என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அனைத்து சாலைகளிலும் ஆங்காங்கே குப்பைகள் பரவிக் கிடக்கின்றன.
- ஒரே ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-3, அஸ்தினாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு:-
* அஸ்தினாபுரம் பகுதி வாழ் மக்களின் நிலத்தடி நீருக்கு மிகுந்த ஆதாரமாக விளங்கி வரும் புத்தேரியில் கழிவு நீர் தங்கு தடையின்றி கலப்பதால், சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீர் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் தோல் வியாதிகள் உள்ளிட்ட எண்ணற்ற சுகாதார சீர்கேடுகளால் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.
* நெமிலிச்சேரி ஏரி முழுவதும் வளர்ந்திருந்த ஆகாயத் தாமரை கொடிகளை பொதுமக்கள் ஒன்று கூடி மிகுந்த சிரமங்களுக்கு இடையே அகற்றினர். ஆனால், ஆளுங்கட்சியின் அலட்சியத்தாலும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், இந்த ஏரி மீண்டும் ஆகாயத் தாமரை கொடிகளால் சூழப்பட்டு கழிவு நீர் குட்டையாக மாறியுள்ளது.
* அஸ்தினாபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முறையாக மேற் கொள்ளாத காரணத்தால், பெரும்பாலான இடங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ஆறுபோல் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக, பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களில் செல்லும் மக்களும், பலவித இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
* குரோம்பேட்டை கணபதிபுரம் சுடுகாடு எவ்வித பராமரிப்பும் இல்லாத காரணத்தால், தகன மேடையின் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், உயிர் நீத்தோருக்கான இறுதிச் சடங்குகளை மக்கள் மிகவும் அச்சத்துடன் செய்து வருகின்றனர்.
* அஸ்தினாபுரம் பகுதியில் நாள்தோறும் 5 எண்ணிக்கையில் மினி பஸ்கள் இயங்கி வந்த நிலையில், தற்போது ஒரே ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
* இப்பகுதி முழுவதும் முறையாக குப்பைகள் அள்ளப்படாத காரணத்தால், அனைத்து சாலைகளிலும் ஆங்காங்கே குப்பைகள் பரவிக் கிடக்கின்றன. இதனால், பொது சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான, மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், அஸ்தினாபுரம் பகுதிக் கழகத்தின் சார்பில் வருகிற 11-ந் (வெள்ளிக் கிழமை) மாலை 4 மணியளவில், ஜமீன் ராயப்பேட்டை, ஸ்ரீபட வேட்டம்மன் கோவில் சந்திப்பு அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயககுமார் தலைமையிலும்; செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
- ஊரக பகுதியான செம்மங்குப்பத்தில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் இல்லை எனக் கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார்.
பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அதிகப்படியான ரெயில் போக்குவரத்து உள்ள பகுதியில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் உள்ளது. இண்டர் லாக்கிங் முறையில் கேட் திறந்திருந்தால் சிவப்பு சிக்னல். மூடப்பட்டால் பச்சை சிக்னல் இருக்கும்.
ஊரக பகுதியான செம்மங்குப்பத்தில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் இல்லை எனக் கூறப்படுகிறது.
இண்டர் லாக்கிங் இல்லாததால் கேட் திறக்கப்பட்டபோது சிவப்பு சிக்னல் விளக்கு எரியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
- பெண்கள், குழந்தைகள் உள்பட பொது மக்கள் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய, விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பொதுமக்கள் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி.என். கார்டன் பகுதியில் உள்ள பாறைக்குழியில் மாநகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு நோய் தொற்று மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஜி.என்.கார்டன் நுழைவு வாயில் முன்பு நேற்று காலை 9 மணி முதல் பொதுமக்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள், பத்திர எழுத்தர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிகாமணி தலைமையில் பொதுமக்கள், மாவட்ட கலெக்டர், மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதன்பேரில் மாநகர நல அலுவலர் நேரில் சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பை மீது மண்ணை கொட்டி மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இதற்கு அவர் பரிசீலனை செய்வதாக கூறி அங்கிருந்து சென்றார்.
இந்தநிலையில் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி பெண்கள், குழந்தைகள் உள்பட பொது மக்கள் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய, விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் அனைவருக்கும் அங்கேயே இரவு உணவு மற்றும் காலை உணவு, குடிநீர், தேனீர் ஆகியவை வழங்கப்பட்டது. நேற்று காலை தொடங்கிய இந்த போராட்டம் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பள்ளி வேன் மீது ரெயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவ - மாணவியர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
- விபத்தில் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவ - மாணவியர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இந்த மழலைகளின் மரணம் ஆற்றொணா துயரையும் வேதனையையும் தருகிறது.
இவ்விபத்தில் படுகாயமுற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உரிய சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விபத்தில் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுமாதிரியான விபத்துகள் இனியும் தொடராத வகையில் அனைத்து தரப்பிலிருந்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடலூர் தனியார் பள்ளி வாகனம் மீது ரெயில் மோதி மாணவர்கள் உயிரிழப்பு எனும் தகவல் அறிந்து மனம் வேதனை அடைகிறது.
- பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் துயரத்தில் பள்ளிக் கல்வித்துறை பங்கெடுத்துக்கொள்கிறது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கடலூர் தனியார் பள்ளி வாகனம் மீது ரெயில் மோதி மாணவர்கள் உயிரிழப்பு எனும் தகவல் அறிந்து மனம் வேதனை அடைகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் துயரத்தில் பள்ளிக் கல்வித்துறை பங்கெடுத்துக்கொள்கிறது.
காயமடைந்த மாணவர்கள் மீண்டுவர அனைத்து வகையிலும் உதவிசெய்ய காத்திருக்கிறோம். உயிரிழந்த பிஞ்சுகளின் பெற்றோர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், சக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருவண்ணாமலையில் உலக பிரசித்திபெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
- பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்திபெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் ஆனி மாதம் பவுர்ணமி வருகிற 10-ந் தேதி அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி 11-ந் தேதி அதிகாலை 3.08 மணிக்கு நிறைவு பெறுகிறது.
இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெயிலின் தாக்கம் சற்று அதிக அளவில் உள்ளதால் நண்பகல் நேரத்தில் கிரிவலம் வருவதை பக்தர்கள் தவிர்த்து அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் கிரிவலம் வரலாம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
- வேன் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கிஇருந்த மாணவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
- வேன் டிரைவர் சங்கரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கடலூர்:
கடலூர் அருகே இன்று காலை பள்ளி வேன் மீது ரெயில் மோதிய சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்து உள்ளது. இன்று காலை 7.40 மணிக்கு நடந்த இந்த விபத்து பற்றிய தகவல்கள் வருமாறு:-
கடலூரில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் கடலூர் சுற்றுப் பகுதி மாணவ-மாணவிகள் தனியார் வேன்கள் மூலம் அழைத்து வரப்படுவது வழக்கம்.
கடலூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்மங்குப்பம் பகுதியில் இருந்தும் மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன்கள் அந்த பள்ளிக்கு வருவது உண்டு. இன்று காலை சங்கர் என்ற டிரைவர் தனது வேனில் செம்மங்குப்பத்தில் இருந்து 3 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவியை ஏற்றிக் கொண்டு வந்தார்.
அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதால் வேகவேகமாக சென்று கொண்டு இருந்தார். காலை 7.40 மணிக்கு அவரது வேன் செம்மங்குப்பம் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் பகுதிக்கு வந்தது.
அப்போது ரெயில்வே கேட் திறந்து இருந்ததாக தெரிகிறது. இதனால் டிரைவர் சங்கர் வேனை தண்டவாளத்தை கடந்து செல்ல ஓட்டினார். ஆனால் அந்த சமயத்தில் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் பயணிகள் ரெயில் மின்னல் வேகத்தில் வந்தது. ரெயில் வந்த சத்தம் கேட்காத நிலையில் தண்டவாளத்தின் மத்திய பகுதி வரை சென்று விட்ட டிரைவர் சங்கர் இதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.
வேனை ஓட்டி சென்று விடலாம் என்று வேகமாக ஓட்டினார். ஆனால் அடுத்த ஓரிரு நிமிடங்களில் அந்த பயணிகள் ரெயில் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் நிலைகுலைந்து என்ஜின் பகுதியில் சிக்கிக் கொண்டது.
வேன் மீது ரெயில் மோதிய சத்தம் அந்த பகுதி முழுக்க கேட்டது.
