என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • மனைவி காணாமல் போனது குறித்து திவாகர் வனஸ்தலிபுரம் போலீசில் புகார் செய்தார்.
    • தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் சென்றுள்ளனர்.

    திருப்பதி:

    சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் திவாகர். இவரது மனைவி பிந்து (வயது 25). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    கணவன், மனைவி இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம், சங்கர் பள்ளிக்கு வந்தனர். திவாகர் பிளம்பர் வேலை செய்து வந்தார்.

    பிந்து வீட்டு வேலைக்கு சென்று வந்த போது அங்கீத் சாகேத் (25) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த திவாகர் சிந்தில் குண்டாவிற்கு வீட்டை மாற்றினார். கடந்த 8-ந் தேதி பிந்து கள்ளக்காதலன் அங்கித் சாகேத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

    கள்ளக்காதல் ஜோடி புப்புலகுடாவில் உள்ள நண்பரின் வீட்டில் 3 நாள் தங்கி இருந்தனர். மனைவி காணாமல் போனது குறித்து திவாகர் வனஸ்தலிபுரம் போலீசில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி அங்கித் சாகேத்தின் நண்பர் ஒருவர் அவருக்கு போன் செய்து புப்புல குடா அனந்த பத்மநாபசாமி கோவில் அருகே வருமாறு தெரிவித்தார்.

    நண்பர் கூறிய இடத்திற்கு அங்கித் சாகேத் மற்றும் பிந்து ஆகியோர் சென்றனர். அப்போது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து அங்கித் சாகேத் மது அருந்தினார். மது போதை ஏறியதும் நண்பர்களுக்கும், அங்கித் சாகேத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் அங்கித் சாகேத்தை தலையில் சரமாரியாக கத்தியால் குத்தியும், முகத்தில் கல்லை போட்டு கொலை செய்தனர். இதனைக் கண்ட பிந்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அவரையும் பிடித்து கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கித் சாகேத் மற்றும் பிந்துவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 5 தனிப்படைகள் அமைத்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் சென்றுள்ளனர்.

    • சிங்கப்பூரில் பிரபலமான டைகர் பீர் தெலுங்கானாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
    • முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சிங்கப்பூர் செல்ல உள்ளார்.

    தெலுங்கானா மாநில அரசின் நடத்தை காரணமாக பீர் விநியோகத்தை நிறுத்துவதாக தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

    இந்நிலையில் இங்குள்ள பீர்களுக்கு பதிலாக புதிய நிறுவன பீர்களை அறிமுகப்படுத்த மாநில அரசு முயற்சித்து வருகிறது. முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி முன்னிலையில் நடந்த உயர்மட்ட பரிசீலனையில் ஏற்கனவே பல பரிந்துரைகள் பெறப்பட்டது.

    சிங்கப்பூரில் பிரபலமான டைகர் பீர் தெலுங்கானாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

    முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சிங்கப்பூர் செல்ல உள்ளார். டைகர் பீர் நிறுவன பிரதிநிதிகளை அவர் சந்திக்க உள்ளதாக தெரிகிறது.

    தெலுங்கானாவில் டைகர் பீர் வந்தால் அதிக அளவில் விற்பனை நடக்கும். இதனை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் மது வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    டைகர் பீர் நிறுவனம் சில்லறை விற்பனையாளர்களுக்கு அதிக அளவு சலுகை அறிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் அங்குள்ள குடிமகன்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.
    • திருமணத்திற்கு பிறகு மல்லிகார்ஜுன் சங்கராந்தி பண்டிகைக்காக மாமியார் வீட்டிற்கு வந்தார்.

    ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சங்கராந்தி பண்டிகையையொட்டி புதுமண தம்பதிக்கு விருந்து வைப்பது பாரம்பரியமாக உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், சரூர் நகர் அடுத்த சாரதா நகரை சேர்ந்தவர் கல்பனா. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை ஆந்திரா மாநிலம், காக்கி நாடாவை சேர்ந்த மல்லிகார்ஜூன் என்பவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.

    திருமணத்திற்கு பிறகு மல்லிகார்ஜுன் சங்கராந்தி பண்டிகைக்காக மாமியார் வீட்டிற்கு வந்தார். மருமகனுக்கு மட்டன், சிக்கன், மீன் என பலவிதமான உணவு வகைகள் மற்றும் இனிப்பு வகைகள் என 130 வகையான உணவுகளை கல்பனா சமைத்து பரிமாறினார்.

