என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்.
    • மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சென்னை :

    2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தேர்வில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் ஆகும். வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    பாடம் வாரியாக 100-க்கு 100 எடுத்த மாணவர்கள் விவரம்:-

    தமிழ் -8 பேர், ஆங்கிலம்- 346 பேர், கணிதம் - 1,996 பேர், அறிவியல்- 10,838 பேர், சமூக அறிவியல்- 10,256 பேர் ஆவர்.

    முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்:-

    சிவகங்கை- 98.3 சதவீதம், விருதுநகர்- 97.5 சதவீதம், தூத்துக்குடி- 96.8 சதவீதம், கன்னியாகுமரி 96.7 சதவீதம், திருச்சி- 96.6 சதவீதம். 

    • வழக்கம்போல 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 91.74%, மாணவிகள் 95.88 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 15-வரை எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதி இருந்தனர். இதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே-19-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்னதாக இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, இன்று 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட்டது.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 91.74%, மாணவிகள் 95.88 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக மதிப்பெண் அனுப்பப்படும் என்று அரசு தேர்வுத்துறை கூறியுள்ளது.

    • தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதி இருந்தனர்.
    • மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக மதிப்பெண் அனுப்பப்பட்டது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 15-வரை எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதி இருந்தனர். இதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே-19-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்னதாக இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, இன்று 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட்டது.

    தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக மதிப்பெண் அனுப்பப்படும் என்று அரசு தேர்வுத்துறை கூறியுள்ளது.

    • பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் இன்று வெளியிடுகிறோம்.
    • தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வாழ்த்துகள்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் இன்று வெளியிடுகிறோம்.

    கற்றல் கற்பித்தல் இரண்டிற்குமான முடிவுகள் என்பதை மனதில் நிறுத்தி மகிழ்ச்சியோடு தன்னம்பிக்கையோடு தேர்வு முடிவுகளை எதிர்கொள்வோம்.

    தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 



    • திராவிட மாடல் அரசு மீது மக்கள் காட்டும் ஆதரவை பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது.
    • மலர்கண்காட்சி எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது.

    நீலகிரி:

    உதகை மலைப்பகுதியில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் நீலகிரி எம்.பி.ஆ.ராசாவும் நடைபயிற்சி செய்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    உதகையில் 5 நாள் பயணம் மிக எழுச்சியாக இருந்தது. மக்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திராவிட மாடல் அரசு மீது மக்கள் காட்டும் ஆதரவை பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது.

    மலர்கண்காட்சி எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது.

    உச்சநீதிமன்றத்தில் ஜனாதிபதி கருத்து கேட்ட விவகாரம் தொடர்பாக, மற்ற மாநில முதலமைச்சர்களுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிதான் நீடிக்கும். 2026 மட்டுமல்ல 2031, 36 எல்லாமே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி தான் நீடித்து இருக்கும் என்றார். 

    • அண்ணா பல்கலைக் கழகத்திற்கு இதுவரை 18 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மிரட்டலை தொடர்ந்து கோட்டூர்புரம் போலீசார் மோப்பநாய் உதவியுடன் அண்ணா பல்கலைக் கழகத்தில் சோதனை செய்ததில் மிரட்டல் புரளி என தெரியவந்தது.

    அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இதுவரை 18 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 7- ந் தேதி தொடங்கியது.
    • விண்ணப்ப பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 7- ந் தேதி தொடங்கியது. 176 கல்லூரிகளில் 159 பிரிவுகளில் உள்ள 1 லட்சத்து 25 ஆயிரத்து 345 இடங்களுக்கு மாணவ-மாணவிகள் www.tngasa.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி விண்ணப்ப பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 21 ஆயிரத்து 119 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27-ந்தேதி ஆகும்.

    இதேபோல் என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவும் படுஜோராக நடந்து வருகிறது. கடந்த 7-ந் தேதி தொடங்கிய இந்த விண்ணப்ப பதிவில் நேற்று வரை 1 லட்சத்து 55 ஆயிரத்து 898 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

    • பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 9-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு, ஒருநாள் முன்கூட்டியே தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
    • பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

    சென்னை:

    பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரையிலும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி கடந்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரையிலும் நடந்து முடிந்தது. இதில் பிளஸ்-1 பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம் பேரும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை சுமார் 9 லட்சம் பேரும் எழுதி இருந்தார்கள். ஏற்கனவே தேர்வு அட்டவணை வெளியிட்டு இருந்தபோது, தேர்வு முடிவு மே 19-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல், பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 9-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு, ஒருநாள் முன்கூட்டியே அதாவது 8-ந்தேதியே தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதனை போன்றே பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவும் முன்கூட்டியே வெளியாகுவதற்கான சூழல் இருப்பதாகபேசப்பட்டு வந்தது.

    இதுதொடர்பாக அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து பேசிய நிலையில், பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 16-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று காலை 9 மணிக்கும், பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவை பிற்பகல் 2 மணிக்கும் வெளியிடப்பட உள்ளது.

