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆன்லைன் திருமண விளம்பரம் மூலம் ஐதராபாத் துகாரகேட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் குமாருடன் நிஹாரிகாவுக்கு தொடர்பு ஏற்பட்டது.
நிஹாரிகா தான் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை செய்வதாக அவரிடம் தெரிவித்தார்.
ரமேஷ் குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். மனைவி மகளை தவிக்கவிட்டு கடந்த 2018-ம் ஆண்டு ரமேஷ் குமார் நிஹாரிகாவை பதிவு திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இருவரும் காட்கேசர் ,போச்சவரத்தில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். ரமேஷ் குமார் நிஹாரிகாவுக்கு ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை வழங்கினார். கேட்ட போதெல்லாம் செலவுக்கு பணம் கொடுத்தார். இதனால் நிஹாரிகா ஆடம்பரமான வாழ்க்கை வாழ தொடங்கினார்.
நிஹாரிகா அடிக்கடி பெங்களூர் சென்று கள்ளக்காதலர்களை சந்தித்து வந்தார். ரமேஷ் குமாருக்கு அவர் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நிஹாரிகா ரமேஷ் குமாரிடம் ரூ.8 கோடி கேட்டார். மிகப்பெரிய தொகையாக இருப்பதாக நினைத்த ரமேஷ் குமார் பணம் தர மறுத்தார். இது நிஹாரிகாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக அவருடைய கள்ளக்காதலன் ராணாவை வரவழைத்தார். சம்பவத்தன்று இரவு ரமேஷ் குமார் வீட்டில் மது குடித்துவிட்டு மயங்கியபடி கிடந்தார்.
அந்த நேரத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி ரமேஷ் குமாரை கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். இதுகுறித்து கர்நாடகாவில் உள்ள கள்ளக்காதலன் நிகில் ரெட்டிக்கு நிஹாரிகா தகவல் தெரிவித்தார்.
பின்னர் ரமேஷ் குமார் பிணத்தை காரில் ஏற்றிக்கொண்டு 800 கிலோமீட்டர் பயணம் செய்தனர். கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம், சுண்டிகுப்பாவில் உள்ள காபி தோட்டத்திற்கு சென்றனர். அங்கு ரமேஷ் குமார் உடலை துண்டு துண்டாக வெட்டி தீ வைத்து எரித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர்.
பாதி எரிந்த நிலையில் உடல் பாகங்கள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடல் பாகங்களை கைப்பற்றி அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் பிணத்துடன் சென்ற கார் பதிவு எண் பதிவாகி இருந்தது. அதன் மூலம் நிஹாரிகா மற்றும் அவருடைய கள்ளக்காதலர்களை போலீசார் கைது செய்தனர்.
ரமேஷ் குமார் பெயரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க அவரை கொலை செய்ததாக வாக்குமூலத்தில் நிஹாரிகா தெரிவித்துள்ளார்.
இது குறித்து குடகு போலீசார் கூறுகையில், " உடல் பாகங்கள் போர்வையால் சுற்றி எரிக்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதால் கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
முதற்கட்டமாக அந்த பகுதியில் உள்ள 500 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தோம். அதில் நள்ளிவு 12 மணிக்கு காப்பி தோட்டத்திற்குள் சென்ற கார் பதிவு எண் தெளிவாகத் தெரிந்தது. அதன்மூலம் விசாரணையை தொடங்கினோம்.
அப்போது கார் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பவருடையது என தெரியவந்தது. மேலும் அவரைக் காணவில்லை என அங்குள்ள போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சந்தேகம் ஏற்பட்டதால் நிஹாரிகாவிடம் விசாரித்தோம். இதில் அனைத்து உண்மைகளும் வெளிவந்தது" என்றனர்.
- பட்டாசுகள் நாலாபுரமும் வெடித்து சிதறின.
- 10 பைக்குகள் முற்றிலும் எரிந்து நாசமானது.
திருப்பதி:
ஐதராபாத் அபிட்ஸ் பகுதியில் மொத்த பட்டாசு விற்பனை கடை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்து பட்டாசுகள் வெடித்து சிதற தொடங்கின.
இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கடையை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். தீ வேகமாக பரவியதால் கடையில் இருந்த பட்டாசுகள் நாலாபுரமும் வெடித்து சிதறின.
வான வேடிக்கையை மிஞ்சும் அளவிற்கு அங்கிருந்த பட்டாசுகள் விண்ணில் பறந்து வெடித்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இடைவிடாமல் பட்டாசுகள் வெடித்து சிதறி கொண்டே இருந்தன. இதனால் பட்டாசு கடை அருகில் இருந்த ஒரு ஓட்டல் கட்டிடத்தில் தீ பரவியது.
அந்த கட்டிடம் முழுவதும் எரிய தொடங்கியது. அங்கிருந்த ஊழியர்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேறினர்.
கடையின் முன்பு இருந்த கார்கள் பைக்குகளிலும் பட்டாசுகள் விழுந்ததில் தீப்பற்றின. இதில் கடையில் அருகில் இருந்து 10 பைக்குகள் முற்றிலும் எரிந்து நாசமானது. பெண் ஒருவர் காயமடைந்தார்.
யாருமே அருகே செல்ல முடியாத அளவுக்கு பட்டாசுகள் வெடித்து சிதறிக் கொண்டே இருந்தன. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 4 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அருகில் உள்ள கட்டிடங்களில் தீ பரவாமல் தடுப்பதில் முழு கவனம் செலுத்தினர். பட்டாசு வெடித்துக்கொண்டே இருந்ததால் கடையை அவர்களால் நெருங்க முடியவில்லை.
பட்டாசுகளின் முழுவதும் வெடித்து சிதறிய பிறகு பற்றி எரிந்த தீயை அனைத்தனர். இந்த சம்பவத்தால் ஐதராபாத் நகர பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் என்னும் தெரியவில்லை. பட்டாசு கடை அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- தமிழ் தலைவாஸ் அணி இன்றைய போட்டியை சமன் செய்தது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைப்வாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக ஆடின. ஒரு கட்டத்தில் ஜெய்ப்பூர் அணி அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
தோல்வி நிலையில் இருந்த தமிழ் தலைவாஸ் அணி கடைசி கட்டத்தில் போராடியது.
இறுதியில், தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இடையிலான போட்டி 30-30 என சமனில் சமனில் முடிந்தது.
மற்றொரு போட்டியில் யுபி யோதாஸ் 35-29 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
- கையில் சிகரெட் லைட்டரை வைத்துக்கொண்டு குடிபோதையில் அங்கு வந்துள்ளார்.
- ஒரு தாயும் அவரது குழந்தையும் தீயில் இருந்து நூலிழையில் உயிர்தப்பினர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் குடிபோதையில் சிகரெட் லைட்டரால் பெட்ரோல் நிலையத்துக்கு தீவைத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை ஐதராபாத்தில் நாச்சரம் [Nacharam] பகுதியில் உள்ள பெட்ரோல் பங் ஒன்றுக்கு சிரன் என்ற நபர் குடிபோதையில் வந்துள்ளார்.
கையில் சிகரெட் லைட்டரை வைத்துக்கொண்டு அவர் வந்த நிலையில் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்த அருண் என்ற ஊழியர், தைரியம் இருந்தால் நிலையத்துக்கு தீவைக்குமாறு அவரை தூண்டியுள்ளார். குடிபோதையில் இருந்த சிரன் நிஜமாகவே பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது தீ வைத்துவிட்டார்.
இதனால் அங்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தீப்பற்றிய சமயத்தில் அங்கு 10 முதல் 11 பேர் வரை இருந்துள்ளனர். ஒரு தாயும் அவரது குழந்தையும் தீயில் இருந்து நூலிழையில் தப்பினர்.
நிலையத்தில் தீப்பற்றி எரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தீ வைத்த சிரன் ,மற்றும் அவரை தூண்டிய பங்க் ஊழியர் அருண் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இருவரும் பீகாரை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
- பிரேத பரிசோதனைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ராஜ்ண்ணா சிர்சில்லா மாவட்டம், நம்பள்ளி கிராமத்தின் புறநகர் பகுதியில் 30 குரங்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இறந்து கிடந்த குரங்குகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குரங்குகளை யாராவது விஷம் வைத்து கொன்றார்களா? அல்லது வேறு எதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு குரங்குகள் இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என்றனர்.