    இதனைக் கண்ட புதுமாப்பிள்ளை மல்லிகார்ஜுன், அவரது குடும்பத்தினர் ஊர் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். 

    • பள்ளி விழாவுக்கு முதல்வர் சகோதரரர் போலீஸ் பாதுகாப்பு வாகனங்களுடன் சென்றார்.
    • பள்ளி மாணவர்கள் பேண்டு வாத்தியங்களுடன் அணிவகுப்பு நடத்தி வரவேற்றனர்.

    தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி இருந்து வருகிறார். இவரது சகோதரர் அனுமுலா திருப்பதி ரெட்டி. இவர் ஒரு பள்ளிக்கூட விழாவிற்குச் சென்றார். திருப்பதி ரெட்டி எந்த பதவியிலும் இல்லை.

    இருந்த போதிலும் போலீசார் பாதுகாப்பு வாகனங்களுடன் (Convoy) பள்ளிக்கு சென்றார். அங்கு மாணவர்கள் பேண்டு வாத்தியங்களுடன் வரவேற்றதுடன், அணிவகுப்பு நடைபெற்றது.

    அரசு அதிகாரத்தில் இல்லாமல், முதலமைச்சர் சகோதரர் என்பதற்காக இவ்வாறு செய்யலாமா? என தெலுங்கானா எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர்.

    பிஆர்எஸ் கட்சி செயல் தலைவர் கே.டி. ராம ராவ், தெலுங்கானாவில் ஒரேயொரு முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அரைடஜன் முதல்வர்களை பெற்றுள்ளது என கிண்டல் செய்ததுடன் "விகரபாத் முதலமைச்சர் திருப்பதி ரெட்டிக்கு என்னுடைய வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

    திருப்பதி ரெட்டி எம்.பி., எம்.எல்.ஏ. அல்லது மாநகராட்சி உறுப்பினராக கூட இல்லாத நிலையில் போலீஸ் பாதுகாப்பு வாகனம் போன்ற சலுகைகளை அனுபவிக்கிறார் என பாஜக தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் காங்கிரஸ் "ஒரு பள்ளி நிர்வாகம் அதன் நிகழ்வுகளுக்கு யாரை அழைக்க விரும்புகிறது, அந்த நபரை எவ்வாறு வரவேற்க விரும்புகிறது என்பது அந்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.

    மேலும், சந்திரசேகர ராவ் முதலமைச்சராக இருந்தபோது பலமுறை விதிகள் மற்றும் நெறிமுறைகளை மீறியுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த Sleeping Pod படுக்கை, குளிர்சாதனம், சார்ஜிங், WIFI என சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது
    • ஆன்லைன் மற்றும் ரெயில் நிலையத்தில் இதற்கான முன்பதிவை செய்து கொள்ளலாம்.

    ஐதராபாத் ரெயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க Sleeping Pod வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    படுக்கை, குளிர்சாதனம், சார்ஜிங், WIFI என சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த Sleeping Pod வசதிக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    ஆன்லைன் மற்றும் ரெயில் நிலையத்தில் இதற்கான முன்பதிவை செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணம் மணிநேரம் அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது.

    • இறந்த 20 நாய்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
    • மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.

    தெலுங்கானாவில் 31 நாய்களை மர்ம நபர்கள் பாலத்தில் இருந்து கீழே வீசிய கொடூரம் அரங்கேறியுள்ளது.

    தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதில் 20 நாய்கள் இறந்ததாகவும், 11 நாய்கள் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

    எட்டுமைலாரம் கிராமம் அருகே உள்ள பாலத்தில் இருந்து நாய்கள் வீசப்பட்டதாக விலங்குகள் நல அமைப்பினர் புகார் அளித்தனர். இந்த சம்பவம் ஜனவரி 4 ஆம் தேதி நடந்துள்ளது.

    வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக இந்திரகரன் காவல்நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    நாய்கள் வேறு எங்காவது கொன்று பாலத்தில் இருந்து வீசப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த 20 நாய்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது, மேலும் விலங்குகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா என்பதை தீர்மானிக்க தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (எஃப்எஸ்எல்) மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.