    மாணவ-மாணவிகள் https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக சென்று தெரிந்துகொள்ளலாம் என்றும், மாணவ-மாணவிகளில் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக மதிப்பெண் அனுப்பப்படும் என்றும் அரசு தேர்வுத்துறை கூறியுள்ளது.

    • டாஸ்மாக் மேலாளர்கள் சங்கீதா மற்றும் ராமதுரை முருகன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • டாஸ்மாக் ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை, மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும் டாஸ்மாக் மேலாளர்கள் சங்கீதா மற்றும் ராமதுரை முருகன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    இதேபோல் சென்னை, சூளைமேடு, கல்யாண புரத்தில் உள்ள எஸ்.என்.ஜே அலுவலகத்தில அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    டாஸ்மாக் ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தமிழக கவர்னர் வேந்தர் பதவிக்குரிய கண்ணியத்தை தவறவிட்டுள்ளார்.
    • ஊழல்வாதிக்கு கவர்னர் நடத்திய விழா பெருத்த அவமானத்திற்கு உரியது என்றார்.

    சென்னை:

    உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி - லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்னாதனுக்கு பிரிவு உபசார விழாவினை தமிழ்நாடு கவர்னர்-அதுவும் கவர்னர் மாளிகையிலேயே நடத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பல்கலைக்கழகங்கள் தோறும் மதவாத பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கவர்னர், ஊழல் வழக்கில் உள்ளவரையும்- அதிலும் குறிப்பாக பினாமி கம்பெனியை உருவாக்கி ஊழல் புகாரில் சிக்கியுள்ளவரை எந்த முகத்தை வைத்துக்கொண்டு கவர்னர் மாளிகையில் வரவேற்றார்?

    முறைகேட்டுப் புகாரில் கைது செய்யப்பட்டு, காவல் நிலைய விசாரணைக்கு ஏறி இறங்கிக் கொண்டிருப்பவர். துணைவேந்தராக இருக்கும்போதே சாதிப் பெயரைச் சொல்லி ஒருவரைத் திட்டியதால் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழான வழக்கில் கைது செய்யப்பட்டவர்.

    விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் கைதுசெய்ய நேரிடும் என்று ஐகோர்ட்டாலேயே எச்சரிக்கப்பட்டவர். இவருக்கு பதவிக்காலம் முடிந்த பின்னரும் பணி நீட்டிப்பு வழங்கியதோடு - இப்படிப்பட்ட துணைவேந்தர் ஒருவருக்கு ராஜ்பவனில் பிரிவு உபசார விழாவினையும் நடத்தியதன் மூலம் "வேந்தர்" என்ற பொறுப்பில் இருப்பதற்கான தகுதியை கவர்னரே இழந்துவிட்டார் என்றுதான் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

    தி.மு.க. ஆட்சிக்கு எதிராக- தனது மதவாத கருத்துக்களைப் பரப்ப பாடுபட்ட துணைவேந்தருக்கு பாராட்டு விழா நடத்தியுள்ள கவர்னர், வேந்தர் பதவிக்குரிய கண்ணியத்தை தவறவிட்டுள்ளதோடு- மற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு எல்லாம் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்.

    உயர்கல்வியின் மாண்பை சீர்குலைத்துள்ளார். ஊழல்வாதிக்கு கவர்னர் நடத்திய விழா பெருத்த அவமானத்திற்குரியது மட்டுமின்றி- பல்கலைக்கழக வரலாற்றில் கவர்னர் தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார் என தெரிவித்துள்ளார்.

    • 127-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது.
    • கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 127-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது.

    கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு பல வண்ண மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்த பொன்னியின் செல்வன் அரண்மனை, கரிகாலன் கல்லணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா எம்.பி., அரசு கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த 127வது மலர் கண்காட்சியை 13,000 பேர் கண்டு ரசித்துள்ளதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

    இன்று முதல் வரும் 25ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியைக் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை காண அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மனு மீதான விசாரணை இன்று நுகர்வோர் நீதிமன்றத்திற்கு வந்தது.
    • எனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    சென்னை புரசைவாக்கத்தில் பிரபல இனிப்பகம் உள்ளது. இந்த இனிப்பகத்தில் ரவிசங்கர் என்பவர் இனிப்பு வாங்கும்போது கிலோவுக்கு ரூ.25 கூடுதலா வசூலித்ததாக குற்றம்சாட்டினார்.

    இதனால், இனிப்பகத்திற்கு எதிராக ரவிசங்கர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த புகார் மனுவில்,"தான் கால் கிலோ பாதாம் பிஸ்தா ரோல் வாங்கயதாகவும், இதற்கு ரூ.425 பணம் பெறுவதற்கு பதிலாக ரூ.450 வசூலித்தனர்" என்றும் குற்றச்சாட்டினார்.

    மேலும், "இனிப்புக்கு கூடுதலாக ரூ. 25 வசூலித்ததில் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால் எனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நுகர்வோர் நீதிமன்றத்திற்கு வந்தது.

    அப்போது," மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி இனிப்பகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம், திருப்பி அளிக்கப்பட்டபோதும், இனிப்பகத்தின் செயல்பாடு, சேவை குறைபாட்டை காட்டுகிறது" என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ×