என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • போலீசாருக்கும் பி.ஆர்.எஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • விழா நடைபெற இருந்த இடம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஜங்கான் மாவட்டத்தில் மாநில அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அறிவிக்கப்பட்டு இருந்தது.

    விழாவில் வருவாய்த்துறை மந்திரி பொங்கு லேடி சீனிவாஸ் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நல திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் நடந்தன.

    அப்போது சம்பவ இடத்திற்கு பி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ பல்லா ராஜேஸ்வர் ரெட்டி தனது கட்சி ஆதரவாளர்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எம்.எல்.ஏவை தடுத்து நிறுத்தினர்.

    இதனால் போலீசாருக்கும் பி.ஆர்.எஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பி.ஆர்.எஸ் கட்சியினர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், முதல் மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

    இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கும், பி. ஆர்.எஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் பிளாஸ்டிக் நாற்காலிகளால் தாக்கிக் கொண்டனர்.

    அப்போது காங்கிரஸ் கட்சியினர் எம்.எல்.ஏ. பல்லா ராஜேஷ்வர் ரெட்டி மீது முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    விழா நடைபெற இருந்த இடம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. போலீசார் மோதலை தடுப்பதற்காக தடியடி நடத்தி கலைத்தனர்.

    பின்னர் மோதலுக்கு காரணமான எம்.எல்.ஏ. பல்லா ராஜேஷ்வர் ரெட்டி எம்.எல்.ஏ., மற்றும் பி.ஆர்.எஸ். முக்கிய தலைவர்களை கைது செய்தனர்.

    • ரயில்வே தண்டவாளங்கள் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளை லாரி ஏற்றிச் சென்றது.
    • நான்கு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    தெலுங்கானாவில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம், மாமுனூர் பிரதான சாலையில் இன்று காலை 11 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

    ரயில்வே தண்டவாளங்கள் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, பாரத் பெட்ரோல் பம்ப் அருகே சாலையில் வந்துகொண்டிருந்த 2 ஆட்டோக்களை முந்திச் செல்ல முயன்றது.

    லாரி முந்திச் சென்றபோது கட்டுக்குப்பட்டை இழந்து கவிழ்ந்ததில், அதில் இருந்த இரும்புக் கம்பிகள் ஆட்டோ மீது  விழுந்துள்ளது. இதில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

    மேலும் 6 படுகாயமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லாரி ஓட்டுநர் குடிபோதையிலிருந்தது தெரியவந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். 

    • தெலுங்கானா மாநிலத்திற்கு 5 பத்ம விருதுகளையாவது வழங்கி இருக்க வேண்டும்.
    • 4 கோடி தெலுங்கானா மக்களுக்கு அவமானம்.

    திருப்பதி:

    இந்தியா முழுவதும் நடிகர் அஜித்குமார் உட்பட 139 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் 2 பேருக்கு மட்டுமே பத்ம விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலத்தில் பத்ம விருதுகளுக்கு மாநில அரசு பரிந்துரை செய்த பிரபலங்களின் பெயர்களை பரிசீலனை செய்யவில்லை. 139 பேருக்கு விருதுகள் அறிவித்த மத்திய அரசு தெலுங்கானா மாநிலத்திற்கு 5 பத்ம விருதுகளையாவது வழங்கி இருக்க வேண்டும்.

    ஆனால் 2 பேருக்கு மட்டுமே பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த பிரபலங்களின் பெயர்களை பத்ம விருதுகளுக்கு மத்திய அரசு பரிசீலிக்காதது 4 கோடி தெலுங்கானா மக்களுக்கு அவமானம்.

    மேலும் பத்ம விருதுகள் அறிவிப்பில் தெலுங்கானாவுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

    • பொதுமக்களிடையே தேசப்பற்று ஏற்படுத்தும் விதமாக தேசிய கொடியை ஏந்தி சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
    • குடியரசு தினத்தை முன்னிட்டு 300 அடி நீளம் உள்ள தேசிய கொடியை உருவாக்கினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், கொனிஜார்லா அடுத்த தணிகெல்லாவில் உள்ள பள்ளியில் பெண் குழந்தைகள் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு 300 அடி நீளம் உள்ள தேசிய கொடியை உருவாக்கினர்.

    நேற்று மாணவ மாணவிகள் சுதந்திர போராட்ட வீரர்கள் போல் வேடமணிந்து வந்து சாலையில் 300 அடி நீளம் உள்ள தேசிய கொடியை ஏந்தி தேசபக்தி பாடல்களை பாடியபடி சாலைகளில் ஊர்வலமாக சென்றனர்.