    31 நாய்களில் 20 நாய்கள் இறந்து கிடந்ததாகவும், காயமடைந்த 11 நாய்கள் விலங்குகள் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு நாகோலில் உள்ள காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேகம்பேட்டில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் ஸ்ரீதேஜை அல்லு அர்ஜுன் சந்திக்க சென்றுள்ளார்.
    • தெலுங்கானா மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (FDC) தலைவர் தில் ராஜுவும் உடனிருந்தார்.

     தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த மாதம் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது.

    அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பலியானார். அவரது மகன் ஸ்ரீதேஜ் படுகாயம் அடைந்து செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சிறுவனைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் இன்று [செவ்வாய்க்கிழமை] பேகம்பேட்டில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் ஸ்ரீதேஜை அல்லு அர்ஜுன் சந்திக்க சென்றுள்ளார்.

    மருத்துவமனையில் அல்லு அர்ஜுன் இருக்கும் வீடியோக்கள் மற்றும் படங்கள் வெளியாகி வருகின்றன, வெளிவந்தன. அவருடன் அவரது குழுவினர் உடன் இருந்தனர்.

    அல்லு அர்ஜுன் மருத்துவமனைக்கு வருகை தந்தபோது, தெலுங்கானா மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (FDC) தலைவர் தில் ராஜுவும் உடனிருந்தார். சிகிச்சை பெற்று வரும் சிறுவனை சந்தித்து அல்லு அர்ஜுன் நலம் விசாரித்தார்.

    அங்கிருந்த டாக்டர்களிடம் சிறுவனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். சிறுவனின் தந்தை பாஸ்கரனுக்கு ஆறுதல் கூறினார். 20 நிமிடங்கள் ஆஸ்பத்திரியில் இருந்த அல்லு அர்ஜுன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    அல்லு அர்ஜுன் வருகையை முன்னிட்டு மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முன்னதாக ஜனவரி 5 ஆம் தேதி மருத்துவமனைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ரூ.799.74 கோடியில் பிரமாண்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
    • முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி இதனை திறந்து வைத்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ரூ.799.74 கோடியில் பிரமாண்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் நேரு உயிரியல் பூங்காவில் இருந்து அரம்கர் பகுதி வரை சுமார் 4.04 கிலோ மீட்டர் தூரம் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.

    ஐதராபாத்தில் 2-வது பெரிய மேம்பாலமாக இது திகழ்கிறது. இந்த மேம்பாலத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி இதனை திறந்து வைத்தார். இந்த புதிய பிரமாண்ட பாலத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் சூட்டப்பட்டது.

    • தரை தளத்தில் சுற்றிலும் ரத்த வெள்ளத்தில் ஷங்கர் கிடந்துள்ளார்.
    • ஆனால் சிகிச்சை பலனின்றி மாலையில் அவர் உயிரிழந்தார்.

    இந்திய ராணுவதின் மருதுவப் படை [AMC] -இல் கேப்டாக பணிபுரிந்து வந்தவர் ஷங்கர் ராஜ் குமார் [30 வயது]. புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி மதியம் 12.45 மணிக்கு அல்காபுரி காலனியில் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் உள்ள அவரது வீட்டு பால்கனியில் நின்றுகொண்டிருந்த ஷங்கர் பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார். சத்தம் கேட்டதும் அவரது மனைவியும் பணிப்பெண்ணும் ஓடி வந்து பார்த்தபோது, தரை தளத்தில் சுற்றிலும் ரத்த வெள்ளத்தில் ஷங்கர் கிடந்துள்ளார்.

    அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஷங்கர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மாலையில் அவர் உயிரிழந்தார். ஷங்கர் வழுக்கி விழுந்திருக்கலாம் என்றும் அவரது மரணத்தில் வேறு சந்தேகம் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • நடப்பு நிதியாண்டில் ரூ.45,000 கோடி மது விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • குடிபோதையில் இருப்பவர்கள் நள்ளிரவு வீட்டிற்கு செல்ல முன்பதிவு செய்து இருந்தால் அவர்களை இலவசமாக வீடுகளில் கொண்டு சென்று இறக்கி விட்டனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரூ.402.62 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

