என் மலர்
தெலுங்கானா
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஐந்தாவது வெற்றி பெற்றது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பால்டன் அணிகள் மோதின.
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 34-33 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 40-29 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
புள்ளிப்பட்டியலில் புனேரி பால்டன் முதல் இடத்திலும், தெலுங்கு டைட்டன்ஸ் 2வது இடத்திலும் உள்ளன.
- அமெரிக்க அதிபர் தேர்தலில் 295 எலக்டோரல் வாக்குகளை பெற்று டிரம்ப் வெற்றி பெற்றார்.
- டொனல்டு ட்ரம்ப் சிலைக்கு மாலை அணிவித்து கிராம மக்கள் வழிபட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் 295 எலக்டோரல் வாக்குகளை டிரம்ப் பெற்றார். கமலா ஹாரிஸ் 226 எலக்டோரல் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
அமெரிக்க துணை அதிபராக ஜேடி வான்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜேடி வான்ஸ் மனைவி உஷா சிலுக்குரி ஆந்திர பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இதனால் தெலுங்கு மக்கள் ஜேடி வான்ஸ் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஜங்கான் மாவட்டத்தில் உள்ள கொன்னே கிராம மக்கள் டொனால்டு டிரம்ப்பிற்கு கட்டப்பட்டுள்ள கோவிலில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டுள்ளனர்.
கிருஷ்ணா என்ற இளைஞர் 2018 ஆம் ஆண்டு தனது பூஜை அறையில் டொனால்ட் டிரம்பின் புகைப்படத்தை வைத்து வழிபட ஆரம்பித்தார். பின்னர் 2019 ஆம் ஆண்டு தனது வீட்டின் முன்பு 6 அடி உயர டிரம்ப் சிலையை அமைத்து பூஜைகள் செய்து பால் அபிஷேகமும் செய்தார். இதற்காக அவர் ரூ.2 லட்சம் வரை செலவு செய்தார். இதனால் அந்த கிராமத்தினர் அவரை ட்ரம்ப் கிருஷ்ணா என்று அழைக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் கிருஷ்ணா தனது 33வது வயதில் 2020 அக்டோபரில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் ட்ரம்ப் வெற்றியை கொண்டாடும் வகையில் கிருஷ்ணாவின் உறவினர்கள் அவரது வீட்டில் உள்ள ட்ரம்ப் சிலையை சுத்தம் செய்து மாலை அணிவித்து வழிபட்டுள்ளனர்.
- மாணவர் ஓட்டிச் சென்ற கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
- போலீசார் மாணவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.
தெலுங்கானா மாநிலம் பஞ்சகுட்டா போலீஸ் நிலையத்தை சேர்ந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஞ்சநேயலு, ஊர்க்காவல் படை வீரர் ரமேஷ் ஆகியோர் நாகார்ஜுன சர்க்கிள் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஐதராபாத்தை சேர்ந்த சையது மஜுதீன் நசீர் (வயது 20) என்ற மாணவர் தனது காரில் கல்லூரிக்கு சென்று கொண்டு இருந்தார். அவரது காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
இதனைக் கண்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆஞ்சநேயலூ, ஊர்காவல் படை வீரர் ரமேஷ் ஆகியோர் காரை நிறுத்துமாறு சைகை செய்தனர்.
மாணவர் காரை நிறுத்தாமல் வந்தார். இதனால் ஊர்க்காவல் படை வீரர் ரமேஷ் காரின் பேனட்டை பிடித்தார். அப்போது மாணவர் காரை வேகமாக ஓட்டினார். ரமேஷ் காருக்கு முன் பகுதியில் தொங்கியபடி சென்றார்.
மேலும் கத்தி கூச்சலிட்டார். மாணவர் ஓட்டிச் சென்ற கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட போலீசார் காரை மடக்கி ரமேசை மீட்டனர். போலீசார் மாணவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.
காரில் ஊர்க்காவல் படை வீரர் இழுத்து செல்லப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- தபாங் டெல்லி அணி நான்காவது வெற்றி பெற்றது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் கடுமையாக போராடினர்.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பாட்னா அணி 43-41 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இது பாட்னா பைரேட்ஸ் அணி பெறும் 4வது வெற்றி ஆகும்.
மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின. இதில் அதிரடியாக ஆடிய தபாங் டெல்லி 39-26 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
தபாங் டெல்லி அணி பெற்ற 4வது வெற்றி இதுவாகும்.
- நந்தி வட்டே மன்னேவை சேர்ந்தவர் திருப்பதையா கூலித் தொழிலாளி.
- 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்குள் திருப்பதையா பரிதாபமாக இறந்தார்.
தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், நந்தி வட்டே மன்னேவை சேர்ந்தவர் திருப்பதையா (வயது 55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி இறந்து விட்டார். இதனால் திருப்பதையா தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் அப்பைய பள்ளியில் உள்ள உறவினரை சந்திப்பதற்காக பைக்கில் சென்று கொண்டு இருந்தார். பாதி வழியில் சென்றபோது திருப்பதையாவுக்கு பசி எடுத்ததால் பைக்கை நிறுத்தினார். பைக்கில் கொண்டு சென்ற வேக வைத்த முட்டைகளை சாப்பிட்டார்.
அப்போது ஒரு முட்டை அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு விட முடியாமல் திணறினார்.
அவ்வழியாக சென்றவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்குள் திருப்பதையா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருப்பதையாவின் பிணத்தை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- தபாங் டெல்லி அணி மூன்றாவது வெற்றி பெற்றது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 33-30 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தபாங் டெல்லி அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.
தொடர்ந்து நடந்த 2வது ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 35-22 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- தெலுங்கு டைட்டன்ஸ் அணி நான்காவது வெற்றி பெற்றது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன.
இறுதியில், 35-34 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. இது தெலுங்கு டைட்டன்ஸ் அணி பெற்ற நான்காவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி மூன்றாவது வெற்றி பெற்றது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யுபி யோதாஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக ஆடியதால், யாருக்கு வெற்றி என்பதில் கடும் போட்டி நிலவியது.
இறுதியில், உபி யோதாஸ் அணியை 33-30 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் 3வது வெற்றி ஆகும்.
- சினிமா பாடல்களுக்கு திருநங்கைகள் ஆபாசமாக நடனம் ஆடியதாக கூறப்படுகிறது.
- இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் பாலாப்பூரை சேர்ந்தவர் முகமது அமீர் தொழிலதிபர் குடும்பத்தில் நடந்த நிச்சயதார்த்த விழாவிற்கு திருநங்கைகளை அழைத்து இருந்தார்.
இந்த விழாவில் சினிமா பாடல்களுக்கு திருநங்கைகள் ஆபாசமாக நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் நடனமாடிய திருநங்கைகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். வீடியோ மூலம் அவர்கள் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நாளை முதல் நவம்பர் 30-ந்தேதி வரை கணக்கெடுப்பு பணி நடைபெறும்.
- 85 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்.
தெலுங்கானா மாநிலத்தில் நாளை முதல் நவம்பர் 30-ந்தேதி வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்திற்குப் பிறகு தெலுங்கானாவில் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.
உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இன்று மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி பல்வேறு சங்கங்கள், மாணவர்கள் அமைப்புகள், அறிவார்ந்த நபர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து அவர்களுடைய கருத்துகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1993-ம் சட்டத்தின்படி இதற்கு முன் கல்வி, வேலை ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது சாதிவாரி கணக்கெடுப்பில் அனைத்து சாதியினரின் சமூகப் பொருளாதார விவரங்களை சேகரிக்கும்.
இந்த பணியில் 48 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட இரக்கிறார்கள். இதனால் இந்த மாதம் முழுவதும் தொடக்க பள்ளிகள் அரைநாள் மட்டுமே இயங்கும். ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று தரவுகளை பெறுவார்கள். சமூகம், கல்வி, வேலை, பொருளாதாம், அரசியல் போன்ற தரவுகளை சேகரிப்பாளர்கள். மொத்தமாக 85 ஆயிரம் பணியில் ஈடுபடுத்தபட இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தேர்தல் அறிக்கை வாக்குறுதியில் சாதிவாரி கணக்கெடுப்பும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் நீதியை உறுதி செய்வதாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
- சுரேஷ் பாபு என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஸ்விக்கிக்கு எதிராக புகார் ஒன்றை அளித்தார்.
- சுரேஷ் பாபுவுக்கு ஸ்விக்கி நிறுவனம் இழப்பீடாக ரூ.35,453 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாடிக்கையாளரை ஏமாற்றி அதிக பணம் வசூலித்ததாக ஸ்விக்கி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.35,000 அபராதம் விதித்துள்ளது.
ஐதராபாத்தில் வசிக்கும் சுரேஷ் பாபு என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஸ்விக்கிக்கு எதிராக புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில், "ஸ்விக்கி மெம்பர்ஷிப்பை நான் வாங்கியுள்ளேன். இதன்மூலம் குறிப்பிட்ட தூரத்திற்குள் உணவு இலவசமாக டெலிவரி செய்யப்படும். ஆனால் நவம்பர் 1 அன்று ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்தேன். எனது வீட்டிற்கும் உணவகத்திற்கும் இடையிலான தூரம் 9.7 கிமீ ஆகும். ஆனால் 9.7 கி.மீ-ஆக இருந்த டெலிவரி தூரத்தை வேண்டுமென்றே 14 கி.மீ-ஆக அதிகரித்து என்னிடமிருந்து அதற்காக 103 வசூலித்தார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுரேஷ் பாபுவுக்கு ஸ்விக்கி நிறுவனம் இழப்பீடாக ரூ.35,453 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 45 நாட்களுக்குள் இந்த இழப்பீடு தொகையை ஸ்விக்கி நிறுவனம் வழங்கவேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆண்டுதோறும் எருமை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- மாநிலம் முழுவதும் எருமைத் திருவிழா களை கட்டியது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி துன்னபோத்து என்ற எருமைத் திருவிழா மாநில திருவிழாவாக கொண்டாட அரசு உத்தரவிட்டது. அதன்படி ஆண்டுதோறும் எருமை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற எருமை மாடுகளை குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம், மாலை, தோரணங்கள் அணிவித்து நாராயணகுடாவில் இருந்து வீதிகள் வழியாக நர்சிங் மாட்டு சந்தைக்கு கொண்டுவரப்பட்டன.
மாட்டுச் சந்தைக்கு கொண்டுவரப்பட்ட எருமை மாடுகளை பலரும் போட்டி போட்டு லட்சக்கணக்கில் விலை கொடுத்து வாங்கினர்.
பின்னர் விலை கொடுத்து வாங்கப்பட்ட எருமை மாடுகள் ஊர்வலமாக அழைத்து சென்று கைதராபாத்தில் மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதேபோல் மாநிலம் முழுவதும் எருமைத் திருவிழா களை கட்டியது.