    பொதுமக்களிடையே தேசப்பற்று ஏற்படுத்தும் விதமாக தேசிய கொடியை ஏந்தி சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

    • பல மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் எருமை மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
    • நர்சிங்கி சந்தை வரலாற்றில் சாதனை விற்பனையாக அரசு கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், நர்சிங்கியில் வேளாண் சங்கராந்தி கால்நடை திருவிழா நடந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் பல மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் எருமை மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்த நிலையில் நர்சிங்கியை சேர்ந்த ரித்து முக்தார் என்பவர் துலியா வகை எருமையை கொண்டு வந்தார். அதனை நல்கொண்டாவை சேர்ந்த வெங்கட் ரெட்டி என்பவர் ரூ.4.50 லட்சத்திற்கு வாங்கினார். இந்த துலியா எருமை தினமும் 25 லிட்டர் பால் தரும் என தெரிவித்தனர்.

    இது நர்சிங்கி சந்தை வரலாற்றில் சாதனை விற்பனையாக அரசு கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதே போல் 4 துலியா எருமைகள் தலா ரூ. 2 லட்சத்திற்கு விற்பனையானது. குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜாப்ரா வாதி எருமைகள் தலா ரூ.2 லட்சத்திற்கும், ஹரியானாவில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த 10 குஜரன் வாலா எருமைகள் தலா ரூ.2 லட்சத்துக்கு விற்பனையானது.

    • எலும்புகளை தனியாகவும், சதைகளை தனியாகவும் பிரித்தெடுத்தார்.
    • யூடியூப் மற்றும் ஆங்கில படங்களை பார்த்து எலும்புகளை கரைப்பது எப்படி என வீடியோக்களை பார்த்தார்.

    தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் ஜிலேலகுடா, நியூ வெங்கட்ராமா காலனியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 39). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி வெங்கட மாதவி (35). தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற குரு மூர்த்தி காஞ்சனப்பேட்டையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். மனைவியின் நடத்தையில் குருமூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த குருமூர்த்தி மனைவியை கொலை செய்தார். பின்னர் இரக்கமின்றி மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டினார்.

    எலும்புகளை தனியாகவும், சதைகளை தனியாகவும் பிரித்தெடுத்தார். அவற்றை குக்கரில் போட்டு வேக வைத்தார். வேகவைத்த சதைகள், எலும்பு துண்டுகளை ஜில்லேலவில் உள்ள குளத்தில் வீசினார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்தனர். இது தொடர்பாக குருமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

    மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த குருமூர்த்தி, உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்துள்ளார்.

    இந்த உடலை எப்படி அழிப்பது என நீண்ட நேரம் யோசித்தார்.

    செல்போனில் யூடியூப் மற்றும் ஆங்கில படங்களை பார்த்து எலும்புகளை கரைப்பது எப்படி என வீடியோக்களை பார்த்தார்.

    இதனை தொடர்ந்து நாய் ஒன்றை கொன்று சோதனை செய்ய முடிவு செய்தார். அவரது வீட்டின் அருகே சுற்றி திரிந்து கொண்டிருந்த நாய் ஒன்றை உணவளிப்பது போல வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். உள்ளே வந்த நாயை அடித்துக்கொன்று துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பின்னர் நாய் கறி எலும்புகளை குக்கரில் வேகவைத்து, வெயிலில் காயவைத்து பொடிப்பொடியாக்கி கால்வாய் தண்ணீரில் கரைத்துள்ளார்.

    அதே பாணியில் மனைவியை வெட்டி சமைத்து தண்ணீரில் வீசியதாக தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனது மகள் ஒருவாரமாக காணவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
    • புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கிய போலீசாருக்கு பெண்ணின் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

    தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் ஜிலேல குடா, நியூ வெங்கட்ராமா காலனியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 39). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி வெங்கட மாதவி (35). இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற குரு மூர்த்தி காஞ்சனப்பேட்டையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். சங்கராந்தி பண்டிகைக்கு பாட்டி வீட்டுக்கு சென்ற குழந்தைகளை அழைத்து வருவது சம்பந்தமாக கடந்த 16-ந்தேதி கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த குருமூர்த்தி வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மனைவியின் தலையில் பலமாக தாக்கினார். படுகாயம் அடைந்த வெங்கட மாதவி ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். மனைவி இறந்து விட்டதாக எண்ணிய குருமூர்த்தி கொலையை மறைக்க முடிவு செய்தார்.

    அதன்படி ஈவு இரக்கமின்றி மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டினார்.

    பின்னர் எலும்புகளை தனியாகவும், சதைகளை தனியாகவும் பிரித்தெடுத்தார். அவற்றை குக்கரில் போட்டு வேக வைத்தார். வேகவைத்த சதைகள், எலும்பு துண்டுகளை ஜில்லேலவில் உள்ள குளத்தில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்தார்.

