தெலுங்கானா முழுவதும் சந்திரசேகர ராவ் மகன் பாதயாத்திரை

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி அளித்த 6 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.தெலுங்கானா முழுவதும் கே.டி.ராமராவ் பாத யாத்திரை செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.
தெலுங்கானா முழுவதும் சந்திரசேகர ராவ் மகன் பாதயாத்திரை
Published on

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமராவ் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பகிரங்க குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி அளித்த 6 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் அரசு தெலுங்கானாவுக்கு சாபம் ஆகிவிட்டது.

போலீஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை துன்புறுத்தப்படுகின்றனர். காங்கிரஸ் அரசின் தோல்விகளை வெளிச்சம் போட்டு காட்டவும், மக்களை சந்தித்து நேரடியாக குறைகளை கேட்பதற்காகவும் தெலுங்கானா முழுவதும் கே.டி.ராமராவ் பாத யாத்திரை செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com