    நேற்று ஒரே நாளில் 3,82,265 மதுபான பெட்டிகளும், 3,96,114 பீர் பெட்டிகளும் விற்பனை செய்யப்பட்டன. ஐதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களான ரங்கா ரெட்டி மற்றும் மேட்சல் ஆகிய பகுதிகளில் அதிக மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் தினமும் சராசரியாக ரூ.70 கோடி முதல் ரூ.100 கோடி வரை மதுபானம் விற்பனையாகிறது. டிசம்பர் மாதத்தில் மட்டும், மது விற்பனை பெரும் சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.45,000 கோடி மது விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்துகளை தடுக்க சில தனியார் கார் மற்றும் ஆட்டோ நிறுவனங்கள் ஐதராபாத் நகரப் பகுதியில் நேற்று இலவச பயண திட்டத்தை அறிவித்தன.

    அதன்படி குடிபோதையில் இருப்பவர்கள் நள்ளிரவு வீட்டிற்கு செல்ல முன்பதிவு செய்து இருந்தால் அவர்களை இலவசமாக வீடுகளில் கொண்டு சென்று இறக்கி விட்டனர். இதனால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வெளிநாட்டு பணம் அனுமதி இல்லாமல் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.
    • இது தொடர்பாக தெலுங்கான ஊழல் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றபோது, சந்திரசேகர ராவ் மகன் ராம ராவ் அமைச்சராக இருந்தார். தற்போது பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவராக உள்ளார்.

    தெலுங்கானாவில் "பார்முலா இ" கார்பந்த பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் ராம ராவ் முன்னெடுத்தார். அப்போது கார் நிறுவனத்திற்கு வெளிநாட்டு பணமாக 55 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

    பின்னர், சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்றபின் "பார்முலா இ" கார் பந்தயம் நடத்துவது தொடர்பாக பணம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக ராம ராவ் மீது குற்றம்சாட்டப்பட்டது. அனுமதி பெறாமல் வெளிநாட்டு பணம் வழங்கப்பட்டது மற்றும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

    தெலுங்கானா மாநில ஊழல் தடுப்பு போலீசார் கடந்த 19-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராம ராவ் முதன்மையை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அரவிந்த் குமார், ஓய்வு பெற்ற அதிகாரி பிஎல்என் ரெட்டி ஆகியோர் முறையே 2 மற்றும் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தனது மீது போடப்பட்ட எஃப்ஐஆர்-ஐ ரத்து செய்ய வேண்டும் என தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் ராம ராவ் வழக்கு தொடர்ந்தார். அத்துடன் தன்னை போலீசார் கைது செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    அப்போது நீதிமன்றம் கைது செய்ய தடைவிதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ராம ராவை கைது செய்ய விதித்த தடையை மேலும் நீடித்து உத்தரவிட்டது. அத்துடன் எஃப்ஐஆர்-ஐ ரத்து செய்யக் கோரிய ராம ராவ் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது.

    இன்றைய விசாரணையின்போது வணிக விதிகள் மற்றும் தேவையான ஒப்புதல்களைப் பின்பற்றாமல் ஃபார்முலா இ அமைப்புக்கு பணம் செலுத்தப்பட்டது என அரசு தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில் வழக்கில் எந்த குற்றமும் இல்லை என்று ராம ராவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.

    • ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து மெய் மறந்து முத்த மழை பொழிந்தனர்.
    • பயணிகள் காதல் ஜோடியின் சேட்டையை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், எல்.பி. நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்து இருந்தனர்.

    அப்போது இளம் காதல் ஜோடி ஒன்று ரெயில் நிலையத்திற்கு வந்தது. ரெயில் நிலையத்தில் இருந்த மேடையில் அமர்ந்து காதல் ஜோடி ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து மெய் மறந்து முத்த மழை பொழிந்தனர்.

    மற்றவர்கள் தங்களைப் பார்க்கிறார்கள் என்பதை காதல் ஜோடி பொருட்படுத்த வில்லை. இதனைக் கண்ட பயணிகள் முகம் சுளித்தபடி சென்றனர்.

    ஒரு சில பயணிகள் காதல் ஜோடியின் சேட்டையை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். பொது இடங்களில் காதல் ஜோடிகள் இது போன்ற அநாகரிமான செயல்களை தவிர்க்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

    ×