    கடந்த 18-ந்தேதி வெங்கட மாதவியின் தாயார் சுப்பம்மாவுக்கு போன் செய்த குருமூர்த்தி மனைவி தன்னிடம் சண்டை போட்டுக் கொண்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். உங்களுடைய வீட்டிற்கு வந்தாரா என கேட்டார். அவர் மகள் வரவில்லை என தெரிவித்தார். மேலும் குருமூர்த்தியுடன் சென்று மகளைக் காணவில்லை என மீர்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியின் வீட்டின் முன்பாக பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வெங்கட மாதவி வீட்டுக்கு செல்லும் காட்சிகள் மட்டும் பதிவாகி இருந்தது. அவர் வீட்டில் இருந்து வெளியே செல்லும் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை. குருமூர்த்தி மட்டும் அடிக்கடிக்கு வெளியே சென்று வந்த காட்சிகள் இருந்தன.

    இதனால் குருமூர்த்தி மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேகவைத்து குளத்தில் மீன்களுக்கு இரையாக வீசி விட்டதாக தெரிவித்தார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து குளத்தில் வெங்கட மாதவியின் உடல் பாகங்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.



    • 'புஷ்பா 2' முதல் நாளிலேயே 294 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
    • நேற்று 'புஷ்பா 2' தயாரிப்பாளர் தில் ராஜுவின் அலுவலகம், வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

    இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவான புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.

    'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது, இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகமாகும்.

    இந்தியாவில் வெளியான படங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படமாக புஷ்பா 2 உருவெடுத்தது. இப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1850 கொடுக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று 'புஷ்பா 2' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் அலுவலகம், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து தற்போது 'புஷ்பா 2' படத்தின் இயக்குனர் சுகுமார் வீட்டிலும் அவருடைய அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஐதராபாத் விமானநிலையத்தில் இருந்து இயக்குநர் சுகுமாரை அவரது வீட்டிற்கு அழைத்து வந்த வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது என்ன கிடைத்தது என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அதிகாரிகள், கிளிகளை பறிமுதல் செய்து ஆரண்ய பவனில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
    • முகமது பரூக் கிளிகளை வாங்கி வேறு இடங்களில் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஐதராபாத் ஐகோர்ட் அருகே முகமது பரூக் என்பவர் அலெக்ஸாண்ட்ரின் கிளிகளை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றார். இதனை அதிரடிப்படை அதிகாரிகள் கவனித்தனர்.

    இருசக்கர வாகனத்தை நிறுத்தி பெட்டிகளை சோதனை செய்தபோது, 110 அலெக்ஸாண்ட்ரின் வகை கிளிகள் இருப்பது தெரியவந்தது.

    அதிகாரிகள், கிளிகளை பறிமுதல் செய்து ஆரண்ய பவனில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    கிளிகளை அங்குள்ள பூங்காவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

    முகமது பரூக் கிளிகளை வாங்கி வேறு இடங்களில் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஒரு ஜோடி கிளி ரூ.1000 க்கு விற்கப்படுவதாக முகமது பரூக் கூறினார். அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். கிளிகள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

    • சோதனை நடைபெற்று வரும் தயாரிப்பாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • பிரபல தயாரிப்பாளர்களான தில்ராஜு, நவீன் எர்னேனி ஆகியோர் சமீபத்தில் வெளியிட்ட படங்கள் நல்ல வசூலை கொடுத்துள்ளது.

    தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங் களை தயாரித்து உள்ளார். நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தை தமிழில் தயாரித்து வெளியிட்டார்.

    தெலுங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக சமீபத்தில் அவர் மாநில அரசால் நியமிக்கப்பட்டார். தில் ராஜுவுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் ஐதராபாத் பெருநகர பகுதியிலேயே அமைந்து உள்ளன.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜுவின் அலுவலகம், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை 5 மணிக்கு அதிரடியாக புகுந்தனர்.

    இந்த இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் தில் ராஜுவின் சகோதரர் சிரிஷ், மகள் ஹன்சிதா ரெட்டி ஆகியோரின் வீடுகள் ஜூப்ளிகில்ஸ் மற்றும் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ளன. அந்த இடங்களிலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.

    மேலும் தில் ராஜுவுடன் வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது.

    மேலும் சமீபத்தில் வெளியான பான் இந்தியா படமான புஷ்பா-2 படத்தின் தயாரிப்பாளர் நவீன் எர்னேனியின் வீட்டில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.

    ஐதராபாத்தில் இன்று ஒரே நாளில் 2 தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான 8 இடங்களில் 55 குழுக்கள் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆவணங்கள் மூலம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து ஜுப்ளிஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ் பகுதிகளில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

    சோதனை நடைபெற்று வரும் தயாரிப்பாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தில் ராஜு இந்த மாதம் சங்கராந்தி பண்டிகையையொட்டி 2 படங்களைத் தயாரித்தார். பான்-இந்தியா திரைப்படமான கேம் சேஞ்சர் மற்றொரு வெளியீடான சங்கராந்திகி வஸ்துன்னம் படங்கள் வசூல் சாதனைகளை முறியடித்து குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டி வருகிறது.