மோதிய வேகத்தில் வேனை ரெயில் இழுத்து சென்றது. சுமார் 50 மீட்டர் தூரம் பள்ளி வேன் இழுத்து செல்லப்பட்டதால் அது நொறுங்கி தகர்ந்தது. வேனுக்குள் இருந்த 3 மாணவர்களும், ஒரு மாணவியும் அலறினார்கள். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் வேன் இடிபாடுகளுக்குள் சிக்கி அவர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.
இதை கண்டதும் பயணிகள் ரெயிலை டிரைவர் நிறுத்தினார். அப்போது அந்த வேன் தண்டவாளம் ஓரத்தில் நொறுங்கி அப்பளமாக சிதறியது. சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள மக்கள் பதட்டத்துடன் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர்.
வேன் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கிஇருந்த மாணவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்போதுதான் தண்டவாளத்தில் ஒரு மாணவரின் உடல் சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடல் சிதறி பலியான அந்த மாணவரின் பெயர் நிவாஸ். இவன் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
வேனுக்குள் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டபோது சாருமதி என்ற மாணவி உடல் நசுங்கி பலியாகி இருப்பது தெரிந்தது. இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். உடனடியாக மாணவன் நிவாஸ் உடலும், மாணவி சாருமதி உடலும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

வேன் டிரைவர் சங்கர்
செழியன் (வயது15), விஸ்வேஸ் (16) என்ற 2 மாணவர்களும் படுகாயங்களுடன் வேனுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே வேன் டிரைவர் சங்கரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இவர் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர். தினமும் காலை நேரம் வேனில் கடலூர் சுற்றுப் பகுதிக்கு சென்று மாணவ-மாணவிகளை அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இன்று காலை அவரது வேன் விபத்தில் சிக்கி நொறுங்கி போனது.
இதற்கிடையே கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவர் செழியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பள்ளி வேன் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

கதறி அழும் பெற்றோர்
உயிரிழந்த செழியன் மாணவி சாருமதியின் சகோதரர் ஆவார். ஒரே குடும்பத்தில் அக்காவும், தம்பியும் பலியானது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். விபத்துக்கான காரணங்களை கேட்டறிந்தனர்.
முதல் கட்ட விசாரணையில் ரெயில்வே கேட் கீப்பர் தூங்கி விட்டதால் கேட்டை மூடவில்லை என்று தெரிகிறது. கேட் மூடாததால் பள்ளி வேன் டிரைவர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்ததும் தெரிய வந்துள்ளது.
ஆனால் இதை தெற்கு ரெயில்வே மறுத்துள்ளது. ரெயில்வே கேட் மூடப்பட்டதாகவும், பள்ளி வேன் டிரைவர் சங்கர் கேட்டுக்கொண்டதால் ரெயில்வே கேட்டை ஊழியர் திறந்ததாகவும் அதனால் தான் விபத்து ஏற்பட்டு இருக்கிறது என்றும் தென்னக ரெயில்வே கூறி உள்ளது.
- சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவி பலியானார்.
- ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
பணியில் அலட்சியமாக இருந்ததாகக்கூறி கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதுவதற்கு காரணமாக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
பங்கஜ் சர்மாவிடம் ரெயில்வே போலீசாரும், உள்ளூர் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சாலைகள் புனரமைப்பு உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு தேரோட்டம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
- மீண்டும் தி.மு.க. ஆட்சி வரும் என திருச்செந்தூரில் திரண்ட மக்கள் கூட்டம் கூறி உள்ளது.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் தேரோட்டத்தை தொடங்கி வைத்த பின்பு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவில் ஆனிப்பெருந்திருவிழாவையொட்டி 519-வது ஆண்டு தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட சிறு, சிறு சிக்கல்கள் இந்த ஆண்டு உருவாகாமல் இருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ரூ.59 லட்சம் மதிப்பில் புதிதாக சண்டிகேஸ்வரர் தேர் செய்யப்பட்டுள்ளது. ரூ. 43 லட்சம் மதிப்பில் சுவாமி மற்றும் அம்பாள், விநாயகர் தேர்களுக்கு மரக்குதிரைகள் உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன.
ரூ.6 லட்சம் மதிப்பில் புதிதாக தேர்வடங்கள் வாங்கப்பட்டுள்ளன. சாலைகள் புனரமைப்பு உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு தேரோட்டம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ரூ.75 கோடி மதிப்பில் 130 கோவிலில் 134 மரத்தேர்கள் புதிதாக செய்யப்பட்டுள்ளன. ரூ.19 கோடி மதிப்பில் 72 கோவிலில் 75 மர தேர்கள் பராமரிப்பு செய்யப்பட்டுள்ளன.
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வாழ்ந்த தமிழகத்தில், முன்னோர் களது வழியில் ஆட்சி செய்யும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், ரூ.30 கோடியில் 197 திருத்தேர் பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டு மழையிலும், வெயிலிலும் தேர்கள் சேதமாகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது.
ரூ.31 கோடியில் 5 கோவில்களில் தங்கத் தேர்கள் திருப்பணி நடைபெற்றுள்ளது. ரூ.29 கோடியில் 9 புதிய வெள்ளித்தேர்கள் செய்யும் பணி தொடங்கப்பட்டு அதில் 2 தேர்கள் பக்தர்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
150 ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த சில தேரோட்டம் தி.மு.க. ஆட்சியில் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து பேசி மீண்டும் நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வுக்கு கூடிய கூட்டத்தால் முதலமைச்சருக்கு ஜுரம் என்று கூறி இருப்பது நகைப்புக்குரியது. திருச்செந்தூரில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கூடிய கூட்டத்தைப் பார்த்து அவர்கள் மிரண்டு போய் உள்ளனர். மீண்டும் தி.மு.க. ஆட்சி வரும் என திருச்செந்தூரில் திரண்ட மக்கள் கூட்டம் கூறி உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை பார்த்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு தான் விஷக்காய்ச்சல் வந்துள்ளது.
தமிழக திருக்கோவில்களில் உள்ள ஓலைச் சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் அறநிலைத்துறை உதவியுடன் செய்யப்பட்டு வருகிறது. சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் படி எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஓலைச்சுவடிகளை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எல்லோருக்கும் எல்லாம் வழங்கும் அரசாக திராவிட மாடல் அரசு விளங்கி வருகிறது. நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் மதச்சார்பின்றி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ நண்பர்களும் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். இந்த ஒற்றுமை எந்நாளும் தொடர, மக்கள் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர வாய்ப்பு அளிக்க வேண்டும். அதற்கு அருள்மிகு நெல்லை யப்பரும் அருள்பாலிப்பார் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
- வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் 4 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் கூறுகையில்,
வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் 4 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 2 மாணவர்கள், ஒரு மாணவி என மொத்தம் 3 பேர் பலியாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
- ரெயில்வே விபத்து குறித்து கடலூர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விசாரணையின் முடிவில் முழுவிவரம் தெரியவரும்.
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டனர். காயமடைந்த மாணவர்கள் மற்றும் வேன் டிரைவர், மாணவர்களை காப்பற்ற சென்ற செம்மங்குப்பத்தை சேர்ந்த அண்ணாதுரை ஆகியோரை அமைச்சர் சி.வெ. கணேசன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சபா.ராஜேந்திரன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், டாக்டர் பிரவின் அய்யப்பன், ஒன்றிய செயலாளர் வெங்கட் ராமன் ஆகியோர் இன்று கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் அமைச்சர் சி.வெ. கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரெயில் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். 2 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அதில் ஒரு மாணவன் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் முதலமைச்சர் என்னையும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தையும் செல்போனில் தொடர்பு கொண்டு காயமடைந்தவர்களுக்கு உரிய உதவிகள் செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோரை பார்த்து ஆறுதல் கூறினேன். காயமடைந்தவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமென அவர்களது பெற்றோர் விருப்பப்பட்டால் அதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ரெயில்வே விபத்து குறித்து கடலூர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில் முழுவிவரம் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
- வேன் டிரைவர் கூறியதால்தான் ரெயில்வே கேட்டை திறந்தேன் என கேட் கீப்பர் கூறினார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த பள்ளி வேன் டிரைவர் சங்கர், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரிடம், ரெயில்வே கேட் கீப்பரிடம் நீங்கள் கூறியதால் தான் ரெயில்வே கேட்டை திறந்தேன் என தெரிவித்ததாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறி உள்ளதாக கேட்டோம்.
அப்போது டிரைவர் சங்கர் பேச முடியாத நிலையிலும் அழுது கொண்டு நான் எதுவும் கூறவில்லை என தலையை ஆட்டி காண்பித்தார்.