    பிரபல தயாரிப்பாளர்களான தில்ராஜு, நவீன் எர்னேனி ஆகியோர் சமீபத்தில் வெளியிட்ட படங்கள் நல்ல வசூலை கொடுத்துள்ளது.

    இதனால் இவர்களுக்கு சொந்தமான இடங்களில் முறைகேடாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் புஷ்பா-2 வெளியானபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.

    தற்போது புஷ்பா-2 தயாரிப்பாளர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மருத்துவ பணியாளர்களுக்கு மெட்ரோ நிர்வாகம் பெரும் உதவி புரிந்துள்ளது.
    • அனைத்தும் மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமீப காலமாக உடல் உறுப்பு தானம் செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் பலர் மறுவாழ்வு பெறுகின்றனர். உடல் உறுப்பு தானம் செய்தாலும் அதனை சரியான நேரத்தில் கொண்டு சென்று பொருத்துவதில் மருத்துவர்களின் பணி போற்றுதலுக்குரியது.

    அதுபோன்ற ஒரு நிகழ்வு தான் ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது. 13.கி.மீ தொலைவை 13 நிமிடங்களில் சென்று இதயத்தை உரிய நேரத்தில் பொருத்தி வாழ்வு அளித்துள்ளனர் மருத்துவ பணியாளர்கள். அவர்களுக்கு மெட்ரோ நிர்வாகம் பெரும் உதவி புரிந்துள்ளது.

    எல்.பி. நகரின் காமினேனி மருத்துவமனையில் பெறப்பட்ட இதயத்தை லக்டிகாபுலில் உள்ள க்ளெனீகிள்ஸ் குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். போக்குவரத்து மிகுந்த நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் உதவி உள்ளது.

    13.கி.மீ. தொலைவை 13 நிமிடங்களில் சென்று அடைவதற்கு ஐதராபாத் மெட்ரோ ரெயில் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுக்கு இடையேயான கவனமான திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்பு மூலம் சாத்தியமானது. இவை அனைத்தும் மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து இச்சேவையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். 


    • பார்முலா-இ கார் பந்தய வழக்கில் எந்த ஊழலும் நடைபெறவில்லை.
    • எந்தவொரு கேள்வி கேட்டாலும் பதில் அளிக்க தயார். ஏனென்றால் ரேவந்த் ரெட்டியை போன்று நான் தவறு ஏதும் செய்யவில்லை.

    பார்முலா-இ கார் பந்தயம் தொடர்பான பண பரிமாற்றத்தில் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியிருந்தது.

    அதன்படி இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரானார். இன்று காலை 10.40 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகம் சென்ற கே.டி. ராமராவிடம் அதிகாரிகள் சுமார் ஏழு மணி நேரம் கேள்விகள் கேட்டனர்.

    விசாரணை முடிந்த நிலையில் கே.டி. ராமராவ் கூறியதாவது:-

    நான் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு வாய்ப்பு வழங்குகிறேன். நீங்கள் எப்போது தயாராக இருக்கிறீர்களோ, அப்போது தேதியையும், இடத்தையும் தேர்வு செய்யுங்கள். நீங்கள் விரும்பும் இடத்திற்கு நான் வருகிறேன். இருவரும் சேர்ந்து இருப்போம். நான் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார். நீங்களும் உண்மை கண்டறியும் சோதனைக்கு போக வேண்டும்.

    நீதிபதி முன் அமர்வோம். ஏசிபி நீதிபதி அல்லது உயர்நீதிமன்றம் நீதிபதி, ஏன் ஓய்வு பெற்ற நீதிபதியாக கூட இருக்கலாம். தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்ப வேண்டும். ஒட்டுமொத்த தெலுங்கானாவும் பார்க்க வேண்டும். அதன்பின் யார் உண்மை சொல்கிறார்கள். பொய் சொல்கிறார்கன் என்பதை மக்கள் முடிவு செய்து கொள்வார்கள்.

    ரேவந்த் ரெட்டி ஏசிபி மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவர். இதனால் நானும் கைது செய்யப்பட வேண்டும் என விரும்புகிறார். பார்முலா-இ கார் பந்தய வழக்கில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. பண மோசடியும் நடைபெறவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால் ரேவந்த் ரெட்டியுடன் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்கார தயாராக இருக்கிறேன். எந்தவொரு கேள்வி கேட்டாலும் பதில் அளிக்க தயார். ஏனென்றால் ரேவந்த் ரெட்டியை போன்று நான் தவறு ஏதும் செய்யவில்லை.

    இவ்வாறு கே.டி. ராமராவ் தெரிவித்துள்ளார்.

    